17/07/2026
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்,
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
ஆடிப்பிறப்பின் மகிழ்ச்சியையும், குடும்பம் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி பாரம்பரிய உணவுகளைப் பகிர்ந்து கொண்டாடும் தமிழர் பண்பாட்டு நாளான இன்றைய தினம் எமது திணைக்களத்தில் ஆடிக் கூழ் தயாரித்து வழங்கி பண்பாட்டு நிகழ்வை கொண்டாடினோம்.