தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை., Political Party, Kilinochchi.

🚨 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை உடனடியாக புனரமைக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் ...
30/08/2026

🚨 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை உடனடியாக புனரமைக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்க வலியுறுத்தி, 31 ஆகஸ்ட் 2026 காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

✊ உயிர்கள் முக்கியம் — பாதுகாப்பான கடவைகள் வேண்டும்!

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.

 #புலம்பெயர்_தமிழர்கள் தாயகத்தில் பொருளாதார நிமிர்வுக்கு கரம் கொடுக்க வேண்டும்..ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின்போது தமி...
19/08/2026

#புலம்பெயர்_தமிழர்கள் தாயகத்தில் பொருளாதார நிமிர்வுக்கு கரம் கொடுக்க வேண்டும்..

ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின்போது தமிழ்த் தேசிய இளைஞர் பேரவைப் பொதுச் செயலாளர் ச.கீதன் வேண்டுகோள்!

ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான ச.கீதன், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்களிடம் தாயகத்தில் வாழும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பங்களிப்பை வழங்குமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்திற்காக தங்களது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பங்களும், போராட்டக் காலத்தில் தாய்நிலத்தின் காவலர்களாகவும் கதாநாயகர்களாகவும் நிமிர்ந்து நின்று களமாடிய முன்னாள் போராளிகளும், தற்போது ஈழ மண்ணில் அன்றாட வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பெரும் பொருளாதாரச் சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக மாவீரர் குடும்பங்களும் முன்னாள் போராளிகளும் போலித் தேசியவாதிகளிடமோ அல்லது சுயநல அரசியல் சக்திகளிடமோ தங்கியிருந்து வாழ வேண்டிய சூழல் தொடரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் எவர் முன்னாலும் தலைவணங்காமல், சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான தனது தற்போதைய விஜயத்தின் பின்னணியில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாகத் தெரிவித்த ச.கீதன், தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர்கள் யாசகம் பெறுபவர்களாக அல்லாது, தொழில் முனைவோராகவும் உழைப்பாளிகளாகவும் நிமிர்ந்து வாழக்கூடிய பொருளாதாரச் சூழலை உருவாக்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இடைத்தரகர்கள் மற்றும் போலிகளின் சுயநலன்களுக்கு இடமளிக்காமல், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக்கூடிய திட்டங்களில் நேரடியாகக் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழினத்தின் தியாக வரலாற்றின் சாட்சிகளாக வாழும் முன்னாள் போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் பாதுகாத்து, அவர்களின் பொருளாதார நிமிர்வுக்கு கரம் கொடுப்பது புலம்பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு தமிழ் தேசிய உணர்வாளரின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன்

“வாருங்கள், தாய்நிலத்தின் தியாகிகளுக்குக் கௌரவமான வாழ்வை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

15/05/2026

#வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் மண்ணின் #கடைசி_நாட்களில்😭

்டுகள் கடக்கின்றன #வலிகள் இன்னும் ஆறவில்லை #சிங்கள_பேரினவாதத்தால் கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட #முள்ளிவாய்க்கால்
#இனப்படுகொலை #மே_18_2009

24/11/2025

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழ்த் ...

Address

Kilinochchi

Telephone

+94771710965

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share