Sri chakra baala Tripura sundari charitable trust

Sri chakra baala Tripura sundari charitable trust SRI CHAKRA BALA TRIPURA SUNDARI CHARITABLE TRUST IS CREATED BY THE HIGHLY SPIRITUAL GURU SRI VAALAI S

This SRI CHAKRA BALA TRIPURA SUNDARI CHARITABLE TRUST aim to feed for poor, volunteer Are most welcome

28/03/2025

ஶ்ரீ மாத்ரே நமஹ
__________________________

7 ஆம் ஆண்டு சந்தான பாக்கியம் அருளும் மஹா யாகம்.

அன்புடையீர் வணக்கம்.

வேலூர் சத்துவாச்சாரி ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம் மற்றும் வாரணாசி ஶ்ரீ பீடம் சார்பில் சந்தான பாக்கியம் அருளும் மஹா யாகம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

பல வருடம் குழந்தை வரம் இல்லாமல். பல ஆலயங்கள், பரிகாரங்கள் செய்தும் பலன் இன்றி வாடும் தம்பதியர்களுக்கு மருத்துவத்தால் இயலாது என்று கைவிடப்பட்ட அன்பர்களுக்கு மிக மிக வர பிரசாதம் இந்த மஹா யாகம்., இது இரண்டு ஆண்டுகள் ஒரு முறை செய்யப்படும் 7 வது மஹா யாகம்.

இந்த மஹா யாகம் மூலம் உலகம் முழுவதும் 97% பயன் பெற்ற பக்தர்கள் ஏராளம். .

இந்த மஹா யாகம் மூலம் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

உண்மையான இறை நம்பிக்கை உள்ள அன்பர்கள் குழந்தை வரம் கொடுக்கும் இந்த மஹா யாகம், மற்றும் வழிபாடு முறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த மஹா யாகம் வாரணாசி ஶ்ரீ பீடம் மற்றும் வேலூர் ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம் சிருஷ்டித்த ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜி அவர்களின் ஆசியுடன்
( பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாலா அம்மா ) நடைப்பெற உள்ளது .

சங்கல்பம் செய்து கொள்ளும் பக்தர்களுக்கு வேலூர் ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம்.நேரில் வந்து யாக பூஜை பிரசாதம் பெற்று கொள்ளலாம்.

மேலும் யாக பூஜை கட்டணம் மற்றும் பூஜா விபரங்கள் பெற கீழ் வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை.
அரசு பதிவு எண்:16/21/BK -IV

பாலாஜி நகர் முதல் பிரதான சாலை,
ஃபேஸ் -3, சத்துவாச்சாரி.
வேலூர் -632009.

9488816113 /. 9488188152

நாள்: : 04/04/2025
இடம் : ரிஷிகேஷ்
நேரம்: காலை 4:15 மணிக்கு.

Jaya Jaya Sankara Hara Hara Sankara.With maha periyava blessings we have started  MAHA PERIYAVA ANNADHAAN SEVA, MANY MAN...
15/08/2023

Jaya Jaya Sankara Hara Hara Sankara.
With maha periyava blessings we have started MAHA PERIYAVA ANNADHAAN SEVA,
MANY MANY DEVOTEES OF MAHA PERIYAVA Contribution are helping for poor people food feeding,
KEEP ALWAYS SUPPORTING US FOR MAHA PERIYAVA FOOD FOR NEEDY .
ITS A TEAM WORK RESPECTABLE MAHA PERIYAVA DEVOTEES CAN CONTRIBUTE AS RICE BAGS, OR MONEY,
THOSE WHO ARE CONTRIBUTING MAHA PERIYAVA ARCHANA KUMKUMA, SRI SARVANANDAMAYA BALA PEEDAM BALA TRIPURA SUNDARI PHOTO WILL SEND TO YOUR ADDRESS,.

FOR CONTRIBUTION GPAY NUMBER, 7806917166
OR CONTACT US ON 9488188152.

IMPORTANT NOTE: WE DON'T HAVE ANY AGENT OR MEDIATOR FOR THIS CONTRIBUTION.

FOR MORE INFORMATION CONTACT US 9488188152.

06/06/2023

SRI VIDHYA SADHANA WORKSHOP ( LEVEL 1 & 2 )
BY OUR SRI SARVANANDAMAYA BALA PEEDAM VELLORE, ( SELF - REALISING CENTRE )

THE HIMALAYAS SPIRITUAL GURU

INTERESTED PERSON CAN CONTACT US THROUGH WHATSAPP 9488188152.

NO ONLINE CLASSES.

🙏Important information: DAILY WE ARE GETTING 300 ENQUIRIES, WE CAN'T REPLY AT SAME TIME,
PLEASE GIVE 48 HOURS TIME TO GET RESPONSE FROM US.

02/11/2022

அன்னைக்கு ஓர் ஆலயம்

பிரபஞ்சத்தின் முதல் தெய்வமாம் அருள்மிகு ஶ்ரீ வாலை தாய் ,

சித்தர்களின் தெய்வம், லோக மாதா அன்னை ஶ்ரீ வாலை குமரி,

அன்னை ஶ்ரீ வாலாம்பிகை, பாலாம்பிகை , வாலை என்று பல திரு நாமங்களுடன் ஆராதனை செய்யப்பட்டு வருகிறது ,

ஶ்ரீ பாலாம்பிகை அன்னை இக்கலியுகத்தில் மக்களுக்கு ஏற்படக்கூடிய, இன்னல்களை நீக்கி, வாழ்க்கையில் வெற்றி தரும் தெய்வமாக பல அற்புதங்களை அன்னையை நாடி வரும் அன்பர்களுக்கு நிகழ்த்திய வண்ணம் அன்னை ஶ்ரீ பாலாம்பிகை இருக்கின்றாள்,

கலியுகத்தில் நம்மை காத்திடும் அன்னைக்கு பல நாமங்களுடன் போற்றப்படும் நம் அன்னை பாலாம்பிகை ,
தன்னையே சரனாகதி என்று தஞ்சம் அடைந்தவர்களை ஏழு தலைமுறைகளுக்கு பகைவர் இல்லாத வண்ணம் காத்து, அவரவர் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி, திருமண தடை, மக்கட்பேறு , வேலை வாய்ப்பு, விபார விருத்தி ,நம் நலம் காக்கும் தெய்வமாக நம்மை தாங்கி நிற்பவள் அன்னை ஶ்ரீ பாலாம்பிகை, எனவேதான்,

பாலா வந்தால் நமை வாழ்விக்கவே வருகிறாள் என புராணங்களும், இதிகாசங்களும், சித்தர்களும், பாடல்கள் மூலம் தெரிய படுத்தி உள்ளார்கள்.

அன்னை நம்மை கண்மணிப்போல் காத்து நிற்பவள் ,நம்மை பல துன்பங்களில் இருந்து காத்து நிற்கும் அன்னை ஶ்ரீ பாலாம்பிகை வேலூர் மாவட்டத்தில் உள்ள , வள்ளலார் பகுதில் ஶ்ரீ பாலாஜி நகர் ஶ்ரீ சக்ரா சக்தி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறாள்,

அன்னையின் உத்தரவு படி ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் சித்தர் ஶ்ரீ வாலை சுவாமிகள் ஐயா அவர்கள் தன்னை ஓர் கருவியாக முன்னின்று அன்னை பாலா திரிபுர சுந்தரி தாயின் பீடம் மற்றும் ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு ஆலய நிர்மாண பணி ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ளது மற்றும் அனைவருக்கும் உணவளதிட அன்னதான மண்டபம் , பக்தர்கள் தியன நிலையம் அமைத்திட செலவு ரூபாய் ஒரு கோடி ரூபாய் தேவை படுகிறது, அன்னையின் சொந்தங்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருகின்றனர் ,

மேலும் கொடைகள் தேவை படுவதால் அதற்கான உதவியை அன்னையின் பிள்ளைகள் தங்களிடதில் உதவி வேண்டுகிறோம், உங்களால் முடிந்த காணிக்கை கொடுத்து உதவிட வேண்டுகிறோம்.

உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்

தவத்திரு
ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ,
ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை.
பதிவு எண்:16/21/BK-IV.
வங்கி கணக்கு எண்: 0717102000009973
IFSC code:IBKL0000717
G-PAY NUMBER: 7806917166
CONTACT NUMBER : 9488188152

சென்ற ஆண்டு இதே நாள் கொரோனா  வில் பாதிக்க பட்டு வாழ்வாதாரம் இழந்த இல்லம் தேடி உணவு தானியங்கள் சுவாமிஜி அவர்கள் உத்தரவு ப...
10/06/2022

சென்ற ஆண்டு இதே நாள் கொரோனா வில் பாதிக்க பட்டு வாழ்வாதாரம் இழந்த இல்லம் தேடி உணவு தானியங்கள் சுவாமிஜி அவர்கள் உத்தரவு படி முறையாக கொடுக்கப்பட்டது. உதவி செய்த / செய்து கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு வேலூர் ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி தாயின் பீடம் மற்றும் அறக்கட்டளை சார்பில் நன்றி 🙏

அன்னை ஶ்ரீ பாலாம்பிகை பிள்ளைகளுக்கு. 🙏   💐வரும் 01/01/22 புதிய ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் , பூஜைக...
31/12/2021

அன்னை ஶ்ரீ பாலாம்பிகை பிள்ளைகளுக்கு. 🙏

💐வரும் 01/01/22 புதிய ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் , பூஜைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை சார்பில் அன்னை ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி மஹா வாராஹி அன்னைக்கு சிறப்பாக நடைபெற உள்ளது ,

அன்பர்கள் அனைவரும் சங்கல்பம் செய்து கொண்டு வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று அன்னை ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி தாயின் பரிபூரண ஆசிகள் பெற்று சிறப்புடன் வாழ்க வளமுடன்.

( 🙏பூஜை கட்டணம் ₹ 1550/ தனி நபர் அல்லது குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள. )

மேலும் தகவல் பெற 9488188152 ஜெய் ஶ்ரீ பாலா

வளர்பிறை பஞ்சமி பூஜைஇன்று ஐயா ஶ்ரீ சக்ரா பாலாம்பிகை சித்தர் சுவாமிகள் அவர்கள் திருகரங்களால் செய்யப்பட்ட பூஜை
08/12/2021

வளர்பிறை பஞ்சமி பூஜை
இன்று ஐயா ஶ்ரீ சக்ரா பாலாம்பிகை சித்தர் சுவாமிகள் அவர்கள் திருகரங்களால் செய்யப்பட்ட பூஜை

14/09/2021

🙏SRI VIDHYA DEEKSHA

AND

🙏SADHANA PROGRAM ADMISSION STARTS FROM 15 /09/21

🌺ONLY OFFLINE,

🌺COURSE Material will be through courier and special guidance will be by our Acharya's

🌺For fees details contact through whatsapp
9488188152

🙏*. TIME PASS PEOPLE'S PLEASE STAY AWAY, DON'T WASTE OUR TIME. 🙏

🌺குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. 🌺 பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்...
29/08/2021

🌺குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. 🌺

பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும்.

சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.

இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால்,
படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள்.

இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.

படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி.

அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள் ...

இன்று ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை சார்பில் ஶ்ரீ சக்ரா பாலா சித்தர் சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் 5 கிலோ அர...
13/06/2021

இன்று ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை சார்பில் ஶ்ரீ சக்ரா பாலா சித்தர் சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் 5 கிலோ அரிசியுடன் மளிகை பொருடகள் வேலூரில் அன்பர்களுக்கு வழங்கினார்கள்

💐🙏ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்னன் அ...
24/05/2021

💐🙏ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

🌺 பதப்பொருள் :🌺

ஈசன் அடி போற்றி - ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி - எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடி போற்றி - ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்; மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்.

🙏 விளக்கம் 🙏

ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். "எண் குணத்தான்தாள்" என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க.

Address

#14/B, 2ND FLOOR , , BALAJI NAGAR 1st MAIN Road, , PHASE 3 SATHUVACHARI, , NEAR BALAJI MAHAL, DOUBLE ROAD
Vellore
632009

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919488188152

Alerts

Be the first to know and let us send you an email when Sri chakra baala Tripura sundari charitable trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri chakra baala Tripura sundari charitable trust:

Share