Vali.Southwest Youth Federation

Vali.Southwest Youth Federation வலி.தென்மேற்கின் இளைஞர் சக்தி எதையும

🚩JKC - இரண்டாம் மொழிக்கற்கை நிலையத்தினால் Zoom Online மூலம் ஆரம்பமாக உள்ள அடிப்படை சிங்கள சான்றிதழ் கற்கை நெறி இன்று வெள...
08/12/2023

🚩JKC - இரண்டாம் மொழிக்கற்கை நிலையத்தினால் Zoom Online மூலம் ஆரம்பமாக உள்ள அடிப்படை சிங்கள சான்றிதழ் கற்கை நெறி
இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும்.

🚩இன்று அதாவது வெள்ளிக்கிழமை இரவு 09.00 மணிக்கு ஆரம்பமாகும்.

🚩ஆரம்ப வகுப்புக்கள் முற்றிலும் இலவசம்
( ஆரம்ப இரண்டு வகுப்புக்களில் இலவசமாக இணைந்து பார்த்து தொடர்ச்சியாக கற்க ஆர்வம் இருந்தால் மாத்திரம் பதிவு செய்து கற்கை நெறியை தொடரலாம்.

28/08/2017
25/08/2017

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மானிப்பாய் வடக்கு இளைஞர் கழகத்தின் மக்களுக்கான சுத்தமான நீர் வழங்கும் திட்ட பணிகளின் தொடக்க நிகழ்வு 13.08.2017 இடம்பெற்றது.

'துருனு சிரமசக்தி' வேலைத்திட்டம் ஊடாக கிராமங்களுக்கு பயன் தரகூடிய செயற்திட்டங்களுக்களுக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ரூபா150,000/= நிதிவழங்கப்படும் ,மேலும் 450,000/=இளைஞர் பங்களிப்போடு 600,000/= பெறுமதியான செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நிகழ்வில் எம்மோடு, பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், திருவள்ளுவர் சனசமூக நிலையத்தினர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

21/07/2017

பகிர்க!!

வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் மானிப்பாய் பரிஷ் லியோ கழகமும் இணைந்து தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்குகளை நடாத்தவுள்ளது.

9வது ஆண்டாக இவ் வருடமும் இத் தொடர் கருத்தரங்கு இவ்வருடமும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மானிப்பாய் பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கருத்தரங்கின் வளவாளராக முன்னணி ஆசிரியர் ஜே.கலாமோகன் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்குவார்.

முற்றிலும் இலவசமாக இடம்பெறும் கருத்தரங்கில் பங்குபற்றும் மாணாவர்கள் சகலருக்கும் முன்னோடி வினாத்தாள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்படும்.

கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக லயன் மாவட்ட முதலாவது ஆளுனர் லயன் தேவா பீற்றர் கலந்து கொள்வார்.

http://vilaiyattu.com/?p=3924
24/05/2017

http://vilaiyattu.com/?p=3924

மாவட்ட சம்பியனாகியது சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்…! 2017ம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழாவிற்கான போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பண்டத்தரிப்பு ஜசிந்தா…

11/05/2017

வலி.தென்.மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச மட்ட தடகள போட்டிகள் 13.05.2017 சனிக்கிழமை இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

காலை 7.00 இருபாலருக்குமான வேகநடை, நெடுந்தூர ஓட்ட நிகழ்வுகளோடு போட்டிகள் ஆரமபமாகும்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் எல்லைக்குள் வசிக்கும் 29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் இரு பாலரும் பங்குபற்ற கூடிய இவ் நிகழ்வுகளில் தடகள நிகழ்வுகள் 20வயதிற்குட்பட்டோர் 20 வயதிற்கு மேற்பட்டோர் என இரு பிரிவாய் இடம்பெறும்.

மேலதிக விபரங்களை 0750442605 என்னும் இலக்கத்தினூடாக வலி.தென்.மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

08/05/2017

வலி.தென்.மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச மட்ட தடகள போட்டிகள் 13.05.2017 சனிக்கிழமை இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்திலும், பிரதேச மட்ட கலாச்சாரப் போட்டிகள் 14.05.2017 சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியிலும் இடம்பெறும்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் எல்லைக்குள் வசிக்கும் 29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் இரு பாலரும் பங்குபற்ற கூடிய இவ் நிகழ்வுகளில் தடகள நிகழ்வுகள் 20வயதிற்குட்பட்டோர் 20 வயதிற்கு மேற்பட்டோர் என இரு பிரிவாய் இடம்பெறும்.

மேலதிக விபரங்களை 0750442605 என்னும் இலக்கத்தினூடாக வலி.தென்.மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

முதல் வெற்றியோடு ஆரம்பித்தது சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்...2017ம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு...
25/04/2017

முதல் வெற்றியோடு ஆரம்பித்தது சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்...

2017ம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழாவிற்கான போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற கரம் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எமது சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் சுதர்சினி 2ம் இடத்தை வெற்றி கொண்டார்.

பயிற்றுவித்த பயிற்றுனர் குமரேசனிற்கும், வெற்றியை தேடி தந்த சுதர்சினிக்கும் வாழ்த்துக்கள் :)

06/03/2017

வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017ம் ஆண்டுக்கான இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் முதல் அங்கமாக கிறிக்கட் போட்டிகள் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் 05.03.2017 இடம்பெற்றது.

தொடர்ச்சியாக 11.03.2017 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கரப்பந்தாட்டப் போட்டிகள் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியிலும், 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00க்கு உதைபந்தாட்டப் போட்டிகள் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டிக்கான பதிவுகள் போட்டி தினத்தன்று காலை 8.00க்கு அவ் அவ் மைதானங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதோடு 8.15க்கு போட்டிக்கான நிரல் தயாரிக்கப்பட்டு 8.30க்கு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்கள் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும் என்பதோடு போட்டியில் பங்குபெறுபவர்கள் வதிவிடத்தை கிராம அலுவலர் மூலமாக உறுதிப்படுத்தல் அவசியமாகும்.

மேலதிக விபரங்களை வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரை 0771641413 என்னும் இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

28/02/2017

வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017ம் ஆண்டுக்கான இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இதன் முதல் அங்கமாக கிறிக்கட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

05.03.2017 காலை 8.00 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டிக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு 8.15க்கு போட்டிக்கான நிரல் தயாரிக்கப்பட்டு 8.30க்கு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

முதல் சுற்றுப் போட்டிகள் அணிக்கு 6 பேர் 5 ஓவர் கொண்டதாக அமையும் என்பதோடு இறுதிப்போட்டி அணிக்கு 11பேர் 10 ஓவர் கொண்டதாக அமையும்.

வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்கள் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும் என்பதோடு போட்டியில் பங்குபெறுபவர்கள் வதிவிடத்தை கிராம அலுவலர் மூலமாக உறுதிப்படுத்தல் அவசியமாகும்.

மேலதிக விபரங்களை வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரை 0771641413 என்னும் இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Address

Jaffna
40000

Telephone

0777574564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vali.Southwest Youth Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vali.Southwest Youth Federation:

Share