02/06/2026
🌿 ஒரு முன்மாதிரி நகரை உருவாக்கும் பயணத்தின் மேலும் ஒரு முன்னேற்றப் படி. 🏙️ 🌿 හරිත නගරයක් සඳහා අපි එක්වෙමු! 🌿
அக்குறணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்மாதிரி நகரை உருவாக்கும் முயற்சியின் மேலும் ஒரு கட்டமாக, அலவதுகொடை பசுமை நண்பர்கள் ( Haritha Mithuru Forum ) சங்கமும் அக்குறணை பிரதேச சபையும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அலவதுகொடை நகரில் மரநடுகை நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்தனர்.
அலவதுகொடை நகரம் முழுவதும் இம்மரநடுகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் அக்குறணை நகரிலும் இந்த வேலைத்திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைத்தல், நகரின் அதிகரித்துள்ள வெப்பநிலையை கட்டுப்படுத்தல் மற்றும் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரை உருவாக்குதல் ஆகியவை இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், நடப்படும் மரங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில், வர்த்தக சமூகத்தினரும் பிரதேச மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்நிகழ்வில் ஹரித மிதுரு சங்க உறுப்பினர்கள், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவருமான ஹமீட் ஏ. காதர் அவர்கள், அலவதுகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அலவதுகொடை வர்த்தக சமூகத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
අකුරණ ප්රාදේශීය සභාව විසින් ක්රියාත්මක කරනු ලබන නගර අලංකරණ වැඩසටහනට සමගාමීව, අලවතුගොඩ හරිත මිතුරු සංසදය හා අකුරණ ප්රාදේශීය සභාව එක්ව අලවතුගොඩ නගරයේ රුක් රෝපණ වැඩසටහනක් පසුගිය ඉරිදා දින සාර්ථකව ක්රියාත්මක කරන ලදී.
අලවතුගොඩ නගරය පුරා මෙම වැඩසටහන ක්රියාත්මක වන අතර, ඉදිරි දිනවලදී අකුරණ නගරයේද මෙය පුළුල් කිරීමට සැලසුම් කර ඇත. ස්වාභාවික ආපදා අවම කිරීම, නගරයේ උෂ්ණත්වය පාලනය කිරීම සහ හරිත, පරිසර හිතකාමී නගරයක් ගොඩනැගීම මෙම වැඩසටහනේ ප්රධාන අරමුණු වේ.
මෙම රෝපණය කරන ලද ගස් ආරක්ෂා කිරීම හා නඩත්තු කටයුතු සාර්ථක කර ගැනීම සඳහා වෙළඳ ප්රජාව සහ ප්රදේශවාසීන්ගේ සහයෝගය අත්යවශ්ය වේ. එබැවින් මෙම හරිත මෙහෙවරට ඔබගේ දායකත්වය ලබා දෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටින අතර මෙම වැඩපිළිවෙල මෙහෙයවීම සිදුකරනු ලබන හරිත මිතුරු සංසදය හට ද මා ස්තූතිවන්ත වනවා.
🌿 பசுமை நகரை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 🌿