ஸ்ரீதரன் G.S

ஸ்ரீதரன் G.S Official Page of Koomankulam 218F & Sasthirikulankulam 218D GN Division's

2024.06.12  முதல் கூமாங்குளம் கிராம அலுவலர்பிரிவில் நிரந்தர கிராம அலுவலராக இடமாற்றம் பெற்று செல்கிறேன்.மருக்காரம்பளை பிர...
17/06/2024

2024.06.12 முதல் கூமாங்குளம் கிராம அலுவலர்பிரிவில் நிரந்தர கிராம அலுவலராக இடமாற்றம் பெற்று செல்கிறேன்.
மருக்காரம்பளை பிரிவுக்கு இன்று 2024.06.17 முதல் புதிய கிராம அலுவலர் திருமதி ஜெ.நிரஞ்சனா அவர்கள் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2019.04.02 முதல் மருக்காரம்பளை கிராம அலுலராக என்னால் முடிந்த சேவையை மக்களுக்கு ஆற்றியுள்ளேன் என திருப்தி அடைகிறேன்.
அந்த வகையில் நான் சேவையாற்றிய காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய திருமதி யோ.சுமங்கலி, திரு சஜாத்,திரு. ஆ.மணிவண்ணன் ஆகியோருக்கும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S.ஜெயராணி மற்றும் பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.லங்கேஸ்,திரு,சிவரூபன்,திருமதி.டிலக்சனா,செல்வி.ரிசாயினி ஆகியோருக்கும். நெஞ்சார்ந்த நன்றிகள். அதேபோல் என்னுடன் இணைந்து சகல ஒத்துழைப்புடனும் மக்கள் பணிசெய்த கணேசபுரம் கிழக்கு RDS இரா.சுப்பிரமணியம் ,பெ.காமராஜா,ரா.கார்த்தீபன்,கிருபா ( முன்னாள் RDS பொருளாலர்) உள்ளிட்ட நிர்வாகத்தினர்,கணேசபுரம் கிழக்கு RDS திரு.சகாயம்,திரு,.இராஜதுரை உள்ளிட்ட நிர்வாகத்தினர்,சுரேஸ்(முன்னாள் RDS தலைவர்)
சி.சர்மிளா (கமக்காரர் அமைப்பு ) ஆகியோருக்கும்.
சமயபுரம் RDS திரு மயில்வாகனம்,திரு.மகேந்திரகுமார் உள்ளிட்ட RDS நிர்வாகத்தினர், திரு.குணரட்னம்,திரு.சாந்தகுமார்,திரு சுரேஸ்,திரு.விஜயகுமார், திரு.பாலசிங்கம் ஆகியோருக்கும்,
மருக்காரம்பளை RDS திரு.அருணாச்சலம் அவர்களுக்கும்,
புதிய மணிப்புரம் RDS அமைப்பினர், முன்னாள் RDS அமைப்பினர் திரு.தங்கவேலு,ரவிகுமார்,சுரேன்,கிருஷ்குமார் மற்றும் திருமதி ஜிவா பாமா CBO ஆகியோருக்கும்,மணிப்புரம் RDS திரு.பி.மகேந்திரகுமார்,திரு.சு. ஹரிகரன்மற்றும் தயா உள்ளிட்ட நிர்வாகத்தினர். மணிப்புரம் தேவன்,சுமன்,மணிப்புரம் திருமதி. செல்லையா சசி அவர்களுக்கும்.
WRDS அமைப்பினர்,சமுர்த்தி CBO'S ,ஆலயநிர்வாகத்தினர்,கமக்காரர் அமைப்பினர்,விளையாட்டு/ இளைஞர்கழகத்தினர்,
ஏனைய பொது அமைப்புக்கள்,பொது மக்கள். அனைவருக்கும் எனது மனதார நன்றிகள் 🙏
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும். மீண்டும் நன்றிகள்.

14/06/2024
 #ஜப்பானில்_வேலைவாய்ப்பு 👇👇
07/06/2024

#ஜப்பானில்_வேலைவாய்ப்பு 👇👇

இலங்கை சைவத்தமிழ் மன்றத்தால் அறநெறிபாடசாலை ஆரம்பிப்பு.இன்றைய  தினம் (2024.06.02)  இலங்கை சைவத்தமிழ் மன்றத்தால் சாஸ்திரிக...
02/06/2024

இலங்கை சைவத்தமிழ் மன்றத்தால் அறநெறிபாடசாலை ஆரம்பிப்பு.
இன்றைய தினம் (2024.06.02) இலங்கை சைவத்தமிழ் மன்றத்தால் சாஸ்திரிகூழாங்குளம் கட்டையர் குளம் கிராமத்தில் புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாஸ்திரிகூழாங்குளம் கிராம அலுவலர் நாகராஜா ஸ்ரீதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் அறநெறி புத்தகங்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது. மாணவர்களுக்குறிய கற்றல் பொருட்களை குருமன்காடு அறிவாலயம் உரிமையாளர் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் இலங்கை சைவத்தமிழ் மன்ற நிர்வாகிகள், கிராமஅலுவலர், ஆலயதலைவர்,அறநெறி ஆசிரியர், ஆலய நிர்வாகத்தினர்,சமுர்த்தி சங்க உறுப்பினர்கள்,அறநெறி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள்,என ஏராளமானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Railway Department Vacancies 2024 புகையிரதிணைக்கள வேலை வாய்ப்பு👇Apply👇👇👇👇https://cutt.ly/owMJd0jD (ND)இலங்கையில் எந்த பக...
20/05/2024

Railway Department Vacancies 2024 புகையிரதிணைக்கள வேலை வாய்ப்பு👇Apply👇👇
👇👇https://cutt.ly/owMJd0jD (ND)

இலங்கையில் எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் கீழே உள்ள லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது

விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்👇Apply👇👇👇
👇👇https://cutt.ly/owMJd0jD (ND)

மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கமெண்ட் பாக்ஸ் மூலம் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி வையுங்கள் 24 மணித்தியாலத்திற்குள் பதில் வழங்கப்படும்

See more Chat
http://rebrand.ly/Lanka-chat



*மிக மிக முக்கியமானதும் அவசரமானதும்*  அனைத்து பொதுமக்களின் கவனத்திற்கு* :கீழ்வரும் நபர்கள் மாத்திரம் அவர்களது மேற்படி அள...
14/05/2024

*மிக மிக முக்கியமானதும் அவசரமானதும்*

அனைத்து பொதுமக்களின் கவனத்திற்கு* :

கீழ்வரும் நபர்கள் மாத்திரம் அவர்களது மேற்படி அளிப்புடனும் தேசிய அடையாள அட்டையுடனும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை ( 17/05/2024 அல்லது 18/05/2024 ) மு:ப 9:00 மணிக்கு பிரதேச செயலகத்திற்கு வருகைதரவும்.

தகவல் - *கிராம அலுவலர்

13/05/2024

மருக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட

⭕மணிபுரம் வீட்டுத்திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அளக்கப்பட்ட காணிகளில் உள்ள வீடுகளுக்கு காணி உரித்து நிருணய திணைக்களத்தில் இருந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் காணிகளை பார்வையிடுவதற்காக

⭕நாளை
செவ்வாய் கிழமை(14..05.2024)
வருகை தர உள்ளனர்.

⭕எனவே பொதுமக்கள் தத்தமது வீடுகளில் தரித்து நின்று காணி பதிவுகளை மேற்கொள்ளவும்.

⭕நாளை மாத்திரமே பதிவு நடைபெறும்.

கௌரமிக்க  #கிராம_அலுவலர் சேவைக்கு  வவுனியா மாவட்டத்தில் இருந்து  தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்.👇👇அனைவருக்கும் வாழ்த்து...
06/05/2024

கௌரமிக்க #கிராம_அலுவலர் சேவைக்கு வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்.👇👇
அனைவருக்கும் வாழ்த்துகள்.❤

 #உருமய வேலைத்திட்டம் (பூரண உரிமை அளிப்பு வழங்கல் )இதுவரை  #உருதி இல்லாத காணிகளுக்கு விரைவாக உறுதி வழங்கும் செயற்திட்டம்...
03/05/2024

#உருமய வேலைத்திட்டம்
(பூரண உரிமை அளிப்பு வழங்கல் )

இதுவரை #உருதி இல்லாத காணிகளுக்கு விரைவாக உறுதி வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் இதுவரை தமது காணிகளுக்கு உறுதி பெற்றுக்கொள்ளாத அனைவரும் நாளை மறுதினம் ஞாயிறு (2025.05.05) காலை 8.00 மணிக்கு சுந்தரபுரம் கிராம அலுவலர் காரியாலயத்தில் நடைபெறும் காணிகச்சேரியில்( கட்டம் 01) தவறாது கலந்து கொள்ளவும்.

💢தகுதியானவர்கள்.👇

⏩காணி அனுமதி பத்திரம் உடையவர்கள்.

⏩நிலஅளவை செய்யப்பட்ட காணி உரிமையாளர்கள்.

💢கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்👇

⭕காணி அனுமதிபத்திரத்தின் மூலப்பிரதி
⭕நிலஅளவை வரைபடம் ( தம்வசம் இருந்தால் மட்டும்)
⭕குடும்ப அட்டை

 #உருமய வேலைத்திட்டம் (பூரண உரிமை அளிப்பு வழங்கல் )மருக்காரம்பளை பிரிவு இதுவரை  #உருதி இல்லாத காணிகளுக்கு விரைவாக உறுதி ...
03/05/2024

#உருமய வேலைத்திட்டம்
(பூரண உரிமை அளிப்பு வழங்கல் )

மருக்காரம்பளை பிரிவு

இதுவரை #உருதி இல்லாத காணிகளுக்கு விரைவாக உறுதி வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் இதுவரை தமது காணிகளுக்கு உறுதி பெற்றுக்கொள்ளாத அனைவரும் நாளை சனிக்கிழமை (2024.05.04) காலை 8.00 மணிக்கு சமயபுரம் சனசமூக நிலையத்தில் நடைபெறும் காணிகச்சேரியில்( கட்டம் 01) தவறாது கலந்து கொள்ளவும்.

💢தகுதியானவர்கள்.👇

⏩காணி அனுமதி பத்திரம் உடையவர்கள்.

⏩நிலஅளவை செய்யப்பட்ட காணி உரிமையாளர்கள்.

💢கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்👇

⭕காணி அனுமதிபத்திரத்தின் மூலப்பிரதி
⭕நிலஅளவை வரைபடம் ( தம்வசம் இருந்தால் மட்டும்)
⭕குடும்ப அட்டை

29/04/2024

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கொடுப்பனவுகளான...

⭕பொதுசன மாதாந்த உதவிப்பணம்(மஞ்சள் நிற அட்டை)
⭕சிறுநீரக நோய்க்கொடுப்பனவு (றோஸ் நிற அட்டை)
⭕புற்று நோய்,
⭕காச நோய்,
⭕முள்ளந்தண்டு வடம், மற்றும் ⭕தலசீமியா,
⭕தொழுநோய் போன்ற நோய்க் கொடுப்பனவு பெறும்
பயனாளிகளுக்கான மீளாய்வு நடைபெற உள்ளமையினால் இக் கொடுப்பனவு பெறும் பயனாளிகள் (பதிலாளர் அல்ல) மணிப்புரம் கிராம அலுவலகத்திற்கு எதிர்வரும் வெள்ளி (2024.05.03)காலை 8.30 மணிக்கு கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
1. பயனாளியின் அடையாள அட்டை
2. பயனாளியின் கொடுப்பனவு அட்டை
3. பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கம்
4. நோய்க்கொடுப்பனவு கிளினிக் புத்தகம் .

குறிப்பு : மத்திய அரசினால் வழங்கப்படுகின்ற சிறுநீரக கொடுப்பனவு(நீல நிற அட்டை) மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு(1900) தொடர்பான மீளாய்வு திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

29/04/2024

வவுனியாவில் புதிய வடிவமைப்பில் ஆரம்பித்த கெஸ்ட் ஹவுஸ்/ ரெஸ்ட்ரூரண்ட் (no liqueur or cigarette)ஒன்றை நிர்வாகம் செய்ய அனுபவம் உள்ள

ஆண் அல்லது பெண் நிர்வாகி தேவை.சம்பளம்,தங்குமிட வசதி, உணவு.

0773405396 WhatsApp ku bio data அனுப்பவும்.
ஜூஸ் bar பொறுப்பாளரும்

Address

Manipuram
Vavuniya

Telephone

+93705209194

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீதரன் G.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஸ்ரீதரன் G.S:

Share