தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc, Political Party, Ward No. 05, Velanai North, Velanai, Jaffna.

30/04/2023
30/04/2023

இந்திய அமைதிப்படையை சேர்ந்த இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் நினைவாலயம் இருக்கின்றது.ஆனால் இந்திய இராணுவத்தினரால் கோரமா...
18/03/2023

இந்திய அமைதிப்படையை சேர்ந்த இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் நினைவாலயம் இருக்கின்றது.

ஆனால் இந்திய இராணுவத்தினரால் கோரமாக பலியெடுக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு எந்தவித நினைவுதின அடையாளங்களும் இல்லை.

யாழ்ப்பாண நகரத்தில் இந்திய தூதுவரின் பங்களிப்புடன் சுப்ரமணிய பாரதியாருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகள் வைக்க முடிகின்றது.

மாகாத்மா காந்திக்கு சிலை வைக்க முடிக்கின்றது.

இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சர் திரு.சர்தார் வல்லவாய் பட்டேல் அவர்களுக்கு நினைவு நாள் கண்காட்சி நடத்த முடிகின்றது.

ஆனால் குறைந்தபட்சம் வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் ஒரு நினைவு சதுக்கத்தை அமைக்க முடியாமல் இருக்கின்றது.

அமெரிக்கா வீசிய அணுகுண்டில் பலியான ஹிரோஷிமா நாகசாகி மக்களுக்கான நினைவு தின நிகழ்வுகளில் அமெரிக்கா தலைவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் சிந்துகின்றார்கள்.

அதே போல மேற்படி வைத்தியசாலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவு சதுக்கத்தை நிறுவி அஞ்சலி செலுத்த யாழ்ப்பாணதிற்கான இந்திய துணை தூதுவரை யாழ்ப்பாண மாநகர சபை அழைக்க முடியாதா என்ன????

கிழக்கு மாகாணத்திலும் இந்திய தூதுவர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என சிவில் சமூகத்தை சேர்ந்த திரு ஆறு திருமுருகன் அவர்கள...
17/03/2023

கிழக்கு மாகாணத்திலும் இந்திய தூதுவர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என சிவில் சமூகத்தை சேர்ந்த திரு ஆறு திருமுருகன் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றார்

மதிப்பிற்குரிய திரு ஆறு திருமுருகன் ஜயா அவர்களே....

தமிழ் மீனவர்களுக்கிடையில் நிலவும் பிரச்சனைகளை அரசியல் கலப்பற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க இந்திய முன்வர வேண்டும் என கோரிக்கையை முன்வையுங்கள்.

அதாவது பாரம்பரிய மீன் பிடி உரிமைகள் பாதுக்காக்கப்படும் அதே வேளை ரோலர் மூலமான மீன் பிடிக்கும் உபாயம் முழுமையாக தடை செய்யப் பட வேண்டும் என உரிமையாக கேளுங்கள்.

இந்தியாவின் ஊடாக நடைபெறும் கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் கடத்தல்களை தடுக்க ஆக்கபூர்வமாக செயல்பட முன்வர வேண்டும் என கோரிக்கைகளை முன்வையுங்கள்.

கிழக்கு மாகாணத்தில் 2,000 மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிராக இந்தியாவை பேச சொல்லுங்கள்

வடக்கு மாகாணத்தில் அத்துமீறி நிறுவப்படும் பௌத்த மத அடையாளங்களுக்கு எதிராக இந்தியாவை குரல் கொடுக்க சொல்லுங்கள்

வவுனியா வடக்கில் இந்திய துணை தூதுவராலயத்தின் ஆதிக்கத்த்திலுள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை பொதுமக்களுக்கு விடுவிக்க சொல்லுங்கள்

தமிழ் பாராளூமன்ற உறுப்பினர்களின் தீர்மானங்களில் தலையிட வேண்டாம் என சொல்லுங்கள்

எங்கள் நிலத்திற்கு தொடர்பற்ற ஹிந்தி உட்பட இந்திய மொழிகளை திணிக்க வேண்டாம் என சொல்லுங்கள்

எங்கள் வளங்களை முதலீடுகள் என்கிற பெயரில் இந்திய கபளீகரம் செய்ய கூடாது என சொல்லுங்கள்

வடக்கு கிழக்கில் இயங்கும் சமய நிலையங்கள் கிறிஸ்தவ - சைவ முரண்பாட்டை வளர்த்து விடும் பணிகளை செய்ய வேண்டாம் என கேளுங்கள்

கிளிநொச்சி , யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் பிரதேச ,சாதி, வர்க்க மற்றும் சமய முரண்களை ஊக்குவிக்க வேண்டாம் என கேளுங்கள்

வடக்கு கிழக்கு அரச நிருவாக்கத்தில் தலையிட வேண்டாம் என இந்தியாவிற்கு சொல்லுங்கள் .

தமிழ் மாணவர்களுக்கு இந்தியாவின் முன்னணி பல்கலை கழகங்களில் புலமைப்பரிசில் பெற்று தர முடியுமா என கேளுங்கள்

13ஆம் திருத்தத்தை கொண்டு தமிழ் சமூகத்தின் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசும் வரையறையைத் தாண்டி இந்தியா வர வேண்டும் என கோரிக்கையை முன்வையுங்கள்

வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படுவது அல்லது அவர்களின் பிரசன்னம் குறைக்கப்படுவது தொடர்பில் இந்திய குரல் எழுப்ப வேண்டும் என சொல்லுங்கள்

யுத்த குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை தொடர்ந்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக உள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள்

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்க்ளுக்காக நினைவேந்தல் செய்யும் உரிமையை தடுக்க வேண்டாம் என சொல்லுங்கள்

அதாவது அரசியல் அறம் சார்ந்து சரியான நிலைப்பாட்டை இந்தியா இனியேனும் எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக சிவில் சமூக தலைவராக நீங்கள் முன்வைக்க வேண்டும்

அரசியல் கலப்பற்று நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு மதிப்பு இருக்கிறது . இன்றைய சூழலில் இந்திய தூதுவர் அலுவலகம் எங்களுக்கு எந்த விதத்திலும் அவசியம் இல்லை

மழை நீரை சேமிப்பதும், நிலத்தடி நீரை பாதுகாப்பதும் எமது உரிமை.
17/03/2023

மழை நீரை சேமிப்பதும், நிலத்தடி நீரை பாதுகாப்பதும் எமது உரிமை.

ஆட்சி அதிகாரம் கொடுத்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆளத் தெரியாது என்று சிலர் பரிகாசம் செய்கின்றார்கள்.சிங்கள தேசம் தமிழர்களு...
17/03/2023

ஆட்சி அதிகாரம் கொடுத்தாலும் தமிழ் சமூகத்திற்கு ஆளத் தெரியாது என்று சிலர் பரிகாசம் செய்கின்றார்கள்.

சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஏன் சமஸ்டி என கேட்கும் என்றும் சொல்லுகின்றார்கள்.

மேற்படி புத்திசாலிகளின் உண்மையான கவலை என்ன என்பதை அனுமானிப்பது கடினமில்லை.

இங்கே யாழ் மாநகர சபையின் நிர்வாக தோல்வியை நியாயப்படுத்த முடியாது.

குறிப்பாக நிகழ்கால மாநகர சபையின் ஆளும் திறன் தொடர்பாக கேள்விகள் இருக்கின்றது.அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதும் உண்மையானது

அதற்காக தமிழர்களுக்கு சமஸ்டி ஏன் என்று கேட்க முடியுமா?

இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் தான் பெற்று கொண்ட பொதுபடுகடன்களை மீள செலுத்த முடியாது முறிவடைந்து இருக்கின்றது.

கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் 726,875 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டத்தை சந்தித்து இருக்கின்றன.

இந்த நிலையில் தென்னிலங்கையிடம் உங்களுக்கு ஏன் தனிநாடு என கேட்கமுடியுமா?

உலகின் முதன்மையான ஜனநாயக கருதப்படும் பிரித்தானியா பழமைவாத கட்சியின் அதிகாரத்தின் கீழ் வெறும் 7 ஆண்டுகளில் 4 பிரதமர்களை சந்தித்து இருகின்றது.

இதை முன்னிறுத்தி பிரித்தானியா ஏன் தனிநாடாக இயங்க வேண்டும் என கேட்க முடியுமா?

ஆகவே தமிழர்களின் மிக நியாயமான சமஸ்டி கோரிக்கைக்கும் மாநகர சபை நிருவாக தோல்விக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

அதே நேரம் தமிழ் தரப்பிடம் ஆக்கத் திறனான புதிய சிந்தனைகள் தேவையாக இருக்கின்றது .

நேர்மையான திட்டமிடல் வேண்டும்.

ஒழுங்கான ஆட்சித் திட்டம் அவசியமாக இருக்கின்றது.

இதன் மூலம் மட்டுமே எங்களுக்குரிய அரச இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்க முடியும்.

வடபகுதி முழுக்க குறைந்தது 3,000 இந்திய மீனவர்களின் றோலர்கள் வந்து போகின்றன குறைந்தது 3 நாளைக்கு அவர்கள் இங்கு வந்து போகி...
17/03/2023

வடபகுதி முழுக்க குறைந்தது 3,000 இந்திய மீனவர்களின் றோலர்கள் வந்து போகின்றன

குறைந்தது 3 நாளைக்கு அவர்கள் இங்கு வந்து போகின்றார்கள்.

அவர்கள் வரும் போது எங்கள் மீனவர்கள் தொழிலுக்கு போக முடியாது ஏனென்றால் எங்களின் மீனவர்கள் பெரும்பாலும் படுப்பு வலை தான் போடுவார்கள்.

அதை றோலர் வந்து இழுத்து போட்டு போய்விடும். அதனால் அந்த நேரத்தில் இவர்கள் அங்கு செல்வதில்லை.

ஒரு வலை போனால் 3 இலட்சம் 4 இலட்சம் நட்டமாகிவிடும்.

நிறையப் பேருக்கு அப்படி நடந்திருக்கின்றது.

அதனால் அவர்கள் கடலுக்கு போவதில்லை. வாரம் தோறும் 3 நாட்கள் தொழில் இழப்பு. நட்டஈடும் ஒன்றுமில்லை.

றோலர் இழுவை மடி வலைகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்படி றோலரில் ஒரு கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் 18 கிலோ மீன் விரயமாகின்றது.

ஒரு றோலர் ஒரு நாளைக்கு 25, 30, 50 கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் பாருங்கோ 18 ஆல் 50 பெருக்கும் போது எவ்வளவு மீன் விரையம் ஆகின்றது என்று.

இதற்கு தீர்வு இன்றுவரை கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கின்றது.

இதில் நிறைய அரசியல் இருக்கிறது

கடற்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா இந்திய மற்றும் தமிழ் மீனவர்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வாய்சவாடலுடன் காலம் கடத்தி வருகின்றார்.

இந்திய மற்றும் தமிழ் மீனவர்களுக்கிடையில் நிலவும் பிரச்சனைகளை அரசியல் கலப்பற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய தூதுவராலயத்திற்கும் அக்கறை இல்லை .

தற்போது இந்திய றோலர்க்ளுக்கு சட்ட ரீதியாக அனுமதி கொடுக்க கூட முயற்ச்சிக்கின்றார்கள்.

இங்கே நிறையப்பேருக்கு தொழில் இல்லாமல் சரியான கஸ்டம்.

எங்களிடம் நிறைய கடல்வளம் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் கடலில் கால் வைப்பது என்றால் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் கால் வைக்க வேண்டும். எங்களுடைய கையில் எதுவும் இல்லை.

இதனால் எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட தென்பகுதி மக்களுக்கும் அந்நிய இந்திய மீனவர்களும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களில் , நெடுந்தீவு வெடியரசன் கோட்டை  சூழல் பௌத்த தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது மாதூறு...
17/03/2023

கடந்த சில நாட்களில் ,

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை சூழல்
பௌத்த தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது

மாதூறு ஓயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மயிலத்தமடு மேய்ச்சல் தரவை ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமானமும் மாவட்ட செயலகத்திடம் இருந்து தொல்பொருள் திணைக்கள கணக்கிற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது

குருந்தூர் மலையில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கான கட்டுமான வேலைகள் நிறைவு அடைந்து இருக்கின்றன

கீரிமலை சிவன் ஆலயம், சடையம்மா மடம், முருகன் ஆலயம் என்பன அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டு இருக்கின்றமை அம்பலமாகி இருக்கின்றது

வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நிலாவரை கிணற்றுக்கு அருகில் பௌத்த அடையாளச் சின்னங்களை நிறுவ முயற்சிக்கப்பட்டு இருக்கின்றது

மன்னார் மாவட்ட முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரையான 900 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளிக்க முயற்சிக்க தொடங்கி இருக்கின்றார்கள்

சிங்கள பௌத்த அரசியல் தலைமைகள் தங்கள் பேரினவாத அரசியலை பேரிடர் காலப் பகுதியில் கூட நிறுத்தி வைத்து இருக்கவில்லை

இதற்கு சுனாமிப் பேரிடர் காலங்களிலும் கொரோனா காலங்களிலும் நடைபெற்ற பல சம்பவங்கள் சான்றாக இருக்கின்றன

அதன் தொடர்ச்சியாக தற்போதைய பொருளாதார பேரிடரின் போதும் நடைபெறும் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் சிங்கள பௌத்த அரசியல் ஒரு போதும் திருந்த போவதில்லை என்பதற்கு மற்றுமொரு சான்றாக இருக்கின்றது

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2009-ம் ஆண்டு வரை இங்கு நடைபெற்ற 242 நேரடிப் தமிழ் படுகொலைகளைஆவ...
17/03/2023

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2009-ம் ஆண்டு வரை இங்கு நடைபெற்ற 242 நேரடிப் தமிழ் படுகொலைகளைஆவணபடுத்தியுள்ளது.

குறிப்பாக ,
கல்லோயா படுகொலைகள்
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை
வல்வெட்டித்துறைப் படுகொலை
சத்துருக்கொண்டான் படுகொலை
ஒதியமலைப் படுகொலைகள்
நவாலி தேவாலயத் படுகொலை
மண்டைதீவுக் கடல் படுகொலை
மிருசுவில் படுகொலை
செம்மணி படுகொலை
நாகர்கோவில் பாடசாலை படுகொலை
திராய்க்கேணி படுகொலை
சுன்னாகம் சந்தைப் படுகொலை
குமுதினி படகுப் படுகொலை
வீரமுனைப் படுகொலை
யாழ்ப்பாண வைத்தியசாலை படுகொலை
சுதந்திரபுரம் படுகொலை
குருநகர் தேவாலைய படுகொலை

இவ்வாறு வடக்கு கிழக்கு எங்கும் நடந்த எல்லையற்ற நூற்றுக்கணக்கான படுகொலைகளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான வரலாற்றை நினைவுபடுத்த வேண்டிய நினைவாலயங்கள் , நினைவு பூங்காக்கள் , சிலைகள் நிறுவப்பட வேண்டும்

அதே போல தமிழ் சமூகத்திற்காகவும் , மொழிக்காகவும் ஆன்மிக பணிக்காகவும் தன்னலமற்று பணியாற்றி சாவடைந்த நூற்றுக்கணக்கான தமிழ் பெரியர்களுக்கான நினைவாலயங்கள் அமைக்க படவேண்டும்

கலாநிதி தங்கமா அப்பாக்குட்டி
சுவாமி விபுலாநந்தர்
பேராசிரியர் துரைராஜா
தனிநாயகம் அடிகளார்
தாவீது அடிகளார்
பேராசிரியர் கிறிசுரி எலியேசர்
வண பிதா இராயப்பு யோசப்பு
கூட்டுறவாளர் வீரசிங்கம்
அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை
அன்னை பூபதி
யோக சுவாமிகள்
ஆறுமுக நாவலர்

மேற்படி கொடூரங்கள் மற்றும் பெருமக்களுக்கான நினைவாலயங்கள் அமைக்கப்படும் போது அவை காலம் கடந்தும் எங்கள் வரலாற்றின் ஒளிவிளக்காக ஒளிபரப்பி கொண்டு இருக்கும்

ஆனால் எங்களுக்கு இது பற்றி அக்கறை இல்லை .

தமிழ் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாதாரண உள்ளுராட்சி அமைப்புகள் ஊடக கூட இந்த வரலாற்று பணிகளை செய்ய முடியும் .

ஆனால் வேறு தரப்புகளின் தேவைக்காக வீதிகள் தோறும் ஆகம விதிகளுக்கு மாறாக மத சிலைகளை நிறுவி பெருமை பேசுகின்றோம்

இங்கே உள்ள பல சைவ ஆலயங்கள் நித்திய பூசைகள் கூட இன்றி பூடப்பட்டு கிடக்கும் போது வடக்கு கிழக்கு தாயகத்தை மதம் கொண்டு அடையாளப்படுத்த வேண்டுமா

அதே போன்று இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத இந்தியா பிரமுகர்க்ளுக்கு சிலைகளை நிறுவவும் நினைவேந்தல்களை செய்யவும் என்ன தேவை இருக்கிறது என்றும் புரியவில்லை

அறிவுப்பூர்வமாக சிந்திக்காத வரை நாங்கள் எந்தவிதத்திலும் முன்னேற முடியாது

படம் : முதலாம் உலக யுத்தத்தில் இறந்தவர்களுக்காக இங்கிலாந்தில் நிறுவப்பட்டு இருக்கும் நினைவு பூங்கா

Address

Ward No. 05, Velanai North, Velanai
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை Nftc:

Share