Nunavil Chavakachcheri

Nunavil Chavakachcheri This is nunavil.com

NPP Jaffna mayor candidate interview
24/03/2025

NPP Jaffna mayor candidate interview

SPOTLIGHT | 23.03.2025 | "மாநகர முதல்வரானால், முதல் வாரத்திலேயே மாற்றம் காணலாம்" - யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் சு.கபிலன் ...

02/12/2024

தமிழ், சிங்களம் என்ற பேதம் இல்லாமல், மேட்டுக்குடி அரசியல்வாதிகள் இதைப் பாருங்கள்:
AKD: எமது இலக்கு வறிய மக்களை வறியவர்களாகவே விடக்கூடாது. இதுதான் எமது இலக்கு.

10/11/2024

சிந்தியுங்கள் வாக்களியுங்கள்
திசைகாட்டி -02
உங்கள் முனேற்றம் உங்கள் வரிப்பணத்திலே நடக்கிறது இதற்கு யாருக்கும் நன்றி கூறவோ அல்லது நன்றி கமைப்படவோ தேவையில்லை... அதற்கு விளம்பரப்பலகைகளும் தேவையில்லை... சிந்திங்கள் மக்களே.... உங்களுக்கு செய்யப்பட்ட அபிவிருத்தியை விட விளம்பரப்பலகைகள் பெரிதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் உங்கள் வரிப்பணம் தான் செலவிடப்படுகிறது. @highlightஅநுர குமார திசாநாயக்கபுதிய விடியல் யாழ்ப்பாணம்Npp Jaffna







இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கைய...
26/10/2017

இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது இராம சேது (Ram Setu) என்றும் அழைக்கப்படுகிறது. இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மைதான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள். நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது என கூறியிருக்கிறார்கள். இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை தான். உபயோகத்தில் இருந்த இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர். இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது. மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுதியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 10 மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர். இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான். அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின்படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள். வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின்படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம். இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

இராமர் பாலம் என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும்.

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே தொடங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து வணங்குக...
25/10/2017

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே தொடங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து வணங்குகிறோம். இந்த படைப்புகளுக்குக் கூட காரணங்கள் இருக்கிறது. சைவத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகள் உண்டு. சரியை என்றால் பக்குவமில்லாத பக்தி என பொருள். தற்போது நாம் மேற்கொள்வது சரியைதான். சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் ஒருவன் அதில் இருந்தபடியே இறைவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு போய்விடுகிறான். இதை மரியாதைக் குறைவாக எண்ணக்கூடாது. அவனுக்கு இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பது சரியாக சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். [ 142 more words ]

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம்...
25/10/2017

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப் பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிபுழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம். இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும். மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும். ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும். மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகைப் பூ. தேங்காய் எண்ணெய் 100 மி.லி; உலர்ந்த மல்லிகைப்பூ 5 கிராம்; கறிவேப்பிலை -10 இலை எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம். மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல, வாய்ப்புண் தீரும். இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றடமிட தொண்டை நோய் தீரும். இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது. இலைச்சாறு,காலாணியை நீக்கும். மல்லிகை வேர்த்தூளையும், வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப் பூவானது மணத்தைக் கொடுப்ப

13/10/2017

பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என்று அறிவித்தார். குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். ஆனால் விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த,கோபமும் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது. முருகன் சிலையின் சிறப்பு: இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனபது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு பின் (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்தும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. போகர் சந்நிதி : இந்த கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார் என்பது வரலாறு. அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவையும் உள்ளன. போகரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது. திருஆவினன்குடி: மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இந்த கோவிலில் முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவறையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும். பூஜைகள் : முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது. தங்கரதம் : ஒவ்வொரு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள். தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும். விழாக்கள் : முருகனுக்கு உகந்த நாட்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன. அன்னதானம்: கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். வின்ச் சேவை : தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும். ரோப் கார் : தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். போக்குவரத்து வசதி : சென்னையில் இருந்து பழனிக்கு பேருந்து வசதி உள்ளது.ரெயில் வசதியும் உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்பன மாத முதற்றிகதிகளில் வரும் முக...
17/07/2017

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்பன மாத முதற்றிகதிகளில் வரும் முக்கியமான பண்டிகைகளாகும். பூமி தன்னைத்தான் சுற்றி வருவதோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. பூமி தன்னைத்தான் சுற்றி வரும் காலம் ஒரு நாளாகும். அது சூரியனைச் சுற்றி வரும் காலம் ஒரு வருடமாகும். இதனை 3651/4 நாட்கள் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு சுற்றும் பூமி தன்னுடைய அச்சிலிருந்து 231/2 பாகை சரிந்து சுழல்கின்றது. அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் கதி பூமத்திய கோட்டில் இருந்து தெற்கே 231/2 பாகை வரை சென்று பின் அங்கிருந்து பூமத்திய கோட்டுக்கு வடக்கே 231/2 பாகை வரை மாறிச் செல்கின்றது. பூமத்திய கோட்டுக்குத் தெற்கே 231/2 பாகையிலுள்ள கோட்டை மகரக்கோடு என்பர். அவ்வாறே பூமத்திய கோட்டுக்கு வடக்கே 231/2 பாகையில் அமையும் கோட்டைக் கடகக் கோடு என்பர். மகரத்தில் சூரியன் நிற்கும் மாதம் தைமாதமாகும். அதனால் அதனை மகர சக்கிராந்தி என்பர். அதன் பின்னர் வடக்கு நோக்கிச் சூரியனின் உச்சகதி மாறிக்கொண்டே சென்று கடகக் கோட்டை அணுகும். இவ்வாறு செல்வதற்கு ஆறுமாதகாலங்கள் செல்கின்றன. ஆடிமாதம் சூரிய உச்சம் கடகக் கோட்டை அடையும் காலமாகும். தைமாதம் தொடக்கம் ஆனிமாதம் முடிய உள்ள காலத்தில் சூரியன் மகரத்திலிருந்து கடகம் நோக்கிச் செல்கின்றது. இவ்வாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாத காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்பர். உத்தரம் என்பது வடதிசை. அயனம் என்பது செல்லுதல் எனப் பொருள்படும். அவ்வாறே ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை அதாவது கடகத்திலிருந்து மகரம் வரை தெற்கு நோக்கிச் சூரிய உச்சகதி செல்லும் காலம் தட்சணாயண புண்ணிய காலம் எனப்படும். தட்சணதிசை தென்திசையாகும். சோதிடர்கள் ஒரு வருடத்தைப் பன்னிரண்டு இராசிகளாகப் பிரித்து மேடம் முதலாக மீனம் வரை பெயரிடுவர். சித்திரை மேட மாதமாகும். ஆடி கடக மாதமாகும். தை மகர மாதமாகும். அவ்வவ் மாதங்களில் அவ்வவ் இராசிகளில் சூரியன் உச்சமாக நிற்பதாகச் சோதிட நூல்கள் கணிக்கின்றன. மகரத்தில் சூரியன் உச்சம் கொடுக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் திருநாளாகும். இதனைச் சூரியனைப் போற்றி வழிபடும் நாளாக இந்துக்கள் கொண்டாடுவர். மழையும் வெயிலும் தந்து பயிர் வளர்த்துத் தம்மை வாழ்விக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்திப் பொங்கலும், படையலும் இட்டு உழவர் வணங்கும் உழவர் திருநாளாக நாம் தைப்பொங்கலைக் கருதுகின்றோம். சூரியன் 231/2 பாகை சரிந்து சுற்றுவதால் பருவகாலங்கள் உண்டாகின்றன. பருவகாலங்களோடு தொடர்பு பூண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுக்களாக தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றும், வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றும் வீசுகின்றன. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றால் மழை பெறும் நாடுகளில் முக்கியமானவையாக இந்தியாவும் இலங்கையும் விளங்குகின்றன. ஆடி தொடக்கம் தை வரையுள்ள காலம் பெரும்பாலும் மாரிகாலமாகக் காணப்படுகின்றது. அதனால் “ஆடிவிதை தேடி விதை” என்று கூறும் பழமொழியும் எம்மிடை வழங்கி வருகின்றது. ஆடிமாதத்தை விதைப்புத் தொடங்கும் காலமாகவும், தைமாதத்தை அறுவடை முடிந்த காலமாகவும் நாம் கணிக்கலாம். இதனால் தைப்பொங்கல் பெறும் அளவு முக்கியத்துவத்தை ஆடிப்பிறப்பும் பெறுகின்றது. எனினும் கைப்பொருளைச் செலவிட்டு விதைப்புத் தொடங்கும் மாதத்திலும் பார்க்க அடுவடை மூலம் பெரும் பயன் பெற்றபின் வரும் தைப்பொங்கலே உழவர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். எனவே தைப்பொங்கலும், ஆடிப்பிறப்பும் சூரியனை நன்றி யோடு நினைந்து அவனுக்கு வழிபாடு செய்யும் இரு புண்ணிய காலங்கள் என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். ஆதிகாலத்தில் சூரியன், சந்திரன், அக்கினி, ஆறு, மலை போன்ற இயற்கைப் பொருட்களையே மக்கள் வழிபாடு செய்தனர் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. சூரிய வெப்பமே மழை பெய்யவும் காரணமாகும். மழை தரும் ஈரமும், சூரியன் தரும் வெப்பமும் பயிர்கள் வளர்வதற்கு இன்றியமையாதவை. அவ்விரண்டுமே புல், பூண்டுகள், செடிகள், மரங்கள் என்பன தோன்றி வளரவும் காரணிகளாய் அமைகின்றன. மனிதன் தனக்கு வேண்டிய தானியங்கள், காய், கனி, கிழங்குகள் போன்ற உணவுப்பொருட்களைப் பயிர்கள், செடிகள், கொடிகள், மரங்கள் போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொண்டான். அன்றியும் தாவர உணவுஉண்ணும் பிராணிகள், பறவைகளையும் வேட்டையாடி அவற்றின் மாமிசங்களையும் உணவாகக் கொண்டான். தாவர உணவுகளையும், மாமிச உணவுகளையும் தாங்கள் பெற உதவும் தெய்வமாகச் சூரியனைப் பண்டைய மனிதர்கள் போற்றினர். நாகரீக வளர்ச்சியில் காலத்தால் முற்பட்ட தேசங்களாகக் கருதப்பட்ட எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் சூரியன் முக்கிய தெய்வமாகப் போற்றப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இருக்கு வேதத்திலும் சூரியன் பல பாடல்களில் போற்றப்பட்டுள்ளான். இந்து மதத்தின் ஆறு பெரும்பிரிவுகளாகக் கொள்ளப்படும் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பவற்றுள், செளரம் என்பது சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு போற்றும் சமயமாகும். சிவபெருமானது வலது கண்ணாகச் சூரியனும், இடது கண்ணாகச் சந்திரனும், நெற்றிக் கண்ணாக அக்கினியும் போற்றப்படுவதும் சூரியன் இந்து மதத்தில் பெறும் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்துரைக்கின்றது. ஆலயங்களில் பரிவார தெய்வமாக சூரியனுக்கும் கோவில் அமைந்திருக்கின்றது. இத்தகைய மகிமை பொருந்திய சூரியனுக்கு வழிபாடாற்ருவதை நோக்கமாகக் கொண்ட ஆடிப்பிறப்பு இந்து சமயத்தவர் அனைவரும் தவறாது கொண்டாட வேண்டிய புண்ணிய தினமாகும். இதன் மகத்துவத்தை உணராத காரணத்தால் இந்துக்களிற் பலர் ஆடிப்பிறப்பைக் கொண்டாடாமலே விட்டுவிடுகின்றனர். யாவரும் கொண்டாடும் தைப்பொங்கல் பெறுகின்ற அளவு முக்கியத்துவம் ஆடிப்பிறப்புத் திருநாளுக்கும் உண்டு என்பதை நாம் உணரவேண்டும். நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இருபதாம் நூற்றாண்டிலே ஈழத்தில் வாழ்ந்த பெரும் புலவர் ஆவர். அவர் சிறுவர்கள் பாடி மகிழ்வதற்கேற்ற பல பாடல்களையும் பாடியுள்ளார். அவை "சிறுவர் செந்தமிழ்" என்ற நூலாகத் திரட்டி அச்சிடப் பெற்றுள்ளன. அதில் ஆடிப்பிறப்புப் பற்றி அவர் பாடியுள்ள ஒரு பாடலை இங்கு நோக்குவோம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” எனத் தொடங்குகின்றது அச் சிறுவர் பாடல். இதிலிருந்து ஆடிப்பிறப்பு இந்து சமைய பாடசாலைகளிலே ஒரு விடுமுறை தினமாகக் கொண்டாடப் பட்டிருந்தமையை நாம் உணர முடிகின்றது. அத்தகைய ஒரு சிறப்பை, பெருமையை, முதன்மையை ஆடிப்பிறப்பு மீண்டும் பெற வேண்டுமானால் ஆடிப்பிறப்பு ஒரு விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் கவனம் செலுத்துமாறு இந்து சமய கலாச்சார அமைச்சை வேண்டுதல் வேண்டும். தை மாதத்தில் பொங்கல் முக்கிய இடம் பெறுவது போன்று ஆடிப்பிறப்பில் கூழ் காய்ச்சுதல் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் சாதாரண நாட்களில் ஒடியல் மாவையே கூழ் காய்ச்சுவதற்குப் பயன்படுத்துவர். ஆனால் ஆடிக் கூழ் காய்ச்சுவதற்கு அரிசிமா, உளுத்தம்மா என்பனவே கொள்ளப்படும். அன்றியும் அவ்வாடிக் கூழ் தித்திப்பான சுவையுடையதாக அமைதலும் வேண்டும். அதற்காக பனங்கட்டி, அல்லது வெல்லம் என்பவற்றைத் தேங்காய்ப் பாலில் கரைத்து அதனுடன் விட்டுக் கூழ் சமைப்பர். கூழுடன் மாத்திரம் ஆடிப்பிறப்பு விழா நின்றுவிடுவதில்லை. இனிப்பான பலகாரவகைகளும் செய்யப்படும். மோதகம், கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் முக்கியமாக இடம்பெறும். அப்பம், வடை போன்ற பலகாரங்களையும் சிலர் ஆக்குவர். வீட்டிலுள்ள சுவாமியறையில் நிறைகுடம் வைத்து, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றுடன் இவற்றைப் படைத்து, தேங்காய் உடைத்து, தூப தீபம் காட்டித், தோத்திரப் பாடல்கள் பாடி வழிபடுவர். பின்னர் அவற்றைத் தாம் பகிர்ந்து சுவைத்து உண்பர். அயலவர், உறவுனர் வீடுகளுக்குக் கொடுத்தனுப்பி மகிழும் வழக்கமும் இந்துக்களிடை உண்டு. இவற்றைப் பிரதிபலிக்கின்றது புலவர் அவர்களின் பாடல். அன்றியும் அவை செய்யப்படும் முறையையும் இளஞ்சிறுவர் விளங்கிக் கொள்ள தக்க வகையில் கூறும் பாங்கு புலவரவர்களுக்குரிய தனிச் சிறப்பாகும். அப்பாடலைப் பார்ப்போம். ஆடிப்பிறப்பு ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப் பயறு வறுத்துக் குற்றிச் செந்நெல் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூருச் சர்க்கரையும் கலந்து தோண்டியில் நீர் விட்டு மாவை அதிற் கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லthoக் கலவையை உள்ளே வைத்துப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா உருண்டை பயறும் இட்டு மாவைக் குழைத்தம்மா வார்த்துத் துழாவுவாள் மணக்க மணக்கவாய் ஊறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூட்டியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிள நீர்பழம் வெற்றிலை பாக்குடன் ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வண்ணப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப்புதுக்கூழ் குடிப்போமே.. "கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் " என்று தோழர்களுக்குக் கூறும் விபரம் தெரிந்த சிறுவன், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்ற விபரத்தையும் வரிசைக் கிராமமாக எடுத்துரைகின்றான். கொழுக்கட்டையும் மோதகமும் வெவ்வேறு வடிவ அமைப்பைக் கொண்டவையாயினும் அவற்றின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள்கள் ஒத்த தன்மை கொண்டனவே. அதனால் ஒரேமாதிரியான சுவையே அவற்றில் உண்டு. மோதகம் அல்லது கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் சுவையும், மணமும் பொருந்திய பொருளைப் பெண்கள் தமது பேச்சுவழக்கில் “உள்ளுடன்” என்பர். உள்ளுடனாக அமைவது பயற்றம் பருப்பாகும். முதலில் பாசிப்பயறு வறுத்துக் குற்றிப் பின் அந்த வாசப் பருப்பை அவித்தெடுப்பர். அவித்த அந்தப் பருப்புடன் வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவிய பூவையும் சர்க்கரையையும் கலப்பர். உள்ளுடன் தயாராகிவிட்டது. அதனை உள்ளே அடக்கும் வெளிப்புற மாப்பொருளை எவ்வாறு தயாரிப்பது என்பதும் ஒரு பாடலிலே அமைவதைப் பார்க்கலாம். செந்நெற் பச்சையரிசியை இடித்துத் தெள்ளி அல்லது அரித்து எடுத்தல் வேண்டும். பின்னர் அம்மாவைப் பதமாய் வறுத்து அல்லது அவித்து எடுத்தல் வேண்டும். அவ்வாறு எடுத்த மாவை வாயகன்ற பாத்திரத்திலிட்டு நீரூற்றிப் பக்குவமாகக் குழைத்து உருட்டி எடுத்தல் வேண்டும். பின்னர் வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளே வைத்து அதன் ஓரங்களைக் கொழுக்கட்டை வடிவிலோ அல்லது மோதக வடிவிலோ அமையக்கூடியதாகப் பொருத்துவர். கொழுக்கட்டையில் ஓரத்தில் பல்வடிவ அமைப்பு வைப்பர். மோதகத்தின் நடுவில் குடுமி போன்ற அமைப்பு ஏற்படுத்துவர். இவ்வாறு அலங்காரம் செய்த பின் அவற்றை ஆவியில் அவித்தெடுப்பர். கொழுக்கட்டை அல்லது மோதகம் அவிக்கும் இடத்தில் பயற்றம் பருப்பும், சர்க்கரையும், ஏலமும் கலந்த ஒரு கதம்ப மணம் ஆவியுடன் கலந்து பரவும். "மணக்க மணக்க வாய் ஊறிடுமே" என்கின்றான் சிறுவன். கூழ் காய்ச்சும் பக்குவமும் அழகாகக் கூறப்படுகின்றது. தேங்காய் பாலில் மாவுருண்டை, பயறு என்பனவும் பனங்கட்டியும் இட்டுக் கரைக்கப்படுகிறது. அவ்வாறு கரைத்த கரைசலை நீர் கொதிக்கும் பாத்திரத்தில் வார்த்துத் துலாவுகின்றாள் அம்மா. நன்றாக அகப்பையால் துழாவாவதுவிடின் கட்டிபட்டுவிடும். கூழ் காய்ச்சும் இடத்திலே மணம் வாயில் நீர் ஊற வைக்கின்றது. கரண்டிக்குப் பதிலாக பலாவிலையால் சுடு கூழை அள்ளிக் குடிக்கும் போது பெறும் சுவையனுபவமும் மகத்தானது. இவ்வாறு குழந்தைகள் விளங்கிக் கொள்ளக் கூடிய பழகு தமிழில் ஆடிப்பிறப்பைப் பற்றிய பாடலை ஆக்கித் தந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களையும் நாம் இப்பண்டிகைத் தினத்தில் நினைவு கூற வேண்டியது எமது கடப்பாடாகும். தைப்பொங்கல் சூரியனின் உத்தராயணச்செலவையும், ஆடிப்பிறப்பு அவனுடைய தட்ஷ்ணாயணச் செலவையும் குறிக்கின்ற பண்டிகை நாட்கள் எனப் பார்த்தோம். மேலும் ஆடிப்பிறப்பு விதைப்புத் தொடங்குதற்குரிய மாதமாகிய உழவர் திருநாள் என்றும், தைப்பொங்கல் அறுவடை முடித்துப் பயன்பெற்ற உழவர் திருநாள் என்றும் அறிந்து கொண்டோம். எமது வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாகிய உணவை நாம் பெறக் காரணனாக விளங்கும் சூரிய தேவனுக்கு நாம் எமது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவிக்கும் விழாக்களாக இவை இரண்டும் விளங்குகின்றன. இப்புண்ணிய காலங்களில் நாம் படையலும் வழிபாடும் ஆற்றிச் சூரியனை உள்ளன்புடன் வணங்கி உய்தி அடைவோமாக.

http://www.nunavil.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? சீர...
02/05/2017

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:- மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து" தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

http://www.nunavil.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99/

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர்

வைகாசி மாதத்தில் நீர்தானம் செய்த அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. பாஞ்சாலை நாட்டில் பூரியசஸ் என்...
27/04/2017

வைகாசி மாதத்தில் நீர்தானம் செய்த அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. பாஞ்சாலை நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். அவனுடைய நாடு திடீரென களை இழந்து வறட்சியை அடைந்தது. சேனைகள் நோயால் சேதமாயின. வேற்று நாட்டு அரசன் போரிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பூரியசஸ், அவனுடைய மனைவி சிகிநீ இருவரையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். காட்டுக்குச் சென்ற மன்னனும், ராணியும் முப்பது ஆண்டுகள் சிரமப்பட்டனர். அந்த சமயம் மன்னன் தன் குருவின் நினைவாகவே இருந்தான்.அப்போது தற்செயலாக அந்த வழியே யாஜகர், உபயாகர் ஆகிய இரு ஞானிகள் சென்றனர். பூரியசஸ் அவர்களைப் பார்த்து பரவசமாகி, அவர்களுடைய பாதங்களில் விழுந்து வணங்கி தன் நிலையைச் சொன்னான். மன்னனின் நிலை கண்டு மனம் இரங்கிய ஞானிகள், அவன் இந்த நிலையை அடைவதற்கு என்ன காரணம் என்று ஞானதிருஷ்டியினால் அறிந்து மன்னனிடம் சொன்னார்கள்.அரசே நீ பத்து தலைமுறைகள் வேடனாக இருந்தாய். பத்தாவது பிறவியில் கவுட தேசத்துக் காட்டில் வசிக்கும் போது அந்த வழியாகச் செல்வோரின் பொருட்களை அபகரித்தும், சாதுக்களை அவமதித்தும் பல கொடுமைகளைச் செய்து வந்தாய். அதன் பயனைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய் என்றனர்.அதைக் கேட்டு வேதனை அடைந்த பூரியசஸ், ஞானிகளே, இவ்வளவு கொடுமை செய்திருந்தும் நான் அரசனாக எப்படி பிறந்தேன்? என்று கேட்டான். அதற்கு ஞானிகள் மன்னா ஒரு சமயம் இரண்டு வியாபாரிகளும், ஒரு ஏழையும் இந்தக் காட்டு வழியே செல்லும் போது நீ அவர்களை அடித்துத் துன்புறுத்தினாய். இதனால் இரண்டு வியாபாரிகளும் இறந்து விட்டனர். அந்த ஏழை மட்டும் பொருட்களுடன் தப்பி ஓடினார். நீ அவரை துரத்தி கொண்டு ஓடும் போது, கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். பொருள் மேல் உள்ள ஆசையால் நீ அவரை தூக்கி நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாய். உன்னை அறியாமலேயே உன்னுடைய காரியத்திற்காகச் செய்த நீர் தானம் வைகாசி மாதத்தில் நடந்தது. அந்த புண்ணியத்தினால் நீ அரசனாக பிறந்தாய் என்று முடித்தனர். வைகாசி மாதத்தில் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறிது நீர் தானத்திற்கு இவ்வளவு மகிமையா என்று வியந்த அரசன் தன் முற்பிறவிகளை நினைத்து மனம் நொந்து, காட்டில் வசித்தபடியே ஸ்ரீ ஹரியைத் தியானம் செய்தான். வெயிலில் வருவோருக்கு நிழல் கொடுத்து, நீர் தானமும் அளித்து நல்ல செயல்களைச் செய்து வந்தான்.சில நாட்களில் மன்னனின் உறவினர்கள் அவனைத் தேடி வந்து அவனுக்கு துணை புரிவதாகக் கூறினர். அவனது அரசும் அவனை அடைந்தது. மன்னனும் பலகாலம் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, ஐந்து புதல்வர்களைப் பெற்று இன்பமாக இருந்து வரும் போது ஸ்ரீ நாராயணனே தரிசனம் அளித்தார்.மன்னா என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். இறைவா உங்களிடம் மாறாத பக்தியும் நாராயண நாமத்தைத் தவிரவேறு எதுவும் உச்சரிக்காத நாவும் வேண்டும் என்றான். ஸ்ரீநாராயணன் மன்னன் வேண்டியபடியே வரம் தந்து மறைந்தார்.பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திருதியை என்பது குறிப்பிடத்தக்கது. அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திருதியை என்று அழைத்தனர்.

http://www.nunavil.com/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திரிதியை அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திரிதியை என்று அழைத்தனர்.

Address

Chavakachcheri North

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nunavil Chavakachcheri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category