Chavakachcheri City

Chavakachcheri City Chavakachcheri is a large town in the Jaffna peninsula of Jaffna District, Northern Province, Sri La

Chavakachcheri is a large town in the Jaffna peninsula of Jaffna District, Northern Province, Sri Lanka. It may have Javanese origins, as the name "Chaavaka+cheari" literally means Javanese settlement (there are also some references to a Javanese fort in northern Sri Lanka).

16/07/2026
23/05/2026

ஒரு கதை படிப்போமா

நான் அஸ்வினி🙋‍♀️. கொழும்பில் கொட்டகேனாவில் தான் எனது அபார்ட்மெண்ட் உள்ளது. இப்பொழுது பம்பலப்பிட்டியில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால், பம்பலப்பிட்டியில் புகையிரத நிலைய வீதியில் உள்ள எனது நண்பியின் மாடி வீட்டில் தான் தங்கியிருக்கிறேன் 🏡. நானும் பிராமணப்பெண்; எனது நண்பி அபிநயாவும் பிராமணப்பெண் என்பதால் எங்கள் வீட்டிலும் நான் அபிநயா வீட்டில் தங்குவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை 🤝.

பிராமணப்பெண் என்றால் கதைகளில் வருகிற பிராமணப்பெண் மாதிரி இருக்க மாட்டேன். நான் கொஞ்சம் வாயாடி! 😜

உண்மையைச் சொல்லப்போனால் இங்கு வந்த பிறகு தான் நான் சுதந்திரமாக உணர்கிறேன் 🕊️. நண்பியின் பெற்றோர் வெளிநாடு என்பதால் எங்கள் இருவருக்கும் அதிக அளவில் சுதந்திரம் கிடைத்தது. எனக்கு காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை மதியம் 3 மணிக்கெல்லாம் முடிந்து விடும் 🕒. எனது நண்பி வேலை செய்யும் காப்புறுதி நிறுவனத்திலும் அதே நேரத்தில் தான் அவளுக்கும் வேலை முடியும். இதனால் இரவு 8, 9 மணி வரைக்கும் நன்றாக நகரைச் சுற்றுவோம் 🌆. எப்படியும் பீச் பார்க் என்று சென்று சென்று நன்றாகச் செலவழிப்போம், இதனால் எடுக்கும் சம்பளம் எதுவும் கையில் தங்குவதில்லை 💸.

இப்படி வாழ்க்கை மிக அழகாகப் போய்க்கொண்டிருந்த போது தான் எனக்கு அவனின் அறிமுகம் கிடைத்தது ✨. நான் எனது நண்பியின் மாடி வீட்டில் மாடியில் உள்ள வலது பக்க அறையொன்றில் தான் தங்கியுள்ளேன், அந்த அறையின் ஜன்னலைத் திறந்தால் கடற்கரைக் காற்றை நன்றாக உணர முடியும் 🌊. அதே சமயம் பக்கத்துவீடும் மாடி வீடு தான். அந்த பக்கத்துவீடு மட்டும் இல்லாதிருந்தால் கடற்காற்று மொத்தமும் தடையின்றி ஜன்னல் வழியாக என்னிடமே வந்து சேர்ந்திருக்கும்.
பக்கத்துவீடு ஒரு வித்தியாசமான மாடி வீடு அதாவது மிக அகலமான குடியிருப்பாக அது இருந்தது 🏢. அந்த வீட்டில் நிறைய அறைகள் உள்ளன என்பது வெளியில் இருந்து பார்த்தாலே தெரிந்து விடும். அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து கொண்டு அந்த வீட்டின் அறைகளை பலருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். பெரும்பாலும் தமிழ் ஆண்கள் மட்டுமே அங்கு வாடகைக்கு இருக்கிறார்கள். அந்த வீட்டின் முன்புறத்திலேயே
📋 "வேலை செய்யும் ஆண்களுக்கு மட்டும் அறைகள் வாடகைக்கு கொடுக்கப்படும்." என்று ஒரு பெரிய பலகையில் மும்மொழிகளிலும் எழுதி உள்ளார்கள்.

சில சமயங்களில் பார்க் பீச் என்று செல்லும் மனநிலை இல்லை என்றால் வேலை முடிந்தவுடன் அறைக்கு வந்து ஜன்னலைத் திறந்து விடுவேன். ஜன்னல் வழியாக வரும் காற்று எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் 🍃. அப்படி ஒருநாள் ஜன்னலைத் திறக்கும் போது எனக்கு எதிர்த்திசையில் இருந்த பக்கத்துவீட்டு அறை ஜன்னலும் திறந்து இருந்தது. இரண்டு அறை ஜன்னலுக்கும் இடையில் வெறும் ஐந்து மீட்டர் இடைவெளி தான் இருந்தது 📏.

திடீரென்று அந்த ஜன்னல் வழியாக ஒரு இளைஞன் தெரிந்தான் 👀. நடுத்தர உயரமும் மாநிறமுமாக அழகான கட்டுமஸ்தான உடல்வாகு அவனுக்கு. கையில் சிகரெட் வைத்து ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இடையிடையே சிகரெட்டை ஊதித் தள்ளினான் 🚬. காற்று எனது பக்கம் வீசுவதால் அந்த சிகரெட் புகை நேரடியாக என்னைத் தாக்க இருமல் வந்துவிட்டது 😷.

அந்தச் சத்தம் கேட்டுத் தான் அவன் என்னைப் பார்த்தான். பார்த்தவுடன் சிகரெட்டை ஜன்னலில் இருந்து கீழே போட்டு விட்டான் ஆனால் என்னைப் பார்த்து வேறெந்த முகபாவனையையும் அவன் காட்டவில்லை 😐.

என்னவென்றே தெரியவில்லை ஆனால் அவனைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது 💘. ஏதோவொரு ஈர்ப்பு அவன்மேல் ஏற்பட்டது. இதனால் அடுத்தநாளும் வேலை முடிந்தவுடன் நேரடியாக அறைக்கே வந்துவிட்டேன். அபிநயாவிடம் தலைவலி என்று ஏனோ பொய் சொல்லி விட்டேன் 🤫.

ஜன்னலைத் திறந்து விட்டு காத்திருந்தேன் ⏱️. சரியாக நான்கரை மணிக்கு (4:30 PM) தான் அவன் ஜன்னலைத் திறந்தான். நேற்றுப் போலவே ஏதேதோ சிந்தித்தான் ஆனால் கையில் சிகரெட்டுக்கு பதிலாக இம்முறை பென்சில் வைத்து இருந்தான் ✏️. என்னைப் பார்த்தான் ஆனால் அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. இதே வேறு ஆண்கள் என்றால் ஆகக் குறைந்தது புன்முறுவல் சரி செய்திருப்பார்கள். சரியாக ஆறரை மணிக்கு (6:30 PM) ஜன்னலை மூடி விட்டான்.

எனக்குத் தெரிந்து இவன் பல காலமாக அந்த நேரத்தில் தான் ஜன்னலை திறந்து சிந்திப்பான் போல 🤔. நான் நகரைச் சுற்றி விட்டு இரவு 8, 9 மணிக்கு வருவதால் இவ்வளவு காலமும் அவனைப் பார்க்க முடியவில்லை.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவன் சிலவேளைகளில் சீக்கிரமாக ஜன்னலைத் திறக்க வாய்ப்பு உள்ளது என்று முதன்முதலாக ஞாயிற்றுக்கிழமை அன்று எங்கேயும் செல்லாமல் அறையிலேயே காத்திருந்தேன் 🛋️. ஆனால் மதியம் ஆகியும் அவன் ஜன்னலைத் திறக்கவே இல்லை. அபிநயா எனக்கு இன்னும் தலைவலி சரியாகவில்லை என்று நினைத்து அவளே அமிர்தா உணவகத்தில் சாப்பாடு வாங்கி வந்து தந்தாள் 🍲. வழமையாக நாங்கள் சரஸ்வதி லாட்ஜ் இல் தான் சாப்பிடுவோம் ஆனால் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மட்டும் அமிர்தா உணவகச் சாப்பாடு தான் எங்களுக்கு அமிர்தமாகத் தெரியும்.

மதியம் சாப்பிட்டு விட்டுத் தூங்கி விட்டேன் 😴. திடீரென்று நான் 4:25க்கு வைத்த அலாரம் அடிக்கவே எழுந்து கொண்டேன் ⏰. சொல்லி வைத்தது போல் அவன் நாலரைக்குத் தான் ஜன்னலைத் திறந்தான். இவன் என்ன ரோபாவா என்று கூட எனக்குச் சந்தேகம் வந்தது ஏனென்றால் நான்கரைக்கு ஒரு நிமிடம் கூட முந்தவும் இல்லை; பிந்தவும் இல்லை. சரியாக நான்கரைக்குத் தான் ஜன்னலைத் திறக்கிறான்!

எப்படியும் அவன் வழமை போல தான் செய்வான் எனத் தெரிந்து நானே அவன் கவனத்தை என்பக்கம் திருப்ப முயற்சி செய்தேன்.
* முதலில் செருமினேன்... 🤭
* பின்பு இருமினேன்... 🤧
* ம்கூம்! அவன் என்னைப் பார்க்கவே இல்லை.
“நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!” என்று யோசிக்கும் போது என்னை அறியாமலே, நான் திட்டமிடாமலேயே திடீரென்று தும்மல் வர தும்மியே விட்டேன்! 🤧💥

அந்த தும்மல் சத்தத்தால் அவன் என்பக்கம் திரும்பும் சமயத்தில் நான் அவனைப் பார்த்துச் சிரித்துக் கையசைத்தேன் 👋😊. ஆனால் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு இல்லையில்லை முகத்தை சுழித்தவாறே மறுபக்கம் திரும்பி விட்டான் 😒. ஆனால் இம்முறை அவன் என்னைப் பார்த்து முகம் சுழித்ததே எனக்குத் திருப்தி தான் ஏனென்றால் முகம் சுழிக்கும் ரோபா இலங்கையில் இல்லை என்பது எனக்குத் தெரியும் ❌🤖. கூடிய விரைவில் அவனை என்னைப் பார்த்துச் சிரிக்கவோ பேசவோ வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆறரைக்கு அவன் ஜன்னலை மூடிய பிறகு அந்த ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலித்த எனது பிம்பத்தைப் பார்த்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது; ஏன் அவன் என்னைப் பார்த்து முகம் சுழித்தான் என்று 🤦‍♀️. ஆம்! ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், வெளியில் எங்கும் செல்லவில்லை என்பதாலும் நான் நைட் ட்ரெஸ் (Night Dress) மட்டுமே அணிந்திருந்தேன் 👚.

இந்தக் காலத்தில், அதுவும் கொழும்பில் இப்படி ஒரு கண்ணியமான ஆணா என்று வியந்து போனேன்! ✨

நான் இந்தச் சேட்டை எல்லாம் செய்வது தெரியாமல் எனது நண்பி அபிநயா என்ற அப்பாவி ஜீவன் எனக்கு இரவு உணவாக இடியாப்ப பார்சல் கட்டிவந்து தந்தாள் 🍛. பாசக்கார நண்பி தான்! ❤️

அடுத்தநாள் வேலை முடிந்தவுடன் அபிநயாவிடம் - நாங்கள் இனிமேல் 6:30க்கே வெளியில் செல்வோம்; ஏனென்றால் அதுதான் ரம்மியமான சூழல் என்றும் பகல் போல வெயில்கொடுமை இல்லை - என்றும் மழுப்பி அவளை Brain wash செய்து விட்டு எனது அறைக்கு வந்துவிட்டேன் 🧠🧼.

நான் ஏன் அப்படி செய்கிறேன், எதற்காக அபிநயாவிடம் உண்மையை மறைக்கிறேன், எதற்காக அந்த அந்நிய ஆடவனை தினமும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எனக்குத் தெரியாமலேயே எனது மனம் அவனைக் காதலிக்கிறதா? 💘

அவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ தெரியவில்லை அதனால் நான் ஜன்னல் அருகில் இரண்டு சிறிய அழகுச் செடிகளை வைத்து விட்டேன் 🪴. அப்பொழுது தான் நான் அந்தச் செடிகளை பராமரிக்கவும், அதற்கு காற்று மற்றும் ஒளி வேண்டித் தான் ஜன்னலைத் திறந்து வைக்கிறேன் என்று அவன் நினைப்பான். இல்லையென்றால் அவனுக்காகத் தான் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறேன் என்று கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்தால் தான் என்ன? அதுதானே உண்மை! 🥰

இம்முறை ஒரு பெரிய A3 கடதாசித் தாளில் “I'm Aswini” என்று ஆங்கிலத்தில் எழுதி 🗒️✍️ (அவன் தமிழா சிங்களமா என்று தெரியாததால்) அவன் ஜன்னலை திறக்கும் போது அந்தக் கடதாசியை தூக்கிக் காட்டி ஹலோ என்றேன் 👋. அவன் பார்த்தான் ஆனால் அவன் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லை 😐.
எனக்குக் கோபம் வந்தது 😡. ஒரு பெண் நான்- அவனிடம் வெட்கம் விட்டு பழகுவதற்கு முயற்சி செய்யும் போது அவனுக்கு என்னவாம்? இல்லையென்றால் என்னிடம் ஏதும் குறைதான் உள்ளதா? வந்த கோபத்திற்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை... இல்லையில்லை அவனை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய வேண்டும் போல இருந்தது! 👺

நான் இவ்வளவு முயற்சி செய்தும் அவன் என்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் எனக்கு அழுகை அழுகையாக வந்தது 😭. பெயர் எழுதி வைத்திருந்த கடதாசியை கசக்கி கீழே போட்டு விட்டு ஜன்னலை மூடாமலேயே கட்டிலில் குப்புறப் படுத்து அழத் தொடங்கினேன்.

சடாரென்று ஜன்னல் மூடும் சத்தம் கேட்டது. நான் அழுவதைப் பார்த்து விட்டானோ தெரியவில்லை 6:15க்கு எல்லாம் ஜன்னலை மூடி விட்டான் ⏱️.

அடுத்தநாள் நான் ஜன்னலைத் திறக்கவேயில்லை ❌. அதற்கு அடுத்தநாள் காலையில் வேலைக்கு புறப்படும் முன் பத்து நிமிடங்கள் காற்றுக்காக ஜன்னலை திறந்து பார்த்தேன். அவனது ஜன்னலில் சிவப்பு மையினால்
🟥 “I'm Anwar.. I'm Sorry I hurt you.”என்று உட்பகுதியில் திசைமாற்றி எழுதி இருந்தான். அதனால் வெளிப்பக்கமாக எனக்கு அந்த வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்தன 📝✨. எனக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் துள்ளிக் குதித்தேன் 💃. வேலை செய்யும் இடத்தில் வேலையில் கவனம் போகவில்லை, எப்பொழுது அறைக்குச் செல்வேன்; எப்பொழுது அவனைப் பார்ப்பேன் என்ற மனநிலையே மேலோங்கி இருந்தது.

வேலை முடிந்தவுடன் அறைக்கு வந்து ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அவனும் அதிசயமாக நான்கு மணிக்கே ஜன்னலைத் திறந்து விட்டான் 🕓. இம்முறை அவன் என்னைப் பார்த்துச் சிரிப்புப் பூக்களை வீசினான் 😁. நான் கடதாசியில் எனது வாட்ஸ்அப் இலக்கத்தை எழுதி அவனுக்குக் காட்டினேன் 📲. அவனும் கையில் இருந்த பென்சிலால் அதைக் குறித்துக் கொண்டான்.

இப்படியே இரண்டு மாதங்கள் அவனுடன் கடந்து போனது 🗓️. ஆனால் இருவரும் ஒருநாள் கூட வெளியில் சந்தித்தது இல்லை. நான் தான் அவனிடம் முதலில் கேட்டேன்:
💬 அஸ்வினி: "வெளியே எங்கு சரி செல்வோமா? இரண்டு மாதங்களாக ஜன்னல் வழியாகவே பார்த்துக்கொண்டு இருக்கிறோம், வாட்ஸ்அப் வழியாக மட்டுமே உரையாடுகிறோம்."
💬 அன்வர்: "உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்றால் நாளையே வெளியே செல்வோம் அஸ்வினி. என்ன இருந்தாலும் நான் கிறிஸ்டியன் நீங்கள் பிராமின். அது இருக்கட்டும். நான் வெளியில உங்களோட சாப்பிட வந்தால் சைவம் சாப்பிட மாட்டேன். எனக்கு Beef கறி தான் பிடிக்கும்."
💬 அஸ்வினி: "ஐயே! எனக்கு குமட்டுகிறது 🤢. என்னை விடவும் Beef கறி தான் பிடிக்குமா?"
💬 அன்வர்: "ஆம்! அதிலென்ன சந்தேகம் 😜"
💬 அஸ்வினி: 😗 "சரி நான் Beef கறி வாங்கித் தருகிறேன். நாளை இருவரும் வெளியில் செல்வோம். நான் எனது நண்பி அபிநயாவிடமும் உங்களை நான் காதலிப்பது பற்றி நாளையே சொல்லி விடுகிறேன்."
💬 அன்வர்: "Beef கறி சாப்பிட்டு நிறைய காலம் ஆச்சுது அஸ்வினி. நீங்கள் எனக்கு Beef கறி வாங்கித் தந்தாலே எனக்குத் திருப்தி. Beef கறி சாப்பிடாமல் ஒரு வருசமா அலைஞ்சு கொண்டு இருக்கிறன்."
💬 அஸ்வினி: "சரி சரி நான் வாங்கித் தாறன். ஏன் நீங்கள் ஒரு வருசமா Beef சாப்பிடல?"
💬 அன்வர்: "அதை கேக்க வேண்டாம் அஸ்வினி. நான் பாவம். சரி எனக்கு தூக்கம் வருது குட் நைட் 😴"
💬 அஸ்வினி: "குட் நைட் அன்வர் செல்லம் ❤️"
இவ்வாறு எங்கள் வாட்ஸ்அப் உரையாடல் முடிந்தது.

அன்வர் நிறைய பத்திரிகை நிறுவனங்களிலும், பதிப்பகங்களிலும் ஓவியனாகவும், கேலிச் சித்திரங்கள் உருவாக்குபவனாகவும் பணி புரிகிறான் 🎨✍️. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே அதிகம் சிந்தித்துக் கொண்டும் கையில் சிகரெட் அல்லது பென்சில் வைத்துக் கொண்டும் திரிந்திருக்கிறான்.

உண்மையினை சொல்லப் போனால் அவனொரு குழந்தை தான் 👶. வேறு யாராவது காதலியுடன் வெளியில் வர வேண்டும் என்றால் "Beef கறி வாங்கித் தருவீர்கள் என்றால் தான் வருவேன்" என்று சொல்வார்களா? அந்தக் குழந்தைத் தனமான பேச்சு தான் அவனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே 🥰.

பார்த்தீர்களா ஆரம்பத்தில் அவனொரு ரோபோ அல்லது சைக்கோ என்று தவறாக நினைத்து விட்டோம். பழகப் பழகத் தான் தெரிந்தது அவனொரு அப்பழுக்கற்ற மாசற்ற ஜீவன் என்று 🌟. அவன் எனக்காக ஓவியங்கள் சில வரைந்து வைத்துள்ளானாம். கடைசி நேரத்தில் தான் அதை எனக்குக் காட்டுவானாம். பார்த்தீர்களா அவனது குறும்புத்தனத்தை! 😉

விடிந்ததும் முதலில் அன்வர் பற்றி அபிநயாவிடம் சொல்லி இவ்வளவு நாள் அவளிடம் இதுபற்றி சொல்லாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எப்படியும் இந்த விடயம் எனது வீட்டில் தெரியும் போது சில பிரச்சனைகள் ஏற்படத்தான் போகிறது ஆனால் பரவாயில்லை. அன்வருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது ஏனென்றால் அவனொரு அநாதை 😔. ஐயையோ! அநாதை என்றா சொன்னேன். அவனுக்கு தான் நான் இருக்கிறேனே! அவன் எனது குழந்தை 👩‍👦.

உண்மையைச் சொல்லப்போனால் நான் அன்வரின் குரலை இதுவரைக்கும் கேட்கவில்லை 🔇. வாட்ஸ்அப்பில் இந்த இரண்டு மாதங்களாக chattingஇல் மட்டும் தான் உரையாடிக் கொண்டிருக்கிறோம். அவன் அவனது அறையில் இருந்து ஜன்னலைத் திறந்து விட்டு 'அஸ்வினி' என்று சிறிதாக அழைத்தால் கூட எனக்குக் கேட்டு விடும் ஏனென்றால் இரண்டு ஜன்னலுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் இடைவெளி தான். ஆனால் நாங்கள் அப்படிப் பேசினால் அது மற்றவர்களுக்கும் கேட்டு விடும் என்பதால் அவன் பேசுவதில்லை போலும் 🤫.
நான் வாட்ஸ்அப்பில் Voice messages சிலவேளைகளில் அனுப்புவது உண்டு ஆனால் அவன் எப்பொழுதும் Type பண்ணித் தான் அனுப்புவான். நீங்கள் நினைக்கலாம் நான் இறுதியில் அவன் ஊமை என்று ட்விஸ்ட் (Twist) தரலாம் என்று ஆனால் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை ❌.

இவ்வாறாக நிறைய சிந்தித்துக் கொண்டே தூங்கிப் போய் விட்டேன் 💤. Beef கறி பற்றி அன்வர் நிறைய கூறியதால் கனவில் மாடுகள் கொடூரமாக வெட்டப்படுவது போன்றும் யாரோ ஒருவர் விபத்தில் தலை நசுங்கி இறப்பது போலவும் கனவு கண்டு பதறிப் போய் எழுந்தேன் 😰💥.

உடம்பு அனலாய்க் கொதித்தது 🤒. படுக்கையை விட்டு அசைய முடியவில்லை. காலையில் எனது அறைக்கு வந்த அபிநயாவும் என்னைப் பார்த்துப் பதறிப் போய் முச்சக்கர வண்டியில் (Three-wheeler) வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள் 🛺🏥. உடல் அனலாய்க் கொதித்தது ஆனாலும் ரிப்போர்ட் எல்லாம் சாதாரணமாக இருந்ததால் மருந்து மட்டும் தந்து மறுபடி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் 💊.

எனது நிலைமையால் அபிநயாவும் அவளது வேலைக்கு இன்று விடுமுறை போட்டு விட்டாள். நான் அவளிடம் அப்பொழுது தான் பக்கத்துவீட்டு எதிர்ஜன்னல் அன்வர் பற்றிச் சொன்னேன் 🗣️.

நான் அன்வர் பற்றிச் சொன்னவுடன் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது 😰. அதனால் நான் அவளை ஜன்னலை திறந்து காற்று வாங்கச் சொன்னேன்; மாறாக அவளோ ஜன்னலை நன்றாக லாக் செய்து 🔒, ஜன்னலின் திரைச்சீலையை இறுக மூடி 🪟, பேனை (Fan) போட்டு விட்டு மெதுவாகச் சொன்னாள்:
😨 "அன்வர் செத்துப் போய் ஒரு வருசம் ஆச்சு!"

“அபிநயா?!!!! விளையாடாத 😭.” எனது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கசிந்து தலையணை வழியாக மெத்தையில் ஊறியது.

“நான் விளையாடல அஸ்வினி. நீ கூட செத்துப்போன அன்வர் பெயரை சொல்லி என்கூட விளையாடுறியோன்னு தான் நானும் நினைச்சன் ஆனால் உனக்கு வந்த காய்ச்சலை பார்க்கும் போது தான் நானும் நீ சொன்னது உண்மைன்னு நம்புறன். ஏன் னா பக்கத்துவீட்டில குடியிருக்கிற நிறைய பேருக்கு இப்படி அடிக்கடி காய்ச்சல் வரும் 🤒. காய்ச்சல் வந்த எல்லாருமே அன்வரை பாத்ததா சொல்றாங்க ஆனால் இதை வெளியில சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. இந்தக் காலத்தில பேய் பிசாசு எல்லாம் நம்பினா பைத்தியம் ன்னு சொல்லுவாங்க.” இவ்வாறு ஆரம்பித்த அபிநயா மேலும் சொல்ல ஆரம்பித்தாள். என்னால் எதுவும் பேச முடியாதபடி எனது வாய் தானாக அடைத்துக் கொண்டது 🤐.

“அன்வர் சரியா இரண்டு வருசத்துக்கு முதல்ல அந்த அறைக்கு குடிவந்தாரு. ரொம்ப நல்ல பையன்னு எல்லாரும் சொல்லுவாங்க 👍. தானுண்டு தன்வேலை உண்டுன்னு யாருக்கும் தொந்தரவு இல்லாம இருக்கிற பையன்னு அந்த வீட்டு செக்கியூரிட்டி கூட சொல்லுவாரு 👮‍♂️.

தனக்குன்னு யாருமே இல்லாததால சம்பாதிக்கிற பணத்தை நல்லா செலவு பண்ணுவாராம், பிச்சைக்காரங்களுக்கு கூட பிரியாணி வாங்கி குடுப்பாராம் 🍛. அதே நேரத்தில இவரும் மூண்டு நேரமும் நல்லா சாப்பிடுவாராம் 😋. ஒரு நேரம் சாப்பிடாம இருந்தா கூட அவருக்கு பதட்டமா இருக்குமாம். அந்த நேரத்தில இப்ப நீ இருக்கிற இந்த ரூம் ல என்னோட அக்கா நந்தினி இருந்தா.

ஒரு சிலபேர் அன்வரும் என்னோட அக்காவும் லவ் பண்றாங்க எண்டு வதந்தியை பரப்பினதால அன்வரே நேரடியா எங்க அப்பாகிட்ட வந்து “மற்றவங்க சொல்றது எல்லாமே பொய் அங்கிள். இதால எனக்கும் மனவழுத்தமா இருக்கு 😞. நான் அடுத்த கிழமையே வெள்ளவத்தையில வேற ரூம் எடுத்து தங்கிறன். பக்கத்து பக்கத்து வீடு எண்டதால தானே இப்படி வதந்தியை பரப்புறாங்க. நான் போனா எல்லாம் சரியாகிடும்.” என்று சொல்லி இருக்கிறார்.

இதைக்கேட்ட அப்பா “இல்லைத்தம்பி நீர் ஒருடமும் போக வேண்டாம். உம்மளைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நீர் மற்றவை சொல்றதை பற்றி கவலைப்பட வேண்டாம் 🙅‍♂️. நாங்கள் எல்லாரும் அடுத்த மாசம் கனடா போயிடுவம் ✈️🇨🇦. அபிநயா மட்டும் தான் இங்க இருப்பா. நீர் ஒரு அண்ணாவா இடைக்கிடை அபிநயாவை பார்த்துக் கொண்டாலே போதும். உம்மடை நல்ல குணம் எங்களுக்கு தெரியும். நீர் கவலைப்பட வேண்டாம் தம்பி 😊” எண்டு சொல்லிட்டார்.

இப்படியே காலம் போக சரியா ஒரு வருசத்துக்கு முதல் காலைமை நான் வேலைக்கு போக வெளிக்கிடும் போது பக்கத்து வீட்டிலை இருந்து ஒரு பைல்லோட (File) வெளில வந்த அன்வர் அண்ணா எங்கடை வீட்டடில கொஞ்சம் தடுமாறி தலைசுற்றி விழப் பார்த்தார் 😵. நான் தான் பிடிச்சு என்ன எண்டு விசாரிக்கும் போது இரவும், காலைமையும் சாப்பிடேல்ல எண்டார் 🙅‍♂️🍛.

நான் என்னோட டிபன் பாக்ஸ்அ அவரிட்ட குடுக்கும் போது சிரித்துக் கொண்டே “தங்கச்சி எனக்கு அசைவம் (Non-veg) இல்லாம சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்காது தெரியும் தானே 😜” என்று சொன்னவர் -அவசரமாக வெள்ளவத்தை மெனிங்பிளேஸில் உள்ள பதிப்பகத்தில் பைல்லில் உள்ள கேலிச்சித்திரங்களையும், ஓவியங்களையும் கொடுக்க வேண்டும் 🎨. போகிறேன்- என்று சென்று விட்டார்.

அவர் போய் சில மணி நேரத்தில் தான் எனக்கு அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது 😭. காலைமை 11 மணி போல அல் மாஸ் (Al Maas) க்கு முன்னால கார் மோதி தலை சிதறி செத்துப் போயிட்டார் 🚗💥. மூண்டு நேரமும் ஒழுங்கா சாப்பிடுற மனுசன் கடைசி நேரத்தில சாப்பிடாமலே போயிட்டார்...” 💔
இதைச் சொல்லி முடிக்கும் போது அபிநயாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிந்தது 😢. நானும் தேம்பித்தேம்பி அழுதேன். அதன் பிறகு தான் அந்த விபத்து பற்றிய செய்தியை இணையத்தில் தேடிப் பார்த்தேன் 🌐. மரண அறிவித்தலில் இருந்த புகைப்படம் நான் ஜன்னல் வழியாக பார்த்த அதே அன்வர் தான் 🖼️.

“ஏனோ தெரியேல்லை அன்வர் அண்ணாவோட ஆத்மா இன்னும் சாந்தி அடையாம இப்ப வரைக்கும் அலையுது 👁️‍🗨️. அவருக்கு ஒருத்தரும் இல்லை எண்டதால அவங்கட மத முறைப்படி அவருக்கு சடங்கு செய்யவும் இல்லை. நேரடியா கரண்ட் ல அவரை எரிச்சாச்சு 🔥. இப்ப வரைக்கும் அன்வர் அண்ணா இருந்த அறை மூடித் தான் இருக்கு.” இப்படி அபிநயா சொல்லவும் எனக்கு சில விஷயங்கள் புரிந்தன.

அன்வருக்கு சடங்கு செய்ய யாரும் இல்லையா? அன்வர் அநாதையா? அவனுக்கு நான் இருக்கிறேன் 🥺. அன்வர் பேயாகவே இருந்தாலும் அன்வருக்கு அஸ்வினி என்ற காதலியாக நான் இருக்கிறேன் 💖. இப்பொழுது தான் எனக்குப் புரிகிறது அன்வரின் ஆவி என்னிடம் எதற்காக 💬 “Beef கறி சாப்பிட்டு நிறைய காலம் ஆச்சுது அஸ்வினி. நீங்கள் எனக்கு Beef கறி வாங்கித் தந்தாலே எனக்குத் திருப்தி. Beef கறி சாப்பிடாமல் ஒரு வருசமா அலைஞ்சு கொண்டு இருக்கிறன்.” என்று உரையாடியது என்று 😭.

ஒருவாறாக அன்றைய தினம் மதியத்திற்கு பிறகு எனக்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது. உடனே பக்கத்துவீட்டு செக்கியூரிட்டியுடனும், வெளிநாட்டில் இருந்த உரிமையாளருடனும் கதைத்து அன்வரின் அறைக்குள் செல்ல அனுமதி வாங்கினேன் 🔑.

அதன் பின்னர் நான் ஒரு பிராமணப்பெண் என்பதையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு Al Maas restaurant சென்று Beef foods எல்லாம் வாங்கிக் கொண்டு 🥩🍛 நேரடியாக அன்வரின் அறைக்குள் வந்து அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டேன் 🚪🔒.
நான் அன்வரின் அறைக்குள் நுழையும் போது ஏனைய அறையில் இருந்த சிலர் பயத்துடன் என்னைப் பார்த்ததை நான் பார்த்தேன் 😨. அதனால் அவர்களைப் பார்த்து நானே கதவை மீண்டும் திறப்பேன், அதுவரைக்கும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டுத் தான் அன்வரின் அறைக்குள் சென்று அதை உள்பக்கமாக பூட்டினேன்.

அன்வரின் அறைக்குள் வந்து பார்த்தால் அறையே தூசி பிடித்துப் போய் பாவனையற்ற நிலையில் இருந்தது 🕸️. அன்வரை நினைத்துத் தேம்பித் தேம்பி அழுது கொண்டே அன்வரின் அறையின் ஜன்னலைத் திறந்து 🪟, ஜன்னலோர இடங்களைச் சுத்தம் செய்து அதில் நான் வாங்கி வந்த உணவுகளை ஒரு மேசையில் வைத்தேன் 🍽️.

எனது அழுகையை நிறுத்த முடியவில்லை மீண்டும் மீண்டும் தேம்பித் தேம்பி அழுதேன் 😭. இறுதியில் மயங்கி விழுந்தேன் 💫. கனவில் ஒரு குரல் கேட்டது 🗣️✨
🎙️ “நான் தான் அன்வர். என்னுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டாய் ஆனால் என்னால் முடிந்தது என் குரலை மட்டுமே உனக்கு வெளிக்காட்டுகிறேன். உனது உதவிக்கு நன்றி அஸ்வினி நான் போகிறேன் 🕊️.
உனக்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கடைசி நேரத்தில் காட்டுகிறேன் என்று சொன்னேன் அல்லவா? எழுந்திரு அஸ்வினி...”

திடீரென்று கனவில் இருந்து கண்விழித்தேன் 😳. நேரம் ஆறரைக்கு ஐந்து நிமிடங்களே (6:25 PM) இருந்தன. மங்கிய வெளிச்சத்தில் மேசையில் இருந்த உணவுகளை பூனை ஒன்று உண்பது போலத் தெரிந்தது 🐈‍⬛, அது எதிரே இருந்த எனது அறையின் ஜன்னல் கண்ணாடியில் அன்வர் அந்த உணவுகளை உண்பது போலப் பிரதிபலித்தது 🪟✨.
கண்களை கசக்கி விட்டுப் பார்த்தேன் அங்கே எதுவும் இல்லை; நான் கொண்டு வந்த உணவும் இல்லை 🍽️❌. உணவு வைத்த இடத்தில் சில பென்சில்களுக்குக் கீழே பல காகிதங்கள் இருந்தன 🗒️✏️.

அந்தக் காகிதங்களில் நான் அபிநயாவின் வீட்டிற்கு வந்தது முதல் இப்பொழுது அன்வரின் அறைக்குள் வந்து மயங்கி விழுந்து மறுபடி எழுந்தது வரையிலான அனைத்தும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன 🎨📜!
ஓவியங்களுக்குக் கீழே இருந்த“அன்வர்” என்ற கையெழுத்தும் final ஓவியத்தின் கீழே இருந்த...
✍️ “என்றும் அன்புடன் அன்வர்” என்ற வார்த்தைகளும் ஏனோ மனசைக் குடைந்தன 🖤.

போட்டோ பிரேம் (PHOTO FRAME)உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவமைப்புகளை, போட்டோ பிரேம்களில் நேர்த்தியான முறையில் எங்களிடம் பி...
06/05/2026

போட்டோ பிரேம் (PHOTO FRAME)

உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவமைப்புகளை, போட்டோ பிரேம்களில் நேர்த்தியான முறையில் எங்களிடம் பிரிண்ட் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

✨ விசேட தள்ளுபடி ✨🎁 SPECIAL DISCOUNT 🎁🌟 உங்கள் வாழ்வின் அழகிய தருணங்கள் கடந்து செல்லலாம், ஆனால் அந்த நினைவுகளை அழியாத பொ...
01/04/2026

✨ விசேட தள்ளுபடி ✨
🎁 SPECIAL DISCOUNT 🎁

🌟 உங்கள் வாழ்வின் அழகிய தருணங்கள் கடந்து செல்லலாம், ஆனால் அந்த நினைவுகளை அழியாத பொக்கிஷங்களாக நாங்கள் மாற்றுவோம். 📸

🌸 தமிழ் - சிங்கள சித்திரப் புத்தாண்டு மலரும் இந்த இனிய வேளையில், எமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக சலுகைகள்: 🎊

🔘 25% தள்ளுபடி: எமது நிலையத்திற்கு நேரடியாக வருகை தரும் முதல் 25 வாடிக்கையாளர்களுக்கு! 🏃‍♂️
🔘 10% தள்ளுபடி: WhatsApp ஊடாக முன்பதிவு செய்யும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு! 📱

⚠️ நிபந்தனை: ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு சலுகை மட்டுமே பொருந்தும்! ☝️

⏳ இந்தச் சலுகை 13.04.2026 வரை மட்டுமே! 📅

🚀 முந்துபவர்களுக்கே முன்னுரிமை! 🥇
📞 இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 🤝

நாளா முதல் QRQR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் முறை:1. ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:மாற்றம் ஏதுமில்லை என்றால்: உங்கள் வாகன உ...
14/03/2026

நாளா முதல் QR

QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் முறை:

1. ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:
மாற்றம் ஏதுமில்லை என்றால்: உங்கள் வாகன உரிமையாளர் விபரம் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் இல்லை எனில், https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் உங்கள் பழைய QR குறியீட்டைத் தரவிறக்கம் (Download) செய்யலாம்.

மாற்றம் ஏற்பட்டிருந்தால்: வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருந்தால், இன்று (2026.03.15) காலை 6.00 மணி முதல் இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

2. புதிய பதிவுகள் (புதிய வாகனங்கள் அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள்):

இன்று (2026.03.15) காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

எரிபொருள் அளவு: ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு (Quota) குறித்த விபரங்கள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.

உற்பத்தித் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஊடாக விசேட நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று (15) காலை முதல் அமுலுக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையின் கீழ், ஒவ்வொரு வாகன வகைக்கும் வாராந்தம் ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் அளவு (Quota) குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Address

KUF - 03, Modern Market
Chavakachcheri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chavakachcheri City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share