எழுதுளிர்

எழுதுளிர் "வறுமை போக்கும் பணியும் பசுமை காக்கு?

 #எழுதுளிர் செயற்பாடு-05"ஆண்டவனின் சந்நிதியில் ஆறிய பசிப்பிணி"நல்லூர் சீரடி சாயிபாபா மற்றும் யாழ்ப்பாணம் பெருமாள்  கோவில...
28/07/2021

#எழுதுளிர்
செயற்பாடு-05

"ஆண்டவனின் சந்நிதியில் ஆறிய பசிப்பிணி"

நல்லூர் சீரடி சாயிபாபா மற்றும் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் அருகில் உதவிகோரி அமர்ந்துள்ள அடியவர்களின் ஒரு வேளைப்பசிப்பிணி போக்க எமது அமைப்பினால் மதிய உணவு வழங்கப்பட்டது.
கைகளில் அந்த உணவுப் பொதிகளை பெற்று கொண்டபோது அவர்களின் முகத்தில் வந்த சிறு பூரிப்பும் அவர்கள் விட்ட பெருமூச்சும் உணர்த்தியது எமக்கு உணவின் அருமையையும் வறுமையால் அவர்கள் படும் கொடுமையையும்

"அடுத்தவரை மகிழ்வித்து நாமும் மகிழ்தலே உலகின் உன்னத பண்பு " அந்த வகையில் எழுதுளிர் உடன் நீங்கள் இணைந்து உதவிக்கரம் நீட்டுங்கள் 😊
எம்முடன் தொடர்பு கொள்ள
E-mail : [email protected]

எமது செயற்பாடு - 04 ற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு  செயற்பாடனது 01.06.2021 முதல் மிகவும் வெற்றிகரமாக செயல்வடிவம் பெற...
24/06/2021

எமது செயற்பாடு - 04 ற்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு செயற்பாடனது 01.06.2021 முதல் மிகவும் வெற்றிகரமாக செயல்வடிவம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் எமது செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் முகமாகவும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் உதவும் முகமாகவும் பல நன்கொடையாளிகள் தாமாகவே முன்வந்து நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-எழுதுளிர்-

எம் சூழல் பாதுகாப்பது எம் கடமை ✌💪       🌱 எழுதுளிர்  🌱🌏 World Environment Day 🌏         05 th June 2021    #எழுதுளிர்   ...
05/06/2021

எம் சூழல் பாதுகாப்பது
எம் கடமை ✌💪

🌱 எழுதுளிர் 🌱
🌏 World Environment Day 🌏
05 th June 2021

#எழுதுளிர்

 #எழுதுளிர் செயற்பாடு - 04 (தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வடமாகாணத்திற்கு மட்டும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுக...
30/05/2021

#எழுதுளிர்
செயற்பாடு - 04
(தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வடமாகாணத்திற்கு மட்டும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.)

அதிகம் பகிர்ந்து ஓர் மாணவனின் கல்விக்கு வழி கொடுங்கள்....!

தற்போதைய சூழலில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் இணையவழி கற்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஓர் தூணாய் எழுதுளிரும் அவர்களுக்கு உறுதுணையாக அமையப் போகின்றது.

இணையவழிக்கற்றலில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எம்மிடம் கூறுங்கள் எம்மால் முடிந்த வரை நாம் உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.

அதிகம் பகிருங்கள் ஏனெனில் உங்கள் பகிர்வை பார்த்து ஓர் மாணவனின் கல்வி வளம் பெறலாம்.

 #எழுதுளிர் அமைப்பின் செயற்பாடு - 03 உலக புவி தினத்தை முன்னிட்டு 22.04.2021 அன்று யாழ்/செட்டித்தெரு மெதடிஸ் மிசன் தமிழ் ...
17/05/2021

#எழுதுளிர்

அமைப்பின் செயற்பாடு - 03

உலக புவி தினத்தை முன்னிட்டு 22.04.2021 அன்று யாழ்/செட்டித்தெரு மெதடிஸ் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் குறிப்பிட்ட தொகை மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

இதில் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் எழுதுளிர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி. உலகத்தை இயங்க வைக்கும்தோழர்கள் "தொழிலாளர்கள்"💪எழுதுளிரின் சர்வதேச தொழிலாளர்கள் ...
01/05/2021

உடலினை இயந்திரமாக்கி
உழைப்பினை உரமாக்கி.
உலகத்தை இயங்க வைக்கும்
தோழர்கள் "தொழிலாளர்கள்"💪

எழுதுளிரின்
சர்வதேச தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 😊❤

#எழுதுளிர் #உழைப்பாளிகள்தினம்

 #எழுதுளிர் அமைப்பின் செயற்பாடு - 02 தீ விபத்தினால் தமது அன்றாட வாழ்க்கையை இழந்த எம் மலையக சொந்தங்களுக்கு உதவும் வகையில்...
29/04/2021

#எழுதுளிர்

அமைப்பின் செயற்பாடு - 02

தீ விபத்தினால் தமது அன்றாட வாழ்க்கையை இழந்த எம் மலையக சொந்தங்களுக்கு உதவும் வகையில் எம் அமைப்பின் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் சேகரித்து வழங்கப்பட்டன.

17/03/2021 அன்று மஸ்கெலியா குயின்ஸ்லேன்ட் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக தமது அன்றாட வாழ்க்கையை சீரான முறையில் நடாத்த முடியாமல் தவிர்த்த எம் மலையக உறவுகளுக்கு உதவும் வகையில் எமது அமைப்பின் சார்பாக பல அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அதை மலையக உறவுகளிடன் கையளிப்பதற்காக. 19.03.2021அன்று #மலையகமறுமலர்ச்சிஒன்றிய வடமாகாண இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு உறவுகளிடம் கையளிக்கப்பட்டது.

 #எழுதுளிர் அமைப்பின் செயற்பாடு - 01 மாற்று திறனாளியின் இரு பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன....
26/04/2021

#எழுதுளிர்

அமைப்பின் செயற்பாடு - 01

மாற்று திறனாளியின் இரு பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைப்பின் நோக்கங்களிற்கு அமைய எமது அமைப்பின் முதலாவது செயற்பாடாக சுய தொழிலில் ஈடுபடும் மாற்று திறனாளி ஒருவரோடு தொடர்பு கொண்டு அவருக்கு தேவையான உதவி பற்றி வினாவினோம். அப்போது அவர் தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களின் கல்வி செயற்பாடுகளிற்கு தேவையான ஏதும் உதவிகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

அதற்கமைய 02.03.2021 அன்று அவர்களிற்கு தேவையான புத்தகப்பை , தண்ணீர் போத்தல் , சாப்பாட்டு பெட்டிகள், அப்பியாச கொப்பிகள் மற்றும் பல கற்றல் உபகரணங்கள் அமைப்பின் சார்பாக அவருக்கு வழங்கப்பட்டன.

 #எழுதுளிர் அமைப்பு இளம் தலைமுறை இளைஞர் யுவதிகளின் முயற்சியில் 22.02.2021 அன்று இனிதே சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டத...
24/04/2021

#எழுதுளிர் அமைப்பு இளம் தலைமுறை இளைஞர் யுவதிகளின் முயற்சியில் 22.02.2021 அன்று இனிதே சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.அந்த வகையில் எமது சூழலில் அன்றாட வாழ்க்கை செலவினங்களினால் அவதிப்படும் உறவுகளுக்கும்,கல்வி கற்று எம் உறவுகளுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நல்எண்ணங்களுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கும் உதவி ஊக்குவிப்பதற்காகவும்,இயற்கை அன்னையை பாதுகாத்து பசுமையான சூழலில் வளமான வாழ்வு பெற வழி வகுத்தல் எனும் சமூக அக்கறையுடன் செயற்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Address

Kondavil West , Kondavil
Jaffna
40062

Website

Alerts

Be the first to know and let us send you an email when எழுதுளிர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category