Divisional Secretariat Vavuniya

Divisional Secretariat Vavuniya Committed to Service

2020.01.09 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக  தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2026.04.07 ...
17/04/2026

2020.01.09 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2026.04.07 ஆந் திகதி வனப்பரிபாலன திணைக்களத்தின் மாவட்ட வன அலுவலகத்திற்கு பணி இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திரு. ஜினதாசகே சுரங்க செனரத் பண்டார அவர்களுக்கு அவரது பணி மென்மேலும் சிறக்கவும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையவும் எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோச...
09/04/2026

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 115226126 என்பதனைப் போன்று தோற்றமளிக்கும் விதத்தில், +94115226126 மற்றும் +0115226126 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளும் சில தரப்பினர், பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோருவதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், வட்ஸ்அப் செய்திகள் ஊடாகவும் இவ்வாறான தகவல்கள் கோரப்படுகின்றன.குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எவரும் பொதுமக்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்தமாட்டார்கள் எனத் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறான அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதையோ அல்லது உங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 5226100 எனும் இலக்கத்தையோ அல்லது www.drp.gov.lk எனும் இணையதளத்தையோ நாட முடியும்.

பொதுமக்கள் இவ்வாறான போலி அழைப்புக்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

2020.09.07ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் கணக்காளராக  தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2026.04.07ஆந் திகதி...
08/04/2026

2020.09.07ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் கணக்காளராக தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2026.04.07ஆந் திகதி வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எமது கணக்காளர் செல்வி .B.சுபாஷினி அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் நேற்றையதினம் எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. அவரது அர்ப்பணிப்பான, உன்னதமான சேவைக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன், அவரது எதிர்காலம் மனநிறைவுடனும் சிறப்பாகவும் அமைய எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலை தி...
17/03/2026

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலை திட்டம் 2026.

வவுனியா பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” வேலைத் திட்டத்திற்காக நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் பாலாமைக்கல் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 16.03.2026 திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் வவுனியா பிரதேச செயலாளர் திரு. இ. பிரதாபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிசாளர் S. C வீரக்கோன்,உதவி பிரதேச செயலாளர் திருமதி பு.உமாநந்தினி,நிர்வாக கிராம அலுவலர் திரு. ம. ஞானேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் கார்த்தீபன் மற்றும் கணபதி,
கிளீன் சிறிலங்கா இணைப்பாளர் திரு.விஜயகுமார்,
நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் அதிபர்,
வவுனியா தொழில்நுட்ப கல்லூரி அதிபர்,
நெளுக்குளம் பொலிஸ்,நெளுக்குளம்
கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்
சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
N H D A பணிப்பாளர்,
பிரஜா சக்தி தலைவர் திரு. குகேசன்
பிரதேச செயலக வெளிக்கள அலுவலர்கள்
நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் அனைத்து கிராமங்களில் உள்ள கிராம மட்ட அமைப்புகள்
பாலாமைக்கல் கிராம மக்கள் மற்றும் இவ்வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள மாதிரி கிராம குழு தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மேற்படி கிராமத்திற்கான "சமுதாய உற்பத்தித் திறன் தொடர்பான தெளிவூட்டல்' உதவிப் பிரதேச செயலாளர் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது ,

அதனைத் தொடர்ந்து திட்ட முன்மொழிவு சிறப்பு அறிக்கை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் உதவி பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிசாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சமூக உற்பத்தி திறன் குழு உறுப்பினரின் நன்றியுரையுடன் இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.

தொழில் முனைவோருக்கான ஒரு அரிய சந்தர்ப்பம் ♨️வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக, 2026ஆம் ஆண்டிற்கான மாகாணத்திற்கென ...
25/02/2026

தொழில் முனைவோருக்கான ஒரு அரிய சந்தர்ப்பம் ♨️
வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக, 2026ஆம் ஆண்டிற்கான மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி (PSDG) மூலம்,
நுண்மட்ட, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தகுதியான தொழில் முயற்சியாளர்கள்,பொருத்தமான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

📍 இடம்: குணநாயகம் மண்டபம், பிரதேச செயலகம் – வவுனியா
📅 திகதி: 25.02.2026
⏰ நேரம்: காலை 9.00 மணி

💰 நிதி பங்களிப்பு விவரம்
🔹 LKR 150,000.00 க்கு உட்பட்ட கோரிக்கைக்கு:
👉 திணைக்கள பங்களிப்பு – 50%
🔹 LKR 150,000.00 க்கு மேற்பட்ட கோரிக்கைக்கு:
👉 திணைக்கள பங்களிப்பு – குறைந்தது LKR 75,000.00 மட்டும்
✅ நிபந்தனைகள்
✔ 1️⃣ வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
✔ 2️⃣ தொழில் முயற்சியாளராக இருக்க வேண்டும்
✔ 3️⃣ செல்லுபடியாகும் வியாபார பதிவு இருக்க வேண்டும்

📑 தேர்விற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்
📌 1️⃣ விண்ணப்பப் படிவம் (நேர்முகத் தேர்வில் பெற்றுக் கொள்ளலாம்)
📌 2️⃣ வியாபார பதிவு (B.R)
📌 3️⃣ வியாபார திட்டம் (Business Plan)
📌 4️⃣ கணக்கறிக்கை
🔸 கடந்த 2 ஆண்டுகளுக்கான வரவு-செலவு அறிக்கை
📌 5️⃣ கோரப்படும் உபகரணத்தின்
🔸விலை மனு (Estimation / Quotation)
🔸 Specification
🔸 கடை விபரங்கள்
📌 6️⃣ தற்போது உள்ள உபகரணங்கள் / இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்
📌 7️⃣ நிலைத்த வியாபாரத் திட்டம் (Sustainable Development Business Plan)
📌 8️⃣ தொழில் கல்வி / பயிற்சி சான்றிதழ்கள் (NVQ / Training)
🔸 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்கள்
📌 9️⃣ பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள் (இருந்தால்)
📌 🔟 தேசிய அடையாள அட்டை பிரதி (NIC Copy)
📌 1️⃣1️⃣ கோரிக்கை கடிதம்
ℹ️ மேலதிக தகவல்களுக்கு
👨‍💼 கி. வசந்தன்
📞 077 515 5313
🏢 D.O – Department of Industries (NP)
📍 பிரதேச செயலகம், வவுனியா
🤝 என்றும் உங்களுடன்
📱 WhatsApp
👉 https://chat.whatsapp.com/D7j2ovAwsyT57zWQWV0puE...
📘 Facebook
👉 https://www.facebook.com/profile.php?id=100068809226304
👉 https://www.facebook.com/IndustrialGateway?mibextid=ZbWKwL

🌟 சுயதொழில் முன்னேறட்டும் – வாழ்வில் வெற்றி காணட்டும்! 💪✨

நிதி அறிக்கை பெற்றுக்கொள்ள
👉
https://www.businessvavuniya.lk/.../free-sme-financial...

✅ உங்கள் தொழில் கனவை உண்மையாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்!
📢 குறிப்பு:
நேர்முகத் தேர்விற்கு வருகை தரும் போது, அனைத்து தொடர்புடைய
ஆவணங்களையும் கட்டாயமாக கொண்டு வரவும்.
#வடமாகாணதொழிற்துறை






🚀💯

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான சிற்றுண்டிச்சாலை நட்டாத்துவதற்கான கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்...
17/02/2026

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான சிற்றுண்டிச்சாலை நட்டாத்துவதற்கான கேள்வி மனு கோரப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை கணக்கு கிளை, பிரதேச செயலகம், வவுனியா இல் பெற்றுகொள்ளலாம்

28.04.2021  ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 27....
13/02/2026

28.04.2021 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 27.01.2026 ஆந் திகதி வடக்கு மாகாண, நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திருமதி.P. செந்தில்நாயகி அவர்களுக்கு அவரது பணி மென்மேலும் சிறக்கவும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையவும் எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

06.12.1999  ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை ...
12/02/2026

06.12.1999 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 31.05.2025 ஆந் திகதி முதல் ஓய்வுபெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திரு.M.R.M.நவாஸ் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் அவரது ஓய்வுக்காலம் மனநிறைவுடனும் சிறப்பாகவும் அமைய எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

06.12.1999  ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை ...
12/02/2026

06.12.1999 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 30.05.2025 ஆந் திகதி முதல் ஓய்வுபெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திருமதி .S.சக்கீனா அவர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் அவரது ஓய்வுக்காலம் மனநிறைவுடனும் சிறப்பாகவும் அமைய எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

27.07.2023  ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 14.06.2025 ஆ...
12/02/2026

27.07.2023 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி 14.06.2025 ஆந் திகதி முதல் ஓய்வுபெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திரு.மு.செல்லையா அவர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் அவரது ஓய்வுக்காலம் மனநிறைவுடனும் சிறப்பாகவும் அமைய எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2023.01.09 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் கிராம அலுவலராக  தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2025.02.17 ஆந்...
11/02/2026

2023.01.09 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் கிராம அலுவலராக தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2025.02.17 ஆந் திகதி வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திருமதி.R.லயன்ஸ்றீக்கா அவர்களுக்கு அவரது பணி மென்மேலும் சிறக்கவும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையவும் எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1999.12.01 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது சிறப்பான சேவையினை வழங்கி...
11/02/2026

1999.12.01 ஆந் திகதி தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தனது சிறப்பான சேவையினை வழங்கி கடந்த 2025.11.19 ஆந் திகதி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது உத்தியோகத்தர் திரு.K.தனபாலன் அவர்களுக்கு அவரது பணி மென்மேலும் சிறக்கவும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையவும் எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Address

Vavuniya Town
43000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94242221946

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Vavuniya:

Share