23/10/2025
#கடமை #நேரத்தில் #விபத்துக்குள்ளாகி #காயம் #அடைந்த #அரச #ஊழியர் #நட்ட #ஈட்டைப் #பெறுவதற்கான #சுற்றறிக்கை
ந.சந்திரகுமார் SLPS
22/1993(VI) ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையின்படி, கடமை நேரத்தில் விபத்துக்குள்ளாகி மரணம் அடையும் மற்றும் காயம் அடைந்த ஊழியர் ஒருவர் நட்ட ஈட்டைப் பெறுவதற்கு உரித்துடையவர்.
*மரணம் அடைந்த ஊழியருக்கு ஒரு தடவை மாத்திரம் வகித்த பதவியின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெறலாம்.
*பின்வரும் சந்தர்ப்பங்களில் கடமையின் நிமித்தம் விபத்து ஏற்பட்டு, காயங்கள் ஏற்பட்டால் நஷ்டஈடு கோரலாம். Lol
1) அலுவலகத்தில் தமக்குரிய கடமையில் ஈடுபடும் போது, விபத்துக்குள்ளாகி மரணம்/காயம் அடைதல்.
2) ஒதுக்கப்பட்ட கடமை தவிர்ந்த தமது சாதாரண விடயங்கள் சார்ந்த ஏதேனும் பணியைச் செய்யும் போது விபத்துக்குள்ளாகி மரணம்/காயம் அடைதல்.
3) தமது கடமையைச் செய்யும் போது, ஏதேனும் செயற்பாடு ஒன்றின் விளைவாக விபத்துக்குள்ளாகி மரணம்/காயம் அடைதல்.
4) வீட்டில் இருந்து சேவை நிலையத்திற்குச் செல்லும் போது,
பயணத்தில் ஏற்படும் விபத்தின் போது மரணம்/காயம் அடைதல்.
5) சேவை நிலையத்தில் இருந்து வீடு நோக்கிச் செல்லும் போது, பயணத்தில் ஏற்படும் விபத்தின் போது மரணம்/காயம் அடைதல்.
வீட்டில் இருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கிச் செல்லும் போதும் போக்குவரத்து சட்ட விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தினால்,நட்ட ஈடு கோர முடியாது.
*மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி மரணம்/காயம் அடைதல்.
*வாகனப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்தில் சிக்கி காயம் அடைதல்.
Mr.N.Chandrakumar SLPS
Batticaloa-Kaluthavalai