03/06/2026
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பு அறை’ (Strong Room) இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வை, தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான திரு. வைத்தினாத் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, VVPAT இயந்திரங்களில் உள்ள வெப்பத் தாள் சுருள்கள் (Thermal Paper Rolls) மற்றும் முகவரிச் சீட்டுகளை அகற்றும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், தேனி ஆம் ஆத்மி கட்சி (AAP) சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. N.R. சிவாஜி கலந்து கொண்டார்.