10/09/2026
Establishment of quality paddy production YaYa PSDG - 2026 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முன்மாதிரி துண்டத்திற்கான அறுவடை விழாவானது இரணைஇலுப்பம் குளம் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் என்னும் பிரதேசத்தில் Y.கமல்மரியகீதன் என்னும் விவசாயின் வயல் துண்டத்தில் 09.09.2026 அன்று இடம் பெற்றது.
இவ் யாயா திட்டமானது 33 விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் 50ac அளவில் செய்கை பண்ணப்பட்டது என்பதுடன் BG 374 நெல்வர்க்கமானது அரைமானிய விலையில் ஏக்கருக்கு 3 புசல்படி வழங்கப்பட்டதுடன் முன்மாதிரி துண்டத்திற்கு மாத்திரம் இலவசமாக பசளை வழங்கப்பட்டு அறுவடை விழாவானது நடாத்தப்பட்டது.
நிகழ்வானது திருமதி பி.ரமனேந்திரன், பிரதி விவசாய பணிப்பாளர், மன்னார் அவர்களால் தலைமை தாங்கி நடாத்தப்பட்டதுடன் விழாவிற்கு பிரதம விருந்தினராக ச.சிவஸ்ரீ, செயலாளர் விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், T.யோகேஸ்வரன் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், வடக்கு மாகாணம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார், பாடவிதான உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகளின் பங்களிப்புடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அறுவடை விழாவானது சி.சிவராம், விவசாய போதனாசிரியர், இரணை இலுப்பங்குளம் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு யாயா திட்டத்திற்கான தொழில்நுட்ப பொதியானது பங்குபற்றிய விவசாயிகளுக்கு விவசாய போதனாசிரியரால் தெளிவுபடுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அறுவடை விழாவினை மேற்கொள்ளுவதற்கு உதவிய விவசாயியால் அனுபவ பகிர்வு வழங்கப்பட்டது. குறித்த யாயா திட்டத்தின் கீழான சராசரி விளைச்சலானது 7.56 mt/ ha ஆகும்.