20/05/2023
இலங்கையில் இருந்து கனடா வர விரும்பும் நபர்களுக்கு மட்டும்...
இது இலங்கையின் பக்கத்து வல்லரசின் திட்டத்தின் கொப்பியும் கூட .
Students visa ஊடாக கனடாவிற்கு புலம் பெயரலாம். இதற்கான செலவும் மிக மிக குறைவு. சகல படிக்க கூடிய பிள்ளைகளும் இதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆங்கில அறிவை எவ்வளவு கூட்ட முடியுமோ அவ்வளவுக்கு கூட்டுங்கள். A/L முடித்த கையோடு நீங்க கனடா வரலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது British council சென்று IELTS test செய்து 6.5 score மட்டும் எடுத்தால் போதும். canada வில் உள்ள college or university fee முதல் செமஸ்டர் பணம் 4000 dollars to 6000 canadia. dollars மட்டுமே செலவாகும் + உங்கள் flight ticket cost...
படித்து முடித்தவர்களும் முயற்சி செய்யுங்க....
திருமணமானவர்களுக்கு ஒருவருக்கு Students visa கிடைக்கும் போது குடும்பமாக விசா கிடைக்கும்.
கனடாவில் எங்கு சென்றாலும் பஞ்சாப், சீக்கிய குஜராத் இனத்தவரை தற்போது வகை தொகையாக காணலாம். இதற்குள் மிக பெரிய மாஸ்ரர் பிளானும் உள்ளது. அவர்களிடம் அரசியல் பொருளாதார ரீதியாக இதை உருவாக்க அவர்கள் பயன் படுத்தும் ஆயுதம் ஆங்கில அறிவே.
ஆழ்பவன் சரியாக இருந்தால் வாழ்பவன் சரியாக வாழ்வான். ஆனால் அந்த நிலை இலங்கையில் இல்லை. வரப்போவதும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. வெற்றியாளன் பின்னால் செல்வதும் (கனடா) வெற்றியை நோக்கி ஓடுபவர்கள் இந்திய பஞ்சாப், சீக்கிய, குஜராத் இனத்தவரை கொப்பி அடிப்பதிலும் எந்த தவறுமே இல்லை.
இலங்கையில் இருந்து வந்து கனடாவில் வாழும் நம்மவர் பலர் மன ரீதியாக மற்ற தமிழர்கள் இங்கே வருவதை விரும்புவது மிக மிக குறைவு. இதில் எனக்கு நேரடியான அனுபவமும் உள்ளது. நான் கனடாக்கு எடுத்து விட்ட பலர் கூட உதவி செய்வதில்லை வர முயற்சி செய்பவர்களை குழப்பியும் பயம் காட்டியும் தடுக்கின்றனர். காரணம் உங்கே தாங்க கனடா என்று படம் காட்ட நீங்க வேண்டும். அதோடு மனிதனுக்கு கடவுள் தந்த சாபத்தில் கடும் சாபம் எரிச்சல் + தனக்கே எல்லாம் இருக்கவேண்டும் என்ற போட்டி மன நிலை நம்மவற்கு அது அதிகம்.
அதனால் அனைத்து தமிழர்களையும் குறை கூற முடியாது. என்னை கூட எனது அம்மாவின் தம்பியே வழி காட்டி விட்டது .
இதில் என்னும் ஒரு விஷயம் உள்ளது. உங்கே மாங்கு மாங்கு என்று படித்து அரச உத்தியோகம் பார்ப்பவர்கள் 50,000 மாதம் எடுப்பார்கள். இங்கே கனடாவில் ஒரு நாளில் அந்த பணத்தை உழைக்க முடியும்.
நாம் இந்த உலகில் இருந்து கொண்டு செல்லப் போவது எதுவுமே இல்லை என்ற உண்மையை உங்களுக்குள் உருவாக்குங்க. நல்லது தானாக நடக்கும்
எவருக்காவது Students visa சம்மந்தமான உதவி தேவை என்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்க. இதற்கான எந்த கட்டணமும் எனக்கு இல்லை. தேவையும் இல்லை. பணத்துக்காக என்று யாராவது நினைப்பவர்களுக்கு மட்டும் இந்த பதில் பொருந்தும் மற்றவர்கள் மன்னிக்கவும்
இன்றே உங்கள் பிள்ளைகளுக்கு விதையுங்கள் ஆங்கில அறிவை இயன்ற அளவுக்கு நாளை இதன் பலா பலன் உங்களுக்கே.
சுதன் நடா கனடா.
PH +16476130997.