03/08/2021
அன்னை தாமிரபரணி ஒரு தெய்வீக நதி...
மதுரையில் இருப்பவனுக்கு மீனாட்சியின் மகிமை தெரியல என்பது நான் பிறந்த ஊரின் சொலவாடை.
அதாவது பொதுவாக அக்கரைக்கு இக்கரை பச்சை போன்ற பழமொழிகளில் நான் காண்பது நமக்கு நம் திறமை நமது பெருமை போன்றவை நமக்கே தெரிவதில்லை.
எவ்வாறு ஒரு பூக்கடையில் வேலை செய்பவருக்கு புஷ்பத்தின் வாசனை தெரியாதோ
மீன் கடையில் வேலை பார்ப்பவருக்கு மீன் வாசனை பழகி விட்டதோ
பால் விற்பவருக்கு பால் வாசனை பழக்கமோ.
அன்னை உடனிருந்தால் அன்னையை நாம் துதிப்பதில்லையோ (அன்னை இல்லாதவர்கள்தான் அன்னையின் மதிப்பு தெரியும்)
தாமிரபரணி என்னும் நதி உலகத்தில் உள்ள தீபகற்பத்தில் முக்கோண வடிவில் முற்றுப்பெறும் மலையில் உதித்து கடலில் கலக்கும் ஒரே நதி.
அது மட்டும் அல்லாது ஒரே இடத்தில் துவங்கி கிழக்காகவும் மேற்காகவும் பயணிக்கும் ஒரே நதி அதாவது தாமிரபரணி பொதிகை மலையில் அகத்தியர் உறையும் அகஸ்த்தியமலையில் உருவாகி கிழக்கே திருநெல்வேலியில் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது மேலும் மேற்கே பேச்சிப்பாறை அணையிலிருந்து தாமிரபரணி எனும் பெயரில் விழுந்து அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்தியத் தீபகற்பத்தில் இவ்வாறு ஒரு ஆறு ஒரே பெயரில் இருபுறமும் ஓடுகிறது என்றால் அது நம் தாமிரபரணி தவிர வேறு எதுவும் கிடையாது மார்த்தாண்டம் அருகே இருக்கும் தாமிரபரணிக்கு மறுகால்பரணி என்றும் பெயருண்டு.
தீபகற்ப இந்தியாவில் ஓடும் ஆறுகளிலேயே வற்றாத ஜீவ நதி என்பது தாமிரபரணி ஆகும். மற்ற நதிகள் வருடத்தில் ஒரு நாளாவது வற்றி விடும். அதாவது உலகில் எந்த மூலையில் எந்த ஆறு வற்றினாலும் தாமிரபரணி மற்றும் என்னாளும் வற்றாது எனும் பெருமை தாமிரபரணிக்கு சிவபெருமான் கயிலைலே வரமாக கொடுத்தார் என்றும் கங்கையைப் போல ஆயிரம் மடங்கு புனிதத் தன்மையையும் கொண்டதாக இருக்கக் கடவது என்றும் ஆசீர்வதித்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் எனும் நூலில் அகத்திய முனி கூறுவதாக உள்ளது.
சித்த புருஷர்கள் எழுதிய அரிய நூல்கள் அனைத்திலும் தாமிரபரணி நதியை குறிப்பிடாமல் எழுதியதில்லை பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனுக்கள் தாமிரபரணியை நோக்கி இமயத்திலிருந்து வந்து தவம்செய்து தாமிரபரணி நதிக்கரையில் சமாதியடைந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
மச்ச அவதாரம் எடுத்த பெருமாள் வைகையிலே எடுத்தது எத்தனை பேருக்கு தெரியும். வைகைக்கு கிருத மாலை எனும் பெயரும் உண்டு.
18 புராணங்களில் இரண்டு இயற்கைக் கூறுகளை மிகவும் உன்னதமாக கூறுகின்றனர்.
1. தாமிரபரணி நதி
2. மலையாளச்சல் எனும் மலைய பருவதம்
மலய பர்வதமே இமயமலையைக் காட்டிலும் வயதானது என்று சிவமகா புராணம் கூறுகிறது.
மலையபர்வதம் என்பது எது என்றால் பழனி மலையில் ஆரம்பிக்கும் வராககிரி முதல் குமரி வரை இருக்கும் மருத்துவால் மலை வரை உள்ள மலைத்தொடரே மலைய பர்வதம் ஆகும்.
தமிழ் குடி மக்களுக்கு உலகத்தில் உள்ள மற்ற குடிமக்களைக் காட்டிலும் அதிக அறிவு வளமையை நோக்கிச் செல்லும் நோக்கம் மற்றும் அன்பு அரவணைப்பு மேன்மையான குணங்கள் இவற்றை மலைய பர்வதம் நமக்கு அளித்த வரம்.
மலய பர்வதத்தில் உதிக்கும் வைகையும் தாமிரபரணியும் அமராவதியும்(காவிரி) பாவங்களை கழுவும் மிகமிக நுட்பமான உன்னதமான சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உணர்ந்த ரிஷிகள் பலர் இந்த நதிகளில் தங்களது ஆசிரமங்களை அமைத்து உலகுக்கு நன்மை பல செய்து வருகின்றனர் என்று தாமிரபரணி மகாத்மியம் மற்றும் மச்ச, கூர்ம புராணங்கள் கூறுகின்றன
மலய பர்வத்ததின் சக்தி தான் மீனாட்சியாக மலையத்துவ பாண்டிய மன்னரின் மகளாக வேள்வித்தீயில் பிறந்து இன்றும் அங்கயர்கன்னியாக மதுரையில் வீட்டிருக்கிறாள். வேள்வியில் இருந்து பிறந்த கன்னி தெய்வங்களுக்கு சக்தி மிக அதிகம்.
நம் முன்னோர்கள் பல அமானுஷ்யமான விசயங்களை மறைத்ததன் விளைவு... இவ்வளவு அருமை பெருமை கொண்ட தாமிரபரணி, வைகை, அமராவதி, மலய பர்வதம், மீனாட்சி அன்னை போன்ற ஒப்பிலா சக்திகளை அனுகு திறன் இல்லாது நாம் கோவில் / சுற்றுலா அளவில் மட்டும் இந்த சக்திகளை நிலைத்து அனுட்டித்துக் கொள்கிறோம்.
தாமிரபரணி அன்னையை எங்கு எவ்வாறு வணங்க நமக்கு அன்னையால் வரும் சுபிக்ஷம் பல்கும் என்பதை உணர்ந்த அகத்திய மகரிசி பாவநாச நதி கரையில் சூர்ய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆசிரமும் அமைத்தார்.
அகத்தியரால் உருவாக்கப்பட்ட பல பாபநாசங்களில் உயர்ந்ததும் சித்த மலங்களை களைந்து புருஷசுத்தி அருளும் பேறு பெற்றதுமான திருநெல்வேலி பாபநாசம்.
சித்த மலம் தீர்ந்தால் என்ன லாபம் எனக்கு? புருஷ சுத்தினா என்ன அதனால எனக்கு என்ன பலன்? அப்பிடினு கேள்வி உங்களுக்குள்ள இன்னேரம் உதிச்சிருக்கும்.
பூமில பணம் மட்டும் சம்பதிக்கறவங்க பாவம் பண்ண அஞ்சுவதில்லை. பாவம் வருமுனு நினைக்கிறவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்கல...இந்த புண்ணியம் பாவம்லாம் ஓரு விதை மாதிரி தானங்க... ஒரு சிலது முலைக்காது, ஒரு சிலது முலைச்சு பெரிய மரமா ஆகிடும். அப்பறம் அதோட பலன நம்ம அனுபவிக்கனும்.
பாவம் செய்றவங்க எல்லாம் நல்லா வாழ்றாங்கனு நிறைய பேர் புலம்புறாங்க. அப்பிடின என்ன அர்த்தம் ஏதோ பெருசா ஒன்னு ரெடியாய்ட்டு இருக்குனு அர்த்தம். மரம் பெருசா வளர உரம் வேணும் இல்லயா. மரத்துக்கு அது உரம்.. ஆனா நமக்கு அது மலம் தானே. மலத்தை தினத்துக்கும் மரத்துக்கு போட்டா நல்லா செழிப்பா ஸ்ட்ராங்கா வேகமா வளரும் இல்லையா.
தாமிரபரணியோட அருமை தெரியாம நம்மல்லாம் வளந்திருக்கோம். தாமிரபரணில ஒரு தடவை பாபநாசத்துல மூழ்க பல நன்மை இருக்கு வாங்க..