SJB Team Nuwara Eliya

SJB Team Nuwara Eliya Politics

மின் கட்டனம் உயர்வு தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று 22/10/2022 தலவாக்கலை பஸ் தரிப்பிடமுன்பாக மாலை 06மணியளவில் ...
22/10/2023

மின் கட்டனம் உயர்வு தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று 22/10/2022 தலவாக்கலை பஸ் தரிப்பிடமுன்பாக மாலை 06மணியளவில் நடைபெறவுள்ளது.... நடலாவிய ரீதியில் நடைபெற உள்ள இந்த இந்த நடவடிக்கையில் நீங்களும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.... ."විදුලි බිල වැඩි කරපු උන්ට හෙන ගහපන් "
විරෝධතාවක් 2023/10/22 සවස 6ට තලවකැලේ බස් නැවතුම්පොළ අසල
😡😡😡😡😡( அதிகம் பகிரவும் pls share more)"

19/10/2023
“போர் மட்டுமே தீர்வாகாது,இரு நாடுகளும் நிலையான அமைதிக்காக ஒன்றிணையுங்கள்.”பலஸ்தீன தூதுவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலை...
18/10/2023

“போர் மட்டுமே தீர்வாகாது,
இரு நாடுகளும் நிலையான அமைதிக்காக ஒன்றிணையுங்கள்.”

பலஸ்தீன தூதுவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால்,இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும்,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது என்றும்,தாம் தற்காலிக அமைதியை விட நிரந்தர அமைதியையே நாடுவதனால்,இவ்வாறான நிலையான அமைதிக்கான தீர்வை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இணக்கம் காணுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (16) இந்நாட்டு பலஸ்தீனத்துக்கான தூதுவர் HE Dr. Zuhair Hamdallah Zaid அவர்களை சந்தித்து பலஸ்தீன நிலமைகளை கேட்டறிந்தும் தமது கவலைகளையும் வெளிப்படுத்தும் போதும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் யுத்தம் நடந்தால் குழந்தைகள், தாய்மார்கள்,பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும், காயப்பட்டு பல்வேறு கோளாறுகள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாதல் போன்றன ஏற்படுவதனால்,இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் நிலை நீடிக்காமல் நிரந்தர அமைதிக்கான ஆரம்பமே எழுந்துள்ளதாகவும், வன்முறையை ஏற்காதவன் என்ற வகையில், இரு தரப்பு பொதுமக்களின் உயிருக்கு இனியும் ஆபத்து ஏற்படாமல் நிலையான அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இந்த போரில் உயிரிழந்த மற்றும் குடும்பத்தை இழந்த இரு நாட்டு பொதுமக்களுக்கும் தனது இரங்கலையும்,அநுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்து கொண்டார்.

18/10/2023
 #ஐக்கிய_மக்கள்_சக்தி__நுவரேலிய_மாவட்ட_இளைஞர்அணி_தலைவராக_அமைப்பாளர்_அசோக்க___சேப்பால_தெரிவு...                          ...
16/10/2023

#ஐக்கிய_மக்கள்_சக்தி__நுவரேலிய_மாவட்ட_இளைஞர்அணி_தலைவராக_அமைப்பாளர்_அசோக்க___சேப்பால_தெரிவு... ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட இளைஞர் அணி தலைவராக நுவரேலியா மாவாட்ட அமைப்பாளர் முன்னாள் தலவாக்கலை லிந்ததுலை நகர சபை தவிசாளர் அசோக்க செப்பால அவர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினூடாக தெரிவு செய்யப்பட்டுளார்.... அவர்களுக்கு தலவாக்கலை சமூகம் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் 👍👍👍👍👍 ( ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவு -நுவரேலியா மவாட்டம் )

15/10/2023
நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஒத்துழைப்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் ...
15/10/2023

நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஒத்துழைப்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்கள்.

இன்று எமது நாட்டில் தொழில் முனைவோர், நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு மறக்க முடியாத ஓர் சந்தர்ப்பமாகும் என்றும்,எமது நாட்டின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் உட்பட சகல அதிகாரிகளும் நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் நலனுக்காக அதிக பக்கபலத்தை வழங்குகின்றனர் என்றும்,எமது நாட்டிலுள்ள நுண்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர்களை எமது நாட்டிக்கு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிதி National Credit Guarantee Institution ஊடாக நமது நாட்டின் வங்கி கட்டமைப்பில் 13 வங்கிகள் மூலம் மூலதனமாக வழங்கப்படுகிறது என்றும்,இதன் ஊடாக இலங்கையிலுள்ள நுண்,சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இதன் ஊடாக முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (13) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இந்நிதித் தொகையை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.

குறைந்த அரசாங்க வருவாய் மற்றும் சரியான நிதி முகாமை இல்லாது ஒரு நாடு முன்னேற முடியாது என்றும்,ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அதிக வருமானம் ஈட்டப்பட வேண்டும் என்றாலும்,தற்போதைய அரசாங்கம் வரி அதிகரிப்பு மூலம் அரசாங்க வருவாயை அதிகரிக்க முயற்சித்தாலும்,
பொருளாதாரத்தை சுருக்குவதன் மூலம் அதைச் செய்ய முடியாது என்றும்,அரச வருவாயை அதிகரிக்க பொருளாதாரத்தை விரிவடையச் செய்ய வேண்டும் என்றும்,நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை இதற்கு வழங்குகிறார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இந்நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினரை மீன்டெழச் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள்;முன்னெப்போதும் இல்லாத வகையில், போராடி வரும் நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் எதிர்கொள்ளும் நீண்ட கால சவால்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தீர்வு காண நடைமுறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒரு திருப்புமுனை வாய்ந்த உரையாடலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம்,எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் தற்போதுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர் என்றும்,இந்த மூலோபாய முன்முயற்சியானது, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலைவரின் அர்ப்பணிப்பை மட்டும் எடுத்துக்காட்டாது முன்னணி நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான தீர்வுகள் மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியையும் இது காண்பிக்கிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செயல்பாட்டில்,
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் வகிக்கும் முக்கிய பங்களிப்பை அடையாளம் கண்டு,
அத்துறையின் மறுமலர்ச்சிக்கு தேவையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் இது ஒரு தீர்க்கமான படியைக் குறித்துக் காட்டுவதாக பாராட்டும் விதமாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் பல தடவைகள்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்தார் என்பதோடு,அவர்களது பிரச்சினைகளை எடுத்துரைக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கடந்த அரசாங்கங்களின் போது ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதிலும்,முதல் முறையாக,
சாதாரண மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் நேரடியாகச் சொல்லும் அரிய வாய்ப்பு கிடைத்த தருணம் இதுவாகும்.

இந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் பல கட்டங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதிகளை நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் நேருக்கு நேர் சந்தித்த கலந்துரையாடியதன் விளைவாக,இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இத்தொகை டிசம்பர் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் Takafumi Kadono அவர்களும்,Santosh Pokharel (Unit head, Private Sector Development) அவர்களும், நிதி ஆய்வாளர் திருமதி.Uresha T. Walpitagama ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வலையொளி இணைப்பு-

https://youtu.be/k6igKLOQlOA?si=0oefCCGx_MmJgUO-

ஜாக்சன் ஆண்டனி என்ற அந்த பெரும் ஆளுமையை இழந்து விட்டோம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஎமது நாட்டின் கலைத்துறைக்கு ...
12/10/2023

ஜாக்சன் ஆண்டனி என்ற அந்த பெரும் ஆளுமையை இழந்து விட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் கலைத்துறைக்கு தனித்துவம் வாய்ந்த மகாத்தான சேவையை ஆற்றிய,ஒரு சிறந்த ஆளுமை கொண்ட,யுக புருஷர் என ஜாக்சன் ஆண்டனி அவர்களை அழைக்கலாம் என்றும்,அவரது மறைவு நம் அனைவருக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்பாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கலைத் துறையில் புதிய படைப்புகள் மற்றும் புதிய பாணியிலான கலை போக்குகளை மிகவும் ஆக்கப்பூர்வமாக உருவாக்குதல் தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இவருக்கிருந்ததாகவும்,எம்மை விட்டுப் பிரிந்த அன்னாரது ஆன்மா நித்திய ஆறுதல் கிடைக்கப்பெற பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த ஜாக்சன் ஆண்டனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (11) அன்னாரது இல்லத்திற்குச் சென்றிருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறைபாடுகளை விமர்சித்தாலும் அதிகாரம் இல்லாவிட்டாலும் கல்வித்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.எ...
07/10/2023

குறைபாடுகளை விமர்சித்தாலும் அதிகாரம் இல்லாவிட்டாலும் கல்வித்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வை வழங்குவதே இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாக அமைந்திருந்தாலும்,
அந்தப் பிரச்சினை எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டது என்பது ஒரு கேள்விக்குறியே என்றும்,ஆசிரியர்கள், அதிபர்கள்,கல்வியியலாளர்கள்,ஆலோசகர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்வித் துறை நிர்வாகிகள் ஆகிய துறைகளில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது கல்வித் துறையில் திருப்திகரமான மனித வளம் உருவாகும் என்றும்,இந்த பிரச்சினைகள் ஒரே பேனாவால் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது என்றும்,இவ்வாறான பிற்போக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோதும் பல்வேறு குறைகளை விமர்சித்தாலும் அரச தரப்புடன் கலந்துரையாடல் நடத்தி பிரச்சினைகளுக்கு சாதகமாக தீர்வு தேடுவதாகவும்,கல்வியின் பல்வேறு நிலைகளைப் பற்றிய தெளிவான புரிதல் தமக்குள்ளதாகவும்,
குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது எளிது என்றாலும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பது கடினமான பணி என்றும்,இந்த பணியை எவ்வாறோ மேற்கொண்டாலும்,இப் பணியில் நாசகார செயற்பாடுகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் அடையும் நோக்கமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கல்வித்துறை தொடர்பான 7 பகுதிகளுடன் சுமூக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு செயற்படுவதாகவும்,இது தேர்தல் நெருங்கும் போது கொடுக்கும் வாக்குறுதி அல்ல என்றும், புதிய கட்சியாக மத்திமமான ஓர் பாதையில் பயணிப்பதாகவும்,இந்தப் பயணத்தின் போது, ​​அதிகாரம் பெறுவதற்கு முன்பே சில சேவைகளைச் செய்ய முடிந்தது என்றும், நாட்டின் கல்வித்துறைக்கு 75 வருட வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமகி கல்வி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குரு ஹரசர 2023 நிகழ்ச்சியில் இன்று (6) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

220 இலட்சம் மக்களும் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடும் காலத்தில்,இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க டொலரும் ரூபாவும் தேவை என்றும்,சம்பள முரண்பாடு,சேவை உயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தப் பணம் தேவைப்படுகிறது என்றும்,என்றாலும் இதற்குத் தேவையான பணத்தைப் பெற, பொருளாதாரம் சுருங்காமல் பொருளாதார விரிவாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அரசாங்கம் தவறான இடத்திலிருந்து ஆரம்பித்து மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சுருக்கினாலும்,ஐக்கிய மக்கள் சக்தி நம்புவது போன்று இந்நிலையிலிருந்து நாடு மீள வேண்டுமாயின் பொருளாதார விரிவாக்கத்துடன் கூடிய விருத்தியை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசின் இந்த தவறான நடவடிக்கையால் எதிர்பார்த்த அரச வருவாயை பெற முடியவில்லை என்றும்,இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கூட தாமதமாகி வருவதாகவும்,இந்த நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க,பொருளாதாரத்தை மேம்படுத்தி,அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும்,அதனூடாக சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளைப் போன்று பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு தயாரில்லை என்றும்,அதிகாரம் கிடைத்தவுடன் இப்பணிகள் அனைத்தும் முறையாகவும்,நேர்மையாகவும், தூய்மையாகவும்,வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப்படும் என்றும், குறைவாகப் பேசி அதிகமாக வேலை செய்வதற்கான நேரம் எழுந்துள்ளதாகவும், நாட்டில் தற்போது பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

*சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்.*எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசசமுர...
07/10/2023

*சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்.*

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சமுர்த்தியில் முதலீடு,
சேமிப்பு,நுகர்வு போன்றவை இருப்பதாகவும்,இவ்வாறு சேமித்த பணத்தில் கோடிக்கணக்கில் பெறப்பட்டு 5000 ரூபா அளவில் கொடுப்பனவு கோவிட் காலத்தில் வழங்கப்பட்டதாகவும்,இதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும்,
மற்றுமொரு தொகுதி வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தை எடுத்துக் கொண்டால்,அது விஞ்ஞானபூர்வமற்ற,தரவு அடிப்படையில் அல்லாத,புள்ளிவிபரவியல் ரீதியாக அணுகப்படாத திட்டம் என குறிப்பிடலாம் என்றும்,இதற்குக் காரணம்,குடும்ப அலகின் வருமான செலவீன கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வறுமைக் கோடு சரியாக அடையாளப்படுத்தப்படாது தன்னிச்சையாக ஒரு பகுதியினர் எடுத்த முடிவே என்றும் அவர் தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தில் 200 மில்லியன் டொலர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும்,இதில் மக்களுக்கு நலன் மேம்பாடுமும் நன்மையும் இடம்பெறவில்லை என்றும்,இது வெறும் பணம் வழங்கும் செயற்பாடே என்றும், பணத்தைப் பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்பது தீர்மானிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆனால் சமுர்த்தி வேலைத்திட்டம் இதற்கு மாற்றமானது என்றும்,இது சமூகப் பாதுகாப்பு, மற்றும் மக்கள் நலன் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகவும்,அது நூறு சதவிகிதம் சம்பூர்ணமானது இல்லை என்றாலும்,1994 இல் இருந்து இப்போது வரை இதில் ஏராளமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த பணம் அதன் பயனாளிகளுக்கு சொந்தமானது என்றும், இங்குள்ள சமூக பாதுகாப்பு காரணமாக எந்த பயனாளியும் அதை நீக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றக் குழுவில் கலந்து கொண்டு அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

https://youtu.be/R6u7tWMEQlc

உழைக்கும் மக்களின் சேமலாப நிதியை அரசாங்கம் பிட்பொகட் அடித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஉலகில் பல நாடுகள் ...
07/10/2023

உழைக்கும் மக்களின் சேமலாப நிதியை அரசாங்கம் பிட்பொகட் அடித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உலகில் பல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தாலும்,கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அந்நாடுகள் கூட தங்கள் நாட்டின் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும்,உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அழுத்தம் பிரயோகித்து தேசிய கடனை மறுசீரமைத்த ஒரே நாடாக எமது நாடு சாதனை படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடிய எந்த நாடும் உழைக்கும் மக்களின் நிதியில் கை வைக்கவில்லை என்றும்,ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கவில்லை என்றும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தை திருடும் முயற்சியையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நிதியை திருடிய பின்னர் தரவுகள் இல்லை என்கின்றனர் எனவும்,தரவுகளை சமர்ப்பிக்க பல மாதங்களாகும் என்கின்றனர் என்றும்,இது நகைச்சுவையான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரும் செல்வந்தர்களுக்கு மாத்திரம் சலுகைகளையும் நன்மைகளையும் வழங்குவதற்கு முடியாது என்றும்,
அரசாங்கத்திற்கு ஏற்றால் செயற்படுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆணையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய கடனை மறுசீரமைப்பதன் மூலம் நமது நாட்டின் தொழிலதிபர்கள்,பெரும் செல்வந்தர்கள்,
பணக்காரர்கள் மற்றும் வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கி உழைக்கும் மக்களின் சேமிப்பை பிட்பொகட் அடித்த இந்த அரசாங்கம்,அவ்வாறு எதனையும் மேற்கொள்ளவில்லை என தற்போது கூறிவருவதாகவும்,
இது நகைச்சுவையானது என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக,சாமானிய மற்றும் உழைக்கும் சகல மக்களுக்களின் நலனுக்காக எழுந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்த முன்னர் சகல விடயங்கள் குறித்த தரவுகளையும் அறிந்து கொண்ட பின்பே இணக்கப்பாடுகளை எட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ආණ්ඩුව වැඩ කරන ජනතාවගේ අර්ථ සාධක අරමුදල් පිට්පොකට් ගැසුවා - විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතාලෝකයේ බොහෝ රටවල් අයි...

Address

Talawakelle
Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when SJB Team Nuwara Eliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SJB Team Nuwara Eliya:

Share