உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்

  • Home
  • Sri Lanka
  • Udappu
  • உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்

உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் Qualified Students

எமது பாடசாலை மாணவர்களை Covid-19 தொற்றிலிருந்து பாதுகாக்க எமது பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க WorldVision நிறுவனத்தி...
17/01/2021

எமது பாடசாலை மாணவர்களை Covid-19 தொற்றிலிருந்து பாதுகாக்க எமது பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க WorldVision நிறுவனத்தினரால் 250 Sanitizer bottles வழங்கப்பட்டதோடு இது மாணவர்களுக்கு வகுப்பு ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

எமது வித்தியாலய பழைய மாணவர் சங்கம் சார்பாக M. Ravishanth அவர்களால் பாடசாலை வளாக சுத்தம் செய்தலுக்காக புல் வெட்டும் இயந்த...
17/01/2021

எமது வித்தியாலய பழைய மாணவர் சங்கம் சார்பாக M. Ravishanth அவர்களால் பாடசாலை வளாக சுத்தம் செய்தலுக்காக புல் வெட்டும் இயந்திரம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் நலன்கருதி பழைய மாணவர் V.Elankeeran அவர்களால் 10 மின்விசிறிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
17/01/2021

பாடசாலை மாணவர்கள் நலன்கருதி பழைய மாணவர் V.Elankeeran அவர்களால் 10 மின்விசிறிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் 2020.12.23 அன்று எமது பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் ...
28/12/2020

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் 2020.12.23 அன்று எமது பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டியும் 100 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் காகிதாதிகளும் வழங்கி எதிர்கால கல்வி நடவடிக்கைக்கான ஊக்குவிப்பு செயற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது.

எமது பாடசாலை விளையாட்டுத்துறையை முன்னேற்றுமுகமாக  Paramasivamoorthy Sriraj (Australia) அவர்களால் வலைப்பந்து வலயங்கள் மற்...
01/12/2020

எமது பாடசாலை விளையாட்டுத்துறையை முன்னேற்றுமுகமாக Paramasivamoorthy Sriraj (Australia) அவர்களால் வலைப்பந்து வலயங்கள் மற்றும் தடைதாண்டல் உபகரணங்கள் புனரமைப்பு செய்துதரப்பட்டமைக்காக பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

29/09/2020
இன்றைய தினம் (2020/09/24) கல்வி அமைச்சின் 'School Best Practices Award -2019' விருதினை பெற்ற எமது அயல் பாடசாலையான ஸ்ரீ க...
24/09/2020

இன்றைய தினம் (2020/09/24) கல்வி அமைச்சின் 'School Best Practices Award -2019' விருதினை பெற்ற எமது அயல் பாடசாலையான ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்ப பாடசாலைக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழகத்தினால் நேற்றைய தினம் (2020/09/23) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயற்றிட்டத்தில் சுற்றா...
24/09/2020

எமது பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழகத்தினால் நேற்றைய தினம் (2020/09/23) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயற்றிட்டத்தில் சுற்றாடல் முன்னோடிகளுக்கு தொப்பிகள், இலட்சினை மற்றும் குறிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக A.H.M.M. Shafi (புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர்), F.Fadeen (புத்தளம் வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்), A.Thiruvaranganadan (புத்தளம் தெற்கு சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்) மற்றும் திரு. விவேகானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு ஆங்காங்கே அதிதிகள், அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களால் மரநடுகையும் இடம்பெற்றது.

எமது பாடசாலையின் நிலத்தடி உவர்நீர் காரணத்தால் மரநடுகைக்கென 'சொட்டுநீர்' செயற்திட்டமொன்று  பாடசாலையின் பழைய மாணவர்களான வி...
24/09/2020

எமது பாடசாலையின் நிலத்தடி உவர்நீர் காரணத்தால் மரநடுகைக்கென 'சொட்டுநீர்' செயற்திட்டமொன்று பாடசாலையின் பழைய மாணவர்களான
விவேகானந்தன் பத்மநேசன்(Aus) மற்றும் வைத்தியநாதன் சிந்துஜன்(Aus) ஆகியோரால் கடந்த ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் (2020/09/23) திரு. விவேகானந்தன் (பத்மநேசனின் தந்தை) அவர்களால் மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'முயன்று சோலையாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் படிப்படியாக மரநடுகையினை மேற்கொள்ளும் எமது பாடசாலையின் செயற்பாடுகளுக்கு மேல...
14/09/2020

'முயன்று சோலையாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் படிப்படியாக மரநடுகையினை மேற்கொள்ளும் எமது பாடசாலையின் செயற்பாடுகளுக்கு மேலும் உரமூட்டும் வண்ணம் இன்று (14/09/2020) அயற்பாடசாலையான P/Srikrishna Primary School இனால் இரு ஆலமரக்கன்றுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

காற்றினால் பாதிக்கப்பட்ட எமது பாடசாலைக்கு உதவும் நல்லெண்ணெத்துடன் 'மாணவர்களின் மனப்பாங்கு விருத்தி' எனும் தொனிப்பொருளில்...
14/09/2020

காற்றினால் பாதிக்கப்பட்ட எமது பாடசாலைக்கு உதவும் நல்லெண்ணெத்துடன்
'மாணவர்களின் மனப்பாங்கு விருத்தி' எனும் தொனிப்பொருளில் P/SriKrishna Primary School அதிபர் ஆசிரியர்களின் வழிகாட்டலினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மனப்பாங்கு விருத்தியின் வெளிப்பாடாக சிறு உதவித் தொகையொன்று Srikrishna Primary School அதிபர் திரு. K.Thondaman அவர்களால் எமது பாடசாலையின் பிரதி அதிபரிடம் இன்று (14/09/2020) கையளிக்கப்பட்டது.

உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், எமது அண்மைய பாடசாலையான SriKrishna Primary School மாணவர்களின் மனப்பாங்கு விருத்திகண்டு பேரானந்தம் கொள்வதோடு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இன்று (2020.08.22) எமது பாடசாலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள் இடம்பெற்றதோடு விநாயகர் அருளைப்பெற பாடசாலை அதிபர், ஆசிர...
22/08/2020

இன்று (2020.08.22) எமது பாடசாலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள் இடம்பெற்றதோடு விநாயகர் அருளைப்பெற பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் வருகை தந்தனர்.

Address

Division No. 06
Udappu

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category