15/10/2024
மாவட்டத்தில் மரத்தை வெற்றி பெறச்செய்வதற்கான சந்திப்பு
""""""""""""""""""""""""""""""""""
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் மரச் சின்னத்திற்கு அதிகப்படியான வாக்குகளை அளித்து மாவட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம் அதிகப்படியான ஆசனங்களை பெற்று கொள்வது தொடர்பான சந்திப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர்களான முன்னாள் தவிசாளரும் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரும் பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான கலாநிதி MS.அப்துல் வாஸித் மற்றும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி மேயரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர்களுக்கிடையில் இன்று 2024/10/14 ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், தேசியப்பட்டியல் வேட்பாளரும் பொத்துவில் மத்திய குழு தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி CM.பைசல் முகைடீன், கல்முனை மாநகர உறுப்பினர் Mr.நஸார் JP, பொத்துவில் மத்திய குழு செயலாளர் B.வசூர்கான் Jp மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் நமது கட்சியின் ஏனைய வேட்பாளர்களுடனும் சந்தித்து கட்சியின் மாவட்ட வெற்றி குறித்து கலந்துறையாடவுள்ளதாகவும் வேட்பாளர் MS.அப்துல் வாஸித் தெரிவித்துள்ளார்.
-ஊடகப் பிரிவு-
Wazeeth Media Division & SLMC Media
Pottuvil