கல்முனை மாநகரம்

கல்முனை மாநகரம் ▪︎சுறுசுறுப்பான விருந்தோம்பல் மிக்க மக்களைப் பெற்ற கல்முனை மாவட்டம்▪︎

■ கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு▪︎ நூருல் ஹுதா உமர் முன்னாள் பாராளுமன்...
28/01/2026

■ கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு▪︎

நூருல் ஹுதா உமர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்காளி த.கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், வழக்கின் இடையீட்டு மனுதாரர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி இருந்தனர். இடையீட்டு மனுதாரர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் இன்று மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது பக்க நியாயங்களை மன்றுக்கு முன்வைத்து வாதிட்டார். அதில் இது உப பிரதேச செயலகமல்ல. 1993 ம் ஆண்டு முதல் கல்முனை வடக்கு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கி வருவதாகவும், இந்த செயலகத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர கட்டிடம் இருப்பதாகவும், 250 க்கு அதிகமான உத்தியோகத்தர்கள் கடமை செய்கிறார்கள் என்றும் 3 தசாப்தங்களுக்கு மேல் பிரதேச செயலகமாக இந்த செயலகம் இயங்கியதாகவும், சில வருடங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேச செயலாளர் இந்த செயலகத்தின் அதிகாரங்கள் சிலதை பறித்துள்ளதாகவும் வாதத்தை முன்வைத்து இந்த செயலகத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் இல்லாது விட்டாலும் நாட்டின் பல இடங்களில் அமைச்சரவை அனுமதியுடன் சில செயலகங்கள் இயங்குகிறது. இந்த செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக இந்த நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி எதிர்தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தையும் நீதிமன்று கேட்டறிந்து இந்த வழக்கின் விசாரணைக்கு முழுநாள் ஒதுக்கவேண்டும் என்பதால் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 08ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் குறித்த உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களான ஏ.எம். நசீர் (நஸீர் ஹாஜியார்), டாக்டர் கே.எல். ரயீஸ் தரப்பினர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் சார்பிலான சட்டத்தரணிகளும் அவர்களின் வாதங்களை முன்வைத்தனர். சமூக ஆர்வலர்களான ஏ.எம். நசீர் (நஸீர் ஹாஜியார்), டாக்டர் கே.எல். ரயீஸ் தரப்பினர் ஆகியோரும் மன்றுக்கு சமூகமளித்திருந்தனர். அந்த வழக்குகளின் விசாரணைகளும் எதிர்வரும் ஜூலை 08ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேசத்தின் நிர்வாக அமைப்பு, எல்லை வரையறை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் இந்த வழக்கு கல்முனை பிரதேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு, கல்முனை பிரதேச மக்களின் எதிர்கால நிர்வாகச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

■ ஈரான் மீதான தாக்குதலை சவூதி அரேபியா அனுமதிக்காது▪︎ரியாத் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ தெஹ்ரானுக்கு எதிரான இரா...
28/01/2026

■ ஈரான் மீதான தாக்குதலை
சவூதி அரேபியா அனுமதிக்காது▪︎

ரியாத் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ தெஹ்ரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்காது என்று சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியனிடம்
கூறியதாக, அரசு செய்தி நிறுவனமான SPA செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெசேஷ்கியனுடனான தொலைபேசி அழைப்பில், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த "உரையாடல் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்கும் எந்தவொரு முயற்சிகளுக்கும்" தனது நாட்டின் ஆதரவை பட்டத்து இளவரசர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள், போரைத் தடுக்கும் எந்தவொரு செயல்முறையையும் தெஹ்ரான் வரவேற்பதாக பெசேஷ்கியன் பின் சல்மானிடம் கூறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

🚨பாரசீக வளைகுடாவில் IRGC - ஈரானிய புரட்சிப் படையின் கடற்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வலிமை நிகழ்ச்சி▪︎நேற்று இரவு, வி...
27/01/2026

🚨பாரசீக வளைகுடாவில் IRGC - ஈரானிய புரட்சிப் படையின் கடற்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வலிமை நிகழ்ச்சி▪︎

நேற்று இரவு, விமானம் தாங்கி கப்பல் ஆபிரகாம் லிங்கன் பாரசீக வளைகுடாவை நெருங்கியபோது, ​​IRGC கடற்படை பின்வரும் நடவடிக்கைகளை நிகழ்ச்சி நிரலில் வைத்தது.

1️⃣ IRGC வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து கடற்படைக் கப்பல்களும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, போர் அமைப்பில் பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்தன.

2️⃣ சுமார் 300 வேக ஏவுகணை படகுகள் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டு, அவை போருக்குத் தயாராக இருப்பதாக டிரம்பிற்கு செய்தி அனுப்பின.

3️⃣ அனைத்து கடற்படை ஏவுகணை அமைப்புகளும் அவற்றின் பாதுகாப்பான புகலிடங்களிலிருந்து அகற்றப்பட்டு, வெவ்வேறு இடங்களில், சுடத் தயாராக நிறுத்தப்பட்டன.

4️⃣ டிரம்பின் முட்டாள்தனம் ஏற்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

5️⃣ நேற்றிரவு IRGC கடற்படையின் நடவடிக்கைகள் இந்தப் படையின் வரலாற்றில் மிகப்பெரிய சூழ்ச்சியாகும், இது இரவில் மற்றும் செய்திகளின் மௌனத்தில் மேற்கொள்ளப்பட்டது, இதன் பரிமாணங்கள் எதிர்காலத்தில் ஊடகங்களில் தெரிவிக்கப்படும்.

6️⃣ இந்தப் பலத்தை வெளிப்படுத்துவது பாரசீக வளைகுடாவில் ஈரானின் கடற்படை வலுவை நிரூபிப்பதற்கும் எதிரியை தடுப்பதற்குமான‌ வியூகமாக கருதப்படுகிறது, மேலும் , அமெரிக்க கடல் தாக்குதலின் விளைவுகள் மற்றும் அச்சுறுத்தலைக் அதிகரிப்பதற்கான, அமெரிக்க தரப்பின் கணக்கீடுகளை, சந்தேகத்திற்கு இடமின்றி முறியடிக்கும்.

■ உனது ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.▪︎அமெரிக்க காட்டுமிராண்டிகளின், ஆப்ரஹாம் லிங்கனில் இருந்து,தாக்குத...
26/01/2026

■ உனது ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.▪︎

அமெரிக்க காட்டுமிராண்டிகளின், ஆப்ரஹாம் லிங்கனில் இருந்து,தாக்குதல் தொடுக்க போர் விமானங்கள் எழ முதலே, எமது ரோன்கள் ஆப்ரஹாம் லிங்கன் மீது தாக்குதலைத் தொடுத்துவிடும்.

▪︎IRGC, Iran.

■காஸா: இன்றைய உலகில் மிகவும் பாதுகாப்பான இடமா?▪︎ஈரானுடனான யுத்தம் ஆரம்பித்தால் காசாவை தவிரவுள்ள எந்த பூமியும் இஸ்ரேலியர்...
26/01/2026

■காஸா: இன்றைய உலகில் மிகவும் பாதுகாப்பான இடமா?▪︎

ஈரானுடனான யுத்தம் ஆரம்பித்தால் காசாவை தவிரவுள்ள எந்த பூமியும் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை.

டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்கள் காசாவுக்கு நெருக்கமான பகுதிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இறைவன் பெரியவன்!

நேற்றுவரை உயிர்களுக்கு உத்தரவாதமற்ற பூமியாக இருந்த காசாதான் இன்று எதிரிகளுக்கும் தஞ்சம் தரக்கூடிய பூமியாகியுள்ளது.

நடைபெறவுள்ள யுத்தத்தால் என்னென்ன அதிசயங்கள் நிகழப்போகின்றது என்பதை இந்த செய்தியிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

வானம், பூமி,அவற்றுக்கு மேலும்,கீழும், இடையிலும் உள்ள அத்தனையின் ஆட்சியும் இறைவனின் கைவசமே இருக்கின்றது.

பரிதாபம் கொண்டு பாலஸ்தீனர்கள் அனுமதித்தால் அன்றி எந்தவொரு இஸ்ரேலியும் தப்பிக்க முடியாத நிலமையை கண்முன்னே தோற்றுவித்த இறைவன் மகா பெரியவன்.

▪︎அரசியன்.

■ லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி கொல்லப்பட்டதற்கான பின்னணி தொடார்பில் கசிந்த ஆதாரங்கள்▪︎​​2015-ல் வெளியான ஹிலாரி கிளி...
25/01/2026

■ லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி கொல்லப்பட்டதற்கான பின்னணி தொடார்பில் கசிந்த ஆதாரங்கள்▪︎

​​2015-ல் வெளியான ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில், சிட்னி ப்ளூமெந்தல் (Sidney Blumenthal) என்பவர் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று மிகவும் முக்கியமானது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

​கடாஃபி அரசாங்கத்திடம் 143 டன்களுக்கும் அதிகமான தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருந்தது. இந்தத் தங்கத்தைக் கொண்டு "தங்க தினார்" (Golden Dinar) என்ற புதிய ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்க கடாஃபி திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகள் பிரெஞ்சு நாணயமான (CFA franc) முறையிலிருந்து விடுபட முயன்றன.

​பிரெஞ்சு உளவுத்துறை இந்தத் திட்டத்தைக் கண்டறிந்ததும், அன்றைய அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி லிபியா மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தார்.

​தாக்குதலுக்கான 5 முக்கிய காரணங்கள்,

​1.லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்கைப் பெறுவது.
​2.வட ஆப்பிரிக்காவில் பிரான்சின் ஆதிக்கத்தை அதிகரிப்பது.
​3.பிரான்சில் சர்க்கோசியின் அரசியல் நிலையை மேம்படுத்துவது.
​4.பிரெஞ்சு இராணுவத்தின் உலகளாவிய வலிமையை மீண்டும் நிலைநாட்டுவது.
​5.ஆப்பிரிக்காவில் பிரான்சின் ஆதிக்கத்தை கடாஃபி முறியடிப்பதைத் தடுப்பது.

​இந்த மின்னஞ்சல்களில் மனிதாபிமானக் கவலைகள் (Humanitarian concerns) குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, ஆப்பிரிக்காவின் ஒற்றுமையைத் தடுத்தல், பணம், அதிகாரம் மற்றும் எண்ணெய் ஆகியவையே இந்தத் தாக்குதலின் உண்மையான நோக்கங்களாக இருந்தன என்று இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

24/01/2026

🚨 அமெரிக்க இஸ்ரேலிய சதி▪︎

அமெரிக்க இஸ்ரேலிய கூலிக்காக அண்மையில் ஈரானில்
கலகம் செய்த, துரோகிகள் உட்பட தொடர்ந்து உலக முஸ்லிம்களை கனகட்ச்சிதமாக ஏமாற்றி வருகிறது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

🚨 கிரீன்லாந்து விவகாரம்: டொனால்ட் டிரம்பிற்கு 8 ஐரோப்பிய நாடுகள் கூட்டாகப் பதில்! டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவத...
22/01/2026

🚨 கிரீன்லாந்து விவகாரம்:
டொனால்ட் டிரம்பிற்கு 8 ஐரோப்பிய நாடுகள் கூட்டாகப் பதில்!

டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவதற்காக ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது டென்மார்க் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு முக்கியமான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கூட்டு அறிக்கையின்
முக்கிய அம்சங்கள்:

▪︎டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் டென்மார்க்கின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

▪︎கிரீன்லாந்தில் நடத்தப்பட்ட ராணுவப் பயிற்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும், இது யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல என்றும் அந்த நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

▪︎அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் நாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்குலைப்பதுடன், ஒரு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளன.

▪︎தங்களது இறையாண்மையைப் பாதுகாப்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும், இதற்கு ஒரு ஒருங்கிணைந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

கிரீன்லாந்தை அமெரிக்காவிற்கு விற்கும் வரை ஐரோப்பிய நாடுகள் மீது பிப்ரவரி 1 முதல் 10% வரியும், ஜூன் 1 முதல் 25% வரியும் விதிக்கப்படும் என்று டிரம்ப் கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே இந்த எட்டு நாடுகளும் தற்போது ஒன்றிணைந்துள்ளன.

■ அமெரிக்காவே அஞ்சியது ஏன்?ஈரானை கண்டு பின் வாங்கிய டிரம்ப்?▪︎ தேச துரோக வழக்கில 800 அதிகமான அமெரிக்கா இஸ்ரேலிய  உளவாளிக...
19/01/2026

■ அமெரிக்காவே அஞ்சியது ஏன்?
ஈரானை கண்டு பின் வாங்கிய டிரம்ப்?▪︎

தேச துரோக வழக்கில 800 அதிகமான அமெரிக்கா இஸ்ரேலிய உளவாளிகளை சல்லடை போட்டு சலித்த ஈரான் அரசு. தூக்கிலிட ஆயத்தமாக இருந்த செய்தியை அறிந்த அமெரிக்கா ஐநா விடம் சொல்லியே ஈரான் தாக்கி விடலாம் என்ற நேரத்தில்

இதனையறிந்த ஈரான் வான் பரப்பை பயன்படுத்த முழுவதுமாக மொத்தமா தடை விதித்தது எங்கிருந்தோ வந்த சரக்கு சீன விமானம் அமெரிக்காவை அச்சுறுத்தியது

சவுதி அரேபியா, கத்தார் இரண்டு நாட்டில் இருக்கும் அமெரிக்கா இராணுவ தளவாடங்களில் தாக்குதல் நடத்துவோம் என முன்னெச்சரிக்கை அறிவித்துவிட்டே அமெரிக்கா வின் முக்கிய இராணுவ தளவாடமே ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தான்

இதை தெரிந்து கொண்ட டிரம்ப் உடனே ,இப்போ ஒரு பிரச்சனையும் இல்ல பின் வாங்கியது

மத்திய வளைகுடா இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் நெத்தன்யாவே வேண்டாம் பயந்து போனதுக்கு முக்கிய காரணம் கொமேனி அவர்கள் உலகமே ஆச்சரியப்பட கூடிய ஒன்று நடக்கும் தாக்குதல் நடந்தால் சொன்ன மறு கணமே எல்லாமே முடிவுக்கு வந்தது

வெளிநாடுகள் இருந்து ஈரானுக்கு வரவேண்டிய தொகையே 100 பில்லியன் சொல்றாங்க

பணம் மட்டும் அல்ல starlink 5000 km NET jammer வெச்சு தடை செய்ற அளவுக்கு முன்னேறி இருக்காங்க என்றாலர் ஈரான் இப்போ வலுவாக இருக்காங்க தொழில்நுட்பத்தில்

குறிப்பா எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம் முஹ்சீன் IrGC தலைவர் சொல்றார்.

▪︎Syed Riswan. Chennai.

■ தண்டனை▪︎அண்மைய சதித்திட்டத்திற்குப் பின்னால் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவாளிகளை (ரேசா பஹ்லவி) உள்ளிட்டவர்களை ...
17/01/2026

■ தண்டனை▪︎

அண்மைய சதித்திட்டத்திற்குப் பின்னால் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவாளிகளை (ரேசா பஹ்லவி) உள்ளிட்டவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம்'

ஈரானின் உச்ச தலைவர் #இமாம்_அலி_கொமைனி சற்று நேரத்திற்கு முன் அறிவிப்பு

25 வருசமா வாக்களிச்ச மக்களுக்கே வழி நடாத்தல, அரசாங்கத்தை வழி நடாத்தப் போறீங்களா?கொஞ்சமும் வெட்கமில்லாம எப்படி உங்களால் ம...
16/01/2026

25 வருசமா வாக்களிச்ச மக்களுக்கே வழி நடாத்தல, அரசாங்கத்தை வழி நடாத்தப் போறீங்களா?

கொஞ்சமும் வெட்கமில்லாம எப்படி உங்களால் மட்டும் முடியுது?

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்முனை மாநகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share