2K13 O/L BATCH கோட்டைக்கல்லாறு

2K13 O/L BATCH கோட்டைக்கல்லாறு SOCITY

📚✨ கல்விக்கு ஒரு கை… குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு வழி! ✨📚இந்த ஆண்டிற்கான தரம் 01-இற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்...
07/02/2026

📚✨ கல்விக்கு ஒரு கை… குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு வழி! ✨📚

இந்த ஆண்டிற்கான தரம் 01-இற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்காக
மட் / பட் / பெரியகல்லாறு மெ.மி.த.க பாடசாலை அதிபர் அவர்கள் மூலம் வந்த கோரிக்கையின் அடிப்படையில்,

மாணவர்களின் கல்விக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள்
MJ Enterprises Courier Services அனுசரணையுடன்
மாணவர்களுக்கு வைபவ ரீதியாக நேரடியாக கையளிக்கப்பட்டது 🎒✏️📖

இத்தகைய அருமையான சேவையை செய்ய அனுசரணை வழங்கிய
அனுசரணையாளர்களுக்கு
2K13 O/L Batch சார்பில்
மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏💖

🌱 இன்றைய சிறு உதவி – நாளைய பெரிய மாற்றம்! 🌱
29.01.2026







எங்களால் முடிந்தது…🤝எங்களது குழுமத்திற்கு வந்த கோரிக்கையின் அடிப்படையில்,மட்/பட்/பெரியகல்லாறு மெ.மி.த.க பாடசாலைக்குதேவைய...
30/01/2026

எங்களால் முடிந்தது…🤝

எங்களது குழுமத்திற்கு வந்த கோரிக்கையின் அடிப்படையில்,
மட்/பட்/பெரியகல்லாறு மெ.மி.த.க பாடசாலைக்கு
தேவையான சுத்தம் செய்யும் பொருட்களை வழங்கி வைத்தோம்.

சுத்தமான பள்ளி சூழல் மாணவர்களின்
பாதுகாப்புக்கும் எதிர்கால முன்னேற்றத்துக்கும் அடித்தளம்.

சிறிய பங்களிப்பு என்றாலும்,
சமூகத்திற்கு எங்களால் முடிந்த சேவை. 💙
📚🧼✨

அமரத்துவமடைந்த எமது கிராமத்தைச்சேர்ந்தவரும் ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள்பிள்ளை தருமரெத்தினம் அவர்களுக்கு எமது 2K13 O/L ...
18/01/2026

அமரத்துவமடைந்த எமது கிராமத்தைச்சேர்ந்தவரும் ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள்பிள்ளை தருமரெத்தினம் அவர்களுக்கு எமது 2K13 O/L Batch சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது அடுத்த கட்ட மனிதநேயப் பணியின் தொடர்ச்சி…*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எமது *வாகரை - பணிச்சங்கேணி பகுதியின...
15/01/2026

எமது அடுத்த கட்ட மனிதநேயப் பணியின் தொடர்ச்சி…*

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எமது *வாகரை - பணிச்சங்கேணி பகுதியினருக்காக*, எதிர்வரும் *தைத் திருநாள் முன்னிட்டு * 13ஆம் திகதி அன்று
*உலர் உணவுப் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகள்* வழங்கும் செயற்பாடு எமது அடுத்தகட்ட சமூகப் பணியாக முன்னெடுக்கப்பட்டது .

🙏🏼 இந்நல்லணையப் பணிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

*2K13 O/L Batch – Koddaikallar*

மீண்டும் இன்னுமொரு மனிதநேய பணி…….பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பயணம் தொடர்கின்றது…….  O/L Batch Koddaikallar
13/01/2026

மீண்டும் இன்னுமொரு மனிதநேய பணி…….

பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பயணம் தொடர்கின்றது…….

O/L Batch Koddaikallar

01/01/2026
📚 *மலையக மாணவர்களுக்கான நிவாரண பணியின் முதற்கட்டம்!* 💪எமது நிவாரண பணியின் தொடர்ச்சியாக தங்களது ஒத்துழைப்பும் ஆதரவுமளித்த...
31/12/2025

📚 *மலையக மாணவர்களுக்கான நிவாரண பணியின் முதற்கட்டம்!* 💪

எமது நிவாரண பணியின் தொடர்ச்சியாக தங்களது ஒத்துழைப்பும் ஆதரவுமளித்த அனைத்து நண்பர்கள், உறவுகள் மற்றும் ஊர்மக்களுக்கு, *2K13 O/L Batch* நண்பர்கள் சார்பாக எங்கள் *மனமார்ந்த நன்றிகளை* தெரிவித்துக் கொள்கிறோம்.

🎁 எங்களால், ஒரு மாணவருக்கு *தலா ரூ. 2,500 பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள்* வழங்கப்பட்டன.
இவை *நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு* கையளிக்கப்பட்டது.

📸 இதற்கான நினைவாகிய நிமிடங்களைப் பகிரும் புகைப்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

🙏 உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் எங்களை மேலும் செயலாற்ற ஊக்குவிக்கிறது.
நாம் ஒருமித்து செயல்பட்டால், மாற்றங்களை உருவாக்க முடியும்.

*நன்றியுடன் — 2K13 O/L Batch - KODDAIKALLAR*

*எங்களால் முடிந்தது….🫳  *தலா ரூ. 2,500 பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள்*நேரடியாக பாதிக்கப்பட்ட...
31/12/2025

*எங்களால் முடிந்தது….🫳

*தலா ரூ. 2,500 பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள்*
நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இது, அவர்களின் கல்வி பயணத்திற்கு சிறிய தொடக்கமாகவும், எங்களின் பரிவான பங்களிப்பாகவும் அமைகிறது.

📚 கல்விக்கு கை கொடுப்போம்… 🤝
எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்…✊

எங்களுடன் கைகோர்த்து எப்போதும் உறுதியாக நிற்கும்MJ Enterprises – Koddaikallar(வெளிநாட்டு & உள்நாட்டு பொதிகள் சேவை)மாணவர்...
31/12/2025

எங்களுடன் கைகோர்த்து எப்போதும் உறுதியாக நிற்கும்
MJ Enterprises – Koddaikallar
(வெளிநாட்டு & உள்நாட்டு பொதிகள் சேவை)
மாணவர்களின் கல்வி தேவைகளை கருத்தில் கொண்டு
ரூ. 50,000/= பெறுமதியான அப்பியாச கொப்பிகள் & பாடசாலை உபகரணங்களை
அன்புடன் வழங்கினார்கள்.

அத்துடன், நிகழ்ச்சிக்குத் தேவையான
அனைத்து விதமான வாகன வசதிகளையும் செய்து தந்தார்கள்.

இந்த மனிதநேயமான உதவிகளுக்காக
MJ Enterprises – Koddaikallar அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🤝 கல்விக்கு கை கொடுப்போம்…
எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்…….

2k13 O/L batch
…. #

Address

Vakarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2K13 O/L BATCH கோட்டைக்கல்லாறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category