கோறளைப்பற்று பிரதேச சபை

கோறளைப்பற்று பிரதேச சபை "எமது பிரதேச மக்களுக்கோர் சிறந்த உள்?

இன்றைய தினம் (07.10.2025) எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட   கிரான் வட்டார பகுதிகளில் அமைந்துள்ள வீதிகளுக்கு   ,கெளரவ உப தவி...
07/10/2025

இன்றைய தினம் (07.10.2025) எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட கிரான் வட்டார பகுதிகளில் அமைந்துள்ள வீதிகளுக்கு ,கெளரவ உப தவிசாளர் கு.பத்மநீதன் கெளரவ வட்டார உறுப்பினர் சி.சண்முகநாதன் ஆகியோரின் மேற்பார்வையில் தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

இன்றைய தினம் (06.10.2025) எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட  கிண்ணையடி 11ம் வட்டார பகுதிகளில்  ,கெளரவ தவிசாளர்  சு.சுதாகரன் க...
06/10/2025

இன்றைய தினம் (06.10.2025) எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட கிண்ணையடி 11ம் வட்டார பகுதிகளில் ,கெளரவ தவிசாளர் சு.சுதாகரன் கெளரவ வட்டார உறுப்பினர் த.சந்திரகாசன் ஆகியோரின் மேற்பார்வையில் தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

05/10/2025

கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கௌரவ தவிசாளர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒலிபெருக்கி ஊடாக கால்நடைகள் வைத்திருக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல் எமது சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள   உள்ளூராட்சி வார வேலைதிட்டமானது மறுமலர்ச்சி  நகரம் எனும் ...
17/09/2025

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி வார வேலைதிட்டமானது மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் 15.09.2025 ஆம் திகதி தொடக்கம் 21.09.2025 ஆந் திகதி வரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது இவ் வேலைத்திட்டத்தில் மூன்றாம் நாளான இன்று 17.09.2025 திகதி நடைமுறைப்படுத்தப்படும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தின வேலைத்திட்டத்தின் கீழ் இலவச வைத்திய முகாம் ஒன்று எமது வாழைச்சேனை பொதுநூலக மண்டபத்தில் இடப்பெற்றது .மேற்படி இவ் நிகழ்வில் கௌரவ உறுப்பினர்கள்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்கடமை புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள   உள்ளூராட்சி வார வேலைதிட்டமானது மறுமலர்ச்சி  நகரம் எனும் ...
16/09/2025

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி வார வேலைதிட்டமானது மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் 15.09.2025 ஆம் திகதி தொடக்கம் 21.09.2025 ஆந் திகதி வரை வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன இவ் வேலைத்திட்டத்தில் முதல் நாளான 15.09.2025 ஆந் திகதியன்று நடைமுறைப்படுத்தப்படும் வேலைதிட்டமான நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைக்கும் முகமாக அலுவலக முன்றலில் கௌரவ தவிசாளர் சு.சுதாகரன்அவர்களது தலமையில் தேசியக்கொடி,மாகாணசபை கொடி மற்றும் பிரதேசசபை கொடி என்பவை ஏற்றிவைக்கப்பட்டதோடு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டடு, அத்துடன் மாகாண சபை கீதமும் இசைக்கப்பட்டதுடது, அத்துடன் உள்ளூராட்சி வார தினத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டலும் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து முதல் நாள் நிகழ்வாக நடமாடும் சேவை வழங்கல் வேலைதிட்டமானது சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றதுடன் இவ் வேலைத்திட்டத்தில் கௌரவ தவிசாளர் சு.சுதாகரன் கௌரவ உப தவிசாளர் கு.பத்மநீதன், சபையின் செயலாளர் சு. ராஜ்கீதன் அவர்கள் ,கௌரவ உறுப்பினர்கள், சுகாதார பரிசோதகர்கள், சபையின் வருமானம் மற்றும் கட்டிட பகுதி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து

சோலை வரி தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வானது 11.09.2025 திகதி  வியாழக்கிழமை சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற...
12/09/2025

சோலை வரி தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வானது 11.09.2025 திகதி வியாழக்கிழமை சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கௌரவ தவிசாளர் சு.சுதாகரன் அவர்கள், சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன் அவர்கள், மற்றும் கௌரவ உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன், இவ் செயலமர்வின் வளவாளராக ஒய்வு நிலை சிரேஸ்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் (LLB) அவர்கள் கலந்துகொண்டதுடன், செயலமர்வினை மட்டக்களப்பு நெல் ஆளுகை வளநிலையத்தின் ஊடாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஹாரூன் அவர்களினால் நெறியாளுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

நீண்ட காலமாக பயன்பாடற்ற நிலையில் காணப்பட்டும் திகிலிவெட்டை பொதுநூலகத்தினை புனரமைப்புச் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொ...
20/08/2025

நீண்ட காலமாக பயன்பாடற்ற நிலையில் காணப்பட்டும் திகிலிவெட்டை பொதுநூலகத்தினை புனரமைப்புச் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக குறித்த பொதுநுலகத்தினை பார்வையிடுவதற்கான கள விஜயமொன்று கௌரவ தவிசாளர்.சு.சுதாகரன் அவர்களது தலமையில் 19.08.2025 ஆந் திகதியன்று இடம்பெற்றது. மேற்படி கள விஜயத்தில் கௌரவ உபதவிசாளர் கு.பற்மநீதன் மற்றும் சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன் அவர்களும் கலந்து கொண்டதுடன், திகிலிவெட்டை பொது நூலகத்தினை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திரதின நிகழ்வினை முன்னிட்டு எமது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தி...
04/02/2025

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திரதின நிகழ்வினை முன்னிட்டு எமது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வானது சபையின் செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,பாலர்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நூலக உதவியளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல்
24/01/2025

கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல்

27.03.2023 ஆம் திகதி முதல் திகிலிவெட்டை கிராமத்துக்கான தற்காலிக பஸ் சேவையினை ஆரம்பித்தல் ..................................
25/03/2023

27.03.2023 ஆம் திகதி முதல் திகிலிவெட்டை கிராமத்துக்கான தற்காலிக பஸ் சேவையினை ஆரம்பித்தல் ...........................................................................................
கோறளைப்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்திவெளி-திகிலிவெட்டை பகுதிக்கான நீர்வழி படகுப் பாதையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக படகுப் பாதை சேவையானது கடந்த 2023.03.23 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது . இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், விவசாயிகள்,, ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்களது மாற்று போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் பொருட்டு சபையின் செயலாளர் திரு. S.நவநீதன் அவர்களால் இலங்கை கப்பல் கடற்படை முகாம் கஜுவத்தை தளபதி மற்றும் இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை முகாமையாளர் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்ட தற்காலிக படகு சேவை கோரிக்கை, தற்காலிக பஸ் சேவை கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் நேற்றும் இன்றும் நேரடி கள விஜயங்கள் குறித்த தரப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 2023.03.27 ஆம் திகதி முதல் திகிலிவெட்டை கிராமத்துக்கான தற்காலிக பஸ் சேவையினை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை வாழைச் சேனை முகாமையாளர் திரு. ஒகஸ்டின் சுதாகர், உதவி முகாமையாளர் எஸ்.கோபாலரெட்ணம் ஆகியோரால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் பிரகாரம் தற்காலிகமாக ஆரம்பிக்கப்படவுள்ள திகிலிவெட்டை கிராமத்திற்கான பஸ் சேவையானது படகுப் பாதையின் திருத்த வேலைகள் முடிவடையும் வரையான ஒரு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படும் எனவும் இச்சேவை சித்தாண்டியில் இருந்து ஈரளக்குளம் வரையான சேவையின் தற்காலிக விரிவு படுத்தல் சேவையாக இருப்பதுடன், குறித்த பேருந்து காலை 6:30 மணிக்கு கிரான் பிரதான சந்தியில் இருந்து புலிபாய்ந்தகல் சந்தி, திகிலி வெட்டை ஊடாக ஈரளக்குளம் நோக்கி பயணித்து மீண்டும் அதே வழியாக சித்தாண்டி நோக்கி பயணிக்கும் எனவும் சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று பிரதேசபைக்குச்சொந்தமான சந்திவெளி -திகிலிவெட்டை படகு (பாதை) பழுதடைந்துள்ளதனால் அதனை திருத்துவதற்காக படகுப் ப...
24/03/2023

கோறளைப்பற்று பிரதேசபைக்குச்சொந்தமான சந்திவெளி -திகிலிவெட்டை படகு (பாதை) பழுதடைந்துள்ளதனால் அதனை திருத்துவதற்காக படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபபட்டுள்ளதுடன், மேற்படி பழுதடைந்து காணப்படும் படகினை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, படகினை (பாதை )திருத்தியமைக்கும் காலம் வரை மக்கள் தங்களது பயணங்களை சிரமமின்றி மேற்கொள்வதற்காக கஜுவத்தை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி அவர்களால் இரண்டு படகுகளை வழங்குவதாகத் தெரிவித்ததுடன் , சேதமடைந்த படகினைத் (பாதை)திருத்துவதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக கடற்படை உத்தியோகத்தர்கள் சிலரையும் தந்துதவுவதாகவும் குறிப்பிட்டார் .பழுதடைந்த படகு (பாதை)யினை திருத்துவதற்கு ஆலோசனைகளையும் மற்றும் படகினையும் வழங்க முன்வந்துள்ள கஜுவத்தை கடற்படைமுகாம் பொறுப்பதிகாரி அவர்களுக்கு கோறளைப்பற்று பிரதேசசபை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவத்துக்கொள்கின்றோம்.

கோறளைப்பற்று பிரதேச சபையின்  ஆளுகைக்குட்பட்ட   திகிலிவெட்டை கிராம  வீதியானது கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பகுதியளவில் சேத...
24/03/2023

கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட திகிலிவெட்டை கிராம வீதியானது கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பகுதியளவில் சேதமடைந்து காணப்பட்டது. சேதமடைந்த இவ் வீதியினை புனரமைத்துத் தருமாறு பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எமது சபையினால் குறித்த வீதியானது புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

Address

Main Street Valaichenai
Batticaloa
30400

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when கோறளைப்பற்று பிரதேச சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share