voice of Vadamadurai Railway's

voice of Vadamadurai Railway's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from voice of Vadamadurai Railway's, Social service, Vadamadurai.

வடமதுரை - கன்னியாகுமரி வரை இரயில் செல்ல முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?.......*ஆம், வடமதுரையில் இருந்து கன்னியாகுமரி...
11/07/2026

வடமதுரை - கன்னியாகுமரி வரை இரயில் செல்ல முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?.......

*ஆம், வடமதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரயிலில் பயணம் செய்ய முடியும், எப்படி?.....

1: வடமதுரை இரயில் நிலையத்தில் கன்னியாகுமரி என்று நேரடி முன்பதிவில் லா அதிவிரைவு பயணச்சீட்டு பெற வேண்டும்,

2: நடைமேடை இரண்டில் இரவு 09:24 க்கு வண்டி எண்:16867 விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறவும், இந்த இரயில் திண்டுக்கல் சந்திப்பிற்கு இரவு 10:15 க்கு செல்லும்,பின் திண்டுக்கலில் இறங்கி ,

3: 1 மணிநேரம் 15 நிமிடங்கள் இளைப்பாறினால்,

4: வண்டி எண்:12633 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவேக விரைவு இரயில் 11: 27 க்கு வரும் , அந்த இரயிலில் முன்பதிவில் லா பெட்டியில் ஏறினால், மறுநாள் காலை 5:30 க்கு கன்னியாகுமரி செல்லும்,

5: இந்த இரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு வழியாக கன்னியாகுமரி செல்லும்......

6: வடமதுரை - கன்னியாகுமரி இடையே முன்பதிவில் லா அதிவிரைவு பயணச்சீட்டு கட்டணம் ₹ 140 வசூலிக்கப்படுகிறது.......

காலை கடற்கரை ஓரம் சூரிய உதயத்தை பார்க்க உங்கள் நண்பர்களுடன் செல்ல திட்டமிட்டால் இந்த இணைப்பு இரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.........

இந்த இணைப்பை வடமதுரை - திண்டுக்கல் விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்து,பின் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி வரை முன்பதிவு செய்தும் பயணிக்க முடியும்.........

மேலும் இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்க!......

இப்படிக்கு :
வடமதுரை இரயில் பயனாளர்கள் குழு

https://chat.whatsapp.com/EKjm9lKEzl27xlk0QQP1Rp

1: திண்டுக்கல் - விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்:காலை விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் திருச்சி சென்றால்...
11/07/2026

1: திண்டுக்கல் - விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்:

காலை விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் திருச்சி சென்றால் அங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் காரைக்கால் போன்ற பகுதிகளுக்கும்,

2: திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயில்:

காலை திருச்சிராப்பள்ளி பயணிகள் இரயிலில் மணப்பாறையில்(மதுரை - சென்னை எழும்பூர் வைகை),
திருச்சி(மயிலாடுதுறை - சேலம் மெமூ மூலமாக எலமனூர் (முக்கொம்பு அணை),குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல் இராசிபுரம்,சேலம்)

மேலும் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை வழியாக திருச்சி செல்லும் பயணிகள் இரயில் அப்படியே தொடர்ச்சியாக காரைக்கால் வரை செல்வதால் வடமதுரை - காரைக்கால் இடையே பயணிகள் கட்டணத்தில் ஒரே இரயிலில் பயணம் செய்ய முடியும்

3: செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் நாளை முதல் புதிய முக்கிய இணைப்பு கிடைக்கவுள்ளது..........

செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயிலில் வடமதுரையில் இருந்து மயிலாடுதுறை சென்றால் அங்கிருந்து மாலை 4:45 க்கு வேளாங்கண்ணி க்கு ஒரு பயணிகள் இரயில் காரைக்கால் - பேரளம் புதிய பாதை வழியாக இயக்கப்படுகிறது,

இந்த இரயில் சனிஸ்வர பகவான் உள்ள திருநள்ளாறு வழியாக சொல்வதானால் மிக முக்கிய இணைப்பாக உள்ளது........ அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி வரை செல்கிறது இந்த மயிலாடுதுறை - வேளாங்கண்ணி புதிய பயணிகள் இரயில்...........

வடமதுரை - மயிலாடுதுறை - திருநள்ளாறு செல்ல இரயிலில் பயணச்சீட்டு எவ்வளவு?.....

வடமதுரை - மயிலாடுதுறை ₹85 மட்டுமே,

மயிலாடுதுறை - திருநள்ளாறு ₹10

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ₹ 20 மட்டுமே

வடமதுரை - மயிலாடுதுறை - திருநள்ளாறு செல்ல மொத்த இரயில் பயணச்சீட்டு விலை₹95 மட்டுமே

திண்டுக்கல் மார்க்கத்தில்

4: மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
மாலை திண்டுக்கல்(இராமேஸ்வரம் - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் வழி: ஒட்டன்சத்திரம் பழநி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி பாலக்காடு (பாலக்காடு வரை வடமதுரையில் இருந்து நேரடி பயணச்சீட்டு பெற முடியும்),
மதுரை (மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் இரயில் வழி: திருப்புவனம், மானாமதுரை பரமக்குடி, ராமநாதபுரம் உச்சிப்புள்ளி),

மதுரை இணைப்பு எண் 2:
மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் மூலம் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி

இந்த சிறப்பு இரயில் மூலம் மணியாச்சி சந்திப்பு வந்தால் அங்கிருந்து தூத்துக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் உள்ளது அதனால் தூத்துக்குடி வரை இணைப்பு கிடைக்கும்.......

5: திருச்சி - திண்டுக்கல் பயணிகள் இரயில்
தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர் வரை இணைப்பு கிடைக்கும் மற்றும் பிற சென்னை செல்ல எக்ஸ்பிரஸ் இரயில்கள் திண்டுக்கலில் கிடைக்கும்.....

6: விழுப்புரம் - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (திண்டுக்கல்லில் இருந்து இரவு 11:45 க்கு போடிநாயக்கனூர் - சென்னை சென்ட்ரல் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வரை செல்ல முடியும்

மேற்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி மக்கள் வடமதுரை இரயில் நிலையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

https://chat.whatsapp.com/EKjm9lKEzl27xlk0QQP1Rp

🎉🚆 மகிழ்ச்சியான செய்தி! 🚆🎉📢 வடமதுரை பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!இனி சென்னை சென்ட்ரல் ↔ வடமதுரை இடையே நேரடி முன்பதி...
20/06/2026

🎉🚆 மகிழ்ச்சியான செய்தி! 🚆🎉

📢 வடமதுரை பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

இனி சென்னை சென்ட்ரல் ↔ வடமதுரை இடையே நேரடி முன்பதிவில்லா (UTS) பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

✅ நம் குழு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இரயில்வே நிர்வாகம் RailOne செயலியில் சென்னை சென்ட்ரல் – வடமதுரை (வழி: திண்டுக்கல்) பாதையை இணைத்துள்ளது.

🚉 பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து வடமதுரை வரை ஒரே பயணச்சீட்டு பெற்று திண்டுக்கல்லில் இறங்கி இணைப்பு இரயில்கள் மூலம் வடமதுரை வரலாம்.

🔹 தற்போதைய இணைப்புகள்:

🚆 வண்டி எண்: 16847
மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
வடமதுரை → திண்டுக்கல்
அங்கிருந்து பாலக்காடு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு இரயில் மூலம் சென்னை செல்லலாம்.

🚆 விழுப்புரம் – திண்டுக்கல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
திண்டுக்கல் வந்த பின்,
போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் இரயிலில் (ஞாயிறு தவிர) மாறி சென்னை செல்லலாம்.

🚆 சென்னை சென்ட்ரல் → வடமதுரை
(வழி: சேலம் – கரூர் – திண்டுக்கல்)
முன்பதிவில்லா பயணச்சீட்டு பெற்று,
திண்டுக்கல் வந்த பின் திருச்சி – திண்டுக்கல் பயணிகள் இரயில் மூலம் வடமதுரை வரலாம்.

🌟 இந்த வசதியின் மூலம் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வடமதுரை செல்லும் பயணிகள் பயனடையலாம்.

🚆 மேலும்,
வடமதுரை → ஒசூர் பயணிகளும்
வடமதுரை – திண்டுக்கல் பயணிகள் இரயில் மற்றும்
தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இணைப்பை பயன்படுத்தி
கரூர், ஈரோடு, சேலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்.

🙏 இந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த இரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி!

🚆✨ வடமதுரை இரயில் நிலையத்தை பயன்படுத்த மேலும் ஒரு வாய்ப்பு

வடமதுரை - சென்னை - வடமதுரை இனி எளிதாக சென்று வர முடியும்.......வடமதுரை - திருச்சி திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயிலில...
12/06/2026

வடமதுரை - சென்னை - வடமதுரை இனி எளிதாக சென்று வர முடியும்.......

வடமதுரை - திருச்சி திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயிலில் சென்று திருச்சியில் இறங்க வேண்டும்

திருச்சியில் இருந்து சென்னை செல்ல மதுரை - சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு இரயில் ஐ பயன்படுத்தி சென்னை செல்ல முடியும்..........

மறு மார்க்கத்தில்.....

*சென்னை முதல் வடமதுரை வர முன்பதிவில் லா அதிவிரைவு பயணச்சீட்டு பெற்று இணைப்பு இரயில் பயன்படுத்தி இனி வடமதுரை வர முடியும்*

*சென்னை - திருச்சி வரை வைகை அதிவேக விரைவு வண்டியில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்து, திருச்சி - திண்டுக்கல் பயணிகள் இரயிலில் வடமதுரை வர முடியும்*

*ஒருவேளை வைகை அதிவிரைவு ரயில் தாமாதமாகும் பட்சத்தில் திருச்சியில் இருந்து விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் வடமதுரை வர முடியும்*

*மிக முக்கிய குறிப்பு: இந்த இணைப்பு வைகை இரயிலில் பயணித்தால்,....*

*1: சென்னை எழும்பூர் - மதுரை வைகை இரயில் சரியான நேரத்தில் விழுப்புரம் சந்திப்பிற்கு வந்தால் அங்கு இறக்கினால் மாலை 4 30 க்கு திண்டுக்கல் புறப்படும் விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மூலம் வடமதுரை வர முடியும்*

*2: திருச்சியில் இறக்கினால் மாலை 6:35 க்கு புறப்படும் திருச்சி - திண்டுக்கல் பயணிகள் இரயிலில் மாறி வடமதுரை வர முடியும் (ஒருவேளை வைகை தாமதமாக வரும் பட்சத்தில் திண்டுக்கல் பயணிகள் இரயில் புறப்பட்டுவிட்டது என்ற பட்சத்தில் விழுப்புரம் - திண்டுக்கல் இரயிலை திருச்சியில்இருந்து வடமதுரை வரை பயன்படுத்தமுடியும்*

*மணப்பாறையில் இறங்கியும் மேற்கண்ட இரு இணைப்பு இரயில்களையும் பயன்படுத்த முடியும்*

*ஆக சென்னை எழும்பூர் - வடமதுரை இடையே அதிவிரைவு ரயில் பயணச்சீட்டு பெற்று வைகை அதிவிரைவு ரயிலில் பயணித்து இணைப்பு பயன்படுத்தி வடமதுரை வர முடியும்*

*சென்னை எழும்பூர் - வடமதுரை வர முன்பதிவில் லா அதிவேக விரைவு பயணச்சீட்டு ₹165 மட்டுமே*

*இனி வடமதுரை இரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லவும், சென்னையில் இருந்து வடமதுரை வரவும் வைகை அதிவிரைவு ரயிலிலை பயன்படுத்தி இனி நேரடியாக பயணச்சீட்டு பெற்று பயணிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 🙏*

*இவன்: வடமதுரை இரயில் பயனாளர்கள் குழு*

https://chat.whatsapp.com/JGEmhu55om2AOkJ9fxnV3E?mode=gi_t

வணக்கம் 🙏☺  #வடமதுரை சுற்றுவட்டார மக்கள் கவனத்திற்கு:✒   #திண்டுக்கல் மாவட்டம் 📍  #வடமதுரை தொடர்வண்டி 🚏 நிலையத்தின் கால ...
10/06/2026

வணக்கம் 🙏

☺ #வடமதுரை சுற்றுவட்டார மக்கள் கவனத்திற்கு:

✒ #திண்டுக்கல் மாவட்டம் 📍 #வடமதுரை தொடர்வண்டி 🚏 நிலையத்தின் கால அட்டவணை.

📍 #வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொது மக்களே📍 #வடமதுரை யில் இருந்து தொடர்வண்டி பயணம் மேற்கொள் வதற்கு முன்பு அட்டவணையை பார்த்து உங்கள் பயணங்களை திட்டிமிடுங்கள்.

#நன்றி 🙏💕

இணையுங்கள் வாட்ஸ்அப் ல்
👇👇👇 👇👇👇
https://chat.whatsapp.com/EKjm9lKEzl27xlk0QQP1Rp?mode=gi_t

முகநூல் பக்கம்👇👇👇

https://www.facebook.com/share/17DE9FxM6M/

இன்ஸ்டாகிராம் பக்கம் 👇 👇 👇 👇

https://www.instagram.com/vadamadurai_train_bus_users?igsh=ZXFkaTVmMTNyeGI4

#வடமதுரை ரயில் தகவல்கள்

#வடமதுரை

நாளை(20/05/2026)அனைத்து இரயில்களும் வடமதுரை வந்து செல்லும்...........குறிப்பாக: திருச்சி மார்க்கத்தில்: 1: திண்டுக்கல் -...
19/05/2026

நாளை(20/05/2026)அனைத்து இரயில்களும் வடமதுரை வந்து செல்லும்...........

குறிப்பாக:

திருச்சி மார்க்கத்தில்:

1: திண்டுக்கல் - விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்:

காலை விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் திருச்சி சென்றால் அங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் காரைக்கால் போன்ற பகுதிகளுக்கும்,

2: திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயில்:

காலை திருச்சிராப்பள்ளி பயணிகள் இரயிலில் மணப்பாறையில்(மதுரை - சென்னை எழும்பூர் வைகை),
திருச்சி(மயிலாடுதுறை - சேலம் மெமூ மூலமாக எலமனூர் (முக்கொம்பு அணை),குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல் இராசிபுரம்,சேலம்)

மேலும் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை வழியாக திருச்சி செல்லும் பயணிகள் இரயில் அப்படியே தொடர்ச்சியாக காரைக்கால் வரை செல்வதால் வடமதுரை - காரைக்கால் இடையே பயணிகள் கட்டணத்தில் ஒரே இரயிலில் பயணம் செய்ய முடியும்

3: செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் நாளை முதல் புதிய முக்கிய இணைப்பு கிடைக்கவுள்ளது..........

செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயிலில் வடமதுரையில் இருந்து மயிலாடுதுறை சென்றால் அங்கிருந்து மாலை 4:45 க்கு வேளாங்கண்ணி க்கு ஒரு பயணிகள் இரயில் காரைக்கால் - பேரளம் புதிய பாதை வழியாக இயக்கப்படுகிறது,

இந்த இரயில் சனிஸ்வர பகவான் உள்ள திருநள்ளாறு வழியாக சொல்வதானால் மிக முக்கிய இணைப்பாக உள்ளது........ அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி வரை செல்கிறது இந்த மயிலாடுதுறை - வேளாங்கண்ணி புதிய பயணிகள் இரயில்...........

வடமதுரை - மயிலாடுதுறை - திருநள்ளாறு செல்ல இரயிலில் பயணச்சீட்டு எவ்வளவு?.....

வடமதுரை - மயிலாடுதுறை ₹85 மட்டுமே,

மயிலாடுதுறை - திருநள்ளாறு ₹10

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ₹ 20 மட்டுமே

வடமதுரை - மயிலாடுதுறை - திருநள்ளாறு செல்ல மொத்த இரயில் பயணச்சீட்டு விலை₹95 மட்டுமே

திண்டுக்கல் மார்க்கத்தில்

4: மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
மாலை திண்டுக்கல்(இராமேஸ்வரம் - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் வழி: ஒட்டன்சத்திரம் பழநி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி பாலக்காடு (பாலக்காடு வரை வடமதுரையில் இருந்து நேரடி பயணச்சீட்டு பெற முடியும்),
மதுரை (மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் இரயில் வழி: திருப்புவனம், மானாமதுரை பரமக்குடி, ராமநாதபுரம் உச்சிப்புள்ளி),

மதுரை இணைப்பு எண் 2:
மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் மூலம் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி

இந்த சிறப்பு இரயில் மூலம் மணியாச்சி சந்திப்பு வந்தால் அங்கிருந்து தூத்துக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் உள்ளது அதனால் தூத்துக்குடி வரை இணைப்பு கிடைக்கும்.......

5: திருச்சி - திண்டுக்கல் பயணிகள் இரயில்
தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர் வரை இணைப்பு கிடைக்கும் மற்றும் பிற சென்னை செல்ல எக்ஸ்பிரஸ் இரயில்கள் திண்டுக்கலில் கிடைக்கும்.....

6: விழுப்புரம் - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (திண்டுக்கல்லில் இருந்து இரவு 11:45 க்கு போடிநாயக்கனூர் - சென்னை சென்ட்ரல் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வரை செல்ல முடியும்

மேற்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி மக்கள் வடமதுரை இரயில் நிலையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

சென்னை சென்ட்ரல் - திண்டுக்கல் - வடமதுரை இப்படி ஒரு இணைப்பு இரயில் உள்ளது தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவ...
03/05/2026

சென்னை சென்ட்ரல் - திண்டுக்கல் - வடமதுரை இப்படி ஒரு இணைப்பு இரயில் உள்ளது

தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு 09:30 க்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி,சேலம், கரூர் வழியாக திண்டுக்கல் வந்து ஏறினால் மறுநாள் காலை5:30 க்கு திண்டுக்கல் வருகிறது இந்த இரயில்,

இந்த இரயிலில் இறங்கி திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயிலை பிடிக்க முடியும் என்பதால் திண்டுக்கல் சந்திப்பில் இறங்கி,

திண்டுக்கல் - வடமதுரை ₹10 பயணிகள் பயணச்சீட்டு பெற்று வடமதுரை க்கு இரயில் மூலம் எளிதாக வர முடியும்........

திண்டுக்கல் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்று மீண்டும் வடமதுரை வருவதற்கு இந்த இணைப்பு நேரத்தையும் பணத்தையும் மிச்சம் செய்ய முடியும்.......

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து வர விரும்புபவர்கள் இந்த இரயிலை பயன்படுத்தி வடமதுரை வர முயற்சிக்கவும்...........

இந்த இணைப்பு தினசரி கிடைக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கரூர் வரை இந்த இரயில் நிலையம் இந்த இரயில் நின்று செல்லும் இரயில் நிலையங்களில் இருந்து இந்த இணைப்பை வடமதுரை வர பயன்படுத்த முடியும்...........

03/05/26 ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயிலில் சில பயணிகள் சென்னை சென்ட்ரல் முதல் பயன்படுத்தினர்.........

நன்றி 🙏

03/05/2026

#திருநெல்வேலி - #மங்களுர் சந்திப்பு வாரந்திர இரயில்

வழி: மதுரை, திண்டுக்கல்,பழநி, பொள்ளாச்சி

கோடைக்கால சுற்றுலா குடும்பத்துடன் செல்ல திட்டமா?.......இதோ உங்களுக்காக 💥 சிறந்த இடம் 📌 🏄வடமதுரை - முக்கொம்பு இரயில் பயணம...
27/04/2026

கோடைக்கால சுற்றுலா குடும்பத்துடன் செல்ல திட்டமா?.......

இதோ உங்களுக்காக 💥 சிறந்த இடம் 📌

🏄வடமதுரை - முக்கொம்பு இரயில் பயணம் 🚅

வடமதுரை - எலமனூர் னு வடமதுரை இரயில் நிலையத்தில் டிக்கெட் 🎫 எடுக்கவும்

ஒரு நபருக்கு கட்டணம் வெறும் ₹ 55 மட்டுமே

1: வடமதுரையில் இருந்து தினமும் காலை 6:34 க்கு வரும் திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயிலில் ஏறி திருச்சிராப்பள்ளி சென்று இறங்கவும்⏩⏩

திண்டுக்கல் - திருச்சி பயணிகள் இரயில் 8:30 க்கு திருச்சி சென்று விடும்

அங்கு காலை உணவு முடித்து விட்டவும்⏩👉👉

காலை 9:30 க்கு மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லும் மெமூ எக்ஸ்பிரஸ் உள்ளது,

அந்த இரயிலில் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து ஏறி

👉 திருச்சி பாலக்கரை
👉 திருச்சி கோட்டை (மலைக்கோட்டை & சத்திரம் பேருந்து நிலையம்)
👉முத்தரசநல்லூர்
👉ஜீயாபுரம் வழியாக

எலமனூர் க்கு சரியா 10:20 க்கு சென்று விடும் அங்கு இறங்கினால் நடக்கும் தூரம் தான் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் பிரியும் முக்கொம்பு அணை உள்ளது.......

அங்கு உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மீண்டும் மாலை 5:00 மணிக்கு சேலம் மயிலாடுதுறை மெமூ எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது அதில் ஏறி திருச்சி வந்து இறங்கினால்

மாலை 06:30 க்கு திருச்சி - திண்டுக்கல் பயணிகள் இரயிலில் மாறி வடமதுரை வரலாம்

இந்த இணைப்பு இரயிலில் பயணிக்க பயணச்சீட்டை

வடமதுரை - எலமனூர் இடையே பயணிக்கும் போது வடமதுரை இரயில் நிலையத்திலும்,

எலமனூர் - வடமதுரை இடையே பயணிக்கும் போது எலமனூர் இரயில் நிலையத்திலும் நேரடி எக்ஸ்பிரஸ் பயணச்சீட்டு பெற வேண்டும்

மேலும் தகவலுக்கு https://chat.whatsapp.com/EKjm9lKEzl27xlk0QQP1Rp?mode=gi_t

Address

Vadamadurai
624802

Alerts

Be the first to know and let us send you an email when voice of Vadamadurai Railway's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category