Karaveddy Center J/367, Village Secretariat

Karaveddy Center J/367, Village Secretariat கரவெட்டிமத்தி கிராம அலுவலக தகவல்கள்

08/01/2025

கரவெட்டி மத்தி
===================
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கரவெட்டி மத்தி பிரிவு மக்களுக்கு,
______________________
09.09.2019 இல் J367 கரவெட்டி மத்தி பிரிவிற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்றதில் இருந்து இன்றுவரை எனது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக்கூடிய சேவைகளை உங்களுக்கு இயன்றவரை வழங்கியுள்ளதாக நம்புகிறேன். என்னையும் அறியாது ஏதும் தவறுகளால் யாருக்கும் நெருடல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை காலமும் எனது பிரிவின் கடமைகளுக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய எனது சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பு பொறுப்பாளர்கள் RDS, WRDS, மகளீர் அமைப்பு, சமுர்த்தி சங்கங்கள், சிவில் குழு, கமக்காரர் அமைப்பு, கோவில், பாடசாலை, முன்பள்ளி, சனசமூக நிலைம் ஆகியவற்றின் நிர்வாகங்களுக்கும் மற்றும் என்னுடன் எப்போதும் பல்வேறு வேலைதிட்டங்களுக்கும் உடன் வருகைதந்து ஒத்துழைப்பு வழங்கும் ஆண்கள், பெண்கள் அணியினர் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் தங்கள் பிரிவின் அபிவிருத்திக்கு புதிதாக வரும் கிராம அலுவலருக்கு இதே ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடமைரீதியான இடமாற்றங்கள் அரசசேவையில் சகஜம் என்பதன்பேரில் 05 வருடங்கள் 04 மாதங்கள் கரவெட்டி மத்தி பிரிவில் சேவைவழங்கிய திருப்தியில் இன்றுடன் கரவெட்டி மத்திபிரிவில் இருந்து விடைபெறுகிறேன்.
08.01.2025 புதன்கிழமையில் இருந்து J367 கரவெட்டி மத்தி பிரிவினை புதிய கிராம அலுவலரான திருமதி E.J.கஜீதா T.P: 0771754663 அவர்கள் பொறுப்பேற்பார்கள், அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி

என்றும் உங்கள் சேவையில்
யோ.சசிகாந்தன்
கிராம அலுவலர்

13/12/2024

J367 கரவெட்டி மத்தி
எலிக்காய்ச்சல் தொடர்பான தடுப்பு மருந்து வழங்கல் நாளை 14.12.2024 சனி காலை 9.30 மணியளவில் கரவெட்டி மத்தி கிராம அலுவலர் அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்படும், இதில் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், வயல் வேலைகளில் ஈடுபடுபவர்கள், நீரேரி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வெள்ள பகுதிகளால் சென்று வருபவர்கள் அவசியம் கலந்து கொண்டு தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ளவும்
தகவல்
கிராம அலுவலர்
PHI
கமக்காரர் அமைப்பு

🔴இதோ சில தரவுகள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த……🔴   பயப்பட வேண்டாம் . ஆரம்பத்தில் கண்டறிந்து எலிக்காய்ச்சலை குணப்படுத்த மு...
13/12/2024

🔴இதோ சில தரவுகள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த……🔴
பயப்பட வேண்டாம் . ஆரம்பத்தில் கண்டறிந்து எலிக்காய்ச்சலை குணப்படுத்த முடியும். தடுப்பு மருந்தும் Doxycycline உள்ளது.

நவம்பர் மாதம் , எலிக்காய்ச்சல் என சந்தேகிகப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளர்கள் எண்ணிக்கை- 5

டிசம்பர் 1ம் இலிருந்து டிசம்பர் 12ம் திகதி இரவு 11 PM வரை எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ,பெறுகின்ற நோயாளர்கள் - 58 பேர்
[1ம் திகதி-9ம் திகதி வரை -13 பேர் ,
10ம் திகதி +11ம் திகதி - 29 பேர்,
12ம் திகதி - 16 பேர்]

இன்று 12/12/2024 -
எலிக்காய்சல் என சந்தேகிகப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவர்கள் -16 பேர்

இன்று தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் -2 பேர்

இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பபட்டவர் - 1 பேர்

இன்றைய தினம் (12/12/2024) வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளிகள் - 28 பேர்
(கர்ப்பிணி பெண்கள்-2 உள்ளடங்கலாக)

இதுவரை இறந்தவர்கள் 7 பேரில் பலர் எலிக்காய்ச்சலால் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இறந்தவர் -1

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்தவர்கள் -5 ( பருத்தித்துறை -3 ,வரணி-1 ,கரவெட்டி-1)

முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்டவர் நாவற்குழியில் தற்காலிகமாக வசித்த போது நேரடியாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர் - 1

இன்று வைத்தியசாலை ஊழியர்களுக்கும் ,OPD யிலும் எலிக்காய்சல் தடுப்பு மருந்து Doxycycline இன்று வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் தடுப்பு பிரிவு
https://www.epid.gov.lk/ ,
பருத்தித்துறை MOH,கரவெட்டி MOH,சாவகச்சேரிMOH ,மருதங்கேணி MOH களின் நேரடி கண்காணிப்பின் மூலமும் தடுப்பு மருந்து வழங்கல் மூலமும் நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுகொண்டிருக்கின்றது.

எலிக்காய்ச்சலின் பரவலின் தீவிரத்தினை குறைக்க
முன்னெச்சரிக்கை முன்ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு விட்டன.தற்காலிக விடுதி திறக்கப்பட்டுள்ளது .
தேவையான மருந்துகள் இருக்கின்றன.
மேலதிக மருந்துகள் MSD இலிருந்து எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக தேவைப்படும் மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்களுக்கான கடமை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வினைத்திறனாக இயங்கிய வண்ணம் உள்ளது.

எனவே மக்கள் பயம் கொள்ள தேவையில்லை .
எந்நேமும் மருத்துவமனையை அணுகலாம்.

-பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை -

Epidemiology Unit, Sri Lanka is mainly responsible for the communicable disease control in the country. It’s main activities involve communicable disease surveillance, outbreak investigation, conducting immunization programs, and conducting research to generate data related to infectious disease p...

27.11.2024, 9.00am
27/11/2024

27.11.2024, 9.00am

26/11/2024

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது
November 26, 2024 05:39 pm
Bookmark and Share

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

20/11/2024

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

நலன்புரி நன்மைகள் (Aswasuma) கொடுப்பனவிற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்

1. ஏற்கனவே நலன்புரி கொடுப்பனவிற்கு (Phase I & Ii) விண்ணப்பிக்காதவராக இருக்கவேண்டும்.

2. புதிய குடும்பமாயின் (Extended family) ஏற்கனவே விண்ணப்பித்த குடும்பத்தின் உறுப்பினரல்லாதவராக இருத்தல்.

3. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வயதெல்லையினருக்கு NIC இருத்தல் கட்டாயம்

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்கும் மேற்படி தகமையுடையோர் அஸ்வசும கட்டம் இரண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி பிரதேச செயலகத்தில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் (WBIU) எதிர்வரும் 02.12.2024 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

குறிப்பு:- விண்ணப்பப் படிவங்களை நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

18/11/2024

நாளை 19, 20 ம் திகதிகளில் காலை 9.30 இருந்து பி.ப 1.30 வரை CCTV camera பொருத்தும் இருநாள் பயிற்சி கரவெட்டி பிரதேச செயலக விதாதா நிலையத்தில் நடைபெறும் ஆர்வம் உள்ளதரப்பினர் பங்குபற்றவும்

18/11/2024

மனைப்பொருளியல் டிப்ளோமா தரச்சான்றிதழ் கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகமை முறைமை கற்கை நெறி
மேற்படி பயி்ற்சி நெறிக்கு 2025 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
பயி்ற்சி காலம் ஒரு வருடம் வார நாட்கள் ( சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர்த்து) நாளொன்றிற்கான பயி்ற்சி ஊக்குவிப்பு கொடுப்பனவு 300.00 மாதம் 6000.00 (20×300.00=6000.00) கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்படும் பயிற்சியாளர் எண்ணிக்கை 20 பேர் விண்ணப்பங்களை 30.11.2024 ற்கு முன்னர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி கிளையில் சமர்ப்பிக்கவும் பயி்ற்சி நிலையம் உடுப்பிட்டி கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் நேர்முக தேர்வின் மூலமாக தெரிவு செய்யப்படும்
தகமைகள்
1.18 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள்
2. தரம் 11ற்கு இடையில் கல்வி கற்றவர்கள்
3. கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் வசிப்பிடத்தை கொண்டிருத்தல்

11/11/2024

J367 கரவெட்டி மத்தி
காப்பற் இடுகைக்கு வீதி மூடல் 11.11.2024 திங்கட்கிழமை

இன்று சோனப்பு வீதியில் தாழங்குழி முருகன் கோவில், வைரவெல்லன் குளப்பகுதியில் இருந்து மண்டான் வீதி வரையுள்ள பகுதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் காப்பற் இடுகை செயற்பாடு நடைபெறுவதால் குறித்தபகுதி மூடப்படுவதாக அறிய தரப்பட்டுள்ளது, எனவே சோனப்பு பகுதிக்கு செல்பவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன், சோனப்பு மயானம் இறுதி நிகழ்வு செல்பவர்கள் மத்தொனி தொலைத்தொடர்பு கோபுர முன்வீதியால் (கவுந்தில் வீதி) திரும்பி கிழவிதோட்டம், புதுக்குளம் பகுதியால் சோனப்பு செல்லமுடியும்
தகவல்
கிராம அலுவலர்

04/11/2024

J367 கரவெட்டி மத்தி
நாளை 06.11.2024 புதன்கிழமை பி.ப 2.45pm தேர்தல் திணைக்களத்தின் வாக்காளர் தெளிவூட்டும் செயற்பாட்டு கலந்துரையாடல் J367 கரவெட்டி மத்தி கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும், வாக்களிக்க இருக்கும் மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பினர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
(குறிப்பு: யாழ்மாவட்டத்திலேயே நிராகரிக்கப்படும் வாக்குகள் எண்ணிக்கை வீதம் அதிகமாக உள்ளதால் குடும்பத்தில் இருந்து ஒருவர் அவசியம் கலந்துகொள்ளவும்)
தகவல்
கிராம அலுவலர்

29/10/2024

பாராளுமன்ற தேர்தல் வாக்களிக்கும் முறை

28/10/2024

Address

Jaffna
40520

Opening Hours

Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 12:30
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 12:30
Saturday 08:30 - 12:30

Telephone

+94777917040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karaveddy Center J/367, Village Secretariat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karaveddy Center J/367, Village Secretariat:

Share