29/10/2024
#தமிழரசின் #மாற்றுதெரிவு #ஐனநாயக #தமிழரசு
அன்புள்ள அரசாங்கப் பணியாளர்களே!
நாடாளுமன்றத் தேர்தல் - 2024 இல் போட்டியிடும் நான் உங்களுக்குப் புதியவன் அல்ல. அதனால் அறிமுகத்தை தவிர்க்கின்றேன். ஆனால் இம்முறை நான் சுயேச்சையாக – #மாம்பழச்சின்னத்தில் களமிறங்கியிருக்கின்றேன். சின்னம் மாறினாலும் எனது எண்ணம் மாறாது.
நீங்கள் அரசியல்வாதிகள் மீது கொண்டுள்ள வெறுப்பை நான் அறிவேன். போரின் பின்னரான 15 ஆண்டுகளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது வெறும் வாய்ப்பேச்சில் காலத்தைக் கடத்துவதாக எங்கள் மீது சீற்றம் கொள்ளும் உங்கள் அறம் நியாயமானது. கடந்த காலங்களில் இழைத்த தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டமையால்தான், சரியானதொரு அணியில் புதிய பாதையை வழிகாட்ட இம்முறை வருகின்றேன். இறுதிச் சந்தர்ப்பம் ஒன்றைத் தாருங்கள். என்னால் முடிந்த மாற்றத்தை உங்களுக்காக ஏற்படுத்தித் தருகின்றேன்.
கடந்த காலங்களில் பிழையான அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் நீங்கள் எதிர்கொண்ட நிர்வாகச் சவால்களை நான் நன்கு அறிவேன். எதிர்காலத்தில் அவ்வாறனதொரு நிலைமை மீண்டும் வராமல் உறுதி செய்வதற்காக என்னையும், எனது அணியில் உள்ளவர்களையும் நீங்கள் ஆதரியுங்கள்.
நாட்டின் தலைமைத்துவத்துக்கு வரும் ஆட்சியாளர்கள் சம்பள அதிகரிப்பு என்ற 'கரட்டை' உங்கள் முன்னே கட்டி காலம் காலமாக ஏமாற்றி வருகின்றார்கள். அதை மாற்றியமைக்கவும், ஆட்சியாளர்களின் ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து உங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை நாடாளுமன்றத்தில் முரசறைந்து அதைப்போராடி பெற்றுத்தரவும் என்னையும் எனது அணியில் உள்ளவர்களையும் தெரிவு செய்யுங்கள்.
#தமிழரின் #உரிமையும், #அபிவிருத்தியும் எனது இரண்டு இலக்குகள். #40ஆண்டுகளாய் உங்களோடு ஒருவனாக இருந்து களமாடும் என்னை நீங்கள் தெரிவு செய்யுங்கள். சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து சமராடவும், எம் தேசத்தை மீளக்கட்டியெழுப்பவும் ஒரு நிமிடம் சிந்தித்து உங்கள் வாக்கை எனக்கு அளியுங்கள்.
அன்புரிமையுடன்
என்றும் உங்களின் நான்
ஈ.சரவணபவன்
சரசாலையின் மைந்தன்