08/05/2026
#புனிதமான_ஹஜ்_மாதத்தில்_ஹாஜிகளின்_நலனுக்காக_சவூதியில்_TNTJ_நடத்திய_148வது_இரத்ததான_முகாம்.!
ரியாத்:- “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” மனித நேயம் காக்கும் சமுதாய பணிகளை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
மனிதநேயப் பணிகளில் மணி மகுடமாக திகழும் பணி உயிர்காக்கும் இரத்ததான சேவையும் இதில் ஓர் அங்கமாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கப்பட்டது முதல் தமிழகத்தில் இரத்ததானம் வழங்குவதில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழக அரசின் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.
இப்பணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக செய்யப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இவ்வருட ஹஜ் பயணிகளுக்கான தேவையை முன்னிறுத்தி நடத்திய 148வது மாபெரும் இரத்ததான முகாம் மே 08, 2026 அன்று ரியாத் கிங் ஃபஹத் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட கிளைகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 77க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உடல் தகுதி மற்றும் நேர அடிப்படையில் இம்முகாமில் “65 யூனிட்கள்” இரத்ததானம் வழங்கப்பட்டது.
உயிர்காக்கும் உன்னத பனியான இதுபோன்று முகாம்களை மென்மேலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மருத்துவமனை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. முகாம்கள் மட்டுமல்லாது அறுவை சிகிச்சை போன்ற அவசர காலங்களில் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்வது, தேவைக்கேற்ப மொபைல் இரத்ததான முகாம்களையும் ரியாத் மண்டலம் சார்பாக நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இதற்காக களப்பணிகள் செய்த “ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எந்நேரமாயினும் ஓடோடி வந்து தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் இரத்தக் கொடையாளர்களுக்கும்” “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்” சார்பாக இந்நேரத்தில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜசக்கல்லாஹு கைஃரா..
“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32
என்றென்றும் மனிதநேயப் பணியில்...
மருத்துவ அணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
08.05.2026
| | | | | | | | | |