AISA-Tamilnadu

AISA-Tamilnadu EDUCATION! PROGRESS! DEMOCRACY!

கல்வி!
முன்னேற்றம்!
ஜனநாயகம்

மாணவர் சேர்க்கையில் மோசடி, செய்ல்பாட்டாளர்களின் இடைநீக்கத்திற்கு எதிராக ஜாமியாவில் மாணவர் போராட்டம்..... #எம்_எல்_செய்தி...
08/09/2026

மாணவர் சேர்க்கையில் மோசடி, செய்ல்பாட்டாளர்களின் இடைநீக்கத்திற்கு எதிராக ஜாமியாவில் மாணவர் போராட்டம்.....

#எம்_எல்_செய்திகள் வார இதழில்..

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!கேள்வி: சிஜேபி போராட்டக்களத்தில் AISA அமைப்பு எதை வ...
08/09/2026

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!

கேள்வி: சிஜேபி போராட்டக்களத்தில் AISA அமைப்பு எதை வலியுறுத்தியது?

நேஹா: ‘அதிகார வர்க்கம் எவ்வளவு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டாலும் அதை எதிர்த்துப் போராட முடியும் என்பது மட்டுமல்ல, வலதுசாரிகளின் மதவாத ஆட்சிக்கு எதிராக, நாம் ஒற்றுமையுடன் போராடினால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்று பேச வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் AISA சார்பில் வலியுறுத்தினோம்.

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!கேள்வி: இளைஞர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் கருத்துகள...
08/09/2026

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!

கேள்வி: இளைஞர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் கருத்துகள் புரியும் என்று நினைக்கிறீர்களா?

நேஹா: ஆம். ஜந்தர் மந்தரில் இது சார்ந்த பல போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ‘நீங்கள் கோட்சேவை நம்புகிறீர்கள், நாங்கள் பகத்சிங்கை நம்புகிறோம்; நீங்கள் புறப்படும் நேரம் வந்து விட்டது’ போன்ற போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன.

‘ஆசாதி, விடுதலை’ முழக்கம்தேச விரோதச் செயல் அல்ல!கேள்வி: ‘ஆசாதி - விடுதலை’ என்ற முழக்கம்  குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன...
06/09/2026

‘ஆசாதி, விடுதலை’ முழக்கம்
தேச விரோதச் செயல் அல்ல!

கேள்வி: ‘ஆசாதி - விடுதலை’ என்ற முழக்கம் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

நேஹா: ஆசாதி என்பது பெண்களின் சுயாட்சி, சுதந்திரம் சார்ந்த ஒரு பெண்ணிய முழக்கம். வலதுசாரிகள் இம்முழக்கத்தின் மீது அவப்பெயரைச் சுமத்த முற்படுகின்றனர். ‘மோடி, அமித்ஷாவிடமிருந்து விடுதலை. ஊழலிலிருந்து விடுதலை’ போன்ற முழக்கங்களை எழுப்புவது தேசவிரோதச் செயல் அல்ல.

தனிநபர் மீதான அதீத ஈர்ப்பும்...தூய தலைவர்களின் உருவாக்கமும்! கேள்வி: மாணவர் அரசியல் என்பது அரசியல் வாழ்விற்கான ஒரு பயிற்...
05/09/2026

தனிநபர் மீதான அதீத ஈர்ப்பும்...
தூய தலைவர்களின் உருவாக்கமும்!

கேள்வி: மாணவர் அரசியல் என்பது அரசியல் வாழ்விற்கான ஒரு பயிற்சிக் களமா?

நேஹா: தனிநபர் மீதான அதீத ஈர்ப்பு அல்லது பிம்பமயமாக்கல் நிலவுகிறது. இது அறிவுஜீவிகளிடமிருந்தும் வருகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கக்கூடிய ஒரு தூய தலைவரைக் கண்டடைய விரும்புகிறார்கள். உண்மையில் அப்படி யாரும் இல்லை.

தலைவருக்காகத் திரளவில்லைமக்களுடன் துணை நிற்கிறோம்!கேள்வி: ஜந்தர் மந்தர் போராட்டத்தை ‘தலைவரற்ற இயக்கம்’ என்று அழைப்பதில்...
05/09/2026

தலைவருக்காகத் திரளவில்லை
மக்களுடன் துணை நிற்கிறோம்!

கேள்வி: ஜந்தர் மந்தர் போராட்டத்தை ‘தலைவரற்ற இயக்கம்’ என்று அழைப்பதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா?

நேஹா: ஒரு அரசியல் கட்சிக்காகவோ, தலைவருக்காகவோ அல்லாமல் மக்களுடன் துணை நிற்கவே வந்திருக்கிறோம். இதுவே மிகவும் அரசியல் சார்ந்தது; மிக முக்கியமான அரசியல் வெளிப்பாடுகளில் ஒன்று.

AISA - All India Students' Association அகில இந்திய தலைவர் தோழர்.நேகா....
05/09/2026

AISA - All India Students' Association அகில இந்திய தலைவர் தோழர்.நேகா....

‘We do not operate in a vacuum’ – A conversation with Neha Bora

மோடியின் கல்வி இதுதானா?
05/09/2026

மோடியின் கல்வி இதுதானா?

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க.வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!கேள்வி: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியல் எ...
04/09/2026

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க.
வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியல் எப்போது தொடங்கியது?

நேஹா: சுதந்திரப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில், ஒட்டுமொத்த நாடும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு வலிமையான சக்தியாகத் திரண்டிருந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளையே பரப்பிக் கொண்டிருந்தது. தற்போதைய பா.ஜ.க.வும் அதையே தான் பின்பற்றுகிறது.

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!கேள்வி: ஆர்.எஸ்.எஸ். எம்மாதிரியான அமைப்பு; அது முன்வ...
03/09/2026

வெறுப்பு, பிளவை விதைக்கும் பா.ஜ.க. வலதுசாரி அரசியல் வேரறுக்கப்படும்!

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். எம்மாதிரியான அமைப்பு; அது முன்வைக்கும் அரசியல் என்ன?

நேஹா: ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டதில் இருந்தே தீவிரப் பிளவுவாத அரசியலைப் பேசும் அமைப்பாகவே இருந்து வந்துள்ளது. பன்மைத்தன்மையை இந்திய மக்கள் உயர்த்திப் பிடித்தனர். அதற்கு ஆர்.எஸ்.எஸ். துரோகம் இழைத்தது. சுதந்திரப் போராட்டத்திலும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்கக் கூடாது என்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

Address

Vandalur

Telephone

+919524033523

Website

Alerts

Be the first to know and let us send you an email when AISA-Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AISA-Tamilnadu:

Shortcuts

Share