Regional Director of Health Services, Batticaloa

Regional Director of Health Services, Batticaloa Office of the Regional Director of Health Services

ஜூன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு, உங்கள் பிள்ளையின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் கண்காணிப்...
02/06/2026

ஜூன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு, உங்கள் பிள்ளையின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை நினைவுகூர்வோம்.

இந்த ஜூன் மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட உங்கள் பிள்ளையை உங்கள் பிரதேச பொதுச் சுகாதார மருத்துவ மாது (PHM) நடாத்தும் வளர்ச்சிக் கண்காணிப்பு அமர்விற்கு அழைத்து செல்லுங்கள்.

அங்கு அளக்கப்படும் உங்கள் பிள்ளையின் உடல் நிறை/எடை மற்றும் உயரத்தின் அளவீடுகள் மூலம் பின்வருவனவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்:

* போசாக்குக் குறைபாடு
* அதிக உடல் எடை/ நிறை
* வளர்ச்சி தொடர்பான ஆரம்பநிலை பிரச்சினைகள்

தொடர்ச்சியான வளர்ச்சிக் கண்காணிப்பு, உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் வளர உதவுகிறது.

ஆரோக்கியமான எதிர்காலம் இன்று நாம் எடுக்கும் சின்னச் சின்ன நடவடிக்கைகளிலிருந்தே ஆரம்பமாகிறது.

“புகையிலையற்ற வாழ்க்கை – ஆரோக்கியமான எதிர்காலம்”ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புகையிலை ஒழிப்பு ...
31/05/2026

“புகையிலையற்ற வாழ்க்கை – ஆரோக்கியமான எதிர்காலம்”
ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது
புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகையிலையற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் இரண்டாம் நிலைப் புகை (Second-hand Smoke) மூலம் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலை ஏன் ஆபத்தானது?
புகையிலையில் 7000 க்கும் மேற்பட்ட இரசாயனப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பல புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை.
புகையிலைப் பயன்பாட்டினால்
* நுரையீரல் புற்றுநோய்
* வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்
* இதய நோய் மற்றும் பக்கவாதம்
* சுவாசக் கோளாறுகள்
* கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பா திப்புகள் ஏற்படுகின்றன. இரண்டாம் நிலைப் புகை (Second-Hand Smoke)
புகைப்பிடிக்காதவர்களும் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் புகையை சுவாசிக்க நேரிடுகிறது. இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். 1. பொருளாதார பாதிப்பு
ஒரு நபர் தினமும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களுக்காக செலவிடும் பணம், மாதாந்திரமாகவும் வருடாந்திரமாகவும் பெரும் தொகையாக மாறுகிறது. அந்த பணத்தை குடும்ப நலன், கல்வி அல்லது சேமிப்புக்காக பயன்படுத்த முடியும்.
புகையிலையைத் தவிர்ப்பதன் மூலம்:
* நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.
* புற்றுநோய் அபாயம் குறையும்.
* குடும்பத்தின் பொருளாதார சுமை குறையும்.
* ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
* சுவாசம் சீராகும்
* இதய நோய் அபாயம் குறையும்
* உடல் சக்தி அதிகரிக்கும்
* குடும்பத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
* பணச் சேமிப்பு அதிகரிக்கும்
* ஆயுள் நீடிக்கும்
நமது பொறுப்பு
புகையிலையை விடுவோம் – உயிர்களைக் காப்போம்!"
இன்றே புகையிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; நாளைய தலைமுறையை பாதுகாப்போம்!
இந்த சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தில், நாமும் நமது குடும்பத்தினரும் புகையிலையற்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிபடுவோம். பொதுமக்கள் இடங்களில் புகைப்பிடித்தல் தடை
பின்வரும் இடங்களில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது:
* வைத்தியசாலைகள்
* பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
* அரச அலுவலகங்கள்
* பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து
* உணவகங்கள் மற்றும் பல மூடப்பட்ட பொதுமக்கள் இடங்கள்
சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
21 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு விற்பனை தடை
21 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு சிகரெட் அல்லது வேறு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும்.
4. விளம்பரங்கள் முழுமையாக தடை
சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களுக்கான
* தொலைக்காட்சி விளம்பரம்
* வானொலி விளம்பரம்
* பதாகை மற்றும் போஸ்டர் விளம்பரம்
* விளையாட்டு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை
என அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
4. சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படம் கட்டாயம்
2015 திருத்தச் சட்டத்தின் படி, சிகரெட் பெட்டியின் முன் மற்றும் பின்புறத்தின் 80% பகுதியை சுகாதார எச்சரிக்கை படங்கள் ஆக்கிரமிக்க வேண்டும்.
மெல்லும் புகையிலை மற்றும் சில புதிய புகையிலைப் பொருட்கள்
மெல்லும் புகையிலைப் பொருட்கள் (Smokeless To***co) விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மின்னணு புகையிலை (E-cigarette) மற்றும் Heated To***co Products தொடர்பான விற்பனை, இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்தலுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
சட்டத்தின் முக்கிய நோக்கம்
* இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்கள்:
* புகையிலையால் ஏற்படும் நோய்களை குறைத்தல்
* இளைஞர்களை புகையிலையிலிருந்து பாதுகாத்தல்
* பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல்
* புகையிலைப் பயன்பாட்டை குறைத்தல்
புகையிலை ஒரு தனிப்பட்ட பழக்கம் மட்டுமல்ல; அது சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பொதுச் சுகாதார பிரச்சினை.
இலங்கை சட்டமும் புகையிலைக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக புகையிலையற்ற வாழ்வை தேர்வு செய்வோம்.

தலசீமியா முதலாம் காலாண்டு  மீளாய்வுக் கூட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்...
18/05/2026

தலசீமியா முதலாம் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் தொற்றா நோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் ம. ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் 12/5/2026 இல் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், டாக்டர் பா. மைதிலி, ஆதார வைத்தியசாலைகளின் மருத்துவ அத்தியட்சகர்கள், பேராசிரியர் பி. மயூரதன் , டாக்டர் சத்யசாகரன் (consultant physician) டாக்டர் பிரேமினி (consultant physician), மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொற்றா நோய் வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலசீமியா நிலைய பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், சிரேஷ்ட மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியளாளர்கள், அத்துடன் தொண்டு நிறுவனமான Shed caritas, Rotarac ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது தலசீமியா நோயாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான பல முக்கியமான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன் பொலன்னறுவை உள்ளிட்ட பிற வைத்தியசாலைகளில் பணியாற்றும் குருதி இயல் நிபுனர் (Consultant Hematologists)
அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் மற்றும் தலசீமியா பரிசோதனை திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மேலும் மட்டக்களப்பு பிராந்திய தலசீமியா மையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை 48 நோயாளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மாதாந்திர அனுமதிகள், இரத்த மாற்று (Blood Transfusion) சேவைகள் மற்றும் பிற புள்ளிவிவரங்களும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டன.

அதேபோல் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட தலசீமீயா பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளும் முன்வைக்கப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுமார் 1400 மாணவர்கள் மேலதிக பரிசோதனைக்காக மட்/ போதனா வைத்தியசாலைக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தலசீமியா நோயாளர்களின் சேவைகளை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் பரிசோதனை அளவுகளை அதிகரிகவும் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பல பயனுள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்...
12/05/2026

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கும் விழா”

2025ஆம் ஆண்டிற்கான நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையிலான தர முகாமைத்துவம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 30.04.2026 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் ஆர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

“ஒவ்வொரு சிசுவுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பராமரிப்பு” (Safe Care for Every Newborn and Every Child) என்ற 2025ஆம் ஆண்டிற்கான கருத்துப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நோயாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சுகாதார சேவைகளின் தரத்தையும் திறனையும் உயர்த்துதல் மற்றும் திட்ட முன்மொழிவுகள் மூலம் புதுமை மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தை வைத்தியசாலைகளுக்கிடையில் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு இந்நிகழ்வில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், பணிமனையின் தர முகாமைத்துவ மற்றும் நோயாளர் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சகாயதர்ஷினி அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

பாதுகாப்பான மருந்து விநியோக முறைகளை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மருந்தகங்கள் உறுதி மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட சிறந்த மருந...
28/04/2026

பாதுகாப்பான மருந்து விநியோக முறைகளை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மருந்தகங்கள் உறுதி

மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட சிறந்த மருந்தக நடைமுறைகள்' (Good Pharmacy Practices) குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்திற்கு அமைவாக மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும், சட்டதிட்டங்களுக்கு அமையச் செயற்படவும் மருந்தக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து உறுதியளித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் 25/4/2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல், தொழில்சார், உணவு மற்றும் மருந்துப் பாதுகாப்பு வைத்திய அதிகாரி Dr. மு அச்சுதன் அவர்களின் ஒருங்கமைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் (NDDCB) இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மருந்தகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்திய பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்கள், மருந்துகளைப் பாதுகாப்பான முறையில் விநியோகிப்பதற்கான ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மாவட்டத்தில் மருந்து ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் இத்தகைய முயற்சிகளுக்கு முழுமையான நிர்வாக ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 72 மருந்தகங்களின் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டமை, தொழில்முறைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியைப் பிரதிபலித்தது.

Dr. எம். அச்சுதன் அவர்கள்
மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாதல் மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள் குறித்து விளக்கினார்.

என். விமலசேகரன் (உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்): மருந்தகங்களை நிர்வகிக்கும் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை விவரித்தார்.

பி. தினேஷ் (NDDCB மாவட்ட ஒருங்கிணைப்பாளர்மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அதிகரித்து வரும் போக்கு குறித்து சுட்டிக்காட்டினார்.

முக்கிய தீர்மானம்:
இந்த வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான முடிவாக, வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி எவ்வித மருந்துகளையும் விநியோகிப்பதில்லை என மருந்தக உரிமையாளர்கள் ஏகமனதாகச் சம்மதித்தனர். இந்த நடவடிக்கையானது மருந்து துஷ்பிரயோகத்தைக் குறைப்பதற்கும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

வெப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சில நடை முறைகள்
08/04/2026

வெப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சில நடை முறைகள்

04/04/2026

மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் பணிமனையினால், மட்டக்களப்பு மாநகர சபையின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய நீர் தாங்கி வாகனம் ஒன்று இன்று மாநகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நகரில் தண்ணீர் விநியோக சேவைகளை மேம்படுத்தவும், அவசரகால சூழ்நிலைகளில் மக்களுக்கு விரைவாக குடிநீர் வழங்கும் திறனை அதிகரிக்கவும் இந்த நீர் தாங்கி வாகனம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் பணிப்பாளர், மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது உரையாற்றிய மாநகர முதல்வர் அவர்கள், நகர மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகள் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த நீர் தாங்கி வாகனம் நகரின் நீர் விநியோக செயல்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட நீர் தாங்கி வாகனம், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகின்ற சூழ்நிலைகளில் மக்களுக்கு உடனடி தீர்வாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை மனுக் கோரல்  (சிவில் வேலைகள்)-------------------------மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் நிலையங்களுக்கு மேற்கொள...
09/03/2026

விலை மனுக் கோரல்
(சிவில் வேலைகள்)
-------------------------
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் நிலையங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானம், விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக தகுதியான ஒப்பந்ததாரர்களிடமிருந்து விலைமனு கோரப்படுகிறது.

ஆர்வமுள்ள ஒப்பந்ததாரர்கள் 10.03.2026 முதல் 23.03.2026 வரை அலுவலக நேரங்களில் விண்ணப்பித்து டெண்டர் ஆவணங்களை பெறலாம்.

சமர்ப்பிக்கும் இறுதி நாள்: 24.03.2026 – காலை 10.00 மணி

மேலும் தகவல்களுக்கு:
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,
திருமலை வீதி, மட்டக்களப்பு
+94 652 224 465, +94 652 222 863

Invitation for Bids
(Civil Works)
-----------------

Sealed bids are invited from qualified contractors for construction, expansion, and renovation works to be carried out at health institutions under the Regional Directorate of Health Services, Batticaloa.

Interested contractors may obtain the bidding documents by submitting an application during office hours from 10.03.2026 to 23.03.2026.

Deadline for submission:
24.03.2026 – 10.00 a.m.

For further information:
Office of the Regional Director of Health Services,
Batticaloa.

Regional Director of Health Services, Batticaloa, Batticaloa
Trinco Road, Batticaloa.
+94 652 224 465, +94 652 222 863

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்நதுஉங்கள் ஆலோசனைகளையும் முறைப்பாடுகளையும் நேரடியாக   க்கு தெரிவிக்கலாம்.-----...
28/02/2026

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்நது
உங்கள் ஆலோசனைகளையும் முறைப்பாடுகளையும் நேரடியாக க்கு தெரிவிக்கலாம்.
-------------------------------------------
#மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகள் தொடர்பான ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகளை நேரடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு (RDHS)
070 571 1151 என்கிற Whatsapp மூலமாக அனுப்பலாம்.

”உங்கள் கருத்துக்கள், புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும், மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் பங்காற்றும்.”

நன்றி

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் #2026 புத்தாண்டு கடமைகள் உறுதிமொழியுடன் ஆரம்பம் ------------------------...
02/01/2026

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்
#2026 புத்தாண்டு கடமைகள் உறுதிமொழியுடன் ஆரம்பம்
-----------------------------------------------------------

2026 ஆம் புதிய ஆண்டிற்கான கடமைப் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, 01.01.2026 அன்று வியாழக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், தேசியக் கொடியை ஏற்றிவைத்ததுடன் ஆரம்பமானது.

“மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவோம்” என்ற உயரிய நோக்குடன், அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழி மற்றும் சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர், புதிய அரச கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து விளக்கமளித்து, அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, 2026 ஆண்டுக்கான தமது கடமைகளை உற்சாகத்துடன் ஆரம்பித்தனர்.

#2026புத்தாண்டு
#அரசசேவை
#சுகாதாரசேவைகள்
#உறுதிமொழி
#மக்களுக்கானசேவை

Address

Trinco Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 16:00
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:00

Telephone

+94652224465

Website

Alerts

Be the first to know and let us send you an email when Regional Director of Health Services, Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Regional Director of Health Services, Batticaloa:

Share