Islamiya nanpen இஸ்லாமிய நண்பன்.

Islamiya nanpen இஸ்லாமிய நண்பன். Allah is only great artist

29/10/2025

#மட்டக்களப்பு_வைத்தியரின் உருக்கமான பதிவு.

 #நேற்று மரணித்த சகோதரி  #சுமையாவின் சுமையை மட்டக்களப்பு வைத்தியர் எழுதிய உறுக்கமான வரிகள்The Broken Chair 💔வெள்ளிக் கிழ...
27/10/2025

#நேற்று மரணித்த சகோதரி #சுமையாவின் சுமையை மட்டக்களப்பு வைத்தியர் எழுதிய உறுக்கமான வரிகள்

The Broken Chair 💔

வெள்ளிக் கிழமை இரவு ஒரு நோயாளியின் டிக்கட்டை தேடிக்கொண்டிருந்த போது யதார்த்தமாக இன்னொரு டிக்கட் கையில் கிடைத்தது. அது சுமையா என்ற ஒரு யுவதியுடையது. அதைப் பார்த்ததுமே அவளுடைய கணவனுக்கு கோல் பண்ணி பார்க்க வேண்டும் என்று போன் நம்பரை தேடினால் எந்த நம்பரும் பதியப்படவில்லை.

ஒரு மாதத்திற்கு முதல் கைகளில் இரத்தம் கண்டிய அடையாளங்களுடன் (Bruising) வருகை தந்திருந்தாள் சுமையா. வந்து ஒரு நாள் கூட தாண்டியிருக்கவில்லை. அதற்குள் வீட்டுக்கு செல்வதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அன்றிரவு எதற்காக வீட்டுக்குப் போக வேண்டும்? இன்னும் என்ன பிரச்சனையென்று ஒரு முடிவுக்கு வரவில்லையே ஓரிரு நாட்கள் இருந்து போகலாம் என்றேன். தன் கணவன் தனக்காக வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும், திருமணமாகி வெறுமனே 10 நாட்களே ஆனதாகவும் சொல்லி ஏங்கிக் கொண்டிருந்தாள்.

ஐயோ பாவமே என்று அடுத்த நாள் கணவனுக்கு நக்கலடித்து, அறுதலும் சொல்லியிருந்தேன். வந்திருந்த ரிப்போர்ட்களை வைத்து ஒரு நோயென்று முடிவுக்கு வந்து சிகிச்சையையும் ஆரம்பித்தோம். அப்போதும் தனக்கு வீட்டுக்குப் போக வேண்டுமென்றே சொல்லிக் கொண்டிருந்தாள். இப்படியிருக்கும் போது பேரிடியாக ஒரு ரிப்போர்ட் வந்திருந்தது.

இரத்தப் புற்று நோயிருப்பதாக சந்தேகிப்பதாகவும் இப்போதே அவசரமாக மஹரகம வைத்தியசாலைக்கு மாற்ற ஏற்பாடு செய்யும் படியும் பணிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கூட கணவனை பிரிந்திருக்க முடியாதிருந்தவளிடம் எப்படி இந்த விடயத்தை எத்தி வைப்பதென்று தெரிந்திருக்கவில்லை.

புதுமணத்தம்பதியிடம் சொல்லக் கூடாத, சொல்ல முடியாத ஒன்றை சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது இப்போதும் என் சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் சொல்ல வேண்டிய உண்மைகளை அப்படியே எத்தி வைப்பதற்கு என்னிடம் தைரியம் இருப்பதில்லை. இதுவும் அதுபோலொரு சந்தர்ப்பம்தான்.

நன்பகல் 12 மணியளவில் இருவரையும் அழைத்து உட்கார வைத்திருந்தோம். எதோ சொல்லப் போகிறோமென்று அவளுக்கு புரிந்திருக்கும். ஆனால் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் நிற்க வைக்கப் போகிறார்கள் என்பதே நிச்சயமாக அவள் எதிர்பார்த்த ஆகப் பெரிய கெட்ட செய்தியாக இருந்திருக்கும்.

ஆனால் அவள் கேட்க காத்திருந்தது அந்த இளம் வயதில், திருமணமாகி பத்தே நாட்களில், தன் கணவனோடு கை கோர்த்திருக்கும் வேளையில் எந்த பெண்ணும் கேட்கக் கூடாத ஒரு செய்தி. எந்த ஒளிவு மறைவும் இன்றி செய்தி எத்தி வைக்கப்பட்டு, மஹரகம வைத்தியசாலைக்கு செல்வதற்கு இப்போதே ஆயத்தமாகுமாறு சொல்லப்பட்ட போது அவள் மயங்கி பின்னால் சரிந்தாள்.

அப்போது உடைந்த கதிரையை அகற்றி விட்டு நான்தான் இன்னொரு கதிரை எடுத்துக் கொடுத்தேன். கணவனை பற்றிக் கொண்டவள் சில நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்திருந்தாள். பின்னர் எதையோ நினைத்தவளாக அழ ஆரம்பித்தாள்.

அன்றிரவு அவசர அவசரமாக மஹரகமைக்கு மாற்றுவதற்கான வேளைகளை செய்த போதும் இரத்த வங்கியிலிருந்து இரத்தம் தர முடியாது போனதால் அத்திட்டம் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த நாள் இரத்தம் பாய்ச்சும் போது தன் கணவனை தன்னோடு கூட நிற்க அனுமதிக்குமாறு என்னை வேண்டிக் கொண்டாள்.

அன்று பகல் முழுக்க எல்லா ஆறுதல் வார்த்தைகளையும் திரட்டி வைத்திருந்தேன். ஆனாலும் 'அல்லாஹ் இருக்கிறான்' என்று மட்டுமே சொல்லியிருந்தேன். அன்றிரவு அம்பியூலன்ஸ் பிரச்சனை இன்றைக்கு அனுப்ப முடியாது என்றார்கள். நானே அலுவலகத்துக்குப் போய் நிலமையை விளக்கியவுடன் ஒரு அம்பியூலன்ஸை ஏற்பாடு செய்து தந்தார்கள்.

சரியாக இரவு எட்டரை மணிக்கு அவள் வார்ட்டை விட்டு வெளியாகிச் செல்ல தயாரானாள். அத்தனை பேரிடமும் நன்றி சொன்னாள். கடைசியாக என்னிடன் வந்து "துஆ செய்ங்க நாநா" என்றிருந்தாள். அப்போதும் எனது வாயிலிருந்து அதே பதில்தான் வந்தது.

அவள் போனதும் நாங்கள் பாலாய் போன அவளுடைய எதிர்காலத்தை பற்றி கவலையாக கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போதே அவளுக்கு முதல் மஹரகமைக்கு சென்றிருந்த ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் தாயாருக்கு போன் பண்ணி என்ன நடக்கிறது என்பதை இன்னொரு தடவை கேட்டறிந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது.

சுமையாவின் டிக்கட் அத்தனை நினைவுகளையும் நேற்று முன்தினம்தான் காட்சிப்படுத்தியிருந்தது. இன்று காலை நான் வார்ட்டிற்குள் வரும் போது கேட்ட முதல் செய்தி "டொக்டர் நாம மஹரகமைக்கு அனுப்பி வச்ச அந்த பிள்ள சுமையா செத்திட்டாளாம்"

Inna Lillahi wa inna ilayhi raji'un 😓

சுமையாவின் உடைந்து போன கனவுகள், பத்து நாட்கள் கூட தாண்டாத திருமண வாழ்வு, அல்லாஹ்வின் பெயரால் தேடிய ஆறுதல் எல்லாம் வார்ட்டில் நிழலாடுகின்றன. அந்த உடைந்த கதிரை வாழ்க்கையின் திடீர் உடைவுகளை நினைவூட்டும் அமைதியான சாட்சியாக இன்னும் டொக்டர்ஸ் ரூமில் அகற்றப்படாமல் இருக்கிறது.

#ஷியான்_யாக்கூப் | Zhiyan Yakoob

26/10/2025

#காசுக்காக ஓடி பாசத்தை இழக்கும் பெற்றோர்கள் 🥹🥹

இன்று ஏறாவூரை துயரத்தில் ஆழ்த்திய சுமையாவின் மரணம்.😥நான்கு வருடங்களாக நிழல் ஓட்டிப் பின்னிட்ட காதல்,ஒவ்வொரு நாளும் “ஒருந...
26/10/2025

இன்று ஏறாவூரை துயரத்தில் ஆழ்த்திய சுமையாவின் மரணம்.😥

நான்கு வருடங்களாக நிழல் ஓட்டிப் பின்னிட்ட காதல்,
ஒவ்வொரு நாளும் “ஒருநாள் நம்மைத் திருமணமே சேர்க்கும்” என்ற நம்பிக்கையிலே வளர்ந்தது.
அது நிகழ்ந்ததும்
மணமாலை கழுத்தில் வந்த முதல் வாரமே
கண்ணீரால் எழுந்த காய்ச்சல்
வாழ்க்கையின் கடைசி காட்சிக்கான கதவாய் மாறிவிடும் என
யாரும் கனவிலும் எண்ணவில்லை.

திருமணமாகி ஒரே ஏழு நாளில்,
முழு சந்தோஷத்திலிருந்து நேரே வெண்முரசில்லா அமைதிக்குள்
அவளை வைத்தியசாலை படுக்கையில் படுத்ததை பார்த்த கணவன்
தன்னுடைய உயிரைத் தானே விழுங்க வேண்டிய நிலைதான் அது.

நோய் என்று யாரும் நினைக்காத ஒரு சாதாரண காய்ச்சல்.
ஆனால் அது மெதுவாக பிரார்த்தனைக்கும் நிழலுக்கும் கூட சத்தம் போடாமல்
ஒரு மாதம் முழுவதும் உயிரோட்டத்தை மெதுவாகத் திருடிக் கொண்டது.

இன்று ...😢
அவள் பெயரைப் பேசினால் கூட
ஆழ்ந்த மூச்சு வராமல் கண்களிலேயே கண்ணீர் நின்றுவிடுகிறது.
அது உடல் அழுத கண்ணீர் அல்ல,
உயிர் கரைந்து வெளியே வரும் மௌன இரத்தம்.

சுமையா..😢 .
அந்த பெயர் இப்போது
ஒரு காதலரின் வாயால் அல்ல,
ஒரு கணவனின் உதிர்ந்த ஆன்மாவின் உள்ளுணர்வில்
“நான் இன்னும் உயிரோடு இருப்பது கூட தண்டனை” என்று சொல்வதாய் ஒலிக்கிறது.

அவளுடன் சேர்ந்து கட்டிய எதிர்கால பட்டியல்கள்
இன்று மீண்டும் புரட்டிக்கொள்ள முடியாத காலப் புழுதியாய் மட்டுமே இருக்கின்றன.
“நாம் இருவரும் உயிரோடே இருக்கிறபோது கூட
நமக்கு இவ்வளவு வலி வந்தது” என்று சொல்ல
அவன் அருகில் அவள் இல்லை.

இந்தச் சமயத்தில்
கணவனுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

“கண்ணீர் துடைக்க நினைக்க வேண்டாம். அது ஓடட்டும்.
அது சுமையாவாகவே ஓடட்டும்.
உன்னிடம் இருந்து உயிரை எடுத்துச் சென்றவளின் பெயரைத் தாங்கும் கண்ணீருக்கு
ஒன்றுமே குற்றம் இல்லை.”

அன்பு மரணிக்க முதலில் உயிர் போக வேண்டியதில்லை.
அன்பு மரணிக்கும் போது தான் உயிர் என்பது
மூச்சின் தொழிலாகிக் கொள்கிறது.

சுமையா மண்ணில் இல்லை
ஆனால் அவள் அனுபவமாக
உன் உடலில் இன்னும் துடிக்கும்
நரம்பின் ஒளிபடலமாய் வாழ்கிறாள்.

மரணம் முடிவு இல்லை.
மாறாக வாழ்வதே இந்த உலகில் சிலருக்கு சகித்துக் கொள்ள முடியாத துன்பமாக மாறும் சந்தர்ப்பம் அது.

நீயும் ஒரு நாள் அவளை சந்திப்பாய்.
அப்போது அவளிடம் கேட்டுக்கொள்,
என்னை முந்திச்செல்ல உன்கென்ன அவசரமென்று.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.🤲

கருணையாளன் அந்த சகோதரியின் மண்ணறையை அவனது அன்பினால் நிரப்பிடட்டும்!

25/10/2025

#நடமாடும்_பூகக்கண்று 😜

21/10/2025

#பலஸ்தீனர்களிடம்
#கற்றுக்கொள்ளுங்கள்!
***********************************
பிறப்பு முதல் இறக்கும் வரைக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்..
#வீட்டில்
#குடும்பத்தில்
#சமூகத்தில்
#தொழிற்துறையில்
#பொருளாதாரத்தில்
#எதிரிகளிடத்தில்

என எதிர்கொள்ளும் ஒவ்வொரு
#இழப்பிலும்,
#பிரிவிலும்,
#வறுமையிலும்,
#கொடுமையிலும்,
#நோய்நொடியிலும்,
#துன்ப துயரங்களிலும்…

#துவண்டு விடாமல், மிரண்டு விடாமல்
#நிராசையற்ற இறைநம்பிக்கையோடும்,
#தளராத தன்னம்பிக்கையோடும் எழுந்து நிற்பது எப்படி? புன்முறுவல் பூப்பது எப்படி? என்பதையும் #பலஸ்தீன மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

#அணுகுண்டுக்கு நிகரான ஆயிரக்கணக்கான #டொன் குண்டுகளை தினமும் அள்ளி, அள்ளி வீசி, அடியோடு தம் வாழ்விடங்களையும், எதிர்கால எண்ணங்களையும் தகர்த்தெறிந்த போதிலும்….

தம் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து, அடாவடி செய்தபோதிலும்…

#இறையருளின் மீது கொண்ட மிக மிக
#உறுதியான நம்பிக்கையும், சற்றும் #சோர்ந்து போகாத #தன்னம்பிக்கையும், #பலஸ்தீன மண்ணின் #ஒளிமயமான எதிர்காலத்தை இந்த கள்ளமில்லா #சிறுவனின் புன்னைகை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

21/10/2025

Wow 😲 😲 Amazing 😝

17/10/2025

🔴FIRE 🔴RATMALANA
#சற்றுமுன் #ரத்மலானை பகுதி கடை தொகுதியில் ஏற்பட்ட தீ பரவலே இதுவாகும்.
Video: Jeewaka

17.10.2025

 #காத்தான்குடி 01 கபுரடி வீதியைசேர்ந்த அல்ஹாஜ்MI ஆதம்லெவ்வை பாலாஹி(BA  )முன்னால் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்...
16/10/2025

#காத்தான்குடி 01 கபுரடி வீதியைசேர்ந்த அல்ஹாஜ்
MI ஆதம்லெவ்வை பாலாஹி
(BA )முன்னால் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மளேனத்தலைவர் அவர்கள் சற்று முன்னர் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வ‌இன்னா இலைஹி ராஜிஊன் அன்னார்

Dr நபீல்(மட் போதானா வைத்தியசாலை) அவர்களின்
தந்தையும்அல்ஹாஜ் MI ஹுசைன் மற்றும் காத்தான்குடி ஜம்மியத்துல்உலமாசபை தலைவர் அல்ஹாஜ் MI அப்துல் கபூர் BA மதனி அவர்களின் சகோதரர் ஆவார் அன்னாரின்
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

15/10/2025


#ஆப்கானிஸ்தான் தலைநகர் #காபூல் முழுவதும் #பாகிஸ்தானிய போர் விமாங்கள் கடுமையான #குண்டுத்தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

#அமெரிக்காவுடனான ஆப்கானிஸ்தானின் உறவில் #விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து #ஆப்கான் மீதான #பாகிஸ்தானின் தாக்குதல் மிக #தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

14/10/2025

#இந்தியாவில் கோடிக்கணக்கான மருந்து பொருட்களும் இவ்வாறுத்தான் உலவுகின்றன. இதற்க்கு யார் பொறுப்பு?

அரசு இதையெல்லாம் பரிசோதித்து தரக்கட்டுபாடுகளை செய்வதில்லை.

நன்கொடை கொடுப்பவன் வாழ்கிறான். அதை வாங்கி உபயோகிப்பவன் சாகிறான்.So Easy

In India, millions of medicines are also being sold in this way. Who is responsible for this?

The government does not test all this and does not do quality control.

The one who donates lives. The one who buys and uses it dies.

Address

Kattankudi
30400

Alerts

Be the first to know and let us send you an email when Islamiya nanpen இஸ்லாமிய நண்பன். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islamiya nanpen இஸ்லாமிய நண்பன்.:

Share

Category