01/09/2025
சிவாநந்த வித்தியாலய உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மற்றுமொரு படிக்கல்
2026 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்காக கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில், பெற்றோரின் அனுமதியுடன் 13 மாணவர்கள் விடுதியில் தங்கியவாறு கல்வி கற்கும் புதிய கல்வி செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்திட்டம், பாடசாலையின் கணித மற்றும் விஞ்ஞான பிரிவு தலைவர் திரு. சுகந்தன் ஆசிரியர் அவர்களின் முயற்சியால், சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்களினால் இன்று விடுதியில் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதியதிபர்கள் திரு. குலேந்திரகுமார், திருமதி யாழினி தனுஷன், உதவி அதிபர் திரு. உருத்திரகரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், 1990ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, ரூ. 575,000 பெறுமதியான Smart Board ஒன்றை 1990ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் வழங்கியிருந்தனர். அவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கல்வி முயற்சி, முழுமையாக அதிபரின் தலைமையிலும், திரு. சுகந்தன் ஆசிரியரின் அர்ப்பணிப்பாலும், பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பாலும் இடம்பெறுகிறது.
இச்செயல்திட்டத்திற்கு பங்களித்த திரு. சுகந்தன் ஆசிரியர், அதிபர், பிரதியதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, பழைய மாணவரும் பெற்றோரும் ஆன திரு. ஜெகன் (1990 A/L Batch) அவர்களுக்கு எமது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Another Milestone in the Educational Growth of Shivananda Vidyalaya Advanced Level Mathematics and Science Students
With the consent of parents, 13 students who will be sitting for the 2026 Advanced Level Examination in the Mathematics and Science streams have begun pursuing their studies while staying in the hostel under a new educational program.
This program, initiated through the dedicated efforts of the Head of the Mathematics and Science streams, Mr. Suganthan sir , was ceremonially inaugurated today at the hostel by Swami Neelamadhavananda Ji Maharaj.
The inaugural event was graced by the presence of Deputy Principals Mr. Kulendrakumar, Mrs. Yazhini Thanushan, Assistant Principal Mr. Uruthirakaran, the Secretary of the School Development Society, the former President of the Old Students’ Association, the former Secretary of the School Development Society, members of the 1990 A/L batch, and several alumni.
To support the academic activities of these students, a Smart Board worth Rs. 575,000 was generously donated by the 1990 Advanced Level batch students. We extend our heartfelt gratitude to them.
This initiative is being successfully carried out under the leadership of the Principal, the commitment of Mr. Suganthan, and the full cooperation of the parents.
We sincerely thank Mr. Suganthan, the Principal, Deputy Principals, and parents for their invaluable support. In particular, we express our special gratitude to Mr. Jegan (1990 A/L Batch), who is both an alumnus and a parent