Defence Cadet - BT/KK/Vantharumolai MMV, Sittandy.

Defence Cadet - BT/KK/Vantharumolai MMV, Sittandy. Never be unprepared
(1)

09/08/2024

#பாடசாலைகளில் #மாணவர்களின் #நெறிபிறழ்வான #நடத்தைகளுக்கு #பிரதான #காரணங்களில் #சில...!!!
ந.சந்திரகுமார் SLPS

இன்றைய காலகட்டத்தில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் மாணவர்களின் பொதுப் பரீட்சைகளுக்கு மட்டுமே அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை, மாணவர்களின் சமநிலை ஆளுமை விருத்திக்கு உதவும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் போதியளவு அக்கறை செலுத்தாமையும், பாடசாலைகளில் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் முறையாக நடைமுறைப்படுத்தாமையும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைகளுக்கு காரணங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தவிர்க்க சில ஆலோசனைகள்...!

#பெற்றோர்களுக்கான #ஆலோசனைகள்...

*உங்களது பிள்ளைகளை ஏதாவதொரு விளையாட்டு, இயல், இசை,நாடகம்,சாரணீயம், மாணவர் படையணி போன்ற ஏதாவது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

*தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு கிறிக்கெற்,உதைபந்து,வலைபந்து, கூடைப்பந்து,ரெனீஸ், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

*இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபட்டு களிப்படைய சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

*கற்றல் அடைவை அதிகரிக்க காட்டும் அதேயளவு அக்கறையை, உங்கள் பிள்ளையின் சமநிலை ஆளுமை விருத்திக்கு உதவும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு காட்ட வேண்டும்.

#அதிபர்கள் #மற்றும் #கல்வி #அதிகாரிகளுக்கான #ஆலோசனைகள்..!!?

*சகல மாணவர்களும் ஏதாவதொரு இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

*பாடசாலை மைதானத்தில் காலை வேளையிலும்,மாலை வேளையிலும் மாணவர்களுக்கு ஏதாவதொரு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

*சாரணியம்,மாணவர் படையணி,சுற்றாடல் கழகம், சூழல் பாதுகாப்பு படையணி போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

*மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் தலைமைத்துவத்தை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவைகளை வலுவூட்டி, மாணவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழிகாட்டலை பெற்றுக் கொள்ளுவதை உறுதி செய்ய வேண்டும்.

*மாணவர்களின் வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டச் சாதனை தொடர்பான பதிவுப்புத்தகத்தை பேணி வர வேண்டும்.அத்தோடு பகிரங்கமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.

மாணவர்களை வகுப்பறைகளில் அடைத்து வைத்து படிபடியென அழுத்தம் கொடுப்பதைப் தவிர்த்து, சிறிது நேரம் மைதானத்தில் விளையாட அனுமதிக்கும் போது, மன அழுத்தம் இன்றிமாணவர்கள் உற்சாகமாக கற்றலிலும் ஈடுபடுவர்.

திரு.ந.சந்திரகுமார்
சிரேஸ்ட அதிபர்

School Cadet day and Certificate ceremony for Defense Cadet 2024 was  held on 31st July 2024 at BT/KK/Vantharumoolai Mad...
31/07/2024

School Cadet day and Certificate ceremony for Defense Cadet 2024 was held on 31st July 2024 at BT/KK/Vantharumoolai Madya Maha Vidyalaya.

This program was Presided by the principal of the school Mr. T. Muraleetharan,

Lt. Col P. Aruna Shantha, Commanding Officer, 38th Battalion National Cadet Corps was the chief guest for this program,

Mr. S. Venugobalraj, Coordinator of Kalkudah zone (NCC) , as a special guest, there were some principals who are belongs to E-Company, Master in-charges, parents, non Commissioned officers and Cadets participated in the program.

This program was organized by the E-Company Commander Lt S. Stanley.

03/07/2024

79th anniversary
School day

14/06/2024
 #மீண்டும்_முதலிடம் மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் 2024.05.21 இடம்பெற்ற 38வது படைப்...
13/06/2024

#மீண்டும்_முதலிடம்

மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய பாதுகாப்பு கடெட் அணியினர் 2024.05.21 இடம்பெற்ற 38வது படைப்பிரிவின் தெரிவு முகாமில் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி படைப்பிரிவின் சார்பில் பங்கேற்ற 20 பாடசாலை அணிகளுள் வெற்றி பெற்று, அதன் பின்னர் 2024.06.09 முதல் 2024.06.13வரை ரன்தம்பே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான கணிப்பீட்டு முகாமில் 29 ஆண்கள் பாடசாலைகளுள் பல சிங்கள மொழி பாடசாலைகளை பின் தள்ளி 06 வது இடத்தினையும்
தமிழ் மொழி மூலப் பிரிவில்
01ம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கணிப்பீட்டு முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர், பொறுப்பதிகாரி (Platoon Commander) லெப்டினன் சுந்தரராஜா ஸ்ரன்லி, சாஜன் ருபீபன், மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு உதவிய petty officer ஜெயதுங்க, முன்னாள் கம்பனி சாஜன் மேஜர் எஸ் பிரதீபன் ஆகியோருக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

கடந்த 2018,2019,2022,2023 ஆகிய வருடங்களிலும் தொடர்ச்சியாக முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு 2023ல் அதி சிறந்த பாடசாலைகளின் ஹெர்மன் லோஸ் சவால் கிண்ணத்தில் தேசிய முகாமில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(2020, 2021 ல் கொவிட் 19 காரணமாக மாகாண மட்டப் போட்டிகள் நடைபெறவில்லை)

21/05/2024

கல்குடா கல்வி வலயத்தின் 2 பாடசாலைகள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன
1. மட்/ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தி.
2. மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி
எதிர்வரும் 2024.06.02 பயிற்சி முகாம் ரன்தம்பேயில் மாகாண முகாம் ஆரம்பமாகவுள்ளது

07/04/2024

கடந்த ஆண்டு தேசிய மட்டத்தில் சாதனை படைத்த (hermonloos) எமது பாடசாலை அணியின் சான்றிதழ்களை பணிப்பாளர் விறிகேடியர் சுதந்த பொன்சேக்கா அவர்களிடமிருந்து சாஜன்ற் அருக்க்ஷன் 2024.04.07 இன்று திறந்து வைக்கப்பட்ட 2வது பயிற்சி முகாம் முல்லைத்தீவில் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களும் கலந்து கொண்டார்.

Address

Sittandy
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence Cadet - BT/KK/Vantharumolai MMV, Sittandy. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share