இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை

இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை, Political Party, Jaffna.

அரசியல் விமர்சனம் | பொதுக் கருத்து
உண்மையை பேசுகிறோம். அதிகாரத்தை கேள்வி கேட்கிறோம்.
விழிப்புணர்வுக்கும் பொறுப்புக்கும் குரல் கொடுப்போம்.


வரலாறு கையளித்த வழியில் தொடர்ந்து பயணிக்கும் இனம் தனக்கான இலட்சியத்தை அடைந்தே தீரும்.

06/06/2026

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்ஸ் நடாத்தும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2026.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்மொழிக் கல்வியை வளர்த்தெடுக்கும் சிறப்பான முயற்சியின் அடையாளமாக இந்தப் பொதுத்தேர்வு திகழ்கிறது.

கடல் கடந்தாலும் தாய்மொழி எங்கும் கடந்து போகவில்லை அது அடுத்த தலைமுறையின் உள்ளங்களுக்குச் சென்றடைந்து வேரூன்றிக் கொண்டிருக்கிறது.

தமது பிள்ளைகள் தமிழைப் படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் அர்ப்பணிப்புக்கான ஒரு பெருமையான சான்றிதழே இந்தத் தேர்வு.

"நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்" என்ற உணர்வோடு, தாய்த் தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

❤️ கடல் கடந்தாலும் தாய்மொழி தலைமுறை கடந்தும் தமிழ்மொழி! ❤️

06/06/2026

மீண்டும் இணைக்கிறது தமிழினம்.
ஒருபுறம் சட்டப்போரட்டம் இன்னொருபுறம் மக்கள் போராட்டம்.

சங்கீத்தன் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்.

06/06/2026

#பயங்கரவாத #தடுப்பு #சட்டம்

இலங்கை தமிழரசு கட்சி என்ன செய்தது ?
👇🏻

06/06/2026

பாடகர் கைதை கண்டித்து கண்டன போராட்டம் 💪🏻

06/06/2026

(ஒரு இளைஞர்கள்🤣)
முதல்ல இவருக்கு தமிழ் வகுப்பெடுக் வேண்டும்.

பிறகு அரசியல் வகுப்பு.

அதற்குள் 5 வருடங்கள் ஓடிவிடும்..

(ஒரு இளைஞர்கள்🤣)

06/06/2026

இது ஒரு சைக்கிள் கட்சி நண்பரின் பதிவு
அவரிடம் சில கேள்விகள்!

கஜேந்திரகுமாரை ஏன் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும் எம் நினைக்கிறீர்கள்,அல்லது திணிக்கிறீர்கள்.?

மகிந்த தரப்பினரின் அரசியல் கணக்குகளுக்கு மறைமுகமாக உதவும் வகையில் தேர்தலுக்கு தேர்தல் நடத்தப்படும் அரசியல் நாடகங்களுக்காகவா?

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான நடைமுறைத் தீர்வொன்றையும் முன்வைக்காமல், "ஒரு நாடு – ஒரு தேசம்" என்ற கோஷத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் கூவிக்கொண்டிருப்பதற்காகவா?

ஜனநாயகம் பற்றி பேசிக்கொண்டே கட்சியின் அதிகாரத்தை தனது கைகளுக்குள் மட்டுமே சுருக்கி வைத்து புதிய தலைவர்களுக்கும் இடமளிக்க மறுப்பதற்காகவா?
(செல்வராஜ் கஜேந்திரன்,சுகாஷ்)

வடக்கில் தமிழ் தேசிய அரசியலைப் பேசி உணர்வுகளைத் தூண்டிவிட்டு தனது பொருளாதார நலன்களையும் முதலீடுகளையும் தெற்கில் பாதுகாத்துக் கொள்வதற்காகவா?
(தமிழருக்கு வேலையில்லை அங்கே)

தன்னைத் தவிர வேறு யாரும் அரசியல் ரீதியாக வளரக்கூடாது என்ற மனோபாவத்துடன் கட்சியை நடத்துவதற்காகவா?
(தான் மட்டும் MP)

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு இவர்மூலம் கிடைத்த அரசியல் பயன் என்ன என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான கணக்கைக் கூட வழங்க முடியாததற்காகவா?

சொல்லுங்கள்...
மக்கள் ஏன் அவரை பலப்படுத்த வேண்டும்?

இதுவரை மக்கள் ஏன் அவரை போதுமான அளவு பலப்படுத்தவில்லை?
அதற்கான பதில் மக்களிடமே இருக்கிறது.

நிலையான அரசியல் திட்டம் அவரிடம் இல்லை.

நடைமுறைத் தீர்வு அவரிட்ம இல்லை.
(மக்களை உசுப்பேற்ற வெறும் கற்பனை கதைகள் மட்டுமே)

வெறும் நாடக அரசியல் .எவருடனும் இணைந்து செயற்பட முடியாத தனிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை.
(தனது குடும்ப கட்சியை மீண்டும் தனதுப்தலமையில் உருவாக்க)

இவ்வாறிருக்க மக்கள் எப்படி இவரை பலப்படுத்துவார்கள்..

மக்கள் ஒருபோதும் உணர்ச்சி அரசியலை இனி ஏற்கப்போவதில்லை.
தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் பாதையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கான பதில்களை வழங்காமல், "என்னை ஏன் பலப்படுத்தவில்லை?"
"என்னை ஏன் பலப்படுத்தவில்லை?"
என்று மக்களிடமே கேள்வி கேட்பது அரசியல் நேர்மையா? என நீங்களே கூறுங்கள்.

கஜேந்திரகுமாரை ஏன் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும் என திணிக்கிறீர்கள்?

05/06/2026

அமைதியின் மீது பாய்ந்த வன்முறை
ஜூன் 5, 1956. கொழும்பு காலிமுகத் திடல் (Galle Face Green) அன்று வழக்கத்திற்கு மாறான ஒரு பதற்றத்துடன் விடிந்தது.

நாடாளுமன்றக் கட்டடத்திற்குள், இலங்கையின் ஆட்சி மொழியாக ‘சிங்களம் மட்டுமே’ இருக்கும் என்ற வரலாற்றுத் துரோகச் சட்டம் விவாதத்திற்கு வரவிருந்தது அதை எதிர்த்து, நாடாளுமன்றத்திற்கு வெளியேயிருந்த புல்வெளியில், செல்வநாயகம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அமைதியான முறையில் 'சத்தியாக்கிரக' போராட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

அமைதி காற்றில் மிதந்தது... ஆனால், அது புயலுக்கு முன்னான அமைதி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

திடீரென, கட்டைகளுடன் ஒரு வெறிக்கூட்டம் அந்த அமைதியான கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத தருணத்தில், அமைதியாக அமர்ந்திருந்த தலைவர்கள் மீது கற்களும் பொல்லுகளும் வீசப்பட்டன.
காந்திய வழியில் போராடிய தமிழ் தலைவர்களின் உடம்பில் இருந்து ரத்தம் சிந்தத் தொடங்கியது.

அங்கே நின்றிருந்த காவல்துறை, இந்த வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் உச்சக்கட்டக் கொடுமை. தலைவர்களின் உடைகள் கிழிந்து, முகத்தில் ரத்தம் வழிய, அவர்கள் அந்த இடத்திலேயே தங்களின் எதிர்ப்பை உறுதியாகப் பதிவு செய்தனர்.

தலைவர் செல்வநாயகம் அவர்களின் சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. ஒரு பத்திரிகையாளர் அவரிடம் ஓடிவந்து, "இவ்வளவு வன்முறைக்குப் பிறகும் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?" என்று கேட்டார்.

துடைக்கப்பட்ட ரத்தத்திற்குப் பின்னாலிருந்த அவரது கண்கள் தீர்க்கமாக மின்னின. அவர் சொன்னார்:
"இந்தக் காயங்கள் வெறும் உடம்பில் ஏற்பட்டவை அல்ல...
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் விழுந்த ஆழமான வடுக்கள். இனி எங்களுக்கான உரிமையை நாங்கள் போராடித்தான் பெற வேண்டும் என்பதை இந்த ரத்தம் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது."

அன்று காலிமுகத் திடலின் புல்வெளியில் சிந்திய அந்த ரத்தத்துளிகள் தான் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றை அடுத்த சில தசாப்தங்களுக்கு முற்றிலும் மாற்றி எழுதப்போகும் ஒரு பெரும் நெருப்புக்கு முதல் புள்ளியாக அமைந்தது.

05/06/2026

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத்சன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கும் நடவடிக்கைக்காக சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
சட்டத்தரணி கேசவன் சயந்தன்

05/06/2026

சிறந்த தகவல்கள்.

05/06/2026

யாரும் யார் மீதும் எந்த குற்றச்சாடையும் வைக்கலாம். ஆயினும் நீதிமன்றத்தின் விசாரணைகளின் பின்னரே உண்மை வெளிப்படுத்தப்படும். அண்மையில் இடம்பெற்ற பாடகனின் கைதிலும், நீதி கிடைக்கும் என மக்கள் திரு. சுமந்திரன் அவர்களையே நம்பி உள்ளனர்.

அரச தரப்பினால் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை செய்தனர் என்று குற்றச்சாட்டு பரவலாகவே வைக்கப்பட்டது. அரசியல் மேடைகளிலும் பாராளுமன்றங்களிலும் சர்வதேச அமைப்புக்களுக்குமழ இவ்வாறு கூறுவதற்கும், ஒரு நீதிமன்ற பொறிமுறை ஊடாக விடுதலைப் புலிகளில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது என சட்டபூர்வ தீர்ப்பை எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

அவ்வாறு வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட ஒரு வழக்கை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படத்திய, திரு. சுமந்திரன் அவர்கள்; அத் தீர்ப்பை ஆதாரம் அற்றதும் சட்டபூர்வமாக பிழையானதும் என்னும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது; வெறுமனே குறிப்பிட்ட அவ்வழக்கில் கிடைத்த வெற்றி அல்ல.

இலங்கையில் இந்த குற்றச்சாட்டில் பதியப்பட்ட ஒரே வழக்கு என்பதினால்; அரச தரப்பு அக் குற்றச்சாட்டை தொடர்ந்தும் வைப்பதற்கு, சட்ட ரீதியான ஆதாரம் ஒன்றும் இல்லை என்றும், இலங்கை அரசின் நீதிமன்ற பொறிமுறைக்குள்ளேயே இது நிரூபணமாகவில்லை என்னும் மேலான தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share