காட்பாடி வடக்கு பகுதி திமுக

  • Home
  • India
  • Vellore
  • காட்பாடி வடக்கு பகுதி திமுக

காட்பாடி வடக்கு பகுதி திமுக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு

11/07/2026

கடந்த பருவமழையில் காட்பாடி மற்றும் கழிஞ்சூர் ஏரியின் உபரிநீரால், குறுகிய பாலங்களும் போதிய கொள்ளளவு இல்லாத கால்வாய்களும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் துயரத்தை உணர்ந்த நம் மண்ணின் மைந்தர், கழக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான திரு துரைமுருகன் அவர்கள், வெறும் ஆறுதல் வார்த்தைகளோடு நிற்காமல், நிரந்தர தீர்வை உருவாக்கும் உறுதியுடன் செயல்பட்டார்.

அதன் விளைவாக, பாண்டியன் மடுவு கால்வாயில் தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கால்வாயின் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று, பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், காட்பாடி நகர மக்கள் வரவிருக்கும் பருவமழையை அச்சமின்றி, நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனு�

வார்டு–3 பகுதியில் பணியாற்றி வரும் 4 தூய்மை பணியாளர்கள், பணி நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த செய்தி மிகுந்த வ...
07/07/2026

வார்டு–3 பகுதியில் பணியாற்றி வரும் 4 தூய்மை பணியாளர்கள், பணி நேரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது.

அச்சமயம் வெளியூரில் இருந்த காரணத்தால் உடனடியாக நேரில் வந்து நலம் விசாரிக்க இயலவில்லை. ஊர் திரும்பியவுடன், *மண்டலக் குழுத் தலைவர் திருமதி புஷ்பலதா வன்னியராஜா* அவர்கள் காயமடைந்த தூய்மை பணியாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் முழு குணமடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

26/06/2026

காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் திரு. G. வன்னியராஜா அவர்களின் அண்ணன் மகன் GP கமல்ராஜ் – V. மஞ்சு அவர்களின் திருமணம், ஏழுமலையான் அருளாசியுடன் திருமலை திருப்பதியில் இனிதே நடைபெற்றது.

இணைந்த இந்த இல்லற வாழ்வு அன்பும், அமைதியும், செழிப்பும் நிரம்பி, எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல ஏழுமலையானை பிரார்த்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ✨🙏

#திருமணம்

18/06/2026

நமது மண்ணின் மைந்தர், கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு. துரைமுருகன் அவர்களின் தொடர் முயற்சியால் ரூ.90 கோடி மதிப்பீட்டில் உருவாகியுள்ள பிரம்மபுரம் – சத்துவாச்சாரி மேம்பாலம் காட்பாடியின் வளர்ச்சிக்கு புதிய மைல்கல்லாக திகழ்கிறது.

பல ஆண்டுகளாக மக்கள் சந்தித்து வந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும் இந்த பிரம்மாண்ட திட்டத்தை நேரில் பார்வையிடார்.

Development KatpadiFlyover

வேலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் திருமதி லீலா அலெக்ஸ் IAS அவர்களை, மண்டல குழுத்தலைவர் திர...
05/06/2026

வேலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் திருமதி லீலா அலெக்ஸ் IAS அவர்களை, மண்டல குழுத்தலைவர் திருமதி புஷ்பலதா வன்னியராஜா அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தார்.

அப்போது, காட்பாடி பகுதியின் மக்கள் நலன் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனு வழங்கப்பட்டு, அவற்றை விரைந்து செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திருமதி சித்ரா மகேந்திரன் அவர்கள் உடனிருந்தார்.

உழைப்பையே உயிர்மூச்சாகக் கொண்டு,தமிழகத்தின் வளர்ச்சிக்காகஇறுதி வரை பாடுபட்டமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்103-வது பிறந்தந...
03/06/2026

உழைப்பையே உயிர்மூச்சாகக் கொண்டு,
தமிழகத்தின் வளர்ச்சிக்காக
இறுதி வரை பாடுபட்ட
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
103-வது பிறந்தநாளில்
அவரது புகழுக்கு தலைவணங்குகிறோம்.

உழைப்பின் மறுபெயர் கலைஞர்!🖤❤️

#கலைஞர்

பவானி நகர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.7வது மாமன்ற உறுப்பினரும் மண்ட...
02/06/2026

பவானி நகர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

7வது மாமன்ற உறுப்பினரும் மண்டல குழுத் தலைவருமான திருமதி புஷ்பலதா வன்னியராஜா அவர்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News courtsey
02/06/2026

News courtsey

Address

Katpadi
Vellore
632007

Alerts

Be the first to know and let us send you an email when காட்பாடி வடக்கு பகுதி திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share