கே ஏ சுப்பிரமணியம் நூலகம்

கே ஏ சுப்பிரமணியம் நூலகம் K.A. Subramaniam SATHIAMANAI Library
சத்தியமனை நூலகம் කේ.ඒ. සුබ්‍රමනියම් සත්‍යමනායි පුස්තකාලය Registration Number VW/FIN/BR/1/38/2022

23/07/2025
21/07/2025

சிங்கையிலே கண்ட செம்மொழி
————————————————

தாய்மொழிமேல் கொண்ட பற்றால்
வழிதேடிச் சென்றேன் ஒருமாலை
கவிமாலை மன்றத்தை

மன்றத்தில் ஒரு நட்சத்திரம்
பளிச்செனத் தொட்டது நெஞ்சத்தை
உள்ளத்தில் பூரிப்பு உதட்டிலே சிரிப்பு
தாய் நாட்டுத் தாரகையென்று
வளம்கொண்ட மொழி வாயில் இருந்து
வரும்போதே கணிப்பெடுத்தேன்
அன்று ஆண்டு இரண்டாயிரத்துப்
பதின் ஒன்று தொடங்கி…..
தொடர்ந்த எங்கள் பாசப்பிணைப்பு
எனக்கொரு தாயாக

நல்ல வசதி கொண்ட அகம்
குணத்திலே கோடீஸ்வரி
தனக்கென வாழாமல்
வெளிச்சமான மெழுகுவர்த்தி

கணவன்மேல் கொண்ட பற்றும்
பிள்ளைகள்மேல் கொட்டுப் பாசமும்
புலப்பட்டுக் கொண்டே இருக்கும்
பேச்சிலே..

புண்படப் பேசத் தெரியா
வெண்பட்டு மலர்
கண்பட்டுவிட்டால் கனகதைகள் பேசும்
அன்பை அளிப்பதில் அட்சயபாத்திரம்
கலைக்கும் கல்விக்கும் அபிநய சரஸ்வதி
இப்படியாக..
அடுக்கிக்கொண்டே போகலாம்
அப்பிக்கொண்ட கரு மையால்

எங்கள் ஊர்தேடி எங்களின் உறவுதேடியும்
வந்தார் பெற்ற மகளோடு
பெறப்பட்ட அன்பால் புறப்பட்டு
எங்கள் உபசரிப்பை என்றுமே மறவாமல்
அன்றென்று பேசுவார் நன்றென்று
முற்பிறப்பின் பயனாக இப்பிறப்பில்
நான் கண்ட தாயான என் வள்ளியம்மை

கடைசி நேரத்தில் அம்மாவைக்
கண்டுகொள்ளவில்லை என்ற கவலை
இருந்தாலும்..
முன்பு கண்டபோதெல்லாம் கலந்துகொண்ட
அன்பையெண்ணி ஆறினாலும்
வடுவாக இருக்கிறது இவர் மறைவு
என்னில் உயிர் உள்ளவரை அழியாது
தங்கம்மாவின் நினைவு❤️

வணங்குகிறேன் அம்மா
பிஷான் கலா
அன்போடு❤️ Photo taken on 7 October 2018 in Singapore.

19/07/2025

என்னை ஒரே வரியில் எளிதாகச் சொல்லிவிட

அன்னை தெரசா அம்மையார் போல் - நான்

நோயில் உழன்ற நொடித்தவரைக் காத்தேனா?

பாயில் விழுந்தோரைப் பராமரித்துப் பார்த்தேனா?

அன்புடன் தாய் மொழியும் அயராத கைவினையும்
என் இனிய மாணவிகள் தம்காலில் நிற்பதற்கு
தாய்போல் இருந்தவரின் தரத்தை உயர்த்திவிட்ட
காய்தல் உவத்தில்லாக் கடமையுணர் வுள்ளவள்நான்.

அம்மம்மா தன்னுடைய அகவை எழுபதிலும்
தம்மால் முடிந்தவரை தமிழ்கேட்க வருவதைப்பார்
என்றே இளைஞர்கள் எழுச்சியுடன் ஓடிவர
நன்றே அவர்கட்கும் நயமான கவிதைவரும்.

அமிழ்தென காதினிலே அருவியாய்ப் பொழிவதனால்
தமிழ்க்கவிதை கேட்கையிலே தலைவலியும் தெரிவதில்லை....

"நான்" - வள்ளியம்மை சுப்பிரமணியம்
Thanks to "Tamilmurasu".Singapore news paper published on Sunday, 03/08/2008

சிங்கப்பூரின் குடியரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்தினம் கைகளினால் வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு விருது... இவர் மூத்த அமைச்சராக 2008 ஆண்டு. ( Mr. President Tharman Shanmugaratnam in year 2008 ) மத்தியில் டாக்டர்.என். ஆர்.கோவிந்தன், தலைவர், மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

20/06/2025

Address

Sathiamanai
Chulipuram
40230

Alerts

Be the first to know and let us send you an email when கே ஏ சுப்பிரமணியம் நூலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category