18/09/2026
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் *டாக்டர்.இ.எம். சுதர்சன நாச்சியப்பன்* அவர்களின் மறைவையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மாவட்ட தலைவர் *திரு.செ.சிவா* அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகம் ராஜீவ் காந்தி அரங்கத்தில் இன்று 18/9/2029 காலை 10 மணி அளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் N.செல்வராஜ், முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் கோ.பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி,மாவட்ட பொது செயலாளர் காஜா மொய்தீன்,ஜீ.ஆர்.சீனுவாசன்,Lion தனசேகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் அகமது,மாவட்ட செயலாளர் பாரி பாபு, மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மாவட்ட SC/ST பிரிவு தலைவர் சேகர், மாவட்ட OBC பிரிவு தலைவர் வழக்கறிஞர் செல்வம், கண்டமங்கலம் வட்டாரத்தை ராதா, ஐயப்பன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வேலு,சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மதியழகன், சந்தாண கிருஷ்ணன், முன்னாள் கோலியனூர் வட்டாரத் தலைவர் அன்பு, அமைப்பு சாரா தொழிலாளர் நலன் மாவட்ட தலைவர் சத்தியசீலன், சின்னபாபு சமுத்திரம் தயாநிதி, மகிலா காங்கிரஸ் நிர்வாகிகள் விக்டோ பாய், பரிமளா கஜேந்திரன், ராஜேஸ்வரி, பொயப்பாக்கம் பார்வதி, மற்றும் இயக்க நிர்வாகிகள் திரளாக இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.