11/12/2025
அனுர என்றால் காசுதான்..!
25,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்த அம்மா ஒருவர், மகிழ்ச்சியோடு சொன்ன வசனம்,
“அனுர என்றால் காசுதான்”
அது சாதாரண வசனம் இல்லை. ஊழல் இல்லாத ஒரு நிர்வாகத்துக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு.
“25,000 ரூபா வழங்கப்படும் எல்லோருக்கும் 50,000 ரூபா வழங்க முடியாது அல்லவா?” என அதிகாரி ஒருவர் கேட்க, சட்டென்று ஜனாதிபதி அனுர கூறுகிறார்,
“ இரண்டையும் சேர்த்து 75,000 ரூபா கொடுங்களேன். எம்மிடம்தான் காசு இருக்கிறதே”
இப்படிஒரு ஜனாதிபதியை இலங்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறோம். முன்பு என்றால் பொதுமக்களின் காசை புடுங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். நிவாரணம் என்று வெளிநாடுகள் காசு கொடுத்தாலும் அதை தாமே சுருட்டிக்கொள்வார்கள்.
சுங்கத்திணைக்களத்தின் இந்த ஆண்டுக்கான வருமான இலக்கு 2.115 ட்ரில்லியன் ரூபா. ஆனால் போன மாசம், நவம்பர் 11 ஆம் திகதி அவர்கள் அறிவிக்கிறார்கள் - நாம் இப்போதே முழு ஆண்டுக்குமான இலக்கை அடைந்துவிட்டோம் என்று.
உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் அதுவே! முன்பைவிட மக்கள் ஆர்வத்தோடு வரிகள் கட்டுகிறார்களாம்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சொன்னார். “முன்பு காசு இல்லை. தேர்தலும் இல்லை. இப்போது காசு இருக்கிறது. தேர்தலுக்கான சட்டத்தை இயற்றிக்கொடுங்கள்”
“காசு இல்லை. காசு இல்லை” என்று அறம்கொட்டிய ஆட்சியாளர்கள் மத்தியில், முதல்முறையாக “காசு இருக்கிறது” என்று சொல்லி புருவங்களை உயரவைக்கிறார் அனுர.
ஊழல் இல்லாத அமைச்சர்கள்;
முறைகேடுகள் இல்லாத நிர்வாகம்;
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி விசாரணைகள் + கைதுகள்.
PCID இன் கிடுக்குப் பிடிகள்…!
97 வயது… தள்ளாத வயது என்ற போதிலும் டெயிசி பாட்டியைக் கூட விசாரணைக்காக படிகள் ஏறி இறங்க வைக்கும் சட்ட இறுக்கம்! “நெஞ்சு அடைக்குது” என்று ஷஷீந்திர ராஜபக்ஷ பலதடவை கெஞ்சியபோதும் “உள்ளேயே கிட” என்று பிணைக்கான அனுமதி மறுப்பு.
என எல்லா மாற்றங்களையும் கூர்ந்து கவனித்துவரும் சர்வதேச நாடுகள், உதவிகளை வாரிவாரி வழங்க…
அந்த உதவிகள் எல்லாமே மக்களுக்கு “அப்படியே” போய்ச்சேர….
“அனுர என்றால் காசுதான்”