சசி தமிழா

சசி தமிழா சமூகம்

🕉️ *கடவுள் ஏன் மீன், ஆமை, பன்றி போன்ற வடிவங்களை எடுத்தார்?*– அவதாரங்களுக்குள் மறைந்துள்ள உண்மை செய்தி         ✳️✳️✳️✳️✳️...
08/01/2026

🕉️ *கடவுள் ஏன் மீன், ஆமை, பன்றி போன்ற வடிவங்களை எடுத்தார்?*
– அவதாரங்களுக்குள் மறைந்துள்ள உண்மை செய்தி
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

✨ இந்து தத்துவத்தின் அடிப்படை உண்மை ஒன்று —
கடவுள் சொர்க்கத்திலும் கோயில்களிலும் மட்டுமல்ல; இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளார்.

அப்படியிருக்க, ஒரு சர்வவல்லமை படைத்த தெய்வம்
மீன், ஆமை, பன்றி போன்ற வடிவங்களை ஏன் எடுக்க வேண்டும்?

இதற்கான பதில் —
👉 இயற்கையே தெய்வம் என்பதையும்
👉 ஒவ்வொரு உயிரினமும் மதிப்புக்குரியது என்பதையும்
மனிதனுக்கு உணர்த்துவதற்காகத்தான்.

🐟 மச்ச அவதாரம் – இயற்கையின் எச்சரிக்கை

விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்சம் (மீன்).
வரவிருக்கும் பிரளயத்தை முன்னரே உணர்ந்து,
முனிவர்கள், விதைகள், உயிரினங்களைப் பாதுகாத்து
உயிர்ச்சுழற்சியை காப்பாற்றும் அவதாரம்.

மீன் என்பது
🌊 நீரின் ஞானம்
🌊 சுற்றுச்சூழல் எச்சரிக்கை
என்பதற்கான சின்னம்.

👉 மனிதன் தர்மத்திலிருந்து விலகும்போது,
இயற்கை பதிலடி கொடுக்கும் என்பதை
மச்ச அவதாரம் நினைவூட்டுகிறது.

🐢 கூர்ம அவதாரம் – பொறுமையின் தெய்வம்

பாற்கடல் கடையும் போது,
மந்தார மலையைத் தாங்க
விஷ்ணு எடுத்த வடிவம் — ஆமை (கூர்மம்).

ஆமை குறிக்கும் பண்புகள்:

நிலைத்தன்மை

பொறுமை

அமைதியான வலிமை

👉 வேகமாக ஓடும் உலகில்,
இயற்கையின் மெதுவான தாளத்தையும்
நாம் மதிக்க வேண்டும் என்பதே கூர்மத்தின் செய்தி.

🐗 வராக அவதாரம் – பூமியின் பாதுகாவலன்

பூமாதேவி வெள்ளத்தில் மூழ்கியபோது,
ஒரு காட்டுப் பன்றி (வராகம்) வடிவில்
பூமியை மீட்டெடுத்தான் விஷ்ணு.

இங்கு ஒரு ஆழமான செய்தி உள்ளது:
👉 “அசுத்தம்” என நாம் கருதும் உயிரினம்கூட
பிரபஞ்சத்தை காக்கும் தெய்வீக சக்தியாக மாறலாம்.

வராக அவதாரம் நினைவூட்டுவது:

மண் பாதுகாப்பு

நில வள பாதுகாப்பு

மனிதனால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க வேண்டிய அவசியம்

🦁 நரசிம்ம அவதாரம் – சக்திக்கும் வரம்பு உண்டு

பாதி மனிதன் – பாதி சிங்கம்
நரசிம்மர் மனிதனின் இரட்டை தன்மையை பிரதிபலிக்கிறார்.

👉 நாம் அறிவால் வழிநடத்தப்படுகிறோமா?
👉 அல்லது அகந்தை ஆட்கொள்ளப்பட்ட மிருகங்களா?

அநீதிக்கு எதிரான கோபம் – தர்மத்துக்கானது.
ஆனால், சக்தி அகந்தையாய் மாறும்போது
அது அழிவைத் தரும் என்பதே நரசிம்மரின் எச்சரிக்கை.

🌍 இறுதி உண்மை

இந்து புராணங்களில்:

ஆறுகள் — தெய்வங்கள்

மலைகள் — வலிமையின் உருவங்கள்

விலங்குகள் — ஞானத்தின் வடிவங்கள்

இன்றைய காலத்தில்,
நாம் இயற்கையை வணிகமாக பார்க்கிறோம்.
ஆனால், இந்த அவதாரக் கதைகள்
👉 இயற்கையை மீண்டும் தெய்வமாக பார்க்கச் சொல்கின்றன.

இயற்கை எப்போதும் தெய்வீகமானதே.
அதை மதிக்கத் தொடங்கினால்,
நாமும் காக்கப்படுவோம்.

 தற்கொலை செய்து கொண்ட சகோதரி ஹம்சிகாவுக்கன நீதி கோரி மக்கள் போராட்டம்
19/05/2025


தற்கொலை செய்து கொண்ட சகோதரி ஹம்சிகாவுக்கன நீதி கோரி மக்கள் போராட்டம்

11/05/2025

அன்னையர் தினம் அம்மா 💕❤️உயிர் ஒன்று பிறக்கதாய்யே நீ துணை இருக்கஉருவம் தெரியமாலே ரசிக்கஉலகமே நான் என நினைக்காஉன் அன்பில் ...
11/05/2025

அன்னையர் தினம் அம்மா 💕❤️
உயிர் ஒன்று பிறக்க

தாய்யே நீ துணை இருக்க

உருவம் தெரியமாலே ரசிக்க

உலகமே நான் என நினைக்கா

உன் அன்பில் செதுக்கா

இரத்ததை பால் ஆக கொடுக்க

தாயே வரமாக நினைக்க

தாய் அன்பில் இந்த உலகம் இயக்க

வாழ்க்கை முழுவதும் சுமக்க

#இனிய_அன்னையர்_தின_வாழ்த்துக்கள்

  කොටහේනේ පැත්තට පොඩ්ඩක් ඇවිල්ල යන්න
09/05/2025

කොටහේනේ පැත්තට පොඩ්ඩක් ඇවිල්ල යන්න

09/05/2025

Opppsite of zahira college Puttalam

08/05/2025
 #கண்டன  #ஆர்பாட்டம்
06/05/2025

#கண்டன #ஆர்பாட்டம்

#கண்டன #ஆர்ப்பாட்டம்

   #கண்டன  #ஆர்ப்பாட்டம்
06/05/2025

#கண்டன #ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் – மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை!கொழும்பில் உள்ள...
03/05/2025

கொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் – மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை!

கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்று வந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞசேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவியின் தற்கொலைக்கு பின்னால் உள்ள விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியரை காப்பாற்றியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். பாடசாலை நிர்வாகம் குறித்த ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றும் விடுதலையாகி வந்துள்ளார்.

மாணவியை பெற்றோர் கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல தமிழ் பாடசாலைக்கு மாற்றியுள்ளனர். இந்தப் பாடசாலையில் மாணவியின் வகுப்பாசிரியராக இருந்தவர் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி ஆசிரியரின் நண்பராகும்.

தனது நண்பருக்கு மாணவி குறித்து தவறாக குறியுள்ள விடுதலையாகி குறித்த ஆசிரியர், மாணவி குறித்து பொய்யான தகவல்களையும் தெரிவித்துள்ளார். குறித்த ஆசிரிய நண்பர் மாணவி தொடர்பில் ஏனைய வகுப்பு மாணவர்களிடம் தவறாக கூறியுள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி ஐந்தாம் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழு பொறுப்பும் பாடசாலை சமூகமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறித்த பாடசாலையில் இது தொடர்பில் பல்வேறு மாணவர்களுக்கும் பாதிப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.

உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு பாரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோருகின்றனர்.copy post

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கவனத்திற்கு பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுங்கள்.சீர...
03/08/2023

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் கவனத்திற்கு பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுங்கள்.சீருடை, பாதனி இல்லை என்று துரத்தி விடாதீர்கள்.

காரணம் சாப்பாட்டிற்கே தொழில் செய்ய முடியாது.பொருற்களின் விலை அதிகம்.பணம் உள்ளவர்கள் பாதனிவாங்குவார்கள்.மற்றவர்கள் என்ன செய்வது?
அரசாங்கமே பாதனியை கொடுக்காமல் கைவிட்டது பிள்ளைகளுக்கு ஏமாற்றமே..
எனவே பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் வீட்டு சூழ்நிலை அறிந்து பிள்ளைகலோடு பேசுங்கள்.

ஒரு சோடி பாதனியின் குறைந்த விலை 4500 ரூபா.5 பிள்ளைக்கும் பாதனிக்காக 5×4500= 22500. இதைவிட கொப்பி பேனை மற்றும் புத்தகப் பை இன் விலை 4000 கற்றல் உபகரணங்களின் விலையை மொத்தமாகக் கூட்டினால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேன்டாம் என மனம் நாடுகிரது.

தொடர விரும்ப வில்லை வேதனையாக இருக்கு நன்றி Copy

Address

Colombo 15
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when சசி தமிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category