24/04/2026
Awareness programme for Journalists in Galle District
ගාල්ල දිස්ත්රික් මාධ්යකරුවන් සදහා දිනක වැඩමුළුව
காலி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
2026. 04. 22
Supported by: VRIDDHI/UNOPS
The Voice of Plantation People Organization (VOPP) successfully conducted a one-day awareness workshop for selected media personnel in the Galle District on the Malaiyaha Tamil community on 22.04.2026 at the Aradhana Hotel, Galle.
The workshop focused on key areas such as: who the Malaiyaha people are, their historical background, the challenges they currently face, and the level of social recognition they receive. It also aimed to identify ways of gaining media support in addressing these issues and to explore strategies for effectively highlighting the concerns of the Malaiyaha community. The objectives of the workshop were clearly outlined by Ms. Lavinia Hasanthi, Programme Director of VOPP, during her opening remarks.
Mr. V. Veerasingham served as the resource person for the session, providing clear and in-depth explanations on the above topics. In addition, Mr. Anthony Jesudasan, Executive Director of VOPP, elaborated on the current situation of the Malaiyaha community, the initiatives being implemented by the organization on their behalf, and the type of support expected from media professionals.
The programme was supported by Mr. Francis Rajan, National Programme Coordinator of VOPP, and Ms. K. Harshani, District Coordinator for Galle.
The participating journalists expressed that the workshop was a highly valuable experience, noting that it helped them gain a deeper understanding of the Malaiyaha community and the hardships they face in their daily lives.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் (VOPP) மலையகத் தமிழர் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஒருநாள் செயலமர்வு ஒன்று 2026.04.22 அன்று காலி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக காலி ஆராதனா ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த செயலமர்வில் மலையக மக்கள் யார், அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன, அவர்கள் தற்போதைய காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன போன்ற முக்கிய அம்சங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. மேலும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியில் ஊடகங்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன என்பதையும் ஆராய்வது இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. இந்நோக்கங்களை VOPP அமைப்பின் திட்ட இயக்குநர் திருமதி லவீனா ஹசந்தி அவர்கள் தமது தொடக்க உரையில் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் வளவாளராக திரு. வி. வீரசிங்கம் அவர்கள் குறிப்பிடப்பட்ட தலைப்புகளை எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கினார். மேலும், VOPP அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு. அன்டனி ஜேசுதாஸன் அவர்கள் மலையக மக்களின் தற்போதைய நிலை, அவர்களுக்காக அமைப்பு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் மற்றும் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதரவு குறித்து விரிவாக விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் VOPP அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பிரான்சிஸ் ராஜன் மற்றும் காலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி கே. ஹர்ஷனி ஆகியோர் ஒத்துழைப்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், இது மிகவும் பயனுள்ள அனுபவமாக இருந்ததுடன், மலையக மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆழமான புரிதலை பெற்றதாக தெரிவித்தனர்.
වතුකරයේ ජනතා හඬ සංවිධානය විසින් මලෛයහම් දෙමළ ජනතාව පිළිබඳව ගාල්ල දිස්ත්රික්කයේ තෝරාගත් මාධ්යවේදීන් දැනුවත් කිරීම සඳහා එක්දින වැඩමුළුවක් 2026.04.22 දින ගාල්ල ආරාධනා හෝටලයේදී සාර්ථකව පවත්වන ලදී.
මෙහිදී “මලෛයහම් ජනතාව යනු කවුරුන්ද?”, “ඔවුන්ගේ ඉතිහාසය කුමක්ද?”, “වර්තමානයේ ඔවුන් මුහුණ දෙන ගැටලු මොනවාද?”, “සමාජයේ ඔවුන්ට ලැබෙන පිළිගැනීම කුමක්ද?” යන කරුණු පිළිබඳව අවධානය යොමු කරන ලදී. එමෙන්ම, මලෛයහම් ජනතාවගේ ගැටලුවලට විසඳුම් සෙවීමේදී මාධ්ය සහයෝගය ලබා ගැනීම සහ ඔවුන්ගේ ගැටලු වඩාත් ප්රචාරය කිරීම සඳහා අවශ්ය ක්රියාමාර්ග හඳුනා ගැනීමද මෙම වැඩමුළුවේ ප්රධාන අරමුණු ලෙස සලකා බැලුණි. වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ වැඩසටහන් අධ්යක්ෂිකා ලවීනා හසන්ති මහත්මිය මෙම අරමුණු පැහැදිලි කරමින් වැඩමුළුව ආරම්භ කළාය.
මෙම වැඩසටහනේ සම්පත්දායකයා ලෙස කටයුතු කළ V. වීරසිංහම් මහතා ඉහත කරුණු සරලව හා ගැඹුරින් පැහැදිලි කළේය. එසේම, වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ විධායක අධ්යක්ෂක ඇන්තනි ජේසුදාසන් මහතා මලෛයහම් ජනතාවගේ වර්තමාන තත්ත්වය, ඔවුන් වෙනුවෙන් සංවිධානය විසින් ක්රියාත්මක කරනු ලබන වැඩසටහන් සහ මාධ්යවේදීන්ගෙන් අපේක්ෂිත සහය පිළිබඳව විස්තර කළේය.
මෙම වැඩසටහන සාර්ථකව ක්රියාත්මක කිරීම සඳහා වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ ජාතික වැඩසටහන් සම්බන්ධිකාරක ෆ්රැන්සිස් රාජන් මහතා සහ ගාල්ල දිස්ත්රික් සම්බන්ධිකාරක කේ. හර්ෂනි මහත්මිය සහය ලබා දුන්හ.
වැඩමුළුවට සහභාගි වූ මාධ්යවේදීන් විසින් මෙම වැඩසටහන ඉතා වැදගත් සහ අර්ථවත් අත්දැකීමක් බවත්, මලෛයහම් ජනතාවගේ ජීවිත තත්ත්වය හා ඔවුන් මුහුණ දෙන දුෂ්කරතා පිළිබඳව ගැඹුරු අවබෝධයක් ලබා ගැනීමට හැකි වූ බවත් සඳහන් කළහ.