30/07/2020
சற்று படித்து தெ(ளி)ரிந்துவிட்டு செல்லுங்கள்....
வன்னி மண்ணில் இருந்து ....
ஓர் ஆதரவாளரின் குரல்...
அன்புக்கினிய வன்னி மக்களே!
கடந்த 1983 தொடக்கம் 2009 வரையான காலபகுதியில் நாம் சொல்ல வார்த்தைகள் இல்லா துன்ப துயரங்களை அனுபவித்தவர்கள் நாம். எமது பொருளாதாரங்கள் முடக்கப்பட்டது. பொருளாதார தடைக்குள் தள்ளப்பட்டோம் அதன் பிரதிபலனாக இரு தலைமுறையினர் கல்வியை இழந்து , அரச வேலை வாய்ப்புக்களை இழந்தார்கள் , தொழில் தேடி அரபுநாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இன்றுவரை அந்த தலைமுறையினர் துன்பங்களை அனுபவித்து கொண்டு தான் உள்ளார்கள்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தை அவர்கள் இந்த வன்னி மக்களின் துயர் நிலையை கருத்தில் கொள்ளாமல் தங்களையும் , தாங்கள் சார்ந்த உறவுகளையும் வளமாக்கிக் கொண்டார்களே தவிர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் பொருளாதார மீள்கட்டமைப்பு செய்ய எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
கூடியிருந்தது கும்மாளம் அடித்தவர்கள் இன்று பதவிகாலம் முடிவடைந்ததும் கொள்ளை சரியில்லை என்று புதிய கட்சிகள், புதிய கொள்கைகள் என்று உங்களை ஏமாற்றி உங்கள் வாக்குகளை சூறையாடி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் " புதிய மொந்தையில் பழைய கள்ளு " என்ற கட்டுக்குள்ளே அடங்குவார்கள்.
யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான அடுத்த கட்ட அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்ற அடிப்படை இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றது.
இதன் பிரதிபலனே கல்வியில் வட மாகாணம் கடைசி நிலையிலும் , வறுமையில் முதலிடத்திலும் உள்ளது. இந்த நிலை தொடர வேண்டுமா ?
வலி சுமந்தவனின் வலியை மற்றுமோர் வலி சுமந்த தலைமையினால் மாத்திரமே உணரமுடியும். அந்த போராட்ட களத்தில் பல வலிகளை சுமந்த கௌரவ டக்ளஸ் தேவானந்தாவால் மட்டுமே உணர முடியும் ஏனைய போராட்ட அமைப்புக்கள் தங்கள் அடையாளங்களை அழித்து மேட்டுகுடியுடன் ஒட்டிக்கொண்டு சுகபோகவாழ்வை தேடுகிறார்கள்.
தமிழ் மக்களின் இந்த அவலநிலைக்கு தானும் ஓர் பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய மக்களோடு மக்களாக இன்றும் களத்தில் நிற்கின்றார். அந்த மக்கள் தலைவனின் கரங்களை பலப்படுத்தி வன்னி மக்களின் விடியலை நோக்கி பயணிக்க மற்றுமோர் வலி சுமந்த போராளி அண்ணன் இராஜ குகனேஸ்வரன்
யார் இந்த #இராஜ_குகனேஸ்வரன் ?
இளம் வயது விடுதலை போராளி..
சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்.
மக்களோடு மக்களாக இன்று வாழ்ந்து வருபவர்.
வன்னி மண்ணின் இளம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
இரண்டு தடவைக்கு மேல் பாராளுமன்றம் சென்றவர்.
சாதாரண மாகாண சபை உறுப்பினர் கூட கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி படிப்பிக்கும் போது இன்றும் தனக்கு என்று எதையும் சேர்க்காமல் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்.
1989 தொடக்கம் பாராளுமன்றத்தில் இருந்த போது அப்போதைய இருண்ட சூழலிலும் கொழும்பில் பல வடகிழக்கு இளைஞர்களின் காவல் அரணாக இருந்தவர்.
இன்று வெளிநாடுகளில் இவர் மூலமாக உயிர் வாழ்பவர்கள் பலநூறு..
வன்னி மண் வாழ்ந்திட...
இளைஞர்களின் காவல் அரணாக ...
எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும்
மக்கள் சேவகனை வெற்றிபெற செய்வோம்..
வீணை சின்னம்
இலக்கம் 6 ❌
SHAM VARATHAN
VISION6.