மலரட்டும் மணிமுக்தாறு

மலரட்டும் மணிமுக்தாறு "நதியில் ஓர் நடை பயணம்"
(1)

"நதியில் ஓர் நடை பயணம்"

விருத்தாசலம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு நதி , இப்போது பாழ்பட்டு கிடக்கிறது...

இந்த நதியின் அழகில், கரையோர மணல்பரப்பில் விளையாடிய நகரவாசிகள் , இப்போது இந்த மணிமுத்தாறை தாண்டும் போது , ஒரு ஏக்கத்தோடு கடப்பதை காணலாம்....

இந்த மணிமுத்தாறு நதியை என்ன செய்து இதை தூய்மை படுத்தலாம் என்று ஒவ்வொரு விருத்தாசலம் நகரவாசிகளுக்கும் என்ணமுண்டு...

அதை யார் செயல்படுத்துவத

ு?...

கடந்த 22-07-2017 விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் வாராந்திர கூட்டம் முடிந்தவுடன், உறுப்பினர்கள் கலந்துரையாடலில் , நாம் ஏன் மணிமுத்தாறு நதியின் தூய்மை திட்டத்தை துவக்க கூடாது? என்ற எண்ணம் அனைத்து ரோட்டரி உறுப்பினர்களுக்கும் எழுந்தது...

நாம் இல்லை என்றால் வேறு யார்?

ரோட்டரியால் முடியாதது ஒன்றும் இல்லை...

யாருமே முடியாது என்று ஒதுங்கிய போலியோவை , உலகம் முழுவதும் ஒழித்தது ரோட்டரிசங்கம்...

ஒரே இரவில் முடிவு எடுத்து , மறுநாள் " நதியில் ஓர் நடை பயணம் " என்று ரோட்டரி உறுப்பினர்களுடன் , 23-07-2017 அன்று மாலை 4 மணியளவில் மணிமுத்தாறு நதியில் கள ஆய்வு செய்ய களமிறங்கியது , விருத்தாசலம் ரோட்டரி சங்கம்...

ஒரு துவக்கத்தை தொடங்கியிருக்கிறோம்...

நம்மால் முடியாதது இல்லை...

இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள் , பத்திரிக்கை நிருபர்கள், ஊடக நண்பர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் விருத்தாசலம் நகரத்தின் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்தால் மணிமுத்தாறு நதியை சுத்தப்படுத்தலாம்....

Address

Palakarai
Vriddhachalam
606001

Alerts

Be the first to know and let us send you an email when மலரட்டும் மணிமுக்தாறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மலரட்டும் மணிமுக்தாறு:

Share

Category