நண்பன்

நண்பன் சிறீதரன் எம்.பியின் ஆதரவாளர்களால் இந்த முகநூல் பக்கம் இயக்கப்படுகின்றது.

03/02/2026

"ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்"

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட, நீதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டி "கரிநாள்" ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளனர். எமது தாயகப் பூமியில் தொடரும் அடக்குமுறைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டமானது, எமது இனத்தின் கூட்டு மனசாட்சியின் வெளிப்பாடாகும்.

குறித்த போராட்டமானது பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.
அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் பங்கு கொள்ள வருமாறு அழைத்து நிற்கிறோம்.

எமது நிலமும், எமது உரிமையும் எமக்குக் கிடைக்கும் வரை எமது அறவழிப் போராட்டம் ஓயாது.

"எழுவோம் தமிழாக! வெல்வோம் உரிமையாக!"

15/07/2025
01/06/2025
01/06/2025

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை!

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோணாவில் - காந்திக்கிராமத்தில் இன்று 2024/10/24 நடைபெற்ற செயற்பாட்டாளகளுடனான சந்திப்பு
24/10/2024

கோணாவில் - காந்திக்கிராமத்தில் இன்று 2024/10/24 நடைபெற்ற செயற்பாட்டாளகளுடனான சந்திப்பு

மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  #சிவஞானம்சிறீதரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கின் குடத்தனையில் ஆரம்பித்தது அவருக...
20/10/2024

மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ #சிவஞானம்சிறீதரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கின் குடத்தனையில் ஆரம்பித்தது அவருக்கான பிரச்சார நடவடிக்கைகள் பெருவாரியான மக்கள் தமக்கான ஆதரவை எங்களிடம் தெரிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி தந்திருக்கிறது பயணங்கள் தொடரும்.

01/10/2024

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கரிசனையோடு அணுகுங்கள்: ஜனாதிபதி உடனான சந்திப்பில் மேனாள் எம்.பி.சிறீதரன் கோரிக்கை.!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துரைத்த சிறீதரன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலமாறுதல்களின் அடிப்படையில், இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த எமது மக்களின் ஆணையை ஏற்று, இலங்கைத் தீவின் 9வது சனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் ஆட்சி, அதிகாரங்களின் மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைப் போலவே, இலங்கைத் தீவின் சுதேசிய இனத்தவர்களான ஈழத்தமிழர்களும், தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் தங்கள் ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்ற செய்தியை, அந்த மக்களின் பிரதிநிதியாக தங்களிடத்தே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

கடந்த ஏழரைதசாப்த காலமாக இந்த நாட்டில், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள நேர்ந்த இனவன்முறைப் பாதிப்புகள், அவற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தேறிய போரின் விளைவுகள், போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப்பட்டு வருவதை அறிந்திருப்பதைப் போலவே, தங்கள் ஆட்சியில் அத்தகைய துயர வரலாறுகள் இடம்பெறாதிருக்கும் என்ற எமது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையையும் தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அந்தவகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி, மீள நிகழாமையை உறுதிசெய்தல், தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நடைபெறும் நிலப்பறிப்புகள் உள்ளிட்ட விடயங்களில் தங்களின் துரிதமானதும், சாதகமானதுமான நகர்வுகளையும், நடவடிக்கைகளையும் கோரி நிற்கிறேன்.

சமநேரத்தில், போர்க்காலச் சூழலில் இனத்திற்காகப் போராடி மடிந்த தமது புதல்வர்களை நினைவேந்தும் உரிமை கூட மறுக்கப்பட்ட இந்த தேசத்தில், போரியல் இயக்கம் ஒன்றின் வழிவந்த ஒருவராக எமது மக்களின் அக உணர்வுகளையும், அதிலுள்ள நியாயாதிக்கங்களையும் உணர்ந்து செயற்படும் மக்கள் தலைவராக, நாட்டின் நல்லிணக்கத்திற்கு துளியேனும் பாதிப்பை ஏற்படுத்தாத, உணர்வுநிலைப்பட்ட நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு, எமது மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரித்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தங்களைத் தயவோடு கோரிநிற்கிறேன்.

அதற்கமைய, ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியற் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க தங்களின் ஆட்சிக்காலம், இலங்கைத் தீவின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய வரலாற்றின் திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமெனக் கோருவதோடு, அத்தகைய நகர்வுகள் சார்ந்த தங்களின் பயணத்தில் எமது பரிபூரண ஒத்துழைப்பு உங்களோடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்றுள்ளது.

Address

A9, Road, Kilinochchi Town
Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when நண்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நண்பன்:

Share

Category