History & Lives of the Royal heritage of Vettavalam - வேட்டவலம் அரச வரலாறு

  • Home
  • India
  • Vettavalam
  • History & Lives of the Royal heritage of Vettavalam - வேட்டவலம் அரச வரலாறு

History & Lives of the Royal heritage of Vettavalam - வேட்டவலம் அரச வரலாறு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from History & Lives of the Royal heritage of Vettavalam - வேட்டவலம் அரச வரலாறு, Palace, Vettavalam.

 #திருவண்ணாமலை_அண்ணாமலையார் கோவிலுக்கு அபிஷேக தானம் செய்த கல்வெட்டு.  #திருவண்ணாமலையார் கோவில் கல்வெட்டு.  #பார்க்கவகுல ...
06/12/2022

#திருவண்ணாமலை_அண்ணாமலையார் கோவிலுக்கு அபிஷேக தானம் செய்த கல்வெட்டு. #திருவண்ணாமலையார் கோவில் கல்வெட்டு. #பார்க்கவகுல அரசரின் சாசனம் உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலையார் கோவிலில் 🇧🇴⚔️🗡️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

#தாண்டவ_வாணாதிராயரின் பேரன் #தாண்டவ_வாணாதிராய_பண்டாரத்தார்

கிபி 1591 #வேட்டவலம்_தாண்டவ_வாணாதராயர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அபிஷேக தானம் செய்த கல்வெட்டு.

கவனிக்க வேண்டிய விடயம்:

இதில் #தாண்டவ_வாணாதிராயரின் பேரன் #தாண்டவ_வாணாதிராய_பண்டாரத்தாராக குறிப்பிடப்படுகிறார். (தாத்தா(வாணாதராயர்) பல்வேறு பண்டாரங்களை(செல்வ கருவூலங்கள்) உருவாக்கி அதனை நிர்வாகம் செய்ய பல பண்டாரத்தார்களையும் நியமனம் செய்திருக்கிறார். இதில் ஒரு பண்டாரத்தார் தன் பேரனான அதே #வாணாதிராய மரபில் வந்தவர்)

இவர் உருவாக்கிய மாணிக்க வாணாதராய பண்டார பாளையம், இவர் பேரன் பெயரில் உருவாக்கிய தாண்டவ வாணாதிராய பண்டாரத்தார் பாளையம், அந்தக்காலம் தீர்த்த பண்டாரத்தார் பாளையம், மெய்போகராய பண்டாரத்தார் பாளையம் உட்பட மேலும் பல வரிவகைகளும் சேர்த்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அபிஷேக ஆராதனைகளுக்காக தரப்பட்டன.
#அதிகம்_பகிருங்கள்
#பார்க்கவகுலம் #மலையமான் #நத்தமான் #சுருதிமான் #நயினார் #மூப்பனார் #உடையார்

  captured Old Gingee and defeated Arcot nawab soldiers.  #ஆற்காடு நவாபுகளுக்கு எதிராக தஞ்சாவூர் நாட்டிலும் மற்றும் புது...
28/11/2022

captured Old Gingee and defeated Arcot nawab soldiers.

#ஆற்காடு நவாபுகளுக்கு எதிராக தஞ்சாவூர் நாட்டிலும் மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான் பகுதிகளிலும் ராமநாதபுர மறவர் நாட்டிலும் சிக்கல்கள் எழுந்தன. அச்சமயத்தில் ஆற்காடு அருகமைந்த #திருவண்ணாமலை பகுதியின் #வேட்டவலம்_பண்டாரி, #ஆற்காடு_நவாபு மற்றும் மாபூஸ் கான் படைகளை வீழ்த்தி பழைய செஞ்சியை கைப்பற்றி கொண்டார். இப்பாளையக்காரரின் பெயர் #வேட்டவலம் #பெரிய_அய்யா. இப்போரில் நவாபு மற்றும் முக்கிய தளபதிகள் நேரடியாக களமிறங்க போரிட்டனர் என்பது குறிப்பிட தக்கது.
தகவல் - கர்நாடக போர்களில் நசீர் ஜங் - சி எஸ் சீனிவாசாச்சாரி

The warrior kings Vettavalam poligars belongs to community, their origin is from of .

 #ஆற்காடு_நவாபுகளின் படைகளை தாக்கி அவர்களின் தலைகளை எடுப்பேன் என்ற   #வேட்டவலம்_அரசர்கிபி 1747 களில் ஆற்காடு இசுலாமிய நவ...
16/10/2022

#ஆற்காடு_நவாபுகளின் படைகளை தாக்கி அவர்களின் தலைகளை எடுப்பேன் என்ற #வேட்டவலம்_அரசர்

கிபி 1747 களில் ஆற்காடு இசுலாமிய நவாபுகளுக்கும் வேட்டவலம் அரசர்களுக்கும் கடும் யுத்தம் நடந்த காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் பிரெஞ்சு கவர்னர் ஜெனரல் டியூப்லெக்ஸ் அவர்கள் வேட்டவலம் பாளையக்காரர்களிடம் நவாபு படைகளுக்கு எதிராக போர் நடத்த கோரிக்கை விடுக்கிறார். #வேட்டவலம்_பாளையக்காரர் "நீங்கள் விரும்பினால் நவாபுகளின் படையை தாக்கி அவர்களின் #தலைகளை உங்களிடம் தருகிறேன், இதற்கு பிரதியுபாரமாக பல்வேறு ஆயுதங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் தேவைக்கேற்ப நானும் படையுதவி செய்கிறேன்" என பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

#பார்க்கவகுல பாளையக்கார ஜமீன் அரசர்

 #திருவண்ணாமலை மாவட்டம்  #வேட்டவலம் பாளையத்தின்  #அரசர்களாக உள்ள  #பார்க்கவகுல அரசர்களின் ஆட்சிப்பகுதியானது மிகப்பழமையும...
15/10/2022

#திருவண்ணாமலை மாவட்டம் #வேட்டவலம் பாளையத்தின் #அரசர்களாக உள்ள #பார்க்கவகுல அரசர்களின் ஆட்சிப்பகுதியானது மிகப்பழமையும் மிக பெரிய நிலப்பரப்பையும் உள்ளடக்கியது.

அது இன்றைய #திருக்கோவிலூரின் சில பகுதிகளும் #விழுப்புரம் மற்றும் #கள்ளக்குறிச்சியின் சில பகுதிகளும் #திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளும் உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாகும். இங்கு பல்வேறு #படை_நிலைகளும், #கோட்டை #கொத்தளங்களும் இருந்தமைக்கான பல்வேறு தடயங்கள் காணக்கிடைக்கிறன்றன. #வேந்தர்கள், #விஜயநகர, #இசுலாமிய, #வெள்ளையர்கள் காலம் முதல் நீடித்து நிலைத்து ஆட்சி தந்த #திருக்கோவிலூர்_மலையமான் வழியினர்களான #வேட்டவலம் அரசு நமது பெருமையின் அடையாளமாகும்.

Address

Vettavalam
606754

Website

Alerts

Be the first to know and let us send you an email when History & Lives of the Royal heritage of Vettavalam - வேட்டவலம் அரச வரலாறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category