தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMK

தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMK A page for DMK cadres in Thailand

கடந்த 29 மே 2024 அன்று  பாங்காக் வந்த மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த திரு. முபாரக், அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ...
15/11/2024

கடந்த 29 மே 2024 அன்று பாங்காக் வந்த மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த திரு. முபாரக், அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஜூன் 17 2024 அன்று கனரக வாகனம் மோதிய விபத்தில் தலையில் அடிப்பட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இருமுறை தலையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சுயநினைவின்றி இன்றுவரை பாங்காக்கில் உள்ள லெர்ட்சின் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல மாதங்கள் சுய நினைவின்றி இருப்பதாலும் தலையில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டதாலும், மருத்துவச் செலவு கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. எனவே தமிழ்நாடு திரும்பி அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நாங்கள் மருத்துவமனையை வேண்டினோம். அவரது காயங்களின் அளவு காரணமாகவும், கோமாவில் இருப்பதாலும் ஸ்ட்ரெச்சர் படுக்கையில் வைக்கப்பட்ட நிலையில் மட்டுமே பயணிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர், இது அவரது குடும்பத்தினருக்கு மேலும் மன வருத்தைத்தையும் குறிப்பிடத்தக்க நிதிச் சுமையையும் ஏற்படுத்தியது

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.எம்.அப்துல்லா M M Abdulla அவர்களிடம் DMK NRI WING தாய்லாந்தின்* சார்பாக கோரிக்கை வைத்தோம் .இதனை அவர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட நபரை இந்தியா அழைத்துச் செல்ல அயலகத்துறையின் சார்பாக ரூ.10,41,648/- வழங்கப்பட்டது.

அவர் வரும் 16.11.2024 அன்று தாய் ஏர்வேஸ் விமானத்தில் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட இருக்கிறார்

இது குறித்து தாயுள்ளத்தோடு துரித நடவடிக்கை எடுத்த

- திரு M. K. Stalin (மு.க.ஸ்டாலின்), தமிழக முதல்வர்
- திரு உதயநிதி ஸ்டாலின், தமிழக துணை முதல்வர்
- திரு எம் முகமது அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
- திரு கிருஷ்ணமூர்த்தி, ஆணையர், புலம்பெயர் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையர், தமிழ்நாடு
- திரு. அசோக்குமார், உதவி ஆணையர், மறுவாழ்வு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் நல ஆணையர், தமிழ்நாடு
- சிகிச்சைக்கு ஆதரவளித்த நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் DMK NRI WINGதாய்லாந்து சார்பாகவும் முபாரக் அலியின் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்..

ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியாக இருக்கவும், இவ்வளவு அழகான நாளை வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிகளும்.
10/04/2024

ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியாக இருக்கவும், இவ்வளவு அழகான நாளை வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிகளும்.

அயோத்தியில் ராமர் கோயில் துவக்கப்பட்டதில் இருந்து ஆகம நூல்கள் குறித்த விவாதங்கள் துவங்கி விட்டன. ஆனால் இந்த ஆகம நூல்கள் ...
20/02/2024

அயோத்தியில் ராமர் கோயில் துவக்கப்பட்டதில் இருந்து ஆகம நூல்கள் குறித்த விவாதங்கள் துவங்கி விட்டன. ஆனால் இந்த ஆகம நூல்கள் உண்மையில் என்னதான் சொல்கின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லை.

இது குறித்து தினகர ஞானகுருசாமி அவர்களிடம் சேப்பியன் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் சுப்ரமணியம் உரையாடி இருக்கிறார். தினகரன் சாமியார் அல்ல. ஆஸ்திரேலியாவில் பணி புரிந்து வருகிறார். சுய ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான பண்டைய இந்து சமய நூல்கள் படித்து அவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். 'அறியப்படாத இந்து மதம்' என்ற பெயரில் புத்தகமும் ஒன்று எழுதி இருக்கிறார். இப்போது அவரது அடுத்த புத்தகம் 'சனாதன லீக்ஸ்' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இந்து மத நூல்களில் உள்ள பலவும் நமக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அதிர்ச்சியைக் கொடுக்கும். அந்த அளவுக்கு அறிவிலித்தனமான, பாகுபாடுகள் நிறைந்த, துஷ்பிரயோகங்கள் மிகுந்த நூல்கள் அவை. குறிப்பாக, கடவுள் பயத்தை மன்னர்களிடம் உண்டாக்கி அந்தக் காலத்து பிராமணர்கள் என்னவெல்லாம் கூத்தடித்து இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் நமக்குப் பேரதிர்ச்சி உண்டாகும்.

இந்த நூல்கள் குறித்து இவர் தெளிவாக, ஆதாரங்களுடன் பேசுகிறார். இந்த நூல்களிலும் பாகுபாடுகள், துஷ்பிரயோகங்கள், பிராமண உயர்வுவாதங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகின்றன. குறிப்பாக இறை குறித்த மூட நம்பிக்கைகள் அந்தக் காலத்து மக்களை எப்படி கட்டிப் போட்டிருக்கிறது, அதற்கு இந்த so-called புனித நூல்கள் பிராமணர்களுக்கும், மன்னர்களுக்கும் எப்படி உதவி இருக்கின்றன போன்ற விபரங்கள் வெளியே வருகின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் துவக்கப்பட்டதில் இருந்து ஆகம நூல்கள் குறித்த விவாதங்கள் துவங்கி விட்டன. ஆனால் இந்த ஆ....

01/06/2023

கலைஞர் சாதனைகள்

நேற்று விசா பிரச்சனையால் பேங்காக்கில்  சிக்கி தவித்த மூன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை தாய்லாந்து  அயலக திமுக அணியி...
24/05/2023

நேற்று விசா பிரச்சனையால் பேங்காக்கில் சிக்கி தவித்த மூன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை தாய்லாந்து அயலக திமுக அணியின் மண்டல பொறுப்பாளர் Muhammad Thaha Muhammad Ali அவர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்

M. K. Stalin தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMK DMKNRIWing

(Their names and photos are withheld as requested)

Sasikanth Senthil லின் கர்நாடகாவில்  எப்படி காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற இந்த வீடியோ முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. வ...
14/05/2023

Sasikanth Senthil லின் கர்நாடகாவில் எப்படி காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற இந்த வீடியோ முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது.

வார் ரூம் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்கவில்லையென்றும் மக்களுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான கனெக்சன் செண்டர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார்.

பிஜேபியின் வலையில் விழாமல் எப்படி அவர்களை காங்கிரசின் ஆட்டத்தில் சேர்த்து தோற்கடித்தோம் என்று விளக்குகிறார்.

மாநில சுயாட்சியைப் பற்றி பேசுகிறார். அண்ணாமலை போன்றவர்கள் எப்படி மோடிக்கு லைட் பாயாக வேலைபார்க்கிறார்கள் என்பதையும் போட்டு உடைக்கிறார். எப்படி மோடி என்ற பிம்பத்தை உடைத்தோம் எனவும் விளக்குகிறார். மக்களை எப்படி மதரீதியாக பிஜேபி முட்டாளாகப் பார்த்தது என்பதையும் விளக்குகிறார்.

படித்தவர்கள் வேலை செய்வதற்கும் மூளை கெட்டவர்கள் வேலை செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை இந்த காணொளியில் விரிவாக காணலாம்

2024 தேர்தலுக்கு DMK - Dravida Munnetra Kazhagam இவ்வாறு செயல்படும் 👍🤝

The Congress is all set to return to power in Karnataka after a campaign countering the might of the Bharatiya Janata Party’s (BJP) election machine. The cre...

06/05/2023

திரும்பிய பக்கமெல்லாம் சாதி வெறியர்கள், மத வெறியர்கள், இன வெறியர்கள்...

தினம் தினம் அவதூறு பரப்பும் பணத்துக்கு விலை போன பத்திரிக்கையாளர்கள்...

எல்லோரையும் சமாளித்து வெற்றி நடை போடும் முதல்வர் M. K. Stalin அவர்களுக்கு தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMK சார்பாக வணக்கங்களும் வாழ்த்துகளும்...

தமிழ் மக்களின் சிந்தையெல்லாம் நீக்கமற  நிறைந்த ஆருயிர்த்  தலைவர் முதல்வர் M. K. Stalin  அவர்களின் 70வது பிறந்தநாளில் தலை...
01/03/2023

தமிழ் மக்களின் சிந்தையெல்லாம் நீக்கமற நிறைந்த ஆருயிர்த் தலைவர் முதல்வர் M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளில் தலைவர் அவர்களின் வாழ்வும் வளமார்பணியும், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்துணையாக இருக்கின்றன.
நம்மைத் தொடர்ந்து வழிநடத்திட, நூறாண்டு கடந்து வாழவேண்டும் என திராவிட நாயகன், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களை அனைவரும் வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்!

- திமுக அயலக அணி, தாய்லாந்து

22/11/2022

ที่อยู่

Nakula, Banglamung
Pattaya
20150

เบอร์โทรศัพท์

+66992967260

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMKผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ติดต่อ องค์กรนั้น

ส่งข้อความของคุณถึง தாய்லாந்து உடன்பிறப்புகள் - Thailand DMK:

แชร์