24/04/2025
உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
👉உங்கள் வீட்டிற்கு அருகிலேயே பள்ளி.
👉அலைச்சல் இல்லை.
👉சோர்வு இல்லை.
👉பாதுகாப்பு.
👉ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தால் அரசு வேலைவாய்ப்பில் 20% PSTM முன்னுரிமை.
👉மருத்துவம் பொறியியல் கால்நடை மருத்துவம் வேளாண்மை மற்றும் சட்டம் போன்ற தொழில் படிப்புகளை முற்றிலும் கட்டணமின்றி படிக்க அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீடு.
👉7.5 ஒதுக்கீட்டிற்கு பின்தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
👉இந்த 7.5 % இட ஒதுக்கீடு, அரசு கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும் பொருந்தும்.
👉இந்த 7.5% இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம்.
🔴7.5% ஒதுக்கீடு பெற தேவையான தகுதிகள்:
🔹 அரசுப்பள்ளி மாணவராக, 6-12 வரை படிப்பு அல்லது RTE சட்டம் 2009 -ன் படி தனியார் பள்ளியில் 6, 7, 8 படித்த ஒருவர் 9, 10, 11, 12 வகுப்புகளை ஏதாவது ஒரு அரசுப்பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
(அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்றவர்களுக்கு இந்த 7.5% ஒதுக்கீடு இல்லை)
🔹 Arts Group மாணவ மாணவிகளும் 7.5% கோட்டா மூலம் சட்டப்படிப்பு படிக்க முடியும். ( சட்டப்படிப்பில் இடம் கிடைக்க +2 ல் 550 / 600 மதிப்பெண்கள் தேவைப்படலாம்)
👉மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ்
👉6 - 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் குழந்தைகளுக்கு இளநிலை படிப்பு காலம் வரை மாதாமாதம் ரூ.1000 ஊக்கத் தொகை.
👉TRB தேர்வின் மூலம் பல ஆயிரம் பேருடன் போட்டியிட்டு தேர்வான திறமையான ஆசிரியர்கள்.
👉மாதாந்திர Online and offline பயிற்சிகள் பெற்று Update ஆகும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் .
👉Hi Tech Lab வசதி.
👉வாரம் தோறும் Hi Tech Lab -ல் Online தேர்வுகள்.
👉பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மணற்கேணி செயலி மூலம் Online பயிற்சிகள்.
👉சின்ன சின்ன அறிவியல் சோதனைகள் மூலம் இளம் அறிவியல் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு பிடிக்கும் வானவில் மன்றங்கள்.
👉வட்டார மாவட்ட மாநில அளவிலான கலைத்திருவிழாகள் மூலம் சிறந்த கலைத்திறன் கொண்ட கண்மணிகளை கண்டறிந்து வெளிநாடு விமானச் சுற்றுலா.
👉மண்டல மாவட்ட மாநில விளையாட்டு போட்டிகளில் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிப்பு.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் குழு பரிந்துரை அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, 2021, ஜூன் 26-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள 580 இடங்களில் 44 இடங்களும்
வேளாண் இளநிலை படிப்புகளில் உள்ள 4 ஆயிரம் இடங்களில் 300 இடங்கள் வரையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.
இதுதவிர இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 140-ல் 10 இடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும், சட்டப் படிப்புகளுக்கு அரசுஒதுக்கீட்டில் 1,651 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 124 இடங்கள் வரை மாணவர்களுக்கு கிடைக்கும்.
இவை தவிர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பெறும் பிற நலத்திட்ட உதவிகள்.👇👇👇
1. விலையில்லா சீருடை (1 முதல் 8 வரை)
2. இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை (10, 11, 12 வகுப்பு குழந்தைகளுக்கு)
3. விலையில்லா காலணிகள்
4. விலையில்லா புத்தகப்பை (1 முதல் 12 வரை)
5. விலையில்லா கணித உபகரணப்பெட்டி்(6 முதல் 10 வரை)
6. நிலவரைபடநூல் (6 முதல் 10 வரை)
7. விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் (1 முதல் 10 வரை)
8. விலையில்லா பாடநூல்கள் (1 முதல் 12 வரை)
9. விலையில்லா மிதிவண்டி (11)
10. பேருந்துப் பயண அட்டை (1 முதல் 12 வரை)
11. வருமானம் ஈட்டும் தந்தை விபத்தில் இறந்தால் .... இறந்தவரின் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.75000 வைப்பு தொகை.
தமிழ்நாடு அரசுப்பள்ளியில் நமது பிள்ளைகளை சேர்ப்பதால் எதிர்காலத்தில் அவர்கள் நமது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நமது மாநில அரசு வழங்கும் 20% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை உறுதியாகும்....
பொன் வீர சத்தியராஜ்
கல்யாணம்பூண்டி ஊராட்சி
விழுப்புரம் மாவட்டம்