ACJU Hambantota

ACJU  Hambantota Spiritual Activities for Entire Society.

Azan Time AlerFriday, 2025 May 09All Ceylon Azan Time Table
08/05/2025

Azan Time Aler
Friday, 2025 May 09
All Ceylon Azan Time Table

மதத் தலைவர்களுக்கான ஒன்று கூடல்  2025.02.24நேற்றையதினம் (2025.02.24) ஹம்பாந்தோட்டை ஜெட்கிரீன் ஹோட்டலில் மதத் தலைவர்களுக்...
25/02/2025

மதத் தலைவர்களுக்கான ஒன்று கூடல் 2025.02.24

நேற்றையதினம் (2025.02.24) ஹம்பாந்தோட்டை ஜெட்கிரீன் ஹோட்டலில் மதத் தலைவர்களுக்கான ஒன்று கூடல் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு மதப் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்வொன்று கூடலின் முக்கிய நோக்கம் சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல், மத நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுதல் என்பதாகும். கலந்துகொண்ட மதத் தலைவர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து, சமகால சமூக சவால்களை முகாமைப்பதற்கான தீர்வுகளை பற்றி ஆலோசித்தனர்.

மேலும், அடுத்த ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு மேலும் பல மதத் தலைவர்கள் (உலமாக்கள்) அழைக்கப்பட உள்ளனர். எனவே ஏனைய உலமாக்களும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NBT ஸப்ரான்
செயலாளர்,
ஹம்பாந்தோட்டை மாவட்டம்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.






#அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா

 #அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா  #ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை.📜 நிகழ்வின் நன்றிக்கான அறிக்கை.2025.02.25அஸ்ஸலாமு அலைக்கும்...
25/02/2025

#அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா #ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை.

📜 நிகழ்வின் நன்றிக்கான அறிக்கை.
2025.02.25

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கெளரவ பொதுச் செயலாளரும், எமது மாவட்ட முன்னாள் தலைவருமான அஷ்ஷேக் #அர்கம்_நூராமித் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களினால் 2025.02.22 (சனிக்கிழமை) நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

📅 நிகழ்வுகள்:

🔹 மாவட்ட ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு
📍 இடம்: பானுவள மர்கஸ் மஸ்ஜித்
⏰ நேரம்: காலை 10:00 – 11:00

🔹 "சமூகத்தில் ஆலிமாக்களின் பங்களிப்பு" மாவட்ட ஆலிமாக்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு
📍 இடம்: ஹம்பாந்தோட்டை பங்களா வில்லா
⏰ நேரம்: காலை 9:30 – 12:30

🔹 "ரமழானை பேணிப் பாதுகாப்போம்" மாவட்ட பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு
📍 இடம்: சிப்பிக்குளம் அந்-நூர் ஜும்மா மஸ்ஜித்
⏰ நேரம்: அஸர் தொழுகையை தொடர்ந்து

இந்த நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாக கலந்து வழிகாட்டல்களை வழங்கிய கெளரவ பொதுச் செயலாளர் அஷ்ஷேக் #அர்கம்_நூராமித் ஹஸ்ரத் அவர்களுக்கும், மாவட்டக் கிளையின் உறுப்பினர்களுக்கும், நிகழ்வுகளை சிறப்பித்து பங்கேற்ற ஆலிம்கள், ஆலிமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.

இத்தகைய பயனுள்ள நிகழ்வுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்யும் பணியில் உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இனிமேலும் தொடரும் என நம்புகிறோம்.

நன்றி, ஜஸாகுமுல்லாஹு கைரா.

வஸ்ஸலாம்,

NBT ஸப்ரான் [ஹிழ்ரி]
செயலாளர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.





25/02/2025
 #அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா –  #ஹம்பாந்தோட்டை  மாவட்டக் கிளையின் நன்றியுரைஇம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்...
15/02/2025

#அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா – #ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் நன்றியுரை

இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு கௌரவ உறுப்பினர்களை சந்திக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட தொடர் முயற்சியின் மூலம், ஆளுங்கட்சியின் கௌரவ உறுப்பினர்களான ருவன் செனரத் மற்றும் அதுல வெலதகொட ஆகிய இருவரும் எமது வேண்டுகோளை ஏற்று, இன்று 2025.02.15 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை தர்மகபீர் ஜும்மா மஸ்ஜிதுக்கு வருகை தந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்களுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியுடனும், நெருக்கமான உரையாடல்களுடன் நடைபெற்றது. ஜம்இய்யதுல் உலமா என்றால் என்ன? ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன? ஆகிய விடயங்களை அவர்கள் கேட்டறிந்ததோடு, ஆளும்கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. மேலும், மக்ரிப் தொழுகையின் போது, தொழுகை முடியும் அவதானித்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வெளியீடுகளையும், எமது மாவட்ட ஜம்இய்யா சார்பாக ஒரு கடிதமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

எம்முடன் நேரமிட்டு, மிக நேர்மையாகவும் உற்சாகமாகவும் கலந்துரையாடிய கௌரவ உறுப்பினர்களான ருவன் செனரத் மற்றும் அதுல வெலதகொட ஆகியோருக்கும், இந்த சந்திப்பை ஏற்படுத்த உதவிய அவர்களது கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், மேலும் அவர்களை நன்முறையில் வரவேற்று, கவனித்து, கௌரவித்து வழி அனுப்பிய எமது மாவட்ட ஆலிம்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாகுமுழ்ழாஹு கைரா

செயலாளர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.





ஹம்பாந்தோட்டை மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வுஅல்ஹம்துலில்லாஹ்! ஹம்பாந்தோட்டை மாவட்ட  #வக்பு_சபை...
13/02/2025

ஹம்பாந்தோட்டை மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு

அல்ஹம்துலில்லாஹ்! ஹம்பாந்தோட்டை மாவட்ட #வக்பு_சபையின் ஏற்பாட்டில், கடந்த 09.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஹம்பாந்தோட்டை ஸாஹிரா பாடசாலையில் “மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளை வலுவூட்டுதல்” என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் இமாம்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கான திறன் மேம்பாடு, நிர்வாக பருவங்களின் மேம்படுத்தல், மற்றும் வக்பு சொத்துக்களின் பாதுகாப்பு ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடப்பட்டது.

இந்நிகழ்வை சிறப்புர நடாத்திய முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களதின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும்,
இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த #அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமாவின் #ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவர், செயலாளர், மஸ்ஜித் இமாம்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜஸாகுமுல்லாஹு கைரா

இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்திலும் இத்தகைய பயனுள்ள செயல்திட்டங்களை முன்னெடுத்து, மஸ்ஜித்களின் நிர்வாகத்தை மேலும் வலுவூட்ட உறுதிபூண்டுள்ளோம்.

V.T. கனூன்
பொறுப்பாளர்,
ஹம்பாந்தோட்டை மாவட்டம்,
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம்.

14-02-2025 (Next Friday) = 15 - Sha'ban (08) - 1446  Next JUMMA BAYAN SCHEDULE (In Sha Allah)At HAMBANTOTA DISTRICT இன்ஷ...
13/02/2025

14-02-2025 (Next Friday) = 15 - Sha'ban (08) - 1446


Next JUMMA BAYAN SCHEDULE (In Sha Allah)
At HAMBANTOTA DISTRICT


இன்ஷா அல்லாஹ்...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அடுத்த ஜும்மா பயான் நிகழ்ச்சியின் அட்டவணை...






 #நன்றி_நவிலல்2025.02.06 (1446.08.07)   - ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் பெப்ரவரி (ஷஃபான்) மாத கூட்டம் 2025.02.01 ஆம் த...
07/02/2025

#நன்றி_நவிலல்
2025.02.06 (1446.08.07)

- ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் பெப்ரவரி (ஷஃபான்) மாத கூட்டம் 2025.02.01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் பகல் 1:00 மணி வரையிலும், நளகம மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் 1:00 மணி முதல் 2:00 மணி வரையிலும் #நளகாமம் ஹிதாயா ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
அல்ஹம்துலில்லாஹ்.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆலிம்கள் மற்றும் நல்ல முறையில் வரவேற்று, ஒத்தாசை வழங்கிய மஸ்ஜித் நிர்வாகம், ஆலிம்கள், வாலிபர்கள் அனைவருக்கும் மாவட்ட ஜம்இய்யா சார்பாக உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

#ஜஸாகுமுழ்ழாஹு கைரா

அல்லாஹுதஆலா உங்களது சேவையை கபூல் செய்து, அதற்கான பரிபூரண கூலியை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக.., ஆமீன்.

செயலாளர்
அ.இ.ஜ.உலமா,
ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை.






07-02-2025 (Next Friday) = 08 - Sha'ban (08) - 1446Next JUMMA BAYAN SCHEDULE (In Sha Allah)At HAMBANTOTA DISTRICT இன்ஷா ...
06/02/2025

07-02-2025 (Next Friday) = 08 - Sha'ban (08) - 1446

Next JUMMA BAYAN SCHEDULE (In Sha Allah)
At HAMBANTOTA DISTRICT


இன்ஷா அல்லாஹ்...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அடுத்த ஜும்மா பயான் நிகழ்ச்சியின் அட்டவணை...






Insha'Allah Next JUMMA BAYAN SCHEDULEAt HAMBANTOTA DISTRICT 31-01-2025 (Next Friday) = 30 - Rajab (07) - 1446இன்ஷா அல்லா...
30/01/2025

Insha'Allah
Next JUMMA BAYAN SCHEDULE
At HAMBANTOTA DISTRICT

31-01-2025 (Next Friday) = 30 - Rajab (07) - 1446

இன்ஷா அல்லாஹ்...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அடுத்த ஜும்மா பயான் நிகழ்ச்சியின் அட்டவணை...






Address

Panuwala Jumma Masjid
Hambantota
82000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ACJU Hambantota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category