24/04/2026
“Sri Lankan Airline” ආයතනයේ සේවාවක් බව අඟවමින් WhatsApp ගිණුම් මගින් ඔබ සමඟ සම්බන්ධවන වංචනික පුද්ගලයෙකු පහත දැක්වෙන ව්යාජ වෙබ් අඩවි ත්රිත්වයෙන් එක් බෙව් අඩවියකට ඔබබ යොමුකරාවි.
https://srilankan.wuozgo.cc
https://srilankan.vaco.cc
https://srilankan.krgo.cc
එමගින් “Sri Lankan.apk” යන ජංගම දුරකථන යෙදුම ඔබගේ දුරකථනයේ ස්ථාපනය කරවීමට සලස්වන අතර මුදල් වංචා කිරීමේ ජාවාරමක් එම අනිශ්ඨ බැංකු ට්රෝජන් යෙදුම මගින් සිදුකරන බව අනාවරණය වී තිබේ.
ඔබ මෙම යෙදුම ස්ථාපනය කළහොත් ජංගම දුරකථන වෙත දුරස්ථ ප්රවේශය මෙම ජාවාරම සිදුකරන වංචනිකයින්ට හිමිවේ, ඔබේ ජංගම දුරකථනයේ සංවේදී දත්ත නිරාවරණය කරගැනීමේ හැකියාව එමගින් ඔවුනට ලැබෙන බවට නිරීක්ෂණය වී ඇත.
මෙම වංචනිකයින් අවසානයේ මුදල් ගණුදෙනුවක් සිදුකරවීමට සලස්වමින් One – Time Password (OTP) අංක, බැංකු ගිණුම් තොරතුරු සහ සත්යාපන දත්ත (ඇඟිලි සලකුණු, මුහුණු හඳුනාගැනීම) “Sri Lankan.apk” මෘදුකාංගය හරහා ලබාගනිමින් ඔබේ මුදල් වෙනත් බැංකු ගිණුම් වෙත බැර කරගැනීම සිදුකරන බව අනාවරණය වී ඇත.
මෙම ක්රියාවලිය සඳහා පහත සඳහන් WhatsApp දුරකථන අංක භාවිතා කරනු ලබන බවට නිරීක්ෂණ වී ඇත.
දුරකථන අංක :-
077 - 4558361
011 - 7771979
074 - 1142208
077 - 5791209
074 - 3268200
ක්ෂණික මූල්ය වාසි ලබා ගැනීමේ අරමුණින් මහජනතාව මෙවැනි වංචාවන්ට හසුවන අවස්ථා නිරන්තරව වාර්තා වන බැවින් පුද්ගලයින් හෝ කණ්ඩායම් විසින් සිදුකරනු ලබන මෙවැනි වංචනික ක්රියාවලට හසු නොවන ලෙස දැනුවත් කරන්නෙමු.
-----------------------------------
“Sri Lankan Airline” நிறுவனம் வழங்கும் சேவையாக காட்டிக்கொண்டு WhatsApp கணக்குகள் மூலம் உங்களை தொடர்பு கொள்ளும் மோசடி நபர் ஒருவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள போலி இணையதளங்களில் ஒன்றுக்கு உங்களை வழிநடத்துவார்.
https://srilankan.wuozgo.cc
https://srilankan.vaco.cc
https://srilankan.krgo.cc
அதன் மூலம் “Sri Lankan.apk” என்ற மொபைல் செயலியை உங்கள் தொலைபேசியில் நிறுவுமாறு தூண்டப்படும். குறித்த செயலி ஒரு வங்கி ட்ரோஜன் வகை தீங்கிழைக்கும் மென்பொருளாகும் என்பதும், இதன் மூலம் பண மோசடி நடைபெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் இச் செயலியை நிறுவினால், உங்கள் கைத்தொலைப்பேசிக்கு தொலைநிலை அணுகலை (remote access) மோசடி நபர்கள் பெற முடியும். இதன் மூலம் உங்கள் தொலைபேசியில் உள்ள நுணுக்கமான தரவுகள் அவர்களுக்கு வெளிப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், இறுதியில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளச் செய்து, One-Time Password (OTP) எண்கள், வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தல் தரவுகள் (கைவிரல் ரேகை, முக அடையாளம்) ஆகியவற்றை “Sri Lankan.apk” மென்பொருள் மூலம் திருடி, உங்கள் பணத்தை பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக கீழ்க்கண்ட WhatsApp தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது:
தொலைபேசி எண்கள்:
077 - 4558361
011 - 7771979
074 - 1142208
077 - 5791209
074 - 3268200
விரைவான நிதி இலாபத்தை நோக்கமாகக் கொண்டு பொதுமக்கள் இத்தகைய மோசடிகளுக்கு சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதால், தனிநபர்கள் அல்லது குழுக்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடி செயல்களில் சிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
--------------------------
#මේ_ඔබේ_පොලිසියයි