10/04/2024
தெளிவான பார்வை வளமான எதிர்காலம்.......!!
பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் பார்வை குறைபாடுகளினை உரிய நேரத்தில் அடையாளம் காண்பதின் ஊடாக அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மாணவர்களுக்கான பார்வை திறன் பரிசோதனையினை மேற்கொள்ளும் முறை தொடர்பினில் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது.....
இந்நிகழ்வில் கண் பரிசோதனையின் முக்கியத்துவம் , உரிய நேரத்தில் குறைபாடுகளை அடையாளம் காண வேண்டியதின் அவசியம் , அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கான மேலதிக பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு தொடர்பிலான விடயங்கள் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது....
இந்நிகழ்வில் கல்வி திணைக்கள அதிகாரிகள் , கண் சத்திர சிகிச்சை நிபுணர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்களும் கலந்து கொண்டனர்....