Divisional Secretariat Koralaipattu West - Oddamavadi

Divisional Secretariat Koralaipattu West - Oddamavadi Divisional Secretariat - Koralaipattu West

Government Institution

14/09/2026
பணப்பை தவறி விட்டது. ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சாரதியாகக்கடமை புரியும் குழந்தைவடிவேல் சுபாஸ்கர் என்பவரின் சாரதி அனுமத...
13/09/2026

பணப்பை தவறி விட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சாரதியாகக்கடமை புரியும் குழந்தைவடிவேல் சுபாஸ்கர் என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரம், ஆளடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பை நேற்றைய தினம் (12.09.2026) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு அலுவலகக்கடமை நிமித்தம் போய் வரும் வழியில் தவறி விட்டது.

கண்டெடுத்தவர்கள் 77 575 6692 எனும் இலக்கத்துடன் அல்லது ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

09/09/2026
21/08/2026

21.08.2026

ஓட்டமாவடி பிரதேச செயலாளரின் துரித நவடிக்கை : உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மூதாட்டி.ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ம...
19/08/2026

ஓட்டமாவடி பிரதேச செயலாளரின் துரித நவடிக்கை : உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மூதாட்டி.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலையில் பிறப்புச்சான்றிதழ் இல்லாததால் ஆதரவின்றித்தவிக்கும் மூதாட்டி – உதவிக்கரம் நீட்டுமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (14.08.2026) இணையத்தளங்களில் வெளியான செய்தியைப் பார்வையிட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அன்றைய தினமே குறித்த மூதாட்டி வசித்து வந்த இடத்திற்கு கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுடன் சென்று குறித்த மூதாட்டி மற்றும் அவரைப்பராமறிப்பவர்களுடன் கலந்தாலோசித்தார்.

குறித்த மூதாட்டியை பராமரிப்பவர்கள் அவர் தொடர்பான எந்தத்தகவலும் தங்களுக்கு தெரியாது என்றும் இவவின் பெயர்கூட சரியாகத்தெரியாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக அவரது உறவினர்கள் மூதூர் - தோப்பூர் 59 என்ற பிரதேசத்தில் வசிப்பதாக அறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்டு மூதாட்டியை அவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார்.

குறித்த மூதாட்டியின் சகோதரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.08.2026) ஓட்டமாவடிக்கு வருகை தந்து தனது சகோதரியை பொறுப்பேற்ற நெகிழ்ச்சியான சம்பவம் கிராம சேவை உத்தியோகத்தர் முன்னிலையில் கணவர் மரணித்த நிலையில், தனிமையில் எந்தவித ஆதரவுமின்றி அயலவர்களின் ஒத்துழைப்பு, உதவியோடு நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்ந்த மூதாட்டி உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டார்.

குறித்த மூதாட்டி நீண்ட நாட்களாக எந்தத்தொடர்பும் இல்லாமலிருந்ததால் மரணித்து விட்டதாக நினைத்து அவவுக்காக மார்க்கக்கடமைகளைச் செய்ததாக மூதாட்டியின் சகோதரர் எம்.ஐ.ஹனீபா தெரிவித்தார்.

மரணித்து விட்டார் என்றிருந்த எனது சகோதரியை மீண்டும் எங்களுடன் சேர்ப்பதற்கு உதவிய பிரதேச செயலாளர் மற்றும் உதவிய அனைவருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பிரதேச செயலாளரின் தொடர் முயற்சி காரணமாக மூதூர் தோப்பூர் 59ல் வசித்து வரும் மூதாட்டியின் உறவினர்கள் அடையாளங்காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று மேற்கில் பிரம்மாண்ட தொழில் சந்தையும் நேர்முகத்தேர்வும்மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத்திணைக்களமும் கோறளைப்பற்...
12/08/2026

கோறளைப்பற்று மேற்கில் பிரம்மாண்ட தொழில் சந்தையும் நேர்முகத்தேர்வும்

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத்திணைக்களமும் கோறளைப்பற்று மேற்கு, ஒட்டமாவடி பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் மாபெரும் "தொழில் சந்தை" மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு நாளை ஆகஸ்ட் 13, 2026 (வியாழக்கிழமை) ஓட்டமாவடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.

முன்னணி தனியார்த்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள்.

தொழில் பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனங்களின் பங்கேற்புடன் தொழிற்கல்விக்கான வழிகாட்டல்கள்.

மேற்படிப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விரிவான ஆலோசனைகள்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பிலான தகுந்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்.

நேரடி கலந்துரையாடல் மற்றும் தொழில்வாய்ப்பு தகவல்கள்.

புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டல்.
சுயதொழில் முயற்சி மற்றும் திறன் வளர்ச்சி குறித்த ஆலோசனைகள்.

"நிறைய வாய்ப்புகள்! சரியான வழிகாட்டல்! உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த தொடக்கம்!"

இளைஞர், யுவதிகள் மற்றும் வேலைவாய்ப்பைத் தேடுவோர் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

📞 077 805 5383
📞 076 218 2823

பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர...
11/08/2026

பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் பிரதேச செயலக முன் பகுதியில் வலது புறமாக உள்ள பகுதியை பிரதேசத்தின் வாழ்வாதாரத்தை அடையாளப்படுத்தி அழகுபடுத்திய உத்தியோகத்தர்களான
சமுக வலுவூட்டல் உத்தியோகத்தர்களான பி.எம்.நூர்தீன், எம்.ஐ.எம்.முஸம்மில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.துஷ்யானந்தன் ஆகியோருக்கு பிரதேச செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றது.அதன...
11/08/2026

பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் பிரதேச செயலக பெயரை கல்வெட்டில் அமைத்த அலுவலக சாரதி கே.சுபாஸ்கர் மற்றும் அவருக்கு உதவியாக செயற்பட்ட அலுவலக காவலாளி ஏ.எல்.ஆதம் லெப்பை ஆகியோருக்கு பிரதேச செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம்; கிளீன் சிறிலங்காவைக் ...
08/08/2026

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம்; கிளீன் சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அத்தம”வேலைத்திட்டம் இன்று (08.08.2026) சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எட்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம் பெற்றது.

இதன் பிரதான நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதான நிகழ்வில் மாஞ்சோலை பிரதான கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டதோடு, ஏனைய கிராம சேவகர் பிரிவுகளில் மைதான சுற்றுச்சூழல், ஆற்றங்கரையோரம், வடிகான்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக், பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவிற்கான கிளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளர் மௌலவி சி.எம்.எம்.புர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஏ.எஸ்.பாறூக், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், சமுக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள், இளைஜர் கலக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு அத்தம வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கினர்.

தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி  #அத்தம
07/08/2026

தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி #அத்தம

Address

Post Office Road
Oddamavadi
30420

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94652257716

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Koralaipattu West - Oddamavadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Koralaipattu West - Oddamavadi:

Shortcuts

Share