SLMC Youth Congress - Gampaha District

SLMC Youth Congress - Gampaha District ஓரத்தில் நின்று ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு வையுங்கள் முற்றுப்புள்ளி

🚨 பொதுமக்களின் கவனத்திற்கு!சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ, நாமல் ராஜபக்ஷ போன்ற இளைஞர்கள் எதி...
07/09/2026

🚨 பொதுமக்களின் கவனத்திற்கு!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ, நாமல் ராஜபக்ஷ போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் எமது ஜனாதிபதியாக வர வேண்டும்”எனும் கருத்து ரவூப் ஹக்கீம் அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது.

❌ இது ஒரு போலிச் செய்தியாகும்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவோ, பகிரவோ வேண்டாம்.

#போலிச்_செய்தி #உண்மையை_அறிவோம்

தேசியப் பட்டியல் விவகாரம்: உண்மைக்குப் புறம்பான  புரளிகள் வதந்திகளையிட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை என  முஸ்லிம் காங்கி...
31/08/2026

தேசியப் பட்டியல் விவகாரம்:

உண்மைக்குப் புறம்பான புரளிகள்

வதந்திகளையிட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில்,ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் பற்றி ஆராயப்பட்டதாகவும், அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு, விஷமத்தனமான வதந்திகள் பொறுப்பற்ற விதத்தில் சில சமூக வலைத்தளங்களாலும், தனிப்பட்ட நபர்களாலும்,பரப்பப்பட்டும், பகிரப்பட்டும் வருவதையிட்டு விசனம் தெரிவித்த கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவற்றிற்காக அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரஸ்தாப
உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வு,பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும்,கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அதில் பேசப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக,மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் சுயநல நோக்கோடு, அவ்வாறு சில சமூக வலைத்தளங்களாலும் ,தனி மனிதர்களாலும் புனையப்பட்டு, பகிரப்படும் புரளிகளையும்,வதந்திகளையும் அறவே நம்ப வேண்டாம் எனவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் சரியான முடிவு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான  பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏ...
26/07/2026

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த
“டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி" என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வான கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் இன்று (26) சம்மாந்துறையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையிலான இந் நிகழ்வில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

டெங்கு ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரஜையினதும் சமூகப் பொறுப்பாகும் என வலியுறுத்திய அவர், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே டெங்கு அற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

காலை 7.00 மணிக்கு சம்மாந்துறை தைக்காப்பள்ளிவாசல் அருகில் ஆரம்பமான இந் நிகழ்வில், டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்தனர்.

கிழக்கு மாகாணம் முழுவதிலும் தொடர்ச்சியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மக்கள் பணியில்  தன்னை முழுமையாக அர்ப்பனித்துக் கொண்டிருக்கும் மக்கள் சேவகன் சமூகப்பற்றாளர்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின...
29/05/2026

மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பனித்துக் கொண்டிருக்கும் மக்கள் சேவகன் சமூகப்பற்றாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திஹாரிய மத்திய குழு
ஊடகத்துறை செயலாளரும்
அத்தனக்கல பிரதேச சபையில் நடந்து முடிந்த தேர்தலில் பட்டியல் வேட்பாளராக போட்டியிட்டவருமான
றியாஸ் முஹமட் அவர்களின் அயராத முயற்சியினால்!

திஹாரிய மின்ஹாத் மாவத்தை அஸஹரியன் பள்ளி வாசலுக்கு முன்பாக ஏற்ப்பட்ட நீர் வழங்கள் வடிகாலமைப்பு சொந்தமான குழாய் நீர் கசிவினை

அத்தனக்கல பிரதேச உறுப்பினர் பாயிஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து அதற்குரிய கனரக வாகனங்களை வழங்கி உதவியமையினால்
பாரிய வீண் விரயம் தவிர்க்கப்பட்டதுடன்
பாதையில் பயணிக்கின்ற மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் தவிர்க்கப்பட்டதுடன்

பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருகின்ற மக்களுக்கு ஏற்ப்படவிருந்த சிரமங்களுக்கும் தீர்வு கிடைத்தன
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!

சலீம் மீரா சாஹிபு திஹாரிய

🔹 ஹஜ்ஜுப் பெருநாள் மனிதநேயம், தியாகம் மற்றும் நல்லிணக்கத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது..!- பாராளுமன்ற உறுப்பினர் கலா...
28/05/2026

🔹 ஹஜ்ஜுப் பெருநாள் மனிதநேயம், தியாகம் மற்றும் நல்லிணக்கத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது..!

- பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாறையும், இறை கட்டளைக்கு முழுமையான கட்டுப்பாட்டையும் நினைவூட்டும் புனித ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்), உலக முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக ஒற்றுமையையும் மனிதநேய பண்புகளையும் வலுப்படுத்தும் மகத்தான நாளாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட பெருநாள் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இத்தகைய புனித நாளில் இலங்கையிலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு தனது இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாகத்தின் உயர்ந்த தத்துவத்தையும், மனிதநேயத்தின் ஆழ்ந்த அர்த்தத்தையும் உலகுக்கு எடுத்துரைக்கும் இந்த புனித நாள், சமூக நல்லிணக்கம், இன ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதலை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.

எமது நாடு அரசியல் மற்றும் சமூக சவால்களை எதிர்நோக்கும் இக்காலகட்டத்தில், மக்கள் மத்தியில் அன்பு, கருணை மற்றும் ஒற்றுமை போன்ற பண்புகள் வலுப்பெற வேண்டும். இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டிய தருணமிது.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைத்து ஹாஜிமார்களின் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, நாட்டில் அமைதி, அபிவிருத்தி மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

__________________________
-- ஊடகப்பிரிவு

"ஈதுல் அழ்ஹா" பெருநாள் வாழ்த்து பலஸ்தீனம்,ஈரான்,லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின்  மக்கள்இஸ்ரேலினதும்,அமெரிக்காவினத...
28/05/2026

"ஈதுல் அழ்ஹா" பெருநாள் வாழ்த்து

பலஸ்தீனம்,ஈரான்,லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்
இஸ்ரேலினதும்,அமெரிக்காவினதும், அதன் நேச நாடுகளினதும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களினால் தொடர்ந்தும் இனப் படுகொலைகளுக்கும்,ஏனைய பாதிப்புகளுக்கும் உள்ளாகிவருகின்ற சூழ்நிலையில் அவர்களை மையப்படுத்தி இந்த "ஈதுல் அழ்ஹா" பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

இறை தூதர்களான இப்ராஹிம் (அலை ) இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தின் வலிமையை நினைவு கூரும் விதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் கடமையாக்கியுள்ள இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் புனித மக்கா நகரிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும், உலகெங்குமிருந்து பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி ஹஜ் கடமையிலும்,இதர வணக்கங்களிலும் ஈடுபடுகின்றனர்.நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல்) அவர்களின் மதீனா நகருக்கும் சென்று மஸ்ஜிதுன் நபவியில் அவர்கள் வணக்கங்களிலும் ஏனைய நற்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து 17 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் கூட, மக்கள் இன்னும் பிரச்சினைகளிலிருந்து முற்றாக விடுபடவில்லை.அத்துடன் நாட்டில் அண்மைக் காலமாக மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மக்கள் மத்தியில் அச்சமற்ற,பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதற்கும், இனங்களுக்கிடையில் சரியான புரிந்துணர்வு ஏற்பட்டு, சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக சகவாழ்வு வாழ்வதற்கும் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம்

ஈத் முபாரக் .

ரவூப் ஹக்கீம்,
தலைவர் ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,
பாராளுமன்ற உறுப்பினர்.

ලෝක ආර්ථිකයට බලපාන මැදපෙරදිග යුද්ධය හා ඉන් පීඩාවට පත් ජනතාවට සෞභාග්‍යයමත් සාමකාමී පරිසරයක් උදාවේවායි ප්‍රාර්ථනා කරමු!
යැයි ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී නීතිඥ රව්‍රෆ් හකීම් මහතා විසින් හජ් උත්සව දිනය නිමිත්තෙන් නිකුත් කරන ලද පණිවිඩයේ සඳහන් කර ඇත.

ඒ මහතාගේ " ඊදුල් අල්හා" හජ් උත්සව දින සැමරුම් පණිවිඩයේ වැඩි දුරටත් සඳහන් වනුයේ,

ලෝකවාසී සියලු ජාතීන්ට බලවත්සේ ආර්ථිකය අතින් අභියෝගයක් බවට පත්වී ඇති, ඇමෙරිකාව හා ඊශ්‍රායලය එක්ව සිදු කරමින් පවතින පලස්තීනය, ලෙබනනය සහ ඉරානය ඇතුළු මැදපෙරදිග කලාපයේ රටවල්වල අහිංසක ජනතාවට, මිලේච්ඡත්වීය ප්‍රහාර සහ එයින් මැද පෙරදිග රටවල් වල ඇතිවී තිබෙන යුද වාතාවරණය නිසා පීඩාවට පත් ජනතාවට සෞභාග්‍යයමත් සාමකාමී පරිසරයක් උදාවේවායි මෙම උතුම් හජ් උත්සව දිනයේ ප්‍රාර්ථනා කරමු !

ඉබ්‍රාහිම් සහ ඉස්මායිල් ( අලෛ) නම්, අල්ලාහ් දෙවියන් වහන්සේගේ වක්තෘවරයන් දෙපලගේ අධිෂ්ඨානශීලී ජීවිත චරිත සහ දෙවියන් වහන්සේ වෙනුවෙන් සිදු කරන ලද උත්තරීතර කැප කිරීම් සංකේතවත් කරන මෙම හජ් උත්සවය ලෝකවාසී ජනතාවටම ආශිර්වාදයක් වේවා යි පතමු!
ශ්‍රී ලංකාවේ පැවති කුරිරු යුද්ධයෙන් මිදී දාහත් වසරක් සම්පූර්ණ වූවද, ඉන් පීඩාවට පත් ජනතාවට සෑහීමට පත් වන අයුරින් විසඳුම් ළගා කර ගැනීමට නොහැකි වී තිබේ.
එවැනි වාතාවරණයක් තුළ රටවැසියන් අතර සමගිය හා සංහිදියාව උදාවීමට මේ උතුම් දිනය, අවස්ථාවක් කර ගනිමු .

රවුෆ් හකීම් පා. ම.
ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක .

Let us not forget those suffering in West Asia on this holy day of Eid ul Adha

— Rauff Hakeem

In his Eid ul Adha message, Leader, Sri Lanka Muslim Congress Rauff Hakeem stated that on this sacred day of Eid ul Adha, we should pray to Allah for the relief and liberation of Muslims living in countries such as Palestine, Iran, and Lebanon and others who continue to face brutal attacks, genocides, and various forms of oppression by Israel, the United States, and their allied nations.

In his Haj Eid greeting message, he further stated.Every year, millions of Muslims from across the world gather in the holy city of Makkah and its surrounding areas to perform Hajj — the fifth pillar of Islam in remembrance of the supreme sacrifices made by the Prophets Ibrahim (peace be upon him) and Ismail (PBUH). The Pilgrims also travel to Madinah, the sacred city wherein the Prophet Muhammad (PBUH) is buried, to perform acts of devotion and piety.

In Sri Lanka, although 17 years have passed since the end of the civil war, the population has yet to fully overcome its economic hardships. Moreover, there are signs that a deeper economic crisis may be imminent.

On this auspicious Eid day, let us pray for a peaceful and secure environment for the people, for better understanding among all ethnic communities, and for all communities to live in unity and harmony.

Eid Mubarak!

Rauff Hakeem MP
Leader, Sri Lanka Muslim Congress.

📢 2025 ஒதுக்கீட்டுச் சட்ட முற்பணக் கணக்கு எல்லைகளின் திருத்தத்திற்கு அரசாங்க நிதிச் குழுவின் அனுமதி!​2025 ஆம் ஆண்டுக்கான...
27/05/2026

📢 2025 ஒதுக்கீட்டுச் சட்ட முற்பணக் கணக்கு எல்லைகளின் திருத்தத்திற்கு அரசாங்க நிதிச் குழுவின் அனுமதி!

​2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய சில முற்பணக் கணக்கு எல்லைகளைத் திருத்துவதற்கான அனுமதி, நாடாளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் (COPF) வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிரி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, எம். கே. எம். அஸ்லம் ஆகியோரின் பங்கேற்புடனும் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது உரிய அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

​🔹 முக்கிய முடிவுகள் மற்றும் கலந்துரையாடல்கள்:

​2025 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைத் திருத்துவதற்காக வெளியிடப்பட்ட இலக்கம் 1 முதல் 44 வரையான கட்டளைகளை விரிவாக ஆராய்ந்த பின்னர் இக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதில் பின்வரும் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

​அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பண "பி" (B) கணக்குகள் (கட்டளை 1 - 36)
​கல்வி வெளியீட்டுத் திணைக்களம் (கட்டளை 37): புதிய பாடத்திட்ட தொகுதிகளின் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் செலவுகள் குறைந்தமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பாடத்திட்டங்களை உறுதிப்படுத்துவதிலும் அச்சிடலிலும் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என குழு வலியுறுத்தியது.

​இலங்கை கடற்படை (வெடிபொருட்கள் களஞ்சியம்) (கட்டளை 38)

​இலங்கை சுங்கம் (கைது செய்யப்பட்ட/அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள்) (கட்டளை 39)

​அரசாங்க கணக்குகள் திணைக்களம் (கட்டளை 40)

​விவசாயத் திணைக்களம் (பண்ணை பராமரிப்பு மற்றும் விதைப் பரிமாற்றம்) (கட்டளை 41)

​இலங்கை புகையிரதத் திணைக்களம் (கட்டளை 42): புகையிரத மேலதிக பாகங்களின் இருப்பு (Spare Inventory) திறமையற்ற முறையில் நிர்வகிக்கப்பட்டமை குறித்து குழு கவலை வெளியிட்டதுடன், முறையான இருப்பு மேலாண்மை குறித்த அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பரிந்துரைத்தது.

​அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் (கட்டளை 43 மற்றும் 44)

​நாட்டின் நிதி ஒழுக்கத்தையும், திணைக்களங்களின் வினைத்திறனான செயல்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த நிதிக்குழுவின் கூட்டமும் அதன் பரிந்துரைகளும் அமைந்துள்ளன.

கேரள அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 5 இடங்கள்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த...
21/05/2026

கேரள அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 5 இடங்கள்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து! 🤝✨

​தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு பதவியேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மாண்புமிகு வீ. டி. சதீசன் தலைமையிலான புதிய அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள மாநிலத் தலைவர் பானக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பி. கே. குஞ்ஞாலிக்குட்டி ஆகியோருக்கு அவர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

​அரும்பெரும் சாதனை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் வழிகாட்டலில், அண்மையில் நடந்த தேர்தல்களில் 'ஏணி' சின்னத்தில் போட்டியிட்டு:
​தமிழகத்தில்: 2 இடங்கள்
​கேரளாவில்: 22 இடங்கள்
என அமோக வெற்றி பெற்றிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை என மு.கா. தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

​புதிய அமைச்சர்கள்:
கேரள மாநிலத்தின் 20 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில், முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள:

​பி. கே. குஞ்ஞாலிக்குட்டி
​வழக்கறிஞர் எம். சம்சுதீன்
​கே. எம். ஷாஜி
​பி. கே. பஷீர்
​பி. இ. அப்துல் கபூர்
ஆகியோருக்கு தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

​தமிழகத்திலும் அங்கீகாரம்:

அதேபோல், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை இணைத்துக் கொள்ள, அக்கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையும் மு.கா. தலைவர் ஹக்கீம் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
​இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்களின் அரசியல் உறவையும், நேசத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது. 🇱🇰 🤝 🇮🇳

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனக்கல்ல பிரதேச சபை உறுப்பினர் தாவூத் மக்பூல் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அத்தனக்கல்...
09/05/2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனக்கல்ல பிரதேச சபை உறுப்பினர் தாவூத் மக்பூல் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அத்தனக்கல்ல பிரதேச சபையினால் திஹாரிய வாரன வீதிப் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

​வாரன வீதியில் ஜெயவர்த்தன மாவத்தை தொடக்கம் லாபிர் ஹாஜியார் மாவத்தை வரையிலான வடிகான்கள் நீண்டகாலமாக கழிவுகள், ஊத்தைகள் மற்றும் மணல் படிவுகளால் நிரம்பிக் காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

​இந்தச் சூழலில், பிரதேச சபை உறுப்பினர் மக்பூல் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, தவிசாளரின் உத்தரவின் பேரில் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடன் வடிகான்கள் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டன.

​இப்பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஊடகத்துறைச் செயலாளரும், அத்தனக்கல்ல பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் வேட்பாளருமான றியாஸ் முஹம்மட் அவர்கள் மிகவும் உறுதுணையாகச் செயற்பட்டார். தவிசாளர் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு, தேவையான கனரக வாகனங்கள் மற்றும் ஆளணி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் திறம்படச் செயற்பட்டதாகப் பாராட்டப்பட்டது.

​இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அப்பகுதி கடை உரிமையாளர்கள், மரக்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், உறுப்பினர் மக்பூல் மற்றும் றியாஸ் முஹம்மட் ஆகியோரின் மக்கள் பணியினையும் வெகுவாகப் பாராட்டினர்.

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தனகல்ல பிரதேச சபையில் தராசு சின்னத்தில் போட்டியிட்டு இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source : சலீம் மீரா சாஹிபு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திஹாரிய

மத்திய குழு ஊடகப்பிரிவு

🔸 காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!கா...
24/03/2026

🔸 காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை" ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

-- ஊடகப்பிரிவு

Address

Gampaha

Alerts

Be the first to know and let us send you an email when SLMC Youth Congress - Gampaha District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share