Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP

Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண...
23/03/2026

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 2026.03.16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ சரத்சந்திர அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமத தலைவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா பிரதேச மௌலவிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலை முன்றலில் இருந்து இஸ்லாமிய கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கிராஅத் ஓதப்பட்டது. பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் திருமதி.நி.தர்சினி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜம்மியத்துல் உலாமா, தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ அப்துல் சமட் மௌலவி அவர்களின் நோன்பு ஆசியுரையுடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச்.உபாலி சமரசிங்க அவர்களதும் பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரைகள் என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன.

நிகழ்வில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்னார் அல்மதீனா வித்தியாலய மாணவர்களின் றபான் நடனம், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஹசீதா, நோன்பு திறத்தல் நிறைவுற்றதன் பின்னர், வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் கோலாட்டம், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளின் களிகம்பு, ஹசீதா, றம்ழான் நடனம், வவுனியா அல்-அக்சா வித்தியாலய மாணவிகளின் ஹசீதா வவுனியா அல்-மதீனா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய கீதங்கள் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன. துஆப் பிரார்த்தனையுடன் இப்தார் நிகழ்வுகள் நிறைவுற்றன. வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

வர்ண இரவு – 2025வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 49வது தேசிய மட்ட விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வ...
09/03/2026

வர்ண இரவு – 2025

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 49வது தேசிய மட்ட விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் “வர்ண இரவு-2025” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் புதன்கிழமை 04.03.2026 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகளையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடனும், அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையுரையுடனும் ஆரம்பமான இந்நிகழ்வில், நடைபெற்று முடிந்த 49வது தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் தடம் பதித்த வீர, வீராங்கனைகள் 95 பேருக்கும் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 108 பேருக்கு வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள், பணப்பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு நூறாயிரம் ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 60000.00 ரூபாவும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 30000.00 ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கப்பட்டன. குழுநிலை விளையாட்டுக்களில் முதலிடம் பெற்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 20000.00 ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா 15000.00 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 10000.00 ரூபாவும் வழங்கப்பட்டன. மேலும் சாதனை படைத்த வீரர்களை உருவாக்கிய பயிற்றுவிப்பாளர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வீரர்களை பயிற்றுவித்தவர்களுக்கு முறையே 20000.00, 15000.00, 10000.00 ரூபா பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வர்ண இரவு நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், வடக்கு மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்கள், வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றறோர் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

கேள்வி அறிவித்தல் சுத்திகரிப்புச் சேவை - 2026 / 2027கல்வி, பண்பாட்டலுவல்கள்  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச...
27/02/2026

கேள்வி அறிவித்தல்
சுத்திகரிப்புச் சேவை - 2026 / 2027

கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு - வ.மா
விபரங்களுக்கு கீழ் இணைப்பினை சொடுக்குக.
https://tinyurl.com/tender4cleaningser

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்ச...
26/02/2026

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையோடு இணைந்து நடாத்திய வடக்கு மாகாண சிவராத்திரி தினமானது 2026.02.15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30மணிக்கு முதலாம் சாமப் பூஜைக்குரிய அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 7.00 மணிவரை நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் மேடைநிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக் குருக்களது ஆசியுரை, பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களது வரவேற்புரை, வவுனியா பரத நர்த்தன கலாலயா மாணவர்களது வரவேற்பு நடனம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையுரையுடன் கலைநிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த கலைமன்றங்கள் மற்றும் கலைஞர்களது பக்திபூர்வமான கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. முள்ளியவளை ஐயனார் நாடக கலாமன்றம், துணுக்காய் ஆரணி நர்த்தனாலய, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கலாலய, அளம்பில் விரலிசை மன்றம் முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி, மாங்குளம் முத்தமிழ் கலாமன்றம், மாந்தை கலையருவி கலாமன்றம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அறநெறிப்பாடசாலை, கல்யாண வேலவர் அறநெறிப்பாடசாலை, மல்லாவி ஆரணி நர்த்தனாலய போன்ற மன்றங்களில் இருந்து விநாயகர் ஸ்துதி, சிவவர்ணம், அக்னி லிங்கஸ்துதி, விரலிசைநாதம், குழுஇசை, கீர்த்தனை நடனம், காவடி நடனம், வில்லுப்பாட்டு திருமதி சாந்தா தர்சன் ஆசிரியரது மாணவர்களது நடன ஆற்றுகைகள் என்பனவும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன

சிவராத்திரி தினத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் அவற்றினை நெறியாளுகை செய்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களுடன் அன்பளிப்புப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களின் நன்றியுரையுடன் அதிகாலை 5.00 மணிக்கு சிவராத்திரி தின மேடை நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டனவடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் I...
25/02/2026

விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 11 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (24.02.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் கௌரவ ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் விளையாட்டு உத்தியோகத்தர்கள் (தரம் III) சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைவாக, தகுதியான 125 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 20 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் தகுதி பெற்ற 11 பேருக்கே இன்றைய தினம் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் , ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், புதிதாக நியமனம் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public F...
25/02/2026

சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025

இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka - APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா, 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது.

பொதுத் துறை நிறுவனங்களில் நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் விழாவில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இணக்கச் சான்றிதழ் இனைப் பெற்றுக்கொண்டது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் 2026 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது.  Application...
05/02/2026

வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் 2026 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

Application Called for Competitions /Award - 2026 conducted by Dept. of Cultural Affairs, Northern Province.

Closing Date : 31.03.2026

மேலதிக தகவல்களுக்கு

Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, Northern Province

07/01/2026

வட மாகாணஒளிவிழா 2025 ஒருபார்வை

2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைள்களை ஆரம்பிக்கும் நிகழ்வு2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வர...
05/01/2026

2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைள்களை ஆரம்பிக்கும் நிகழ்வு

2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வருட முதல் நாளாகிய ஜனவரி 01 ஆம் திகதியாகிய வியாழக்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம. பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் என்பவனவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் கல்வி வளாகத்தில் காலை 8.30 மணிக்கு செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர் நிகழ்வாக நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த சகலரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.அதன் பின்னர் சகல பதவியணி உறுப்பினர்களும் அரச சேவை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக அமைச்சின் செயலாளர் அவர்களினால் ”தற்போதயை சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாகவும் மற்றும் குறித்த நோக்கத்தினை அடைந்துகொள்வதற்காக அரச ஊழிளர்களின் பங்களிப்பு” தொடர்பாக தெளிவுபடுத்தல்கள் வழங்கி குறுகிய உரை நிகழ்த்தப்பட்டது.

அத்துடன் உத்தியோகபூர்வ நிகழ்வு நிறைவுபெற்றதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளை உத்தியோபூர்வமாக ஆரம்பித்தனர்.

வடக்கு மாகாண ஒளி விழா– 2025வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட...
02/01/2026

வடக்கு மாகாண ஒளி விழா– 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வட மாகாண ஒளி விழாவானது 2025.12.31 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி பள்ளிக்குடா வித்தியாலயத்தில் பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் திருமதி நி.தர்சினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் பூநகரி பிரதேச செயலாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர், கிளி / பள்ளிக்குடா வித்தியாலய அதிபர் மற்றும் வலைப்பாடு, பூநகரி ஆலயங்களின் பங்குத் தந்தையர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, ஒளியேற்றி மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. இறைவணக்கத்தை தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் அவர்களால் வரவேற்புரையும், தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சிலைப்பள்ளி கங்கைத்தமிழ் மன்றத்தினரின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, நத்தார் ஆசிச்செய்தியினை வணக்கத்துக்குரிய பூநகரி பங்கு அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளார் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து பரம செல்வ நர்த்தனாலய மாணவர்களின் குழு நடனமும், பச்சிலைப்பள்ளி கீதலயம் இசைக்கலை மன்றத்தினரின் கரோல் இசையும், ஸ்ரீநாட்டிய ஷேஷ்ரா கலைமன்ற மாணவர்களின் குழுநடனமும், பூநகரி பங்கு மக்களுடைய கரோல் கீதமும், பரம செல்வ நர்த்தனாலய கலை மன்ற மாணவர்களின் கிறிஸ்தவ கிராமிய நடனமும், வலைப்பாடு பங்கு கலைஞர்களுடைய நடனமும், பச்சிலைப்பள்ளி கங்கைத்தமிழ் மன்றத்தினருடைய பாலன் பிறப்பு நாடகமும் தொடர்ச்சியாக மேடையை அலங்கரித்தன.

கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களினால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. விருந்தினர் உரையினைத் தொடர்ந்து கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கிளிபள்ளிக்குடா வித்தியாலயம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக புத்தகப்பை, தண்ணீர் போத்தல் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் நத்தார் தாத்தா வருகையானது நிகழ்வினை மேலும் மெருகூட்டியது. நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்கள் நத்தார் தாத்தாவால் வழங்கப்பட்டது. நிறைவாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. கி.மாலினி அவர்களின் நன்றியுரையுடன் பி.ப 12.30 மணிக்கு ஒளிவிழா இனிதே நிறைவுபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2025வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமை...
19/12/2025

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 16.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் முல்லைத்;தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில், கலைஞர் அரியான் பொய்கை செல்லத்துரை அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச்.உபாலி சமரசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசேன் அவர்களும், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும், கலை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர் திரு.நடராஜா இராமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இவர்களுடன் வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர், முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பண்பாட்டலுவல்கள் அலகின் கலை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேசசபை உத்தியோகத்;தர்கள், கலாரசிகர்கள், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் பண்பாட்டு மரபுடன் வரவேற்கப்பட்டதுடன் பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், நூல்கள் கொண்டமைந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு விருந்தினர்களால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்த பின்னர் விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மேடை நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கிளிநொச்சி பிரதேச திரு.இராஜதுரை கலைக்குழுவினரின் மங்கல வாத்திய இசையும், மாங்குளம் முத்தமிழ் கலாமன்;ற மாணவர்களின் வரவேற்பு நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி.தர்சினி நிதர்ஷன் அவர்களினால் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.க.திருக்குமரன் அவர்களால் அரங்கத் திறப்புரையும், கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் ‘ஷண்முக கௌத்துவம்’ நடனநிகழ்வும், வவுனியா தெற்கு துஸ்யந்த கலைமன்ற மாணவர்களின் புத்தாக்க கண்டிய நடன நிகழ்வும், கிளிநொச்சி முழங்காவில் ஸ்ரீஆருத்திரா நர்த்தனாலய மாணவர்களின் வாள்நடன நிகழ்வும், மன்னார் கலார்ப்பணா நாட்டியப்பள்ளி மாணவர்களின் கிறிஸ்தவ நடனமும் விழாவினை மேலும் மெருகூட்டின.

அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டிற்கான வடந்தை நூல் வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளரினால் கௌரவ அமைச்சருக்கு முதற்பிரதி வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினருக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அவர்களினால் கௌரவ விருந்தினர் உரையும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களினால் சிறப்பு விருந்தினர் உரையும், கௌரவ பிரதி அமைச்சர், கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ அமைச்சர் அவர்களினால் பிரதம விருந்தினர் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.

தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவர்களினால் ஹசீதா நடன நிகழ்வும், வவுனியா ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் நாட்டார் பாடல் நிகழ்வும், புதுக்குடியிருப்பு கலைமகள் கலாமன்றத்தினரின் கரகாட்டம் நிகழ்வும் மேடையினை அலங்கரித்தன.

அதனைத்தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வானது ஆரம்பமானது. மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலைக்குரிசில் விருது இம்முறை 14 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் வளர்ந்துவரும் இளங்கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற இளங்கலைஞர்விருது இம்முறை 09 கலைஞர்களுக்கும், 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்விருது 12 நூலாசிரியர்களுக்கும்; வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறைவாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி.சே.செல்வசுகுணா அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலய இசை ஆசிரியர் குழாமினரின் தமிழ்மொழி வாழ்த்துடன் வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது பிற்பகல் 2.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

கேள்வி அறிவித்தல் - பாதுகாப்பு சேவை - 2026கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞா், விவகார அமைச்சு - வடக...
15/10/2025

கேள்வி அறிவித்தல் - பாதுகாப்பு சேவை - 2026

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞா், விவகார அமைச்சு - வடக்கு மாகாணம்.

Address

Chemmany Road, Jaffna
Nallur
41000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212211343

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, NP:

Share